Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம்

Rexx என்பது ஒரு எளிய “திறன்மிக்க” கணினிமொழியாகும்.இந்த கட்டுரையின் நிபந்தனைகளின்படி இந்த கூற்றுஒரு முரண்பாடு அல்லவா? நிற்க.
Rexxஎனும் கணினிமொழிகுறித்த ஒரு விரைவான கண்ணோட்டம் எனும் இந்த கட்டுரையானது நமக்கு Rexxஉரைநிரலை அறிமுகப்படுத்துகிறது.
Rexx என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற மறுகட்டமைக்கப்பட்ட விரிவாக்கப் பட்ட செயல்படுத்துபவர் (Restructured Extended Executor) என்பது ஒரு உரைநிரல் மொழியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உரைநிரலை முடிந்தவரை எளிதாகவும், விரைவாகவும், நம்பகமானதாகவும், பிழையற்றதாகவும் மாற்றுவதே இதன் குறிக்கோளாகும். பொதுவாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்ற பல்வேறு நிரலாக்க மொழிகளும் முந்தைய(பழைய) கணினிமொழி களுடன் இணக்கமாக செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன, மேலும் அவை குறிப்பிட்ட பார்வையாளர்கள் அல்லது தளங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவைகளாகும். ஆனால் இந்தRexx எனும் கணினிமொழியானது உண்மையில் அவ்வாறானதன்று அதாவது Rexxஆனதுகுறிப்பிட்ட தளங்களுக்காக மட்டுமானது அல்லது குறிப்பிட்ட பயனாளர்களுக்கும் மட்டுமானது என்ற நோக்கங்களை புறக்கணிக்கிறது. இது முதல் நாளிலிருந்தே சக்திவாய்ந்ததாகவும், பயன்படுத்த எளிதாகவும் அனைவருக்கும் பயன்படும் படியாகவும் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தபட்டு கொண்டேவருகின்றது.
. Rexx ஐ கற்றுக்கொள்வது எளிது தொடர்ந்து அதனை பயன்படுத்துவது அதைவிட மிகஎளிது என்றாலும், அது பரவலாகப் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழியாக மாற்றுகின்ற சில வலுவான திறன்களை நமக்குவழங்குகிறது.
Rexx என்பது எந்தவொரு இயங்குதளத்தையும் சாராத சுதந்திரமான, செந்தர நிலைகளின் அடிப்படையிலான உரைநிரல் மொழியாகும், இது பல்வேறு வகைகளிலான அமைப்புகளிலும் இயங்குகின்ற திறன்மிக்கது. இந்த கட்டுரை “classic” அல்லது செயல்முறையிலான Rexx ஐ அறிமுகப்படுத்துகிறது. இதில் பொருள்நோக்கு சார்ந்த(object-oriented) Rexx , Java-இற்கு இணக்கமான Rexx ஆகிய செயலாக்கங்களும் உள்ளன. Rexx இன் இணையதளத்தில் அவைகளைப் பற்றி அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் Rexx ஒரு “திறனுடைய” கணினிமொழி, எனவே இந்த பயிற்சியில் அதுகுறித்து விவரங்களை காணத் துவங்கிடுவோமா.
Rexx குறித்த அடிப்படைகள்
Rexx எனும் கணினி மொழியானது – ஒப்பீடு, தருக்கம் எண்கணிதம் , சரம் ஆகிய இயக்கிகளை உள்ளுறுப்புகாளாக கொண்டுள்ளது. Rexx ஆனது இரண்டு டஜன் கட்டளைகளின் சிறிய தொகுப்பையும் கொண்டுள்ளது, இது ஒரு பெரிய குழுவான உள்ளமைக்கப்பட்ட செயலிகளால் சூழப்பட்டுள்ளது.நூற்றுக்கணக்கான கட்டணமற்ற Rexxஇன் செயலிகளானவை நூலகங்களில் கிடைக்கும் வெளிப்புற செயலிகளைப் பயன்படுத்தி இந்த கணினிமொழி எளிதாக நீட்டிக்கப்படுகிறது.

