அக்சஸ்-2007- 25 நகல் உருவாக்குதல் (Replication)

மிகப்பெரிய நிறுவனங்கள்  வளாக பிணையத்தின் மூலம் (LAN)  .mdf  என்பன போன்ற அக்சஸின் தரவுதள  கோப்பினை  ஒருசேவையாளரின் கணினியில்  சேமித்து வைத்துகொண்டு ஒரேசமயத்தில் தங்களுடைய பணியாளர்கள் பலரையும் இந்த கோப்பிற்குள் உள்நுழைவு செய்வதன் மூலம்  அனுகி பயன்படுத்துவதற்கு ஏதுவாக இதனை பராமரித்துவருவார்கள். ஒருசிலர் மடிக்கணினியின் மூலமும் இந்த கோப்பினை அனுகி அவ்வப்போது ஒத்திசைவு செய்து தங்களுடைய தரவுகளை புத்தாக்கம் செய்து கொள்வார்கள். அவ்வாறு இல்லாது  பயன்படுத்திடும்போது நிலையான கோப்பு,  மாற்றம் செய்யபட்ட கோப்பு என இரண்டுவகையான கோப்புகளாக உருவாகிவிடும். இந்நிலையில் ஒரு தரவுதளத்தில்  உள்ள நிலையான கோப்பினை மாறுதல் செய்பப்பட்ட பலருடைய கோப்புகளுடன் ஒத்திசைவு செய்வது மிகசிக்கலான செயலாகிவிடும்.  இதனால் வளாக பிணையத்தின் (LAN) வழியாக  ஒரே தரவுதளத்தின் கோப்பினை பலரும்பயன்படுத்தி பணிபுரிந்த பின்னர் முடிவாக பலரும் தங்களுடைய மாறுதல்களை இந்த கோப்பில் சேமிக்கும்போது  கடைசியாக  சேமித்தவரின் மாறுதல்களை மட்டுமே கணக்கில் கொண்டு நினைவகத்தில் சேமித்துவிடும் இதனால் மற்றவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கி சேமித்த தகவல்கள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடும்.அவ்வாறில்லாமல் வளாக பிணையத்தில்(LAN) பணிபுரிந்த அனைவரின் மாறுதல்களும் ஒத்திசைவு செய்யப்பட்டு ஒரேதரவுதளத்தில் சேமித்து வைத்திடுவதற்காக  நகல் உருவாக்குதல் (Replication)என்ற வாய்ப்பு அக்சஸ்2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகல் உருவாக்குதல் (Replication)என்றால் என்ன?,

வளாக பிணையத்தின் (LAN)) வழியாக  ஒரு தரவுதளத்தின் கோப்பினை பலரும் ஒரேசமயத்தில் பயன்படுத்தி பணிபுரிந்துகொண்டிருக்கும்போது  இந்த கோப்பானது ஒவ்வொருவருக்கும்  ஒருநகல்என  பல நகல்களாக உருவாகிவிடும்.

இவ்வாறான பல்வேறு நகல்களுக்கிடையே உள்ள மாறுதல்களை நகலெடுத்து ஒத்திசைவு செய்வதற்கு நம்பகமான கோப்பாக பகிர்ந்து கொள்வதற்காக செய்யும்பணியையே நகல்உருவாக்குதல் (Replication) என்று அழைப்பர்.

இந்த வாய்ப்பினை செயல்படுத்திடும்போது உண்மையான தரவுதளத்தினுடைய கோப்பினை Design Master  என்றும் அதிலிருந்து உருவாகும் அதனுடைய ஒவ்வொரு நகல் கோப்பினையும் Replica என்றும் அழைப்பார்கள். இந்த Design Master , Replica க்களை சேர்த்து ஒட்டுமொத்தமாக நகல்குழு(Replica set)என அழைப்பார்கள் .

இவை ஒருங்கிணைந்து ஒரேகுழுவாக தகவல்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றன.ஆனால் வேற்றுகுழுவுடன் இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்ளாது என்பதை நினைவில் கொள்க.

புதிய தரவுகளை சேர்த்தல்(Add), மாறுதல் செய்தல்(change) போன்ற பல்வேறு செயல்களும் குறிப்பிட்ட காலஇடைவெளியில் இந்த நகல்குழு(Replica set)விற்குள் உள்ள உறுப்பினர்கள் தங்களுக்குள்  ஒன்றுக்கொன்று  எந்தஒருநேரத்திலும் நம்பகத் தன்மையுடன் ஒத்திசைவு செய்துகொள்கின்றன.

