நியூட்ரி குறிப்பு(neutriNote) எனும் கட்டற்ற பயன்பாடு

neutriNote என்பது அனைத்து வசதிகளும் ஒரேஇடத்தி்ல் கொண்ட பாதுகாப்பான நினைவுக்குறிப்புகளை எழுதஉவதவிடும் ஒருகட்டற்ற கட்டணமற்றபயன்பாடாகும்,
ஒழுங்கற்ற பயனாளர்இடைமுகப்பு(UI) - பயன்பாடுகளின் மாறுதலைக் குறைக்க, நுணுக்கமான பயனாளர் இடைமுக உறுப்புகள். குறைந்தபட்ச தட்டச்சுகளுடன் குறிப்பு உள்ளடக்கங்களுக்கு துல்லியமான வழிசெலுத்தலுக்கான அணுகக்கூடிய தேடிடும் வடிப்பான்களை கொண்டுள்ளது.
தனிப்பயனாக்கம் - Tasker, Barcode Scanner, ColorDict போன்ற பிற துணை நிரல்களால் அல்லது இணைய அடிப்படையிலான சேவைகளுடன் இதனுடைய களஞ்சியத்தை இணைப்பதன் மூலம் பணிப்பாய்வுடன் தானியங்கியாக ஆக்கலாம். இதில்குறிப்பு எடுக்கும் செயல்முறையை ஆழமாக உள்ளமைக்க வாய்ப்புகள் உள்ளன.
காப்புப்பிரதி - இதில்குறிப்புகளை காப்புப் பிரதி எடுக்க பல வழிகள்உள்ளன. இதில் நமக்காக செயல்படுகின்ற மேககணினியின் பின்புலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தினை அளிக்கின்றது: திறமூல P2P ஒத்திசைவு, Dropbox அல்லது மூன்றாம் தரப்பு Google இயக்ககம், OneDrive உறுப்பு. ஆகிய செலவு எதுவுமில்லாதது - இது முற்றிலும் கட்டணமற்றது. மறைக்கப்பட்ட உரிமம் எதுவும் இதில் இல்லை. தேவையெனில் இதன் மேம்படுத்துதலை ஆதரிக்கின்ற துணை நிரல்களை கொள்முதல் செய்து பயன்படுத்திடலாம்.
பயன்பாட்டு அனுமதிகள் பின்வருமாறு:
1.
இருப்பிட அடிப்படையிலான தேடலுக்கான இருப்பிட அணுகல்
2.
உள்ளமைக்கப்பட்ட பார்கோடு வருடுதலுக்கான படபிடிப்பு அணுகல்
3.
முக்கிய செயல்பாடுகளுக்கான சேமிப்பக அணுகல்
4.
சோனி சாதனங்களுக்கு தேவையானஅனுமதி
.
மேலே குறிப்பிட்டவைகளில் 1 2.ஆகிய அமைப்புகளில் இருந்தோ அல்லது Marshmallow'இன் இயக்க நேர அனுமதிகள் மூலமாகவோ தேவைக்கேற்ப மறுக்கலாம்/திரும்பப் பெறலாம். அனைத்தும் UTF8எனும் வடிவமைப்பிலான எளிய உரையில் சேமிக்கப்படும்.

இதனுடைய முக்கிய வசதி வாய்ப்புகள் பின்வருமா்று: கணித ஆதரவுடன் rich markdown ஐஆதரிக்கின்றது (LaTeX), உரைமாற்று ஓட்ட markdown காட்சிகொண்டது, பைதான் ஆதரவு கொண்டது, அடிப்படை Vue.js ஆதரவு கொண்டது ,மேகக்கணியில் சேமிக்கப்பட்ட குறிப்புகளைத் திருத்திடும் வசதி யுடையது, இடை-குறிப்பு இணைப்பு உடையது, வண்ண வெப்பநிலை , OLED ஆதரவுடன் கூடிய காட்சிகளை கொண்டது, உள்ளமைக்கப்பட்ட உரை விரிவாக்கம்/குறுக்குவழி ஆதரவு கொண்டது, இணைய இணைப்பில்லாமலும் செயல்படுகின்ற திறன்மிக்கது, உடனடித் தேடுதலும் மாற்றுதலும் கொண்டது. இது மேல்மீட்புபட்டியுடனான அகராதி, நகலெடுத்திடும்பட்டி காட்சி, பார்கோடு வருடுதல், ASCII வரைபடம் ஆகிய ஒருங்கிணைந்த கருவிகளை கொண்டது இது தனியுரிமைக்கான வளாக சேமிப்பகம், ஒத்திசைவைச் சேர்ப்பது எளிதானது, PDF/HTML பதிவேற்றம் ZERO எதிர்ப்பு வசதிகொண்டது என்பனபோன்ற பல்வேறு வசதிவாய்ப்புகளை கொண்டது

மேலும் விவரங்களுக்கும் இதனுடைய சேவையை பயன்படுத்தி கொள்ளவும் https://github.com/appml/neutrinote எனும் இதனுடைய இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.