எக்செல்தொடர்-எக்செல்லில் தேர்வுசெய் குறி (டிக் ✓) சின்னத்தை எவ்வாறு செருகுவது

தேர்வு செய்குறியீடு Vs தேர்வுசெய்பெட்டி ஒப்பீடு

      

தேர்வுசெய்குறியீடு, தேர்வுசெய்பெட்டி ஆகிய இரண்டும் ஓரளவு ஒத்ததாக இருந்தாலும், இவை இரண்டும் எக்செல்லில் செருகப்பட்டு பயன்படுத்தப்படும் செயல்பாட்டில் மிகவும் வேறுபட்டவைகளாகும்.
தேர்வுசெய்குறியீடு(Check mark) என்பது ஒருகலணில்(Cell) நாம் செருகக்கூடிய ஒரு குறியீடாகும் (நாம் தட்டச்சு செய்யும் எந்தவொரு உரையையும் போலவே). அதாவது, நாம் கலணை நகலெடுக்கும்போது தேர்வுசெய் குறியீட்டையும் சேர்த்துதான் நகலெடுக்கின்றோம், மேலும் நாம் கலணை நீக்கும்போது, தேர்வுசெய்குறியீட்டையும் சேர்த்துதான் நீக்குகின்றோம். வழக்கமான உரையைப் போலவே, வண்ணத்தையும் எழுத்துரு அளவையும் மாற்றுவதன் மூலம் அதை வடிவமைக்கலாம்.
ஒரு தேர்வுசெய்பெட்டி(Check box) ஆனது, பணித்தாள் மேல் அமர்ந்திருக்கும் ஒரு பொருளாகும். எனவே, நாம் ஒரு கலணின் மேல் ஒரு தேர்வுசெய் பெட்டியை வைக்கும்போது, அது கலணின் ஒரு பகுதி அன்று, ஆனால் அதற்கு மேல் இருக்கும் ஒரு பொருளாகும். அதாவது நாம் அந்த கலணை நீக்கினால், தேர்வுசெய்பெட்டியானது நீக்கப்படாமல் போகலாம். மேலும், நாம் தேர்வுசெய் பெட்டியைத் தேர்ந்தெடுத்து, பணித்தாளில் எங்கு வேண்டுமானாலும் இழுத்துசென்றுவிடலாம் (அது கலனுடன் இணைக்கப்படவில்லை என்பதால்). .

ஊடாடும் அறிக்கைகளில் ,முகப்புத்திரைகளில் தேர்வுசெய்பெட்டிகள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடியும், அதே சமயம் தேர்வுசெய்குறியீடு என்பது அறிக்கையின் ஒரு பகுதியாக நாம் சேர்க்க விரும்பும் சின்னமாகும்.
சுருக்கமாக கூறுவதெனில்தேர்வுசெய் குறியீடு என்பதுகலணில் உள்ள ஒரு சின்னமாகும் .தேர்வுசெய்பெட்டி (அதாவது ஒரு பெட்டியில் உள்ளது) என்பது கலண்களுக்கு மேலே வைக்கப்படும் ஒரு பொருளாகும்.
எக்செல்லில் தேர்வுசெய் குறியீடானது ஒரு சின்னத்தை செருகுகிறது இந்த கட்டுரையில், எக்செல்லில் இவைகளை எவ்வாறு பயன்படுத்தி கொள்வது என்பது குறித்த அனைத்து வழிமுறைகளையும் காணலாம். நாம் பயன்படுத்தும் வழிமுறையானது, நம்முடைய பணியில் தேர்வுசெய் குறியீட்டினை எவ்வாறு பயன்படுத்த விரும்புகின்றோம் என்பதைப் பொறுத்து அமைந்திருக்கும் (இந்தப் பயிற்சியில் பின்னர் காணலாம்). இப்போது தொடங்குவோமா!
தேர்வுசெய் குறியீட்டினே நகலெடுத்து ஒட்டுதல்
எளிதானவழிமுறை ஒன்றிலிருந்து இதனைதொடங்கிடுவோம். எக்செல்லில் தேர்வுசெய் குறியீட்டினை நகலெடுத்து ஒட்டுவதே மிக எளியவழியாகும். இதைச் செய்ய, முதலில் நகலெடுக்க விரும்பும் தேர்வுசெய் குறியீடு உள்ள கலணிற்குச் செல்க. பின்னர்கலணிற்குள் இடம்சுட்டி வந்தவுடன் சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக அல்லது F2 விசையை அழுத்திடுக. உடன் நம்மை எக்செல்லின்edit mode எனும் நிலைக்கு அழைத்துச் செல்லும்
தேர்வுசெய் குறியீட்டினை ஒட்டுதல் (Ctrl + V).
எக்செல்லில் தேர்வுசெய்குறியீடு கிடைத்தவுடன், அதை நகலெடுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் ஒட்டலாம். ஒரு சில இடங்களில் தேர்வுசெய் குறியீட்டினை நகலெடுக்க விரும்பினால் இந்த வழிமுறை பொருத்தமானது. இது கைமுறையாகச் செய்வதை உள்ளடக்கியதால், அளவுகோல்களின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கலண்களுக்கு தேர்வுசெய்குறியீடுகளைச் செருக வேண்டிய பெரிய அறிக்கைகளுக்கு இது பொருந்தாது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்துவது நல்லது (இந்த பயிற்சியில் பின்பகுதியில் காணலாம்)