படம்
மேலே உள்ள படம் ரெக்ஸ் எனும் கணினி மொழியின் அடிப்படைகளைக் காண்பிக்கிறது.எந்தவொரு உள்ளமைக்கப்பட்ட செயலியைச் செயற்படுத்திடு கின்றோமோ அதே வழிமுறையில் Rexx இல் வெளிப்புற செயலிகளை குறிமுறைைவரிகளாக செய்திடலாம் (வெளிப்புற செயலியின் நூலகத்தை பதிவேற்றவும் அணுகு வதற்கும் ஒரு கூற்று அல்லது இரண்டு கூற்றுகளை வெளியிட்ட பிறகு). Rexx மாறிகள் சரங்கள்-எழுத்துரு, இரும(bit) அல்லது பதினாறிலக்க(hex). அல்லது பின்வருமாறான அட்டவணையில் காண்பித்துள்ளவாறு அவை குறிப்பிட்ட எண்ணைக் குறிக்கும் சரத்தைகூடக் கொண்டிருக்கலாம்:

அட்டவணை 1: எண்களைக் குறிக்கும் சரங்கள்

ண்:எடுத்துகாட்டுகள்:
பெரியமுழுஎண்அல்லதுமுழுஎண்‘3’அல்லது ‘+6’அல்லது ‘989349829’
தசமஎண் அல்லது நிலையான புள்ளிஎண்‘0.3’ அல்லது ‘17.3465’
அடுக்குத்தொடர்,உண்மையான,மிதவை புள்ளி‘1.235E+11’ அல்லது ‘171.123E+4’

Rexx இல் மாறிகள் வகைபடுத்தப்படவில்லை. அவை சரம் அல்லது எண் மதிப்புகளைக் குறிக்கும் சரங்களைக் கொண்டிருக்கின்றன. மாறியில் ஒரு எண்ணாகப் புரிந்துகொள்ளக்கூடிய சரம் இருந்தால், நம்முடைய உரைநிரலில் அந்த மாறியைக் கொண்டு எண்களின் செயல்களைச் செய்ய முடியும்.
ஒரு எளிய எடுத்துக்காட்டு
Rexx எவ்வாறு இருக்கும் எனகாண்பிப்பதற்கான எளிய எடுத்துக்காட்டு நிரல்:

Rexx இற்கு முற்றிலும் குறைந்தபட்ச இலக்கணம் தேவை என்பதை காணலாம். இது ஒருசுதந்திரமான வடிவ கணினிமொழி, எனவே நாம் விரும்பியபடி இந்த கணினிமொழியின் உறுப்புகளையும் உள்தள்ளலையும் வரிகளுக்கு இடையில்காலி இடைவெளிவிடுவதையும் செய்யலாம். Rexx ஆனது எழுத்துருவை முக்கியமாக கணக்கில் கொள்ளாது, எனவே end_this_game போன்ற மாறியை End_This_Game அல்லது END_THIS_GAME எனக் குறிப்பிடலாம்.; Rexx ஆனது எழுத்துருவை கணக்கில் கொள்ளாமல் அதை அதே மாறியாக மட்டுமேக் கருதுகிறது.
வரம்புகாட்டிகளுக்கு இடையே கருத்துகளை இணைத்தல் ( /* , */ ஆகியன).
கருத்துகள் தனித்தனி வரிகளில் இருக்கலாம் அல்லது செயற்படுத்தக்கூடிய கூற்றுகளைக் கொண்ட வரிகளில் இருக்கலாம். கருத்துகளானவை பலவரிகளாக கூட விரிந்து பரந்துஇருக்கபலாம். எடுத்துக்காட்டில் உள்ள கூற்றில் காண்பிப்பது போன்று, மாறிகள் துவக்கப்பட வேண்டியதில்லை. தொடங்கப்படாத மாறி அதன் பெயரை பெரிய எழுத்தில் இயல்புநிலையாக மாற்றுகிறது, எனவே முதலில் செயல்படும்போது, end_this_game எனும் மாறியானது END_THIS_GAME எனும் மதிப்பைக் கொண்டுசெயல்படுகின்றது. மடக்கி மூலம் முதல் முறையாக, உரைநிரல் தொடர்கிறது, ஏனெனில் N இன் எழுத்துமதிப்பானது END_THIS_GAME க்கு சமமாக இல்லை.
Rexxஆனது பல விரைவான வசதியான குறிமுறைவரிகளின் குறுக்கு வழிகளைக் கொண்டுள்ளது- இருப்பினும், எந்தவொரு “திறனுடனும்” மொழியையும் பயன்படுத்தும் போது, அந்த குறுக்குவழிகளில் எதையும் எப்போதும் எளிதாக மேலெழுதலாம். ரெக்ஸின் நிரலாக்கங்களில், அனைத்து மாறிகளையும் துவக்க விரும்புவோம் (இங்கு எடுத்துகொண்ட குறுக்குவழியைப் போன்றில்லாமல்). இது நன்றாக செயல்படக்கூடியது – Rexx நெகிழ்வானது. தற்செயலாக ஆரம்பிக்கப்படாத மாறியைக் குறிப்பிடும்போது, சூழ்நிலையை அடையாளம் காண அல்லது சிக்க வைப்பதற்கான ஒரு பொறிமுறையை Rexx வழங்குகிறது. இது புதிய விதி விலக்கு அல்லது நிபந்தனை எனப்படும். பின்வரும் அட்டவணையில் காண்பித்துள்ளவாறு பொறியில் சிக்க வைக்கக்கூடிய பல்வேறு விதிவிலக்குகளுக்கான நிபந்தனைகளை Rexx ஆனது வழங்குகிறது

