இப்போது கிடைக்கிறது, ONLYOFFICE 7.2 எனும் பதிப்பு

ONLYOFFICE என்பது ஒரு கட்டற்ற கட்டணமற்ற அலுவலக பயன்பாட்டு மென்பொருளாகும்.இணைய பதிப்பிற்கான சமீபத்திய அனைத்துபுதுப்பிப்புகளும் ONLYOFFICE 7.2 இல் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் Windows , macOS இல் தானியங்கி ஒளிரும்/இருண்ட பயன்முறை போன்ற மேசைக்கணினி பதிப்பாளர் களில் மட்டுமே கிடைக்கின்ற பல ‘சிறப்பு வசதிகளும் இதில்’ சேர்க்கப் பட்டுள்ளன. இதனுடைய புதிய பதிப்பானது முதன்மையான கருவிப்பட்டியில் புதியதாக “Headings” எனும் பலகத்தைச் சேர்க்கிறது, உரைக் கோப்புகளில் உள்ள இணைப்புகளை ஆதரிக்கிறது, தற்போதைய தலைப்பை உள்ளடக்க அட்டவணையில் இணைப்பதை எளிதாக்குகிறது என்பன போன்ற பல வசதிவாய்ப்புகளை கொண்டுள்ளது. மேலும்.pdf,.djvu,.xps ஆகிய வடிவமைப்பு கோப்புகளை.docx எனும் வடிமைப்பாக மாற்றிடும் பணி மேம்படுத்தப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. விளக்கக்காட்சி கருவி இப்போது வாடிக்கையாளர் விரும்பியவாறான அசைவூட்டங்களை ஆதரிக்கிறது, மேம்பட்ட அமைப்புகளை வழங்குகிறது, இதனுடைய VLC ஆனது தேவையில்லாமல் படகாட்சிகளில் ஒளியை ,ஒலியை மீண்டும் இயக்குவதை தடுத்திடுகிறது, மேலும் ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து“advanced settings” என்பதை தேர்ந்தெடுக்கும்போது படங்களுக்கான மேம்பட்ட “placement” எனும்தேர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. விரிதாள், படிவங்கள் ஆகிய பயன்பாடுகளும் சில புதுப்பிப்புகளைப் பெறுகின்றன. பிந்தையது, விளக்கப்படங்களுக்கான கிடைவரிசைகளையும் , நெடுவரிசைகளையும் மாற்ற நம்மை அனுமதிக்கிறது, வடிப்பான்களுக்கான வரிசை எண்களை முன்னிலைப்படுத்துகிறது, மேலும் புதுப்பித்தலின் போது நெடுவரிசை அகலங்களைத் தானாகப் பொருத்த புதிய pivot எனும் அட்டவணையின் வாய்ப்பினை உள்ளடக்கியுள்ளது. முந்தையது இப்போது உட்பொதிக்கப்பட்ட படிவங்கள் சில புதிய புல வகைகளில் தேடும் திறனைக் கொண்டுள்ளது. பெரும்பாலான/அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவும் பிற மாற்றங்கள்: குறைந்தபட்ச சாளர அளவு கட்டுப்பாடு இல்லை புதிய “Contrast Dark” “System Default” தீம்கள் சிறந்த வண்ண தேர்வு மாற்று பட்டியலை முடக்குவதற்கான தேர்வு •புதிய “Special ”எனும் மீண்டும் கட்டமைக்கப்பட்ட தேடல் செயலி; புதிய “Special Paste” எனும் செயலி தூண்டுவிசைகள்; புதிய “Cut” , “Select All” ஆகிய கருவிப்பட்டி பொத்தான்கள்; பொட்டுபோன்ற பட்டியல்களாக புகைப்படங்களுக்கான ஆதரவு மைக்ரோசாஃப்ட் அலுவலக பயன்பாடுகளின் வடிவமைப்புகளும் சமகால பயனர் இடைமுகத்திற்கான சிறந்த இணக்கத்தன்மையின் காரணமாக, . மைக்ரோசாஃப்ட் அலுவலக பயன்பாடுகளுக்கு மாற்றாகத் தேடும் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டியது இந்த கட்டணமற்ற, கட்டற்ற அலுவலகத் தொகுப்பாகும் தற்போது இது பலராலும் விரும்பி பயன்படுத்தப் படுகிறது
1.தனிநபர்கள் எந்த மேசைக்கணினி அல்லது கைபேசியிலிருந்தும் அனைத்து வகையான ஆவணங்களையும் பார்வையிட, திருத்தம்செய்திட என்பன போன்ற அனைத்து பணிகளையும் ONLYOFFICE Personal உடன் கட்டணமற்ற மேககணினிஅலுவலகபயன்பாட்டினை உருவாக்கி பயன்படுத்தி கொள்க
. 2. நிறுவனங்கள் Moodle, Nextcloud, Alfresco, WordPress என்பன போன்ற: டஜன் கணக்கான இணைப்பான்களுடன் தயாரான இயங்குதளத்துடன் ONLYOFFICE ஆவணத்தினை இணைத்திடுக
. 3. நிரலாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சக்திவாய்ந்த ஆவண-பதிப்பாளர்திறன்களையும் கட்டமைப்பு திறன்களையும் வழங்குவதற்கான சேவையில் ONLYOFFICE ஆவணத்தினை ஒருங்கிணைத்திடுக.
பாதுகாப்பு: சர்வதேச பாதுகாப்பு தரங்களுடன், மூன்று நிலை மறைகுறியாக்கம், இறுதி முதல் இறுதி வரை, பாதுகாப்பான அணுகல் , கண்காணிப்பு கருவிகள், கூடுதல் ஆவண அனுமதிகள் போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது
அலுவலக தொகுப்புகள்: PDFஆவணங்களைப் படித்தல், PDFஆவணங்களி லிருந்து பதிவிறக்கம் செய்தல் / PDFஆவணங்களாக பதிவேற்றம் செய்தல், ஆவணங்களை மார்க் டவுன், HTML ஆக மாற்றியமைத்தல், புத்தகங்களை மின் புத்தகங்களாக மாற்றியமைத்தல் ஆகிய கூடுதல் வசதிகூட இதில் உள்ளன
இது. Windows, macOS (Apple silicon systems உட்பட) , Linux ஆகிய அனைத்து இயக்கமுறைமைைகளிலும் செயல்படும் திறன்மிக்கது, இந்த தொகுப்பு புரவலராக செய்யப்பட்டதும் மேககணினி-அடிப்படையிலான பதிப்புகளிலும், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வசதிவாய்ப்புகளுடன் கூடிய கட்டண பதிப்புகளிலும் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு https://www.onlyoffice.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.