Design master இல் தரவுதளத்தினுடைய கட்டமைப்பை மாறுதல்கள் செய்தால் அவை மற்ற குழுவினுடைய உறுப்பினர்களுடன் ஒத்திசைவு செய்து கொள்கின்றன.. நகல்குழு(Replica set)விற்குள் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான local object களை கொண்டிருக்கின்றன. இவற்றை மற்ற உறுப்பினர்களுடன் அவ்வப்போது தேவைப்படும் சமயத்தில் ஒத்திசைவு செய்துகொண்டாலும் இவை ஒவ்வொன்றும்  தனித் தன்மையுடனேயே விளங்குகின்றன .இருப்பினும் அக்சஸ்2007 இல் இவைகள் ஒத்திசைவு செய்யும் சமயத்தில் ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளன. ஓத்திசைவு செய்வதற்கான பொதுவான படிமுறை பின்வருமாறு

1. Administrator இல் ஒரு அக்சஸின் தரவுதளம் ஒன்றினை உருவாக்கி கொள்க.

2. பின்னர் இந்த தரவுதளத்தினை Replica set இன் Design Master ஆக உருமாற்றம் செய்து கொள்க.

3.அதன்பின்னர்  இந்த Design Master இன் பல்வேறு நகல்களை உருவாக்கி  வளாக பிணையத்தில்(LAN) )பல்வேறுஇடங்களுக்கும் அனுப்பி வைத்திடுக. ஆயினும் இவை ஒவ்வொன்றும் ஒருமத்திய தரவுதளத்தில் குழுவாக இருக்குமாறு பராமரித்துகொள்க.

4.அவ்வப்போது வளாக பிணையத்தில்(LAN) இன் பல்வேறு இடங்களிலும்  உள்ள இந்த குழுவினுடைய உறுப்பினர்களின் தரவுகளை புத்தாக்கம் செய்து கொள்க.

5.இந்த நகல்குழு(Replica set)விற்குள் உள்ள உறுப்பினர்களின் கோப்புகளை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒத்திசைவுசெய்து கொள்க.

6.இந்த தரவுதளத்தினுடைய கட்டமைவை மாறுதல் செய்யவேண்டுமெனில் Design Master இல் மட்டும் மாறுதல்கள் செய்து அந்தமாறுதல்களை நகல்குழு(Replica set)விற்குள் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொன்றும் ஒத்திசைவு செய்து கொள்ளும்படி சரிபார்த்துகொள்க.

Replica set  அமைப்பில் தரவுதளத்தினை உருவாக்குதல்

1.அக்சஸில் MyDM.mdb(MyDesgin Master.mdb) என்ற காலியான தரவுதள கோப்பு ஒன்றினை உருவாக்கிகொள்க. இதற்கான கட்டமைப்பாக அக்சஸ் 2000,2002,2003 ஆகியவற்றில் ஒரு வடிவமைப்பை பயன்படுத்திகொள்க.

2.பின்னர் இதில் Employee , category ஆகிய இரண்டு அட்டவணைகளை இறக்குமதி செய்து கொள்க.

3.அதன் பின்னர் மேல்பகுதியில் உள்ள  Database Tools என்ற தாவியின் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக

4.உடன் விரியும் தரவுதள கருவிபட்டியின் Administrator என்ற குழுவில் உள்ள Replication option    என்ற அம்புக்குறி பொத்தானை (படம் -25-1)தெரிவுசெய்து சொடுக்குக

5.உடன் விரியும்  சிறுபட்டியலில் create Replication  என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

25.1

படம்-25-1

6. உடன் உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றி Design Master  ஐ உருவாக்கிடும் பணியினை தொடரவா என கேட்டு நிற்கும் அதில் yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நடப்பில்இருக்கும் தரவுதளத்தின் கோப்பானது நகல்குழுவி(Replica set) னுடைய Design Master   ஆக உருமாற்றம் செய்திடும்பணியை செயற்படுத்திடும்;.

7. இந்த உருமாற்றும் பணியைசெய்வதற்கு முன்பு இந்த தரவுதள கோப்பினை காப்புநகல் (backup) செய்திடவா என்று கேட்டு நிற்கும் (படம்-25-2)அதில் yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்  அக்சஸானது தரவுதள கோப்பினை காப்புநகல் (backup) செய்துவிடும் ஆனால் இதற்காக அதிகநேரத்தினை எடுத்துகொள்ளும்.