அட்டவணை 2: விதிவிலக்கு நிபந்தனைகள் ரெக்ஸின் பொறியமைவுகள்

விதிவிலக்கு நிபந்தனை அல்லது பொறியமைவு:பயன்:
No valueதுவக்கப்படாத மாறிகள் பற்றிய குறிப்பு மூலம் எழுப்பப்பட்டது
errorவெளிப்புற சூழலுக்கு வழங்கப்பட்ட கட்டளையானது திரும்பியவுடன் பிழையைக் குறிக்கும் போது எழுப்பப்பட்டது
failureவெளிப்புற சூழலுக்கு வழங்கப்பட்ட கட்டளை தோல்வியடையும் போது எழுப்பப்பட்டது
haltஉரைநிரல் (Ctrl+C போன்றவை) வெளிப்புற குறுக்கீடு மூலம் எழுப்பப்பட்டது
Not readyஒரு I/O எனும் உள்ளீட்டினை படிக்காத சாதனத்தின் மூலம் எழுப்பப்பட்டது
syntaxஉரைநிரலில் இலக்கணம் அல்லது இயக்க நேரப் பிழையால் எழுப்பப்பட்டது
Lost digitsஎண்கணித செயல்பாடு இலக்கங்களை இழக்கும் போது எழுப்பப்பட்டது

