PDOS (பொதுசெயற்கள இயக்க முறைமை)

PDOS என சுருக்கமாக அழைக்கப்பெறும் பொதுசெயற்கள இயக்க முறைமையானது(Public Domain Operating System) பின்வருமாறான இரண்டு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது
1.PDPCLIB: என்பது பொது செயற்கள C இன்இயக்க நேர நூலகமாகும்(Public Domain C Runtime Library), இதுபொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற கூறு, ஆகும் இது நம்முடைய சொந்த C நிரல்களை இணைக்க உதவுகின்றது. உரிமக் கட்டுப்பாடுகள் (நாம் எந்தவொரு இயந்திரமொழிமாற்றியைப் பயன்படுத்தினாலும், வணிகம் அல்லது வணிகம் அல்லாதது, அதற்கு உரிமக் கட்டுப்பாடுகள் உள்ளன). இது (PDPCLIB). DOS, OS/2, Win32, PDOS, MVS (mainframe) , CMS ஆகியவற்றில் செயல்படுகின்ற திறன்மிக்கது. இது ISO/IEC 9899:1990 (ANSI X3.159-1989 aka C90 aka C89) எனும் நூலக தரநிலைக்கு இணக்கமானது. இதற்கு நீட்டிப்புகள்எதுவும் இல்லை, எனவே நம்முடைய குறிமுறைவரிகள் உண்மையிலேயே கையடக்கமாக உள்ளதா என்பதைக் கண்டறிவதில் சிறந்தது.
2.PDOS: என சுருக்கமாகஅழைக்கபெறுகின்ற பொதுசெயற்கள இயக்க முறைமை யானது: இரண்டாவதாக, ஒரு இயக்க முறைமையாக உள்ளது, இதுMSDOS போன்ற எளிமையான பயனாளர் இடைமுகத்தினை கொண்டுள்ளது, ஆனால் திரைக்குப் பின்னால் இதனுடைய செயல் முற்றிலும் வேறுபட்டது. இதன் வாயிலாக முற்றிலும் மாறுபட்ட(MSDOS , MVS)ஆகிய இரு APIகள் ஆதரிக்கப்படுகின்றன . அதாவது இது MSDOS API 16-பிட் 8086 , 32-பிட் 80386 ஆகிய இரண்டாலும் ஆதரிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்ட 80386என்பது உண்மையில் MSDOS API அல்ல, இது ஒரு கோட்பாட்டு 32-பிட் MSDOS API (ஏபிஐ , பயன்பாடுகள் தூய்மையானவை என்பதை நினைவில் கொள்க. 32-பிட்என்பது BIOS ஐப் பயன்படுத்துவதற்காக வளாக கணினியில் 16-பிட்டிற்கு மாறுகிறது, இவ்வாறு மாறுவது பயன்பாட்டிற்கும் , இறுதிப் பயனாளருக்கும் முற்றிலும் தெரியாது). 32-பிட் பதிப்பு இப்போது PD-Windows என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது Win32 API இன் சிலவற்றை ஆதரிக்கிறது, இது விண்டோவின் செயலபடுத்திடுவதின் துணைக்குழுவை இயக்க அனுமதிக்கிறது. இது 32-பிட் PDOS/386க்கு மேல் உள்ளது. MVS API ஆனது 24-பிட் S/370, 31-bit S/390 IBM முதன்மைபொறியமைவு (mainframe) வன்பொருளில் ஆதரிக்கப்படுகிறது. Jujitsu இலிருந்து 32-பிட் S/380 ஆதரிக்கப்படுகிறது. 16-பிட் MSDOS API , 24/31-bit MVS API இரண்டும் நிஜ-உலகப் பயன்பாடுகளின் துணைக்குழுவை இயக்க முடியும், அவை சில வழிகளில் ஒரு நகலியாகும்(clone).
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் http://pdos.sourceforge.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.