மீச்சிறு மேககணினி(Micro Cloud) எனும் சேவையகம்

மேககணினியில் சேவைகளை உருவாக்குவதற்கான முக்கிய தேவைகளை இந்த மீச்சிறு மேககணினி நிவர்த்தி செய்கிறது. இது மீச்சிறு சேவைகளான கட்மைப்புகளின் வடிவமைப்பினை மேம்படுத்துகிறது ஒரு தளத்தின் கட்டுமானத் தொகுதிகளாக செயல்படும் சேவைகளின் தொகுப்பை வழங்குகிறது இது பகிர்ந்தளிக்கப்பட்ட அமைப்புகளின் சிக்கலான தன்மையைக் கையாளுகிறது மேலும் கட்டமைக்க எளிய நிரல்படுத்தக்கூடிய சுருக்கமான தொகுப்புகளை வழங்குகிறது. இது மேம்படுத்துநரின் முதல் கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட மூலத்திலிருந்து இயங்குகின்றது மேலும் அதற்கும் அப்பால் இயங்குதள அனுபவத்தை உள்ளடக்கியது. இதனுடைய குறிக்கோள், மேகக்கணிக்கான கட்டமைப்பு சேவைகளின் சிக்கலைத் தவிர்ப்பது. AWS , பிறவற்றிலிருந்து நிர்வகிக்கப்பட்ட கணினி உள்கட்டமைப்பு சேவைகள் ஆகியவற்றின் மூலம் மேககணினி ஒரு பெரிய ஏற்றம் கண்டுவருகின்றது. இது செயல்பாட்டுச் சுமையாக இருந்ததை எடுத்து, APIகள் வழியாகப் பயன்படுத்தக் கூடிய சேவைகளில் முழுமையாக நிர்வகிக்கப்படுகின்ற தொகுப்பாக மாற்றப்படுகிறது. இது ஒரு மீச்சிறு சேவையாளர் கட்டமைப்பாக அமைக்கப் பட்டுள்ளது மேலும் அடிப்படை உள்கட்டமைப்பின் சிக்கலை சுருக்கி அமைத்துக் கொள்கிறது.
இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் பாதை அடிப்படையிலான தீர்மானத்தைப் பயன்படுத்தி RPC க்கு http / json கோரிக்கைகளை மாறும் வரைபடமான HTTP நுழைவாயில் , jwt இன் அனுமதிசீட்டுகள் விதி அடிப்படையிலான அணுகல் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பயன்பாட்டிற்கு வெளியிலிருந்து அங்கீகாரம் ,ஒத்திசைவற்ற தொடர்பு அறிவிப்புகளை விநியோகிப்பதற்கான இடைக்கால pubsub செய்தி , மறுதொடக்கம் செய்யப் படாமல் சேவை நிலை கட்டமைப்பிற்கான இயக்கநேர உள்ளமைவு இரகசிய மேலாண்மை, உத்திரவிடப்பட்ட செய்தியிடல், offsets களிலிருந்து மறுபதிப்பு, தொடர்ச்சியான சேமிப்பகத்துடன் நிகழ்வுநிலைபாய்வு,அனைத்து உள்ளக கோரிக்கை போக்குவரத்திற்கும் இடைநிலை-சேவை வலைபின்னலின், தனிமைப்படுத்தல் வழிசெலுத்துல் மாற்றுதிட்டம் ஆகிய வசதி வாய்ப்புகளை கொண்டுள்ளது
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/micro/micro எனும் இணையதள முகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.