இந்த விதிவிலக்கு நிபந்தனைகள், சிக்கல்களைக் கையாள குறியிடப்பட்ட சிறப்பு நடைமுறைகளுக்கு உரைநிரலைத் திருப்ப எளிதான வழியை வழங்குகிறது. (நிச்சயமாக பிழைகளை நிர்வகிப்பதற்கு ரெக்ஸ்க்ஸுக்கு வேறு வழிகள் கூடஉள்ளன.) உரைநிரல் வெளிப்புற சூழல்களுக்கு (இயக்கமுறைமை அல்லது பிற நிரலாக்க இடைமுகங்கள் போன்றவை) கட்டளைகளை வழங்கும்போது ஏற்படும் பிழைகளை பல நிபந்தனைகள் குறிப்பிடுகின்றன என்பதைக் கவனித்திடுக. இதுசரங்களை கையாளுவதில் வல்லமை வாய்ந்தது, இயக்கமுறைமைகளுக்கு கட்டளைகளை வழங்குவதற்கும் அவற்றின் முடிவு களை நிர்வகிப்பதற்கும் ரெக்ஸ்ஆனது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கிறது.
உள்ளமைக்கப்பட்ட வெளிப்புற செயலிகள்
எடுத்துகாட்டின் உரைநிரலிற்கு வருவோம். இந்த கட்டளை வரியானது 1, 5 ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இவையிரண்டிற்கும் இடையே ஒரு சீரற்ற எண்ணை உருவாக்குகிறது. இது அந்த மதிப்பை the_number என்ற மாறியில் வைக்கிறது:
the_number = random(1,5)
இந்த குறிமுறைவரியானது சீரற்ற எண்ணை உருவாக்க random எனப்படும் உள்ளமைக்கப்பட்ட செயலியைப் பயன்படுத்திகொள்கிறது. அதன் மிகக் குறைவான இலக்கணத் தேவைகளின் ஒன்றில், செயலியின் பெயருக்குப் பிறகு (எந்த இடைப்பட்டகாலி இடமும் இல்லாமல்) உடனடியாக இடது அடைப்புக் குறியைஇட வேண்டும் என்பது Rexx இன் அடிப்படை தேவையாகும். செயலியில் உள்ளீட்டு தருக்கங்கள் எதுவும்இல்லை எனில், பின்வருவது போன்ற வெற்று அடைப்புக்குறிகளை இட்டிடுக:
the_number = random()
Rexx இன் திறன் பெரும்பகுதி அதன் 70-இற்குமேற்பட்ட உள்ளமைக்கப்பட்ட செயலிகளிலேயே உள்ளது. அவ்வாறான செயலிகள் பின்வருமாறான குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: சரத்தினை கையாளுதல் (எழுத்துரு, இருமஎண்(bit), பதினாறிலக்க(hex) சரங்களுக்கு) , எண் , உள்ளீடு / வெளியீடு , மொழிமாற்றம் , சுற்றுச்சூழல் , தேதி / நேரம் ,போன்ற பல
.Rexxஇன் துணைநிரல்களும் கருவிகளும் வெளிப்புற செயலிகளின் நூலகங்களை அல்லது கூடுதல் செயலிகளைக் கொண்ட தொகுப்புகள் வடிவத்தில் கிடைக்கின்றன. உள்ளமைக்கப்பட்ட செயலிகளின் அதே பாணியும் இலக்கணமும் கொண்ட வெளிப்புற செயலிகளும் குறிப்பிடுவதால்,மொழி நீட்டிப்புகளை குறிமுறைவரிகளை எழுதுவதையும் கற்றுக்கொள்வதையும் மிகவும் எளிதாக்கு கிறது. எனவே ரெக்ஸ் என்பது நூற்றுக்கணக்கான சுதந்திரமான வெளிப்புற செயலிகளைக் கொண்ட விரிவாக்கக்கூடிய கணினிமொழியாகும்.
அறிவுறுத்தல்கள் (Instructions)
எடுத்துக்காட்டு உரைநிரலின், திரையில் தகவல்களை எழுதுவதற்கும், பயனர் உள்ளீட்டைப் படிப்பதற்கும் முறையே say , pull ஆகிய கட்டளைகளைப் பயன்படுத்திகொள்கிறது. எந்தவொரு திறன்வாய்ந்த கணினிமொழியையும் போன்றே, இந்த கட்டளைகள் பல மாறிகளை-கையாளுதல், வடிவமைப்பு (manipulation, formatting) ஆகிய வாய்ப்புகளைக் கொண்டுள்ளன, மேலும் அவை பல்வேறு சாதனங்களில் உள்ளீட்டை/வெளியீட்டை நிர்வகிக்கின்றன. எடுத்துக் காட்டாக உரைநிரலின் திரைக்கான எளிய வெளியீடு ,விசைப் பலகையில் இருந்து உள்ளீடு ஆகியவற்றிற்கு விளக்கமளிக்கிறது. ரெக்ஸ்ஸின் எளிமையின் ஒரு பகுதி என்னவென்றால், அதில் இரண்டு டஜன் கட்டளைகள் மட்டுமே உள்ளன. இந்த அட்டவணையில் காண்பித்துள்ள வாறு, நிரலின் தருக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் அவை உள்ளடக்கி கொண்டுள்ளன:

அட்டவணை 3: Rexx கட்டுப்பாட்டு கட்டளைகள்

கட்டளை:பயன்:
callஒரு வழக்கத்தைத் தூண்டுகிறது அல்லது பிழையை இயலுமை செய்கிறது
doஅனைத்து வகைகளிலான DO கூற்றுகள் (DO…WHILE, DO…UNTIL, DO n times, etc)
exitஒரு நிரலாக்கத்தின் முடிவுப்பகுதி
ifஅனைத்து வகைகளிலான IF கூற்றுகள் (IF…THEN, IF…THEN…ELSE, etc.)
iterateஒருDO எனும்அறிவுறுத்தலுக்கு நேரடியாக கட்டுப்பாட்டை அனுப்புவதன் மூலம் கட்டுப்பாட்டின் ஓட்டத்தை மாற்றுகிறது
leaveஒரு DO எனும் மடக்கியிலிருந்து கட்டுப்பாட்டை அனுப்புவதன் மூலம் கட்டுப்பாட்டின் ஓட்டத்தை மாற்றுகிறது
returnஅழைப்பாளருக்கு கட்டுப்பாட்டினை திருப்புகின்றது
selectமாற்றுகளின் தொகுப்பிலிருந்து ஒரு கிளையைத் தேர்ந்தெடுக்கிறது (“case” கட்டமைப்பை செயல்படுத்துகிறது)
signalஒரு சிட்டைக்கு கட்டுப்பாட்டை மாற்றுகிறது (“go to” போன்றது), அல்லது பிழை நிலையை இயலுமைசெய்கிறது அல்லது முடக்குகிறது

