உலாவிகளுக்கான உரக்கப்படித்தல்(read aloud ) எனும் விரிவாக்கபயன்பாடு

இதனுடைய உதவியுடன் தற்போதைய இணையப் பக்கக் கட்டுரையை ஒரு சொடுக்கில் சத்தமாகப் படிப்பதை கேட்டிடலாம். இது தற்போது 40+இற்கு மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கிறது. இணையத்தின் கட்டுரைகளை ஒரே இடத்தில் தொடர்ந்து உட்கார்ந்து படித்திட சோர்வாக இருக்கிறதா? இதனுடைய பொத்தானை ஒருமுறைமட்டும் சொடுக்குதல் செய்து,படுக்கையில் ஒய்வு எடுத்து கொண்டே அந்த (குறிப்பிட்ட ) கட்டுரையை நமக்காக உரக்கப் படிக்கச் செய்து பயன்பெறுக. இதில் கிடைக்கும் பல ஆண் , பெண் குரல்களில் இருந்து நமக்குத்தேவையான குரலை நாம் தேர்வு செய்யலாம். மேலும் அந்த குரலின் அளவையும், படித்திடும் வேகத்தையும் விரும்பியவாறு அமைக்கலாம். இது PDF வடிவமைப்பு கோப்பினை கூட ஆதரிக்கிறது. Text-to-speech (TTS) என்பது எண்ணிம உரையை நம்முடைய காதால் கேட்தற்கேற்ப உரக்கப் படிக்கும் ஒரு தொழில் நுட்ப உதவியாகும். இது சில நேரங்களில் “உரக்கப்படித்தல்(read aloud )” தொழில்நுட்பம் என்றும் அழைக்கப் படுகிறது. ஒரு பொத்தானை சொடுக்குதல் செய்வதன் மூலம் அல்லது ஒரு விரலால் தொடுவதன் மூலம் இதனை செயல் படுத்தலாம், TTS ஆனது ஒரு கணினி அல்லது பிற எண்ணிம சாதனத்தில் சொற்களை எடுத்து அவற்றை ஒலியாக மாற்றிடும் திறன்மிக்கது. படிக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு TTS மிகவும் பேருதவியாக இருக்கும். இது குழந்தைகளுக்கு எழுதுவதற்கும் திருத்துவதற்கும், கவனம் செலுத்து வதற்கும் உதவுகின்றது. கணினிகள், திறன்பேசிகள், மடிக்கணினிகள் , கைக்கணினிகள் (tablets) உட்பட ஒவ்வொரு தனிப்பட்ட எண்ணிம சாதனத்திலும் இந்த TTS செயல்படுகிறது. Word , உட்பட அனைத்து வகையான உரை கோப்புகளையும் இதனால் சத்தமாக படிக்க முடியும். இணையஉலாவியில் நேரடியாக திறக்கின்ற இணைய பக்கங்களை கூட இதன் உதவியால் சத்தமாக படிக்கலாம். TTS இல் உள்ள குரலானது கணினியால் உருவாக்கப்படுகிறது, மேலும் படித்திடும் வேகம் பொதுவாக நாம் விரும்பியவாறு விரைவு படுத்தலாம் அல்லது குறைக்கலாம். குரல்களின் தரம் மாறுபடும், ஆனால் சில குரல்கள் மனித குரல்களாக ஒலிக்கின்றன. குழந்தைகள் பேசுவதைப் போல கணினியில் உருவாக்கப்பட்ட குரல்கள் கூட உள்ளன. பல TTS கருவிகள் சத்தமாக படிக்கும்போது சொற்களை முன்னிலைப் படுத்து கின்றன. இது குழந்தைகள் ஒரே நேரத்தில் உரையைப் பார்க்கவும் கேட்கவும் அனுமதிக்கிறது Chrome, Firefox ,Edge ஆகிய இணைய உலாவிகளில் செயல்படும் திறன்மிக்கது இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடாகும் மேலும் விவரங்களுக்கு https://readaloud.app/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.