Neutralinojs எனும் பயன்பாட்டு மேம்பாட்டு கட்டமைப்பு

ஜாவாஉரைநிரலுடன் இணைத்து பயன்பாட்டினை ஒரு முறை உருவாக்கிடுக எங்கு வேண்டுமானாலும் மாற்றம் எதுவும் செய்திடாமல் பயன்படுத்தி கொள்க இது Linux, Windows, macOS, ஆகிய இயக்கமுறைமைகளிலும் Web , Chrome ஆகிய இணைய உலாவியில் செயல்படு கின்ற திறன்மிக்கது. இது ஒரு இலகுரக , சிறிய மேசைக்கணினி பயன்பாட்டு மேம்பாட்டு கட்டமைப்பாகும். ஜாவாஉரைநிரல், HTML, CSS ஆகியவற்றைப் பயன்படுத்தி இலகுரக குறுக்கு-தள மேசைக்கணினி பயன் பாடுகளை உருவாக்க இது நம்மை அனுமதிக்கிறது. நாம் இதனை எந்த நிரலாக்க மொழியுடனும் நீட்டித்து பயன்படுத்திகொள்ளலாம் ( IPC வாயிலான நீட்டிப்புகள்) இதனை எந்தவொரு மூலக் கோப்பின் ஒரு பகுதியாகவும் ( IPC வாயிலான பிள்ளைகளின் செயல்முறைகள்) பயன்படுத்தலாம். Electron, NWjs இல்,நாம் Node.js போன்ற நூற்றுக்கணக்கான சார்பு நூலகங்களை நிறுவுகை செய்திட வேண்டும். உட்பொதிக்கப்பட்ட Chromium, Node.js எளிய பயன்பாடுகளை விரிவடையச் செய்கின்றன – பெரும்பாலான சூழ்நிலைகளில், பயன்பாட்டு மூலத்தை விட கட்டமைப்பின் மதிப்பு அதிகமாகும். Neutralinojs இலகுரக, சிறிய SDK ஐ வழங்குகிறது, இது Electron , NW.jsஆகியவற்றிற்கு மாற்றாக உள்ளது. இது Chromium எனும் இணைய உலாவியைத் தொகுக்கவில்லை . இயக்க முறைமையில் செயல்படுகின்ற இணைய உலாவியின் நூலகத்தைப் பயன் படுத்திகொள்கிறது (எ.கா: Linux இல் gtk-webkit2). இது சொந்த செயல்பாடுகளுக்கு பாதுகாப்பான WebSocket இணைப்பை செயல்படுத்துகிறது இணைய உள்ளடக்கத்தை வழங்க நிலையான இணைய சேவையகத்தை உட்பொதிக்கிறது. மேலும், இது மேம்படுத்துநர்களுக்காக உள்ளமைக்கப்பட்ட ஜாவாஉரைநிரல் வாடிக்கையாளர் நூலகத்தினை வழங்குகிறது. நம்மால் ஒரு இணையதளத்தை உருவாக்க முடியுமெனில், குறுக்கு-தள பயன்பாடுகளையும் மேசைக்கணினிப் பயன்பாடுகளையும் உருவாக்கிடமுடியும், ஏனெனில் Neutralinojs என்பது ஜாவாஉரைநிரல், HTML , CSS போன்ற இணைய தொழில்நுட்பங்களுடன் சொந்த மேசைகணினிப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பாகும். நம்முடைய அடுத்த Neutralinojs பயன்பாட்டை உருவாக்க நமக்கு பிடித்த முன்பகுதி கட்டமைப்பை (Angular, React, Svelte, Vue, முதலியன) பயன்படுத்திகொள்ளலாம்.
1.சொந்த API ஜாவாஉரைநிரல்API இயக்கமுறைமை நிலையின் செயல் பாடுகளான கோப்பு கையாளுதல், கட்டளைகளை இயக்குதல், சொந்த உரையாடல் பெட்டிகளைக் காண்பித்தல் போன்றவற்றுக்கான அணுகலை வெளிப்படுத்துகிறது.
2. கையடக்கமானது & சார்பில்லாதது இதனுடைய பயன்பாடுகளை இயக்க கூடுதல் சார்புகள் எதுவும் தேவையில்லை. அனைத்து தளங்களுக்கும் தேவையான பயன்பாடுகளை ஒரே தளத்தில் உருவாக்க முடியும் தனியான மொழிமாற்றிகளும் தேவையில்லை!
3.குறுக்கதளஆதரவு இதனுடைய பயன்பாடுகள் Linux, Windows, macOS, Web ,Chrome ஆகிய அனைத்திலும் செயல்படுகின்ற திறன்மிக்கவை. அனைத்து பிரபலமான இயக்க முறைமைகளுக்கும் , இணைய உலாவிகளுக்கும் ஒற்றையான கையடக்க பயன்பாடாக வெளியிடலாம்.
4.குறைந்த கொள்ளளவு மிகவிரைவானது ஒரு எளிய சுருக்கப்படாத இதனுடைய Neutralinojs பயன்பாடு ~2MB மட்டுமே, சுருக்கப்பட்ட பயன்பாட்டின் அளவு ~0.5MB. உண்மையில், இது மற்ற Chromium-அடிப்படையிலான குறுக்கு-தள பயன்பாட்டு மேம்பாட்டு கட்டமைப்பைப் போல நினைவகம் அல்லது சேமிப்பிடத்தை பயன்படுத்தாது
5.எளியது & நெகிழ்வானது இந்த நியூட்ராலினோஜ் எனும் குழுவின் உதவியுடன் எப்போதும் நிரலாளர்களுக்கு தேவையாான எளிய நெகிழ்வான மேம்பாட்டு இடைமுகங்களை வழங்க முனைகிறது. கட்டமைப்பில் எளிமையான கையடக்க தானியங்கி நிகழ்நிலை படுத்தியும் CLIயும் உள்ளது. நம்முடைய பணியைச் சிக்கலாக்கும் OOP அடிப்படையிலான இனங்கள் ,நேரத்தைச் செலவழிக்கும் அமைப்புகளை பயன்படுத்திகொள்ளாது
.6.எந்தவொரு பின்புல செயலும், எந்தவொரு முன்புற செயலும்அற்றது HMR போன்ற நமக்குப் பிடித்த வசதிகளுடன் இதனுடையபயன்பாட்டினை எந்தவொரு முன்பகுதி கட்டமைப்பிலும் உருவாக்கலாம். மேலும், Neutralinojs ஐ IPC வாயிலான பிள்ளைகளின் செயல்முறை உடன் எந்த மூலக் கோப்பின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம் அல்லது IPC நீட்டிப்புகளுடன் கூடிய எந்த பின்புல செயலிலும் Neutralinojs API ஐ நீட்டிக்கலாம். இதனை கற்கத் தொடங்கும் போது, இதனுடைய முடிவற்ற பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் என்பதை உணரமுடியும். எடுத்துக்காட்டாக, குறுக்குத்தளமேசைக்கணினிபயன்பாட்டின் மேம்பாடு., சொந்த செயலிகளுடன் இணைய பயன்பாடுகளை உருவாக்குதல், மேககணினி செய்தி தரகராகப் பயன்படுத்துதல்., ஐபிசி தரகராகப் பயன்படுத்தி பல செயல்முறைகளை இணைத்தல். ஆகிய காட்சிகளுக்கு இதனைப் பயன்படுத்தலாம்.

இதுபொதுமக்களின் பயன்பாட்டிற்கு MIT எனும் உரிமத்தின் கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://neutralino.js.org/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.