Bun எனும் அனைத்து பணிகளுக்குமான ஒரு கருவித்தொகுப்பு

இது ஒரு விரைவாக செயல்படக்கூடிய ஜாவாஸ்கிரிப்ட் ஆல் உருவாக்கப்பட்ட அனைத்து பணிகளுக்குமான ஒரு கருவித்தொகுப்பாகும்,
ஜாவாஸ்கிரிப்ட் & டைப்ஸ்கிரிப்ட் ஆகியவற்றின் செயல்திட்டப்பணிகளை உருவாக்குதல், பரிசோதித்தல், இயக்குதல் ,தொகுத்தல்-ஆகிய அனைத்தும் இந்த Bun எனும் கருவிதொகுப்புடன் எளிதாக செய்திடலாம். Bun என்பது ஒரு தொகுப்பாளர், பரிசோதனைக்காகஇயக்குபவர் ,Node ஆகிய அனைத்து பணிகளுக்குமான கருவிகளும் ஒன்றினைந்த ஜாவாஸ்கிரிப்ட்டின் இயக்கநேர & கருவிதொகுப்பின் வேகத்திற்கு ஏற்ப செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது js-உடன்இணக்கமான தொகுப்பு மேலாளராகவும்திகழ்கின்றது. இது புதிய ஜாவாஸ்கிரிப்ட் இயக்க நேரசெயலியாகும், இது நவீன ஜாவாஸ்கிரிப்ட் சூழலுக்குஏற்ப சேவை செய்திடுமாறு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது Node.jsக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்கணக்கான Node.js ,Web APIகளை செயல்படுத்துகிறது, இதில் fs, path, Buffer ,போன்ற பல உள்ளன.
இது பின்வருமாறான மூன்று முக்கிய வடிவமைப்பு இலக்குகளைக் கொண்டுள்ளது:
வேகம்: இது விரைவாக இயங்க துவங்கி மிகத்துரிதமாகஇயங்குகிறது. இது சஃபாரிக்காக உருவாக்கப்பட்ட செயல்திறனை-மனதில் கொண்ட JS பொறியை ஜாவாஸ்கிரிப்ட்கோரை நீட்டிப்புசெய்கிறது. கணினியின் விளிம்பிற்கு நகரும் போது, இது மிகவும் முக்கியமானதாகும்..
நேர்த்தியான APIகள்: HTTP சேவையகத்தைத் துவங்குதல் ,கோப்புகளை எழுதுதல் போன்ற பொதுவான பணிகளைச் செய்வதற்கு, இது மிகவும் உகந்த APIகளின் குறைந்தபட்ச தொகுப்பை வழங்குகிறது.
ஒருங்கிணைந்த DX: இதுஇது ஜாவாஸ்கிரிப்ட் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு முழுமையான கருவித்தொகுப்பாகும், இதில் தொகுப்பு மேலாளர், பரிசோதனைக்காக இயக்குபவர் ,தொகுப்பாளர் ஆகியவை அடங்கும்.
உலகின் பெரும்பாலான சேவையாளர் பக்க ஜாவாஸ்கிரிப்டை இயக்குவது ,செயல்திறனை மேம்படுத்துவதற்கும், சிக்கலைக் குறைப்பதற்கும், மேம்படுத்துநர்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கும் கருவிகளை வழங்குவதே இதனுடைய முக்கிய குறிக்கோளாகும்