I.விசைப்பலகையின் குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்துதல்
விசைப்பலகையின் குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்த, கலண்களின் எழுத்துருவை Wingdings 2 ஆக மாற்ற வேண்டும் (அல்லது நாம் பயன்படுத்தி கொள்கின்ற விசைப்பலகையின் குறுக்குவழிவிசையின் அடிப்படையில்(Wingdings) .கலண்களில் தேர்வுசெய் குறியீடு அல்லது பெருக்கல் குறிஆகியவற்றினை செருகு வதற்கான குறுக்குவழிகள் பின்வருமாறு. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்த,முதலில்எழுத்துருக்களை Wingdings 2இற்கு மாற்ற வேண்டும்.

2
தேர்வுசெய் குறி, பெருக்கல் குறிஆகியவற்றினைச் செருக நாம் பயன்படுத்தக்கூடிய மேலும் சில விசைப்பலகையின் குறுக்குவழிகள் பின்வருமாறு. இந்த குறுக்கு வழிகளைப் பயன்படுத்த, எழுத்துருக்களை Wingdings ஆக (2 இல்லாமல்) மாற்ற வேண்டும் .

3
கலணில் ஒரு தேர்வுசெய் குறியீட்டினை மட்டும் விரும்பும் போது இந்த வழிமுறை மிகவும் பொருத்தமானது. இந்த வழிமுறையில் நாம் எழுத்துருக்களை Wingdings அல்லது Wingdings 2 ஆக மாற்ற வேண்டும் என்பதால், தேர்வுசெய் குறியீடு அல்லது பெருக்கல் குறியுடன் அதேகலணில் வேறு ஏதேனும் உரை அல்லது எண்களை வைத்திருக்க விரும்பினால் அது பயனுள்ளதாக இருக்காது.
சின்னங்களின் உரையாடல் பெட்டியைப் (Symbols Dialog Box) பயன்படுத்துதல் எக்செல்லில் ஒரு தேர்வுசெய் குறியீட்டின் சின்னத்தை (அல்லது அதற்கான ஏதேனும் சின்னத்தினை) செருகுவதற்கான மற்றொரு வழி சின்னங்களின் உரையாடல் பெட்டியைப் பயன்படுத்துவதாகும். சின்னங்களின் உரையாடல் பெட்டியைப் பயன்படுத்தி தேர்வுசெய் குறியீட்டினை ( tick எனும்குறி) செருகுவதற்கான படிமுறைகள் பின்வருமாறு:
முதலில் தேர்வுசெய்குறியீடு சின்னத்தை உள்ளிடவிரும்பும் கலணைத் தேர்ந்தெடுத்திடுக. பின்னர்திரையின் மேலே உள்ள Insert எனும் தாவலின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

4.
உடன் விரியும் Insert எனும் தாவலின்திரையில் Symbolஎனும் உருவப் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

5.
பின்னர்விரியும் திரையின் Symbol எனும் உரையாடல் பெட்டியில், எழுத்துருவாக( font) ‘Segoe UI Symbol’ என்பதைத் தேர்ந்தெடுத்திடுக.

6.
தொடர்ந்துதேர்வுசெய் குறியீட்டின் சின்னமானது திரையில் தோன்றிடும் வரை சுட்டியை கீழே நகர்த்தி செல்க திரையில் திரையில்தேர்வுசெய் குறியீடானது தெரிந்தவுடன் அதனைை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக (அல்லது Insert என்பதைக் சொடுக்குக).

