Codidact எனும் குழுவான வினாவிடை தளம்.

Codidact என்பது சமூககுழுக்களால் இயக்கப்படும், இலாப நோக்கற்ற, அறிவுப் பகிர்வு இணையதளங்களின் வலையமைப்பாகும். “சமூகத்திற்காக, சமூகத்தால்” என்பதே இந்த இணையதளத்தின்வழிகாட்டும் கொள்கையாகும்
நாம் வாழும் இவ்வுலகில் ஏதேனுமொரு சமூகத்திற்கான ஆலோசனை நம்மிடம் உள்ளதா? ஆம் என்றாலும் பயனாளர்களின் முக்கிய குழுவை நம்மால் கொண்டு வர முடிந்தாலும், . இந்த தளத்தின் பரிந்துரைகள் பிரிவில் இடுகையிடுவதன் மூலம் இதனுடைய மெட்டா தளத்தில் அதைப் பரிந்துரைத்திடுக

Codidact என்பது நாம் வாழும் இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தகவல்களை விசாரித்து தெரிந்துகொள்வதற்கும் கற்றுக் கொள்வ தற்கும், அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவருக்கொருவர் கற்பிப்பதற்கும் சிறந்த இடமாகும். இதனுடைய கேள்வி பதில் குழுக்கள், தனியாரின், நிறுவனங்களின் இலாபத்தை மையமாகக் கொண்ட அரசியலி லிருந்தும் வெறித்தனங்களிலிருந்தும் விடுபட உதவும் எனவும நம்பிக்கை கொள்ளலாம்.
எழுதுதல்: தொழில்முறையில் எழுதுதல், பதிப்பித்தல் வெளியிடுதல் ஆகியவற்றில் ஆர்வமுள்ள எவருக்கும் இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
வெளிப்பணிகள்: சிறந்த வெளிப்புறபணி , வெளிப்புற நோக்கங்களில் ஆர்வமுள்ள எவருக்கும் அமெச்சூர், பொழுதுபோக்கு அல்லது தொழில்முறை புகைப்படம் எடுத்தல், கானொளிகாட்சி, கணினி திரையின்காட்சி ஆகியவற்றில் ஆர்வமுள்ள எவருக்கும் இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
அறிவியல் , ஊகங்கள்:உலகக் கட்டமைப்பில் ஆர்வமுள்ள எவருக்கும் அல்லது அறிவியலில் இருந்து விரிவுபடுத்தக்கூடிய பிற ஊக வளர்ச்சிகளுக்கும் இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
சமையல்: சமையலில் ஆர்வமுள்ளவர்கள் , அதைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களை – செய்முறைகள், செயல்முறைகள், சமையல் குறிப்புகள் பரிந்துரைகள் ஆகியவற்றினை இந்த சமூககுழுக்கள் வழங்குகின்றன.
மின்சாரம் பொறியியல்: வல்லுநர்கள், பொழுதுபோக்கு ஆர்வலர்கள் மின்சாரம் மின்னனு பொறியியல் மாணவர்கள் ஆகியோர்களுக்கு இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் விளங்கும் .
மொழியியல்: குறிப்பிட்ட (மனித) மொழிகள்,அதன் கட்டமைப்புகள் பொதுவான அல்லது மொழியியலில் ஆர்வமுள்ள எவருக்கும் இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
மென்பொருள் மேம்பாடு: மென்பொருள் வடிவமைப்பு, நிரலாக்கம், சோதனை, கட்டமைப்பு, செயல்முறை அல்லது கருவிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
கணிதம்: கணிதகோட்பாட்டு , பயன்பாட்டு கணிதம், புள்ளிவிவரங்களில் ஆர்வ முள்ளவர்களுக்கான இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
குறிமுறைவரிகளின்குழு: பொழுதுபோக்காக குறிமுறைவரிகளில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
இசை: இசை கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் , இரசிகர்களுக்கான இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன .
இயற்பியல்: எந்த வகையிலும் எந்த மட்டத்திலும் இயற்பியலில் ஆர்வமுள்ள எவருக்கும் இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
Linuxs:Linux, Unix போன்ற இயங்குதளங்களின் பயனாளர்களுக்கான இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
ஆற்றல் பயனாளர்கள்: கணினி ஆர்வலர்களுக்கான (சக்தி பயனர்கள்) இந்த சமூக குழுக்கள் மென்பொருள் , வன்பொருள் பயன்பாடு பற்றிய கேள்விகளு்ககான பதிலளிக்கின்றன
TableTopRPGs: அனைத்து வகைகளிலும் மனிதர்கள் மத்தியஸ்தம் செய்யும் விளையாட்டுகளை விளையாடும், இயங்கும், அபிவிருத்தி செய்யும் அல்லது ஆர்வமுள்ளவர்களுக்கான இந்த சமூக குழுக்கள் பேருதவியாய் அமைகின்றன
Meta:சமூககுழு,வலைபின்னல் ஆளுகை தொடர்பான சிக்கல்களுக்கான இதனுடைய மெட்டா தளம் பேருதவியாய் அமைகின்றது.

மேலும் விவரங்களுக்கும் இதனுடைய சேவையை பயன்படுத்தி கொள்ளவும்

https://codidact.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.