நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை திறனுடன் கையாளுவதற்கான ஆலோசனைகள்

கூகுள் குழு, யாகூகுழு போன்ற பல்வேறு குழுக்களுடன் நம்முடைய மின்னஞ்சலிற்கான சேவையை இணப்பது அல்லது மிகமுக்கியமான இணைய தளத்தின் செய்திகளை மின்னஞ்சல் வாயிலாக அவ்வப்போது அறிந்துகொள்வதற்கான   சம்மதத்தை வழங்குவது ஆகியவற்றினால் நம்முடைய மின்னஞ்சல் பெட்டியில் தினமும் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்து மலைபோன்று குவிந்துஇருக்கின்றன. அவ்வாறான மின்னஞ்சல்களின் குவியலில் முக்கியமான மின்னஞ்சல் எவை குப்பை எவை என பிரித்தறிய முடியாமல் நாம் தவிப்பது அனைவரும் அறிந்த செய்தியே அதனை திறனுடன் கையாள பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றிடுக

1 நாம்இணைந்துள்ள குழுஉறுப்பினர்களையும் நம்முடைய நண்பர்களையும் எந்தெந்த செய்திகளை CC என்ற நகல்மின்னஞ்சல்களாகவும் எந்தெந்த செய்திகளை அவ்வாறில்லாமலும் அனுப்புவது என தெளிவுபடுத்திடுக

2 மின்னஞ்சல் பெட்டியிலுள்ள மின்னஞ்சல்களை மிகவிரைவாக படித்திடும வழக்கத்தை மேற்கொண்டிடுக

3 குறிப்பிட்ட செயலிற்கான மின்னஞ்சலை அனுப்பியவுடன் Sent என்ற  பகுதிக்கு சென்று அந்த   குறிப்பிட்ட செயலிற்கான மின்னஞ்சலில் நினைவூட்டு மின்னஞ்சல் அனுப்பிடுமாறு அமைத்திடுக

4 மிகமுக்கியமான மின்னஞ்சல்களை ஒன்றுக்குமேற்பட்ட முறை படிக்கவேண்டியிருக்கும் அதனால் அவைகளை தனியான மடிப்பகத்தில் சேமித்திடுக

5  மின்னஞ்சல் மூலம் செய்திகளை நண்பர்களுக்கு அனுப்பி சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக முடிந்தவரை நேரடியாக தொலைபேசி அல்லது செல்லிடத்து பேசிமூலம் உரையாடல் செய்து தீர்வுசெய்துகொள்க

6 குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஏதேனுமொரு குழுவில் இணைந்து செயல்பட்டபின் அவ்வாறான குழுவின் செயல் தற்போது தேவையில்லை யெனில் அந்த குழுவிலிருந்து . Unsubscribe என்பதன்மூலம் மின்னஞ்சல் செய்திகளை விலக்கிடுக

7நன்பர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட குழுவினர்களுக்கோ மின்னஞ்சல்களை அனுப்பிடும்போது கூடியவரை மிகமுக்கிய செய்திகுறிப்புகளை மட்டும் சுருக்கமாக வழங்கிடுக

8 பொதுவாக நமக்கு வரும் மின்னஞ்சல்களை வரிசையாக அடுக்கி வைத்திட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்

9 உள்வரும் மின்னஞ்சல்களை வடிகட்டுவதற்காக MS Outlook எனில், Set rulesஎன்பதையும்  Gmail எனில்,  Filters என்பதையும் . பயன்படுத்திகொள்க

10 நாம் யாகூவின் குழுவில் அள்லது கூகுளின் குழுவில் சேர்ந்திருந்தால் அக்குழுவிலிருந்து வரும் ஏராளமான மின்னஞ்சல்களை  ‘Digest emails’  என்பதை பயன்படுத்தி அந்த மின்னஞ்சல்களின் தலைப்புகளை மட்டும் தொகுத்து  பெற்று அதனைமட்டும் படித்து தேவையான மின்னஞ்சலை மட்டும் திறந்து பார்த்திடமுடியும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.