அறிந்து கொள்க Fuzz testing எனும் கணினி கலைசொல்லை

Fuzz சோதனை என்பது பயன்பாட்டில், இயக்க முறைமைகளில் அல்லது வலைபின்னல்களில் குறியீட்டு பிழைகள் , பாதுகாப்பு ஓட்டைகள் ஆகியவற்றைக் கண்டறிய பயன்படும் ஒரு மிகச்சிறந்த தரமான உத்தரவாத தொழி்நுட்பமாகும். இந்த பயன்பாடுகளில் அல்லது இயக்கமுறைகளில் ஏற்படும் தாக்குதலை உருவகப்படுத்துதல், பரிசோதித்திடும் பொருள் விபத்துக்குள்ளாதல், முழுமையான சீரற்ற தரவை உள்ளிடுதல் ஆகியவற்றையும் fuzz என்றே அழைக்கப்படும். இவ்வாறானவைகளில் பாதிப்பு ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவ்விபத்துக்கான சாத்தியமான அனைத்து காரணங்களையும் தீர்மானிக்க ஃபஸ்ஸர் என்ற மென்பொருள் கருவி பயன்படுத்தப்படுகின்றது.
இடையூறுகள், இடைவெளி வடிவமைப்ப, சேவை தாக்குதல்களின் மறுப்பு, வடிவமைப்பு பிழைகள் மற்றும் SQL உள்ளிடுதலின் தாக்குதல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாகக்கூடிய அனைத்து பாதிப்புகளை கண்டறிய இந்த ஃபஸ்ஸர்ஸ் மிகச்சிறந்ததாக விளங்குகின்றது. ஆயினும் ஸ்பைவேர், சில வைரஸ்கள், , ட்ரோஜான்கள் மற்றும் கீலாக்கர்கள் போன்ற நிரல் செயலிழப்புகளை ஏற்படுத்தாத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு இந்தஃபஸ் சோதனை போதுமானதாக இல்லை.
ஆயினும் இந்த ஃபஸ் சோதனை என்பது மிகவும் எளிதானது , இது மென்பொருளுக்குள் எழுதப்பட்ட மற்றும் பிழைத்திருத்தம் செய்யப்படும் போது கவனிக்கப்படாமல் இருக்கும் அனைத்து குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது, அதனால் நமக்கு பின்னாட்களில் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்ப்பதற்காக அதிக நன்மையை நமக்கு வழங்குகிறது.

Advertisements

கைபேசியில்இணையஇணைப்பில்லாதசமயத்திலும் பயன்படுத்தி கொள்ளும்பயன்பாடுகள்

என்னதான் செல்லிடத்து பேசிகளின் சேவையார்கள் பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏராளமான அளவில் வாரி வழங்கினாலும் இந்திய சூழலில் அடிக்கடி இணைப்பு அறுந்துபோதல் மிகமெதுவான இணைப்பு வேகம் போன்றபல்வேறு காரணிகளினால் பயனார்கள் அவ்வாறு சேவையாளர்களால் வழங்கப்படும் அனைத்து பயன்பாடுகளையும் பயன்படுத்தி பயன்பெறமுடியாத சூழலே இதுவரையில் நிலவிவருகின்றது இதனை தவிர்த்து இணைப்பு இல்லாதபோதும் பின்வரும் பயன்பாடுகளை தங்களின் தேவைக்காக பயன்படுத்தி கொள்ளமுடியும்
1.KIWIX சொற்களின் அருஞ்சொற்பொருட்களை காண Wiktionary ,மருத்துவ அகராதியானWikiMed, பயனகையேடான WikiVoyageஆகிய விக்கிபீடியா இணைய பக்கங்களை இணைய இணைப்பில்லாத போதும் காண்பதற்க இந்த பயன்பாடு பயன்படுகின்றது
2.OFFLINEBROWSER ஜிமெயில்,ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்றவைதவிர நாம் அடிக்கடி பயன்படுத்திகொள்ளும் இணைய பக்கங்களை இந்த பயன்பாட்டின் வாயிலாக இணைப்பில்லாது போதும் உலாவருவதற்கு பயன்படுகின்றது
3.POCKETஇணையஉலாவலின்போது நாம் மிகஆர்வமாக காணும் கானொளி படங்கள் ஆவணங்கள் போன்றவைகளை உடனுக்குடன் நம்முடைய திறன்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கு இந்த பயன்பாடு உதவுகின்றது
4.YOUTUBEGO இந்த பயன்பாடானது இணைய இணைப்பில்லாத போதும் காட்சியாக காண்டுகளிக்கலாம் என அனுமதிக்கப்பட்டவைகளுள் தேவையான யூட்யூப் கானொளி படங்களை மட்டும் இணைய இணைப்பிருக்கும்போது பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்பின்னர் இணைப்பில்லாது போது காண்பதற்கு உதவுகின்றது
5.XENDERநம்முடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் படங்கள், கானொளி படங்கள், ஆவணங்கள், இசைத்தொகுப்புகள் போன்றவற்றை நம்முடைய திறன்பேசியிலிருந்து இணைய இணைப்பில்லாத போதும் வொய்பி ஹாட்ஸ்பாட் வாயிலாக மிகவிரைவாக அனுப்புவதற்கு இந்த XENDER பேருதவியாக இருக்கின்றது ஆயினும் பெறுபவரின் கைபேசியிலும் இந்த பயன்பாடு நிறுவப்பட்டிருக்கவேண்டும் என்ற செய்தியைமட்டும் மனதில் கொள்க