கட்டமைக்கப்பட்ட நிரலாக்கத்திற்கு தேவையான நிரலாக்க கட்டமைப்புகளின் முழு தொகுப்பையும் ரெக்ஸ் வழங்குகிறது. ஆனால் நாம் விரும்பினால், பொதுவான கட்டமைக்கப்படாத கட்டமைப்புகளையும் (GO TO போன்றவை) கொண்டுவரலாம். Rexxஇன் மற்ற கட்டளைகள் இந்த அட்டவணையில் காண்பித்து உள்ளவாறு சூழலை நிர்வகித்து மற்ற பணிகளைச் செய்கின்றன

அட்டவணை 4: மற்ற ரெக்ஸ் அறிவுறுத்தல்கள்

அறிவுறுத்தல்:பயன்:
addressஉரைநிரலின்கட்டளைகளை அனுப்பும் வெளிப்புற சூழலை ஆணையிடுகின்றது
argஉள்ளீட்டு தருக்கங்களைப் படித்திடுக அல்லது மாதிரிபலகத்தின் தருக்கங்களைப் பாகுபடுத்திடுக
dropஒன்று அல்லதுஒன்றிற்கு மேற்பட்ட மாறிகள் ஒதுக்குவதை நீக்குகிறது
interpretஒரு வெளிப்பாட்டில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மாறும் வகையில் மதிப்பிடுகிறது
nopசெயல் ஏதுமில்லை
numericஎண் கணக்கீட்டின் துல்லியத்தையும் பிறவசதிகளையும் கட்டுப்படுத்துகிறது
optionsRexxஇன் இயந்திரமொழிபெயர்ப்பாளருக்கு கட்டளைகளை அனுப்புகிறது (மொழிபெயர்ப்பாளரை கட்டுப்படுத்துகிறது)
parseகட்டுப்படுத்தப்பட்ட பாகுபடுத்தலின் விளைவாக மாறிகளுக்கு மதிப்புகளை ஒதுக்குகிறது
procedureநடைமுறைகள் முழுவதும் மாறிகளின் செயல்எல்லையைக் கட்டுப்படுத்துகிறது
pullஉள்ளீட்டைப் படித்து பாகுபடுத்தும் விதிகளைப் பயன்படுத்துகிறது
pushவெளிப்புற தரவு வரிசையில் ஒரு வரியை சேர்க்கிறது அல்லது கடைசியைமுதலாவதாக,முதல்வரியை-கடைசிவரியாக(LIFO) வரிசைபடுத்திடுகின்றது
queueவெளிப்புற தரவு வரிசையில் ஒரு வரியை சேர்க்கிறது அல்லது முதலிலிருந்துகடைசி (FIFO) வரிசையாக்குகின்றது
sayஒரு வெளிப்பாட்டை மதிப்பிடுகிறது ,இயல்புநிலை வெளியீட்டு ஓட்டத்தில் ஒரு வரியை எழுதுகிறது
traceஉள்ளமைக்கப்பட்ட பிழைத்திருத்த வசதியை நிர்வகிக்கிறது