25.2

 படம்-25-2

8. Design Master   ஆக உருமாற்றம் செய்திடும்பணி முடிவடைந்ததும் இந்த Design Master  ஐ எங்கு வைத்து பராமரிக்கவேண்டும் என கேட்டு நிற்கும். நாம்விரும்பும் இடத்தின்முழுமையானபாதை விவரத்தை சரியாக உள்ளீடு செய்க. (பொதுவாக இயல்புநிலையில்  (My)Document பகுதியில் இந்த DesginMaste ஐ வைத்து பராமரிக்கும் ) உடன் Design Master  உருமாற்றும் பணி முடிவடைந்துவிட்டதாக செய்தி யொன்றை திரையில் காண்பிக்கும்(படம்-25-3)

 25.3

படம்-25-3

 நாம் நகல்செய்த Employee,category ஆகிய அட்டவணைகள் இதில் இருக்கும். இந்த கோப்பினை மூடிவிட்டு (MyDm..) Replica(myDm)  என்ற கோப்பினை திறக்கவும் இதன்தோற்றமும் முந்தைய கோப்பின் தோற்றமும் ஒரே மாதிரியாக தலைப்பு பட்டை யுடன் பிரிதிபலிப்பதை காணலாம்(படம்-25-4) ஆனால் இது Read only  கோப்பாக மட்டுமே இருக்கும்.இதனுடைய (replica ) வில் மாறுதல் எதுவும் செய்திடமுடியாது.

 25.4

படம்-25-4

1.இதில் உள்ள Employee என்ற அட்டவணையை திறந்துஅதில் ஏதெனும் ஒரு பெயரை மாறுதல் செய்து கொண்டு  இதனை மூடிவிடுக

2. பின்னர் Tools=> Replica => Synchronize now=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் mydm   என்ற கோப்பானது ஒத்திசைவு செய்து கொள்வதற்கான உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் (படம்-25-5)அதில் ok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஒத்திசைவை ஏற்றுக்கொள்க. அல்லது browse  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் வேறுஇடத்தில் replica வை சேமித்துகொண்டு அட்டவணை,விணா,படிவம்,அறிக்கை போன்றவற்றிற்குள் செல்லாது மாறுதல் இல்லாத ஒத்திசைவை செய்துகொள்ளமுடியும்.

25.5

படம்-25-5

 MyDmdatabase இன்  Replica  வை மூடிவிடுக. பின்னர் MyDm ஐயும் மூடிவிடுக. அதன்பின்னர் அதிலுள்ள Employee என்ற அட்டவணையை திறந்துபார்த்தால் நாம்செய்த மாறுதல்களுடன் அட்டவணையானது திரையில் பிரிதிபலிக்கும். இதன் ஒட்டுமொத்த சாராம்சம் பின்வருமாறு.

1. Tool => Replication => create Replication=>   என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து  சொடுக்குக. உடன் அக்சஸின்  தரவுதளமானது  ஒரு Design Masterஉம்  , ஒரு Replica  வும் ஆக சேர்ந்த ஒரு Replica set ஆக உருமாற்றம் செய்யபட்டுவிடும்.

2.இந்த நகல் குழுReplica set  வின் தகவல்கள் (Design Master  இல் தேக்கி வைக்கப்பட்டுள்ளவை ) மறைக்கப்பட்ட அமைப்பின் தகவல்களாக இருக்கும் இதனை காட்சியாக காண்பதற்கு Tools => option=> view => system object=> என்ற வாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.

3. Replicaவிலிருந்து  DesignMasterக்கு அல்லது  DesignMaster இலிருந்து Replica விற்கு அல்லது ஒரு Replica இலிருந்து மற்றொரு Replicaவிற்கு ஒத்திசைவு செய்து கொள்ளும்.இந்த ஒத்திசைவு செயல் ஒரேசமயத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படுத்தப்படுகின்றன.

4.கட்டமைப்பு மாறுதல்களை Design Master   இல் மட்டும் ஏற்றுக் கொள்ளும். தரவுகளில் செய்திடும் மாறுதல்கள் Replicaவில் மட்டும் ஏற்றுக்கொண்டு ஒத்திசைவுசெய்துகொள்ளும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.