7
மேலே கூறிய படிமுறைகளை பின்பற்றினால் தேர்ந்தெடுக்கப்பட்டகலணில் ஒரு தேர்வுசெய் குறியூட்டினைச் செருகும். நாம் மேலும் விரும்பினால், ஏற்கனவே செருகப்பட்ட ஒன்றை நகலெடுத்து அதைப் பயன்படுத்திடுக.
குறிப்பு:எக்செல்லின் ( Arial, Time Now, Calibri, அல்லது Verdana போன்றவை) எக்செல்லில் நாம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் எழுத்துருக்களில் தேர்வுசெய் குறியீட்டினை பயன்படுத்த ‘Segoe UI Symbol நம்மை அனுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்க. எழுத்துருவின் அடிப்படையில் வடிவம் , அளவு ஆகியவை சிறிது சரிசெய்துகொள்ளலாம். அதேகலணில் தேர்வுசெய் குறியீட்டுடன் உரையையும் / எண்ணையும்( text/number) வைத்திருக்கலாம் என்பதே இதன் பொருளாகும்.
இந்த வழிமுறை சற்று நீளமானது ஆனால் நாம் எந்தவொரு குறுக்கு வழிகளை அல்லது CHAR குறியீட்டையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. குறியீட்டைச் செருக நாம் அதைப் பயன்படுத்தியவுடன், அதை நகலெடுத்து ஒட்டுவதன் மூலம் அதை மீண்டும் பயன்படுத்திகொள்ளலாம்.

II.CHAR எனும் சூத்திரத்தினைப் பயன்படுத்துதல்
ஒரு தேர்வுசெய் குறியீட்டினை (அல்லது ஒரு பெருக்கல் குறியை) கொண்டு CHAR செயலியைப் பயன்படுத்தலாம். பின்வருமாறான சூத்திரமானது கலணில் ஒரு தேர்வுசெய்குறியீட்டின் சின்னத்தை வழங்குகின்றது
. =CHAR(252)
இந்த செயலி செயல்படுவதற்காக, நாம் எழுத்துருவை Wingdingsஆக மாற்ற வேண்டும் ஏனெனில் நாம் CHAR(252) எனும் சூத்திரத்தைப் பயன்படுத்தும் போது, அது நமக்கு ANSI எழுத்துருவினை (ü) கொடுக்கும், பின்னர் நாம் அந்த எழுத்துருவை Wingdings ஆக மாற்றும்போது, அது ஒரு தேர்வுசெய் குறியீடாக மாற்றப்படும். தேர்வுசெய் குறி அல்லது பெருக்கல் குறியின் மற்றொரு வடிவமைப்பைப் பெற இதே போன்ற CHAR சூத்திரங்களைப் பயன்படுத்தலாம் (வெவ்வேறு குறிமுறைவரிகளின் எண்ணுடன்).

8
ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் உண்மையான நன்மை என்னவென்றால், நாம் அதை மற்ற சூத்திரங்களுடன் பயன்படுத்தி, அதன் விளைவாக தேர்வுசெய் குறியீட்டினை அல்லது பெருகல் குறியை திரும்பப் பெறமுடியும் என்பதே யாகும். எடுத்துக்காட்டாக, பின்வருமாறான தரவுத்தொகுப்பு இருப்பதாக கொள்க:

9
விற்பனை மதிப்பு 5000க்கு மேல் இருந்தால் தேர்வுசெய் குறியையும், 5000க்கு குறைவாக இருந்தால் பெருக்கல் குறியையும் பெற பின்வருமாறான IF எனும் சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
=IF(A2>5000,CHAR(252),CHAR(251))