எளிமையின் மூலம் திறன்
இந்த கட்டுரையில்ரெக்ஸ்ஸின் வசதிவாய்ப்புகளை சுருக்கமாகக் கூறியதை விட இன்னும் ஏராளமான வசதி வாய்ப்புகள் உள்ளன, எனவே கடைசியாக ஒரேயொருகவர்ச்சிகரமான வசதியைகூறி இந்த கட்டுரையைமுடிப்போம்.
Rexx ஆனது உள்ளடக்க முகவரியிடக்கூடிய நினைவகத்தைக் கொண்டுள்ளது (சில நேரங்களில் அது துனை நினைவகம் என்று அழைக்கப்படுகிறது). இதன் பொருள் கலவையான மாறிகள், இடைவெளிகளால் பிரிக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட மாறிகள் போன்றவற்றை கூட நாம்விரும்பினால் உருவாக்கலாம்:
this.compound.variable
this.compound.variable.1
my_array.1
my_array.2
my_tree.level.one
my_tree.level.two
my_tree.level.two.a
my_tree.level.two.b
my_tree.level.three
எத்தனை நிலைகளுடனும் அல்லது கூறுகளுடனும் கலவையான மாறிகளை உருவாக்கலாம். எந்தவொரு தரவு கட்டமைப்பையும் அவற்றைப் பயன்படுத்தி உருவாக்க இது நம்மை அனுமதிக்கிறது. பட்டியல்கள், அணிவரிசைகள், அட்டவணைகள், சமச்சீரான அல்லது சமநிலையற்ற மரங்கள்(trees), முக்கிய-மதிப்பு இணைகள், வரிசைகள், வரிசைகளற்றவை அல்லது வேறு ஏதேனும் தரவு கட்டமைப்பு ஆகியவற்றினை உருவாக்கலாம். இதனுடைய எளிய, சீரான இலக்கணம் அனைத்தும். “எளிமையின் மூலம் நிரலாக்கத் திறனை ” நமக்கு வழங்கும் வகையில் Rexx எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கமளிக்கிறது. இதில் கலவையான மாறிகளைகொண்டு ஏறக்குறைய எந்தவொரு தரவு கட்டமைப்பையும் உருவாக்கப் பயன்படுத்திகொள்ளலாம், இருப்பினும் அவற்றிற்கு சிக்கலான அல்லது சிறப்பு இலக்கணம் எதுவும் தேவையில்லை.
முடிவாக Rexx என்பது ஒரு பல்துறை நிரலாக்க மொழியாகும், இது பயன்பாட்டின் எளிமையை திறனுடன் இணைக்கிறது. நமக்கு எப்போதாவது தேவைப்படும் அனைத்தும் கட்டணமற்றRexx ஆதாரங்களும் இதில் உள்ளன Rexx கிட்டத்தட்ட எல்லா தளங்களிலும் இயங்குகிறது – நம்முடைய திறமைகளை கொண்டு இதன் வாயிலாக எல்லா இடங்களிலும் பொருந்தி செயல்படுமாறு பயன்பாட்டினை நாமே .இதன்மூலம்உருவாக்கியபின்னர் அக் குறிமுறைவரிகள் எங்கும் எந்தஇடத்திலும் எந்த சூழலிலும் எந்த தளத்திலும் இயங்குமாறு செய்திடலாம் .இது Basic போன்றே எளிதானது, ஆனால் கடினமான மொழிகளைப் போன்றும் நவீண மொழிகளைபோன்றும் மிக சக்தி வாய்ந்தது இதில் பல சுதந்திரமான நடைமுறை இயந்திரமொழிபெயர்ப்பாளர்கள் உள்ளன Rexx நூற்றுக்கணக்கான கட்டணமற்ற கருவிகளை வழங்குகிறது .◦ எனவே இது வரைகலைபயனாளர்இடைமுகங்கள்(GUI),தரவுத்தளங்கள்,இணைய சேவைய கங்கள், ஜாவா, போன்ற கிட்டத்தட்ட எதிலும் இடைமுகம் செய்திடலாம் . Rexx ஒரு macro மொழியாகவும் உட்பொதிக்கப்பட்ட மொழியாகவும் செயல்படுத்திட முடியும் . மேலும் இது உலகளாவிய சமூகத்தையும் சர்வதேச பயனர் குழுவையும் கொண்டுள்ளது இதிலுள்ள வசதிகளனைத்தும் கட்டணமற்ற வைகளாகும்! இதனுடைய கருவிகள், பயிற்சிகள் குறிப்புப் பொருட்கள் உட்பட Rexx பற்றிய கூடுதல் தகவலுக்கும் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து இதனை பயன்படுத்தி கொள்ளவும் http://www.rexxinfo.org/ எனும் இதனுடைய இணையதளத்தைப் பார்வையிடுக

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.