கைகட்டைவிரல் அளவேயுள்ள கணினி தற்போது கிடைக்கின்றது

12.04.2014

அடுத்தடுத்த தலைமுறை கணினிகள் நீண்ட ஆய்விற்கு பிறகு அவ்வப்போது மேம்படுத்துபட்டு உருவாக்கபட்டு வெளியிடும் போது இந்த கணினியினுடைய உருவானது சிறியதாகி கொண்டே வந்து தற்போது கட்டைவிரல் கணினி அல்லது தீப்பெட்டி கணினி எனும் புதிய அலை தற்போது கணினிஉலகில் தோன்றியுள்ளது பொதுவாக இயக்கமுறைமையும் அதன்மீது செயல்படும் மென்பொருட்களும் தனியுடைமையிலிருந்து திறமூலமாக மாறியபின்னர் தற்போது ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையும் அதற்கான திறமூல மென்பொருட்களும் ஏராளமான அளவில் கிடைக்கின்றன அதனை தொடர்ந்து வன்பொருட்களிலும் கணினியானது அதன்உரு சிறியதாக குறைந்து கொண்டேவந்த தற்போது கட்டைவிரல் அல்லது தீப்பெட்டி அளவிற்கு கணினிகிடைக்கும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது   இதில் சிப்பியூ ,நினைவகம் ஆகியவைமட்டும் இருக்கும் தட்டச்சு பலகை திரை ஆகியவற்றை வெளியிலிருந்து இணைத்து சாதாரண கணினி போன்று பயன்படுத்தி கொள்ளலாம் மிகமுக்கியமாக வெளிப்புற நினைவகத்திற்காக யூஎஸ்பிவாயிலாக அதற்கான நினைவகத்தினை இணைத்து கொள்ளலாம் யூஎஸ்பி வாயிலாக மிககுறைந்த அளவு மின்சாரம் வழங்குவதற்காக மின்கலணை இணைத்தாலே போதுமானதாகும் இது இயந்திர மனிதன் போன்ற வெளியிலிருந்து இயக்கி கட்டுபடுத்தக்கூடிய சாதனங்களில் இந்த கணினி அல்லது தீப்பெட்டி கணினி பயன்படுத்தபடுகின்றது   யூஎஸ்பி வாயிலாக செயல்படும் பல்லூடக செயலியாக பயன்படுத்தி இசை ஒலிஒளி படங்களை கேட்டு பார்த்து மகிழலாம் இது மேஜைக்கணினியாக மட்டுமல்லாமல் சேவையாளர் கணினியாக கூட செயல்படும் திறன் கொண்டது

 

பொதுவான திறமூல மென்பொருட்கள்

 3,1 கிரீனிஃபை . பொதுவாககையடக்கபேசி (smartphone), மடிக்கணினி (tablets) ஆகியவற்றில்   ஏராளமான செயலிகளும் பயன்பாடுகளும் முன்னகூட்டியே கட்டமைக்கபட்டு வழங்கபட்டிருந்தாலும் அவைகளுள் பெரும்பாலான பயன்பாடுகள் நம்முடைய வழக்கமான பணிக்கு தேவையற்றவையாகும் பொதுவாக இந்த பயன்பாடுகளின் செயலை நிறுத்தம் செய்தாலும் ஏன் இந்த சாதனங்களின் செயலையே நிறுத்தம் செய்தாலும் தேவையற்ற இந்த செயலிகளும் பயன்பாடுகளும் பின்புலத்தில் செயல்பட்டுகொண்டே இருப்பதால் மடிக்கணினியினுடைய மின்கலனில் மின்சாரம் விரைவில் காலியாவதோடுமட்டுமல்லாது மின்கலணின் வாழ்வே விரைவில் முடிந்துவிடும்   நிலை ஏற்படுகின்றது இதனை தவிர்த்திட கிரீனிஃபை என்ற திறமூல பயன்பாட்டினை செயல்படுத்துக உடன் திரையில் நம்முடைய சாதனத்தில் நிறுவபட்டுள்ள அனைத்து பயன்பாடுகளையும் பட்டியலாக காண்பிக்கும் அதில் தேவையானவைகளை மட்டும் தெரிவுசெய்து கொண்டால் அவைகளைமட்டும் செயல்பட இந்த கிரீனிஃபை என்ற பயன்பாடு அனுமதிக்கும் அவ்வாறே பயன்பாடுகளின் ஆய்வு எனும் இதனுடைய மற்றொரு செயலைகொண்டு எந்தெந்த பயன்பாடு மற்ற பயன்பாடுகளை செயல்படும்படி பின்புலத்திலிருந்து   தூண்டிவிடுகின்றன   என ஆய்வுசெய்து திரையில் காண்பிக்கும் அவற்றுள் தேவையானவைகளைமட்டும் அனுமதிக்குமாறு தெரிவுசெய்துகொள்ளமுடியும்   இது ஐந்துஎம்பி அளவே நினைவகத்தை கொண்டதாக இருப்பதால் கையடக்க மென்பொருளாக விளங்குகின்றது. இதனை https://play-google.com/store/apps/details?id=com.oasisfeng.greenify/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