இதன் மையத்தில் இயக்க நேர செயலி உள்ளது, இது Node.js க்கு drop-in மாற்றாக வடிவமைக்கப்பட்ட விரைவாக செயல்படக்கூடிய ஜாவாஸ்கிரிப்ட் இயக்க நேரச்செயலியாகும். இது Zig இல் எழுதப்பட்டு, ஜாவாஸ்கிரிப்ட் கோர் மூலம் இயக்கப்படுகிறது, இது தொடக்க நேரங்களையும் நினைவக பயன்பாட்டையும் வியத்தகு முறையில் குறைக்கிறது.
bun run index.tsx # TS ,JSX ஆகியவை செயலிக்கு வெளியே ஆதரிக்கப்படுகின்றன
bunஎனும் இந்த கட்டளை-வரிக் கருவியானது பரிசோதனை ஓட்டம், நிரலை இயக்குபவர் ,Node.js-இணக்கமான தொகுப்பு மேலாளர் ஆகியவற்றையும் செயல்படுத்துகிறது, இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள கருவிகளை விட கணிசமாக விரைவாக செயல்படக்கூடியனது ,மேலும்தற்போதுள்ள Node.js செயல்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் பயன்படுத்தக்கூடியது.
bun run start # run the start script
bun install ​ # install a package
bun build ./index.tsx # bundle a project for browsers
bun test # run tests
bunx cowsay “Hello, world!” # execute a package
இது இன்னும் மேம்படுத்தப்பட்டுகொண்டே வந்துகொண்டுள்ளது. நம்முடைய மேம்பாட்டுப் பணிப்பாய்வுகளை விரைவுபடுத்த அல்லது சேவையாளரற்ற செயல்பாடுகள் போன்ற வள-கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் எளிமையான உற்பத்திக் குறிமுறைவரிகளை இயக்க இதைப் பயன்படுத்திகொள்க. இன்னும் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளுடன் முழுமையான Node.js இணக்கத்தன்மையுடன் இது செயல்டுகின்றது
, இயக்க நேர செயலி என்றால் என்ன?
ஜாவாஸ்கிரிப்ட் (அல்லது,ECMAScript) என்பது ஒரு நிரலாக்க மொழிக்கான விவரக்குறிப்பாகும். செல்லுபடியாகும் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை உள்வாங்கி அதை இயக்கும் ஜாவாஸ்கிரிப்ட் பொறியை யார் வேண்டுமானாலும் எழுதலாம். இன்று பயன்பாட்டில் உள்ள இரண்டு மிகவும் பிரபலமான பொறிகள் V8 (கூகுள் உருவாக்கியது) ,ஜாவாஸ்கிரிப்ட்கோர் (ஆப்பிள் உருவாக்கியது). இரண்டும் திற மூலகருவிகளாகும்.
இணையஉலாவிகள்
ஆனால் பெரும்பாலான ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்கங்கள் வெற்றிடத்தில் இயங்காது. பயனுள்ள பணிகளைச் செய்வதற்கு வெளி உலகத்தை அணுக அவைகளுக்கு ஒரு வழி தேவை. இயக்க நேரசெயலிகள் இங்குதான் உதவிக்குவருகின்றன. அவை கூடுதல் APIகளை செயல்படுத்துகின்றன, பின்னர் அவை செயல்படுத்துகின்ற ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களுக்குக் கிடைக்கச்செய்கின்றது. குறிப்பிடத்தக்க வகையில், இணைய உலாவிகள் ஜாவாஸ்கிரிப்ட் இயக்க நேர செயலிகளுடன் அனுப்பப்படுகின்றன, அவை உலகளாவிய சாளரத்தின் வழியாக வெளிப்படும் இணைய-குறிப்பிட்ட APIகளின் தொகுப்பை செயல்படுத்துகின்றன. இணைய உலாவியால் செயல்படுத்தப்படும் எந்தவொரு ஜாவாஸ்கிரிப்ட் குறிமுறைவரிகளு தற்போதைய இணையப்பக்கத்தின் சூழலில் ஊடாடுகின்ற அல்லது மாறுகின்ற நடத்தையைச் செயல்படுத்த இந்த APIகளைப் பயன்படுத்திகொள்ளலாம்.
செயல்படும்வேகம்: இதனுடைய செயல்முறைகள் தற்போது Node.js ஐ விட 4 மடங்கு விரைவாகத் துவங்குகின்றன
TypeScript & JSX ஆதரவு: இதில் நேரடியாக .jsx, .ts, ,.tsx கோப்புகளை இயக்கலாம்; இவற்றை செயல்படுத்துவதற்கு முன் vanilla ஜாவாஸ்கிரிப்டாக மாற்றியமைக்கிறது.
ESM & CommonJS இணக்கத்தன்மை. உலகம் ES தொகுப்புகளை (ESM) நோக்கி நகர்கிறது, ஆனால் npm இல் மில்லியன் கணக்கான தொகுப்புகளுக்கு இன்னும் CommonJS தேவைப்படுகிறது. இந்நிலையில்Bunஆனது ES தொகுப்புகளை பரிந்துரைக்கிறது, ஆனால் CommonJS ஐ ஆதரிக்கிறது.
இணைய தரநிலை APIகள்: Fetch, WebSocket ,ReadableStream போன்ற நிலையான Web APIகளை Bun செயல்படுத்துகிறது. Bun ஆனது JavaScriptCore எனும்பொறி மூலம் இயக்கப்படுகிறது, இது Safariக்காக உருவாக்கியது, எனவே Headers ,URL போன்ற சில APIகள் சஃபாரியின் செயலாக்கத்தை நேரடியாகப் பயன்படுத்திகொள்கின்றன.
Node.js இணக்கத்தன்மை: Node-style module தீர்வினை ஆதரிப்பதுடன், Bun ஆனது உள்ளமைக்கப்பட்ட Node.js உலகளாவிய (செயல்முறை,இடையகம்) ,தொகுப்புகள் (பாதை, fs, http, முதலியன) ஆகியவற்றுடன் முழு இணக்கத்தன்மையை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது MIT எனும்உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப் பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://bun.sh/எனும் இணையதளமுகவரிக்கு செல்க .

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.