மீச்சிறுபைத்தான்( Micro Python) ஒரு அறிமுகம்

மைக்ரோ பைதான் என்பது ராஸ்பெர்ரி பை, Pico போன்ற உட்பொதிக்கப்பட்ட வன்பொருட்களில் நேரடியாக இயங்குகின்ற திறனுடனுடைய பைதான் 3 நிரலாக்க மொழியின் முழு செயலாக்கமாகும். USBஇன் தொடரிணைப்பு, உள்ளமைக்கப்பட்ட கோப்பு முறைமை ஆகியவற்றின்வழியாக உடனடியாக கட்டளைகளை இயக்குவதற்கு இதனை ஊடாடும் வரியில் (REPL) பெறமுடியும். இதன்(Pico) வாயிலில் குறைந்த-நிலை சில்லின்-குறிப்பிட்ட வன்பொருளை அணுகுவதற்கான தகவமைவுகள்கூட உள்ளன.
ராஸ்பெர்ரி பை பைக்கோ ஆகியை தம்மைச்சுற்றியுள்ளவைகளுடன் தொடர்பு கொள்ள, நிரல்களை எழுது வதற்கும் வன்பொருளை இணைப்பதற்கும் ஆரம்பநிலைக்கு ஏற்ற மொழியான மைக்ரோ பைத்தானை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்ள முடியும். இந்தத் திறன்களைப் பயன்படுத்தி, வேடிக்கைக்காகவோ அல்லது நம்முடைய வாழ்க்கையை எளிதாக்கவோ நம்முடைய சொந்த மின்-தொழில்நுட்ப செயல் திட்டங்களை உருவாக்கலாம், .
நம்முடைய ராஸ்பெர்ரி பை, பைக்கோ ஆகியவற்றினை அமைத்து, அதைப் பயன்படுத்தத் தொடங்கிடுக.தொடர்ந்து Micro Python ஐப் பயன்படுத்தி நிரல்களை எழுதத் தொடங்கிடுக கட்டுப்பாடும் உணர்வுடனுமான மின்னணு பாகங்களை அறிந்துகொள்க மேலும் Pico இன் தனித்துவமான நிரல்படுத்தக்கூடிய IO ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டறிந்திடுக அதனோடு
எதிர்வினை விளையாட்டு, பர்க்லர் அலாரம், வெப்பநிலை அளவீடு போன்ற பலவற்றை உருவாக்கிடுக
மைக்ரோபைத்தானை இழுத்து கொண்டுவிடுதல்(Drag-and-Drop)
யூ.எஸ்.பி வழியாக கணினியுடன் இணைப்பதன் மூலம் நம்முடைய பைக்கோவை நிரலாகாகம் செய்யலாம், பின்னர் அதில் ஒரு கோப்பை இழுத்து கொண்டுவந்து விட்டிடுக, எனவே மைக்ரோபைத்தானை எளிதாக நிறுவுகைசெய்வதை நம்மை அனுமதிப்பதற்காக தரவிறக்கம் செய்யக்கூடிய UF2file ஐ ஒன்றாக இணைத்துள்ளது.
MicroPython UF2 கோப்பைப் பதிவிறக்கம் செய்திடுதல்.
1. BOOTSEL எனும் பொத்தானை அழுத்திப் பிடித்திடுக, நம்முடைய ராஸ்பெர்ரி பை அல்லது பிற கணினியின் USB வாயிலில் நம்முடைய Pico ஐ செருகிடுக. நம்முடைய Pico இணைக்கப்பட்ட பிறகு நாம் அழுத்தி பிடித்திருந்த BOOTSEL எனும் பொத்தானின் பிடியை விட்டிடுக.
2. உடன் இது RPI-RP2 எனப்படும் Mass Storage சாதனமாக ஏற்றப்படும்.
3. MicroPython UF2 எனும் கோப்பை RPI-RP2 தொகுதியில் இழுத்து விட்டிடுக. இப்போது நம்முடைய Pico ஆனது மறுதொடக்கம் செய்யப்படும்.அதனைதொடர்ந்து நாம் இப்போது MicroPython ஐ இயக்கிடலாம்.
4. யூ.எஸ்.பி தொடரிணைப்பின் வழியாக நாம் REPL ஐ அணுகலாம். இதனுடைய MicroPython ஆவணத்தில் நம்முடைய Pico உடன் இணைப்பதற்கும் MicroPython இல் அதை நிரலாக்குவதற்கும் படிப்படியான வழிமுறைகள் அதில் இருப்பதை காணலாம்.
குறிப்பு: நாம் MicroPython க்கு புதியவராக இருந்தால், இதனுடைய அதிகாரப்பூர்வ வழிகாட்டியான “Get started with MicroPython on Raspberry Pi Pico“,என்பது நாம் தொடங்குவதற்கு சிறந்த இடமாகும். MicroPython ,வழக்கமான கணினியின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்க, Picoவை காட்சியகங்களுடனும் உணர்விகளுடனும் இணைத்திடுக, அலாரங்கள், எதிர்வினை விளையாட்டுகள் போன்ற பலவற்றை உருவாக்கிடுக.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://micropython.org/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.