3,2 டைட்டானியம் பிற்காப்பு எனும் திறமூல மென்பொருளானது அனைத்துவகையான தரவுகளையும் பிற்காப்பு செய்வதில் தலைசிறந்ததாக விளங்குகின்றது. இது ட்ராப் பாக்ஸ் ,கூகுள்ட்ரைவ் போன்றவற்றில் தரவுகளை பிற்காப்பு செய்வதற்காக பதிவேற்றம் செய்ய அனுமதிக்கின்றது. ஒற்றையான சுருக்கபட்ட கோப்பாக பிற்காப்பு செய்திடவும் குறிப்பிட்ட கால இடைவெளியில்தானாகவே கோபபுகளை பிற்காப்பு செய்திடுமாறும் இதனுடைய திறன்அமைந்துள்ளது. மிகமுக்கியமாக நம்முடைய சாதனங்களை வடிவமைப்பு செய்து புதிய ரேமை நிறுவுகை செய்திடும் முன்பு நம்முடைய சாதனங்களில் உள்ள தரவுகளை மற்றொன்றிற்கு மாற்றிடும் திறன் கொண்டதாக உள்ளது. ஆங்கிலம் அல்லாத முப்பதிற்குமேற்பட்ட மொழிகளை இது ஆதரிக்கின்றதுஇதனை https://play-google.com/store/apps/details?id=com.keramidas.TitanuimBackup/என்ற வலை தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

3,3 டிஸ்க்டிக்கர் சாதாரணமாக மேஜைகணினியில் தரவை நீக்கம் செய்தால் அது குப்பைத்தொட்டியில் சென்று சேர்ந்திருக்கும் பின்னர் நாம் அடடா குறிப்பிட்ட தரவை தவறாக நீக்கம்செய்துவிட்டோமே என மனம்மாறி அதனை மீட்டெடுப்பதற்கு குப்பைதொட்டிக்கு சென்று மீட்டெடுத்துகொள்வோம் ஆனால் ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஏதேனும் தரவை நீக்கம் செய்திட்டால் அவை முழுவதுமாக நீக்கம் செய்துவிடும் பின்னர் மனம்மாறி அதனை மீட்டெடுக்க முயற்சிசெய்திடமுடியாது ஆயினும் இந்த டிஸ்க்டிக்கர் எனும் திறமூல மென்பொருளானது ஆண்ட்ராய்டு சாதனத்தில் நீக்கம்செய்யபட்ட தரவுகளைகூட மீட்டெடுத்திடும் திறன்கொண்டது அவ்வாறான தேவைக்காக இந்த மென்பொருளை செயல்படுத்தியவுடன்   எந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட தரவை நீக்கம் செய்தோம்என கோரும் திரையில் அந்த தகவலை வழங்கியவுடன் அதனை ஆய்வுசெய்து அந்த தரவை திரையில் முன்காட்சியாக காண்பிக்கும் தேவையெனி்ல் விரும்பும் வகையில் வடிகட்டி பட்டியலிடுமாறு கோரலாம் அதன்பின் தேவையானதை மட்டும் மின்னஞ்சல் மூலமாக தனியான கோப்பகத்தில் எஃப்டிபி சேவையாளரில் சேமிக்கும்படி கோரி மீட்டெடுத்துகொள்ள முடியும் இதனைhttps://play-google.com/store/apps/details?id=com./defianattech.diskdigger/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

3,4 அட்பிளாக் பிளஸ் கையடக்க சாதனத்தில் இணைய உலாவரும்போது ஏராளமான அளவில் விளம்பரங்கள் திரையில் தோன்றி நம்மை எரிச்சலுறசெய்வதோடுமட்டுமல்லாது     நம்முடைய சாதனத்தின் தரவிறக்க வேகத்தையும் குறைத்துவிடுகின்றது   இதனை தவிர்த்திட இந்த அட்பிளாக் பிளஸ் எனும் திறமூல மெனபொருளானது குறிப்பிட்ட இணையபக்கம் குறிப்பிட்ட வகையான விளம்பரம் போன்றவைகளை கட்டுபடுத்துமாறு கட்டளையிட்டவாறு வடிகட்டி செயற்படுத்துகின்றது இதனை https://adblockplus.org/androidinstall/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

3,5 அப்லாக் செல்பேசி கையடக்க சாதணங்களின் மூலம் வங்கி கணக்கு களை கையாளுதல் போன்ற நிகழ்வுகளிள் அனுமதியற்றவர்கள் உட்புகுந்து தங்களுடைய கைவரிசையை காண்பித்திடுவதை தவிர்த்திட இந்த அப்லாக் எனும் திறமூலமென்பொருளின்மூலம்   குறிப்பிட்ட பயன்பாடுகளை அனுமதி பெற்றவர்கள் மட்டும் செயல்படுத்துமாறும் மற்றவர்களால் செயல்படுத்தமுடியாதவாறும் தடுத்திட முடியும்இதனை https://play-google.com/store/apps/details?id=com.domobile.applock/ என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

 

சிறந்த இசைக்கான திறமூல மென்பொருட்கள்

 இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் யாருமே இல்லையென அறுதியிட்டு கூறலாம் அவ்வாறான இசையை கணினியின் வாயிலாக செயல்படுத்திட தனியுடமை மென்பொருட்கள் ஏராளமான அளவில் கிடைக்கின்றன அதேபோன்று திறமூல மென்பொருட்கள்கூட அவைகளைவிட கூடுதலான வசதிகளுடன் கிடைக்கின்றன அவைகளை பற்றிய ஒரு பறவை பார்வையாக பார்த்திடுவோம்

2,1 அமராக் என்பது சி++ மொழியில் எழுதப்பட்டு 2003 ஆம் ஆண்டு வெளியிடபட்டதொரு திறமூல இசைக்கான மென்பொருளாகும்   இது பயனாளர்களின் உற்ற நண்பனாகவும் அனைத்து இசைகளையும் தொகுதியாக தொகுத்து பயன்படுத்தி கொள்ளுமாறும் அந்தந்த செயலிற்கேற்ற தனித்தனி தாவிபொத்தான்களுடனும் இணையத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு தேவையான இசையை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறும் அமைந்துள்ளது

2.2 அட்யூன் , அமராக் எனும் இசைமென்பொருளுடன் ஐட்யூன் எனும் இசை