10
நினைவில் கொள்க, நாம் நெடுவரிசையிலுள்ள எழுத்துருவை Wingdings ஆக மாற்ற வேண்டும். இது அறிக்கைகளை இன்னும் கொஞ்சம் நன்றாக காட்சிப் படுத்த உதவுகிறது. இது அச்சிடப்பட்ட அறிக்கைகளுடன் நன்றாக செயல்படு கிறது. நாம் சூத்திரத்தினை நீக்கிவிட்டு மதிப்புகளை மட்டும் வைத்திருக்க விரும்பினால், கலணை நகலெடுத்து மதிப்பாக ஒட்டிடுக (சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Paste Special எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Paste Special என்பதன் வாய்ப்புகளில் முதலில் Paste என்ற, பின்னர் Values என்ற உருவப் பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக).
தேர்வுசெய்குறியீட்டினை செருகுவது கலணின் மதிப்புகளைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என நாம் விரும்பினால் இந்த வழிமுறை பொருத்தமானது. இது ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்துவதால், நம்மிடம் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கலண்கள் இருக்கும்போது கூட இதைப் பயன்படுத்தலாம். மேலும், நாம் கலண்களின் எழுத்துருவை Wingdings ஆக மாற்ற வேண்டும் என்பதால், குறியீடுகளைத் தவிர வேறு எதையும் கலண்களில் வைத்திருக்க முடியாது.

III.தானியங்கி திருத்தத்தைப் (Autocorrect) பயன்படுத்துதல்
எக்செல்லானது எழுத்துப்பிழைகளைத் தானாகவேத் திருத்த முடியும் எனும் ஒரு வசதியைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, எக்செல்லில் உள்ள ஒருகலணில் ‘bcak’ என்ற சொல்லினைத் தட்டச்சு செய்து என்ன நடக்கிறது என்பதைப் சரிபார்த்திடுக. உடன் எக்செல்லானது தானாகவே அதை ‘back’ என அந்த சொல்லை சரி செய்யும். நாம் தட்டச்சு செய்யக்கூடிய எதிர்பார்க்கப்படும் எழுத்துப்பிழை சொற்களின் முன்பே தயாரிக்கப்பட்ட பட்டியல் ஏற்கனவே இருப்பதால், எக்செல் தானாகவே அதைத் திருத்தம் செய்கின்றது. தேர்வுசெய் குறீயீடான delta சின்னத்தை செருக, தானியங்கி திருத்தத்தைப்(Autocorrect) பயன்படுத்துவதற்கான படிமுறைகள் பின்வருமாறு:
முதலில்திரையின் மேலே File எனும்தாவலின் பொத்தானை சொடுக்குக.

11
பின்னர் விரியும் File எனும்தாவலின் திரையில் Options என்பதைக் சொடுக்குக.

12
உடன் விரியும் Options எனும் உரையாடல் பெட்டியில், Proofing என்பதைத் தேர்ந்தெடுத்திடுக.

13
பின்னர் தோன்றிடும் இதே உரையாடல் பெட்டியின் திரையில் ‘AutoCorrect Options’ எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

14
அதன் பின்னர் விரியும் AutoCorrect Options எனும் உரையாடல் பெட்டியில், பின்வருமாறு உள்ளிடுக: CMARK

என்பதை என்பதுடன் மாற்றிடுக: (இதை நகலெடுத்து கூடஒட்டலாம்)

15
தொடர்ந்து Add என்பதைக் சொடுக்குதல் செய்து OKஎனும் பொத்தானை சொடுக்குக.
இப்போது எக்செல்லில் CMARK என்ற சொற்களை நாம் தட்டச்சு செய்யும் போதெல்லாம், அது தானாகவே அதை ஒரு தேர்வுசெய்குறியீடுகளாக மாற்றிவிடும்.
தானியங்கி திருத்தம் செய்தல்(Autocorrect) எனும் வழிமுறையைப் பயன்படுத்தும் போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய செய்திகள் :
• இது எழுத்துருவில் சிறிய எழுத்து பெரிய எழுத்து என தனித்தனியாக உணரும் திறன் கொண்டது. எனவே நாம் ‘cmark’ என உள்ளிட்டால், அது தேர்வுசெய் குறியீட்டினை சின்னமாக மாற்றாது. CMARK என பெரிய எழுத்தாக உள்ளிட வேண்டும்.
• இந்த மாற்றம் மற்ற எல்லா Microsoft பயன்பாடுகளுக்கும் (MS Word, PowerPoint, முதலியன) பொருந்தும். எனவே கவனமாக இருந்திடுக வேறு எந்த பயன்பாட்டிலும் பயன்படுத்த முடியாத முக்கிய சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.
• CMARKக்கு முன்/பின் ஏதேனும் உரை/எண் இருந்தால், அது தேர்வுசெய் குறி சின்னமாக மாற்றப்படாது. எடுத்துக்காட்டாக, ‘38%CMARK’ என்பதுமாற்றப்படாது, இருப்பினும், ‘38% CMARK’ இடைவெளியுடன் இருப்பதால் ‘38%’