தாங்கிகள்(container) ஒருஅறிமுகம்

ஒரு பயன்பாடு அதுவெற்றிகரமாக செயல்படுவதற்காகஅது சார்ந்திருக்கும் நூலகங்கள் அமைவுகள் ஆகிய இயக்கசூழல்அனைத்தையும் தொகுத்து ஒருகட்டாக தேக்கிவைப்பதையே தாங்கிகள்(container)என அழைப்பார்கள் இந்த தாங்கிகளுக்குள் உள்ள ஒரு கட்டில் நடைபெறும் செயலை அந்த தாங்கியின் வெளியிலிருந்த காணமுடியாது இந்த தாங்கிகளுக்குள் இவ்வாறான ஒன்றிற்கு மேற்பட்டபல்வேறு மென்பொருள் கட்டுகள் தனித்தனியே வைத்து அவைதனித்தனியாக இயங்குமாறு செய்திடமுடியும் இவ்வாறான தாங்கிகள்(container)என்பது தற்போது கணினியின் பயன்பாட்டில் மிகமுக்கிய அங்கம் வகிக்கின்றது அதாவது இந்த தாங்கிகளின் தன்மையானது ஒரு கணினியின் சூழலில் செயல்படும் மென்பொருளானது வேறொரு கணினியின் சூழலிலும் செயல்படும் திறனை அம்மென்பொருளிற்கு வழங்குகின்றது அதனால் மென்பொருள் உருவாக்குநர் மிகஎளிதாக வாடிக்கையாளர் விரும்பும் பல்வேறு பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்கி பல்வேறு சூழல்களிலும் மிகச்சரியாக செயல்படுமாறுபரிசோதித்து சரிபார்த்திட பேருதவியாக இருக்கின்றது இந்த தாங்கிகள்தன்மையானது இயக்கமுறைமை தாங்கிகள் பயன்பாடுகளின் தாங்கிகள் என இருவகையாக உள்ளன OpenVZ,LinuxVServer,SolariesZone ஆகியவை முதல்வகை தாங்கிகளாகும் Rocket ,Dockerஆகியவை இரண்டாம் வகை தாங்கிகளாகும் இந்த தாங்கிகள் மெய்நிகர் கணினிக்கு மாற்றாக அமைந்துள்ளன, இவை எளிதாக நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டுசென்று கையாளும் வகையில் கையடக்கமாக உள்ளன இவை மென்பொருள் இயங்குவதற்காக சிபியூவில் தேக்கிவைப்பதற்கான தேவையை குறைத்து அதன் செயல்திறனை ஊக்குவிக்கின்றன மிகப்பெரிய செயல்திட்டங்களை தனித்தனியான மிகச்சிறியவைகளாக பிரித்து பல்வேறு சூழல்களிலும் பரிசோதித்து சரிபார்த்தபின்னர் ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்வதற்கு இந்த தாங்கிகள் பெரிதும் பயன்படுகின்றன. இந்த தாங்கிகள் செயல்படுவதற்கு மெகாபைட் அளவு நினைவக இடவசதி போதுமானதாகும் ஆனால் மெய்நிகர் கணினியெனில் கிகாபைட் அளவு நினைவக இடவசதி தேவையாகும் தாங்கிகளானது மெய்நிகர் கணினிபோன்று துவக்கத்திற்கு(boot time) அதிக கால அவகாசம் எடுத்து கொள்ளாது அதனால் நாம் செயல்படுத்தவிழையும் சூழலில் வழக்கமானமென்பொருட்களை செயல்படுத்துவதை போன்று இந்த தாங்கிகளை செயல்படுத்தி பயன்பெறலாம்

காற்புள்ளியால்பிரிக்கப்பட்ட உரையை(Comma Separated Values(CSV )) எக்செல்லில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு

காற்புள்ளியால்பிரிக்கப்பட்ட உரை(Comma Separated Values(CSV ))வடிவமைப்பில் உள்ள ஒரு தொகுப்பான உரையை எக்செல்லில்எவ்வாறு பதிவேற்றம் செய்வது என இப்போது காண்போம் இதற்காக எக்செல்பயன்பாட்டினை செயல்படுத்தி அதில் DATA எனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிடசெய்திடுக பின்னர் முதல்பலகத்தில் From Text என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து இடதுபுற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் சாளரத்தில் நாம் பதிவேற்றம் செய்திடவிரும்பும் CSV வடிவ கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க உடன் மூன்று படிமுறை கொண்ட வழிகாட்டி நாம் மிகச்சரியாக உரைகோப்பினை எக்செல்லிற்குள் கொண்டுவருவதற்காக வழிகாட்டத்துவங்கிடும் இந்த வழிகாட்டியின் முதல் படிமுறைதிரையில் ஏராளமான வாய்ப்புகள் நமக்கு உதவுவதற்காக தயாராக உள்ளன அவைகளை பெரும்பாலும் மாற்றி யமைத்திடவேண்டாம் ஆனால் Delimitedஎனும் தேர்வுசெய்பெட்டிமட்டும் தெரிவு செய்யப்பட்டு-உள்ளதாவென சரிபார்த்து கொண்டு next.என்ற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் வழிகாட்டியின் இரண்டாவது படிமுறையில் காற்புள்ளி பிரிப்பானாக தெரிவு செய்யப்-பட்டுள்ளதாவென உறுதிபடுத்தி கொண்டு next.என்ற பொத்தானை சொடுக்குக
வழிகாட்டியின் மூன்றாவது படிமுறைதிரையில் ஒவ்வொரு நெடுவரிசையின் தரவுகளின் வடிவமைப்பை General format இற்கு பதிலாக நாம் வேறு வடிவமைப்பினை விரும்பினால் அதற்கான வடிவமைப்பை அந்தந்த நெடுவரிசைகளில் தெரிவுசெய்து கொண்டு finish என்ற பொத்தானை சொடுக்குக உடன் காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட வடிவமைப்பில் உள்ள உரையானது எக்செல் விரிதாளில் பதிவேற்றம் ஆகிவிடும்

எக்செல்லில் தரவுகளை உள்ளீடு செய்வதை ஏற்புகை செய்வது எவ்வாறு

நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் எக்செல்தாளில் மற்றநபர்களின் தரவுகளை உள்ளீடு செய்திடுமாறான சூழலில் குறிப்பிட்டவகை தரவுகளை மட்டுமே நம்முடைய எக்செல்தாளில் அனுமதிப்பது எனகட்டமைப்பு செய்வதே தரவுகளை ஏற்புகை செய்வது Data Validationஎன அழைக்கப்படும் இதனை மூன்றுவகையான சூழலில் மூன்று வகையாக உள்ளீடு செய்யப்படும் தரவுகளை ஏற்புகை செய்திடுமாறு அனுமதிக்காலாம்
1 குறிப்பிட்ட வகையான எண்கள் எழுத்துகள் நாள்வகை(numbers/text/dates) மட்டும் அனுமதிப்பது இதற்காக எக்செல் பயன்பாட்டு திரையில் Data tab –> Data Validation என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் Data Validation எனும் இதற்கான உரையாடல் பெட்டியானது திரையில் தோன்றிடும் அதில் Settings எனும் தாவித்திரையை தோன்றிடசெய்தபின் அதிலுள்ள validation criteria என்பதன்கீழுள்ள Allow என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து Any Value,Whole Number,Decimal,Date ,Time,Custom போன்ற வாய்ப்புகளில் நாம்விரும்புவதை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக
அவ்வாறே இதே உரையாடல் பெட்டியில் Input Message எனும் தாவியின் திரையை தோன்றிட செய்து அதற்கான ஏற்புகை நிபந்தனைகளையும் Error Alert எனும் மூன்றாவது தாவியின் திரையில் பிழைச்செய்தி தோன்றிடுவதற்கான நிபந்தனைகளை அமைத்து கொண்டபின்னர் இறுதியாக okஎன்ற பொத்தானை சொடுக்குக