ஆக மாற்றப்படும்
தேர்வுசெய் குறிக்கான ஆயத்த குறிப்பை நாம் விரும்பும் போது இந்த வழிமுறை பொருத்தமானது நாம் அதை நம்முடைய பணியில் தொடர்ந்து பயன்படுத்திகொள்ளலாம். எனவே குறுக்குவழி விசைகளை நினைவில் வைத்துக் கொள்வதற்குப் பதிலாக அல்லது சின்னங்களின் உரையாடல் பெட்டியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேர்வுசெய் குறியீட்டிற்காக நாம் உருவாக்கிய சுருக்குக்குறியீட்டின் பெயரை விரைவாகப் பயன்படுத்தலாம் (அல்லது அதற்கான வேறு ஏதேனும் சின்னத்துடன்)

IV.தேர்வுசெய் குறியைச் செருக நிபந்தனை வடிவமைப்பைப் பயன்படுத்துதல்
கலணின் மதிப்பின் அடிப்படையில் தேர்வுசெய் குறி அல்லது பெருக்கல் குறியைச் செருக, நிபந்தனை வடிவமைப்பைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, பின்வருமாறான தரவுத் தொகுப்பு உள்ளது எனக்கொள்க, மேலும் மதிப்பு 5000க்கு மேல் இருந்தால் ஒரு தேர்வுசெய் குறியையும், 5000க்கு குறைவாக இருந்தால் பெருக்கல் அடையாளத்தையும் செருக வேண்டும்.

16
நிபந்தனை வடிவமைப்பைப் பயன்படுத்தி இதைச் செய்வதற்கான படிமுறைகள்: B2 எனும் கலணில், =A2 என உள்ளிடுக, பின்னர் அனைத்து கலண்களுக்கும் இந்த சூத்திரத்தை நகலெடுத்திடுக. இப்போது அருகிலுள்ளகலண்களில் அதே மதிப்பு இருப்பதையும், நெடுவரிசை A இல் மதிப்பை மாற்றினால், அது தானாகவே B நெடுவரிசையில் மாற்றப்படுவதையும் இது உறுதி செய்கின்றது.

17
முதலில் B எனும் நெடுவரிசையில் உள்ள அனைத்து கலண்களையும் தேர்ந்தெடுத்திடுக (இதில் தேர்வுசெய் குறியைச் செருக வேண்டும்).
பின்னர் திரையின் மேலே Home எனும் தாவலைக் சொடுக்குக. தொடந்து விரியும் Home எனும் தாவலின் திரையில் Conditional Formatting என்பதைக் சொடுக்குக. அதன்பின்னர் விரியும்திரையில் New Rule.என்பதைக் சொடுக்குக.

18
உடன் ‘New Formatting Rule’ எனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில், ‘Format Style’ என்பதன் கீழிறங்கு பட்டியை விரியச்செய்து, ‘Icon Sets’ என்பதைக் சொடுக்குக.

19
பின்னர் ‘Icon Style’என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் check mark and cross mark உள்ள பாவணையைத் (style) தேர்ந்தெடுத்திடுக.

20
அதன்பின்னர்‘Show Icon only’ எனு் பெட்டியை சரிபார்த்திடுக. உருவப்பொத்தான்கள் மட்டுமே தெரியும் எண்கள் மறைக்கப்படுவதை இது உறுதி செய்கின்றது.

21
பிறகு உருவப்பொத்தான்களின் அமைப்புகளில்( Icon settings). ‘percent’ என்பதை ‘percent’ ஆக மாற்றி, பின்வருமாறு அமைப்புகளை உருவாக்கிடுக.

22
இறுதியாக இந்த உரையாடல் பெட்டியில் OK எனும் பொத்தானை சொடுக்குக.
மேலேகூறியவாறான படிமுறைகளில் மதிப்பு 5000க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருந்தால் பச்சை வண்ண தேர்வுசெய்குறீயீட்டினையும், மதிப்பு 5000க்குக் குறைவாக இருக்கும் போது சிவப்பு வண்ண பெருக்கல் குறியையும் செருகுகின்றது.

23.
இந்த செயலில், இந்த இரண்டு உருவப்பொத்தான்களை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் நாம் விரும்பினால் மஞ்சள் வண்ண ஆச்சரியக்குறியையும் பயன்படுத்தலாம் அல்லது மேலும் தேவையான குறீயீடுகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.