இணையமுகவரிமொழிமாற்றம்(Network Address Translation (NAT)) ஒரு அறிமுகம்

இது ஒரு மெய்நிகர் இணையமுகவரிகளின்மரபொழுக்கவழிமுறைவாயிலாகும் எந்தவொரு நிறுவனமும் தனக்கு வேண்டிய இணைய முகவரியை இதன்வாயிலாக அடையலாம் இது இணையவலைபின்னலின் இருமுனைகளுக்கு இடையே அதாவது தனிநபர் அல்லது நிறுவனம் ஆகியவற்றின் உள்ளூர் முகவரிமுதல் உலகளாவிய முகவரிவரை உள்ளவைகளில் தான்விரும்பும் மற்றொருஇணையமுகவரியைஅல்லது சேவையாளரை அடைவதற்கு ஒரு இடைநிலை வாயிலாக அல்லது பாளமாக விளங்குகின்றது இது IPv4 சூழல் முகவரியிலிருந்து IPv6 சூழல் முகவரியை அடைவதற்கு அல்லது இதற்கு மறுதலையாக IPv6 சூழல் முகவரியிலிருந்து IPv4 சூழல் முகவரியை அடைவதற்கு ஒரு நுழைவு வாயிலாக அமைந்து எளிதாக அடைவதற்கு உதவுகின்றது மேலும் IPv4 கட்டமைவின் முடிவான முனைமத்தை IPv6 சூழல்முனைமத்துடன் இணைவதற்கும் அவ்வாறே IPv6 கட்டமைவின் முடிவான முனைமத்தை IPv4 சூழல்முனைமத்துடன் இணைவதற்கும் அடிப்படை வாயிலாக அமைகின்றது இந்த NAT எனும் தொழில்நுட்பமானது நிறுவனத்தின் மிகச்சிறந்த பாதுகாப்பு சுவராகவும் வழிசெலுத்தியாகவும் செயல்படுகின்றது

லிபர் ஆஃபிஸ் பேஸிலும் லிபர் ஆஃபிஸ் கால்க்கிலும் நம்முடைய பரஸ்பர சகாயநிதி எனும் மியூச்சுவல் ஃபன்டினை மிக எளிதாக கையாளமுடியும்

பொதுவாக எந்தவொருமியூச்சுவல் ஃபன்டிற்கும் உலகளாவிய பாதுகாப்பு சுட்டி எண்(International Securities Identification Number) சுருக்கமாக ISINஎன அழைக்கபடும் எண் ஒன்று கண்டிப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் அதனடிப்படையில் நம்முடைய மியூச்சுவல் நிதியின் நிகரமதிப்பினை காண்பதற்கு amfindia.com என்ற தளம் மிகப்பேருதவியாக இருக்கின்றது ஒன்றுக்கு மேற்பட்டஅளவில் ஏராளமாகபட்டியலாக நம்மிடம் இந்த பரஸ்பர சகாயநிதியானது உள்ளன எனில் அவைகளின் நிகர-மதிப்புகளை இந்த பட்டியலிலிருந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் நிகரமதிப்பைகாண லிபர் ஆஃபிஸ் கால்க்கினை பயன்படுத்தி கொள்ளலாம் இதற்காக பைவேட் அட்டவணை உதவுகின்றது முதலில் லிபர் ஆஃபிஸ் கால்க்கின் திரைக்கு சென்று அதில் பைவேட் அட்டவணையை உள்ளிணைத்து கொள்க அதற்கடுத்ததாக லிபர் ஆஃபிஸில் பதிவுசெய்துள்ள தரவுமூலத்தை(Data Source) தெரிவுசெய்து கொள்க இந்த தரவுமூலமானது ISIN, No of units, NAV, Cur.value என்றவாறான கட்டமைவில் இருக்கும் பின்னர்NAVDBஎன்பதை தெரிவுசெய்து கொள்க பிறகு பைவேட் அட்டவணையின் புலத்தினை தெரிவுசெய்திடுக பிறகு நாம் தெரிவுசெய்யவேண்டிய புலங்களை நம்மிடம் கோரும்அதில்ISIN, NAV,ஆகிய புலங்களை குறிப்பிட்டால் போதும் உடன்புதிய pivot என்பது கால்க்கின் புதிய தாளில் நம்முடைய பரஸ்பர சகாயநிதி பற்றிய செய்தி தோன்றிடும்
இதையே லிபர் ஆஃபிஸின் பேஸிலும் சரிபார்த்திடலாம் இதற்காக நம்முடைய கணினியில் லிபர் ஆஃபிஸுடன்MYSQLJDBCdriver என்பது நிறுவுகை செய்யப்-பட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க பின்னர் லிபர் ஆஃபிஸின் பேஸை செயல்படுத்தி அதில் புதிய தரவுதளத்தினை உருவாக்கிடுக தொடர்ந்து இதனுடன் நடப்பிடலுள்ள பரஸ்பர சகாயநிதியின் தரவுதள கோப்பினை MYSQLJDBC துனையுடன் இணைப்பு ஏற்படுத்துக பொதுவாக இது உள்ளூர் இணைப்பாக தரவுதளத்தின் navdb ஆனது இருக்கும்இதனை அனுகுவதற்கான கடவுச்சொற்கள் போன்ற தகவல்களுடன் உள்நுழைவு செய்திடுக உடன் எஸ்கியூஎல் வினாவுடன் நம்முடையபரஸ்பர சகாயநிதியின் மதிப்பைலிபர் ஆஃபிஸின் பேஸின் திரையில் காட்சியாக காணலாம்

Previous Older Entries Next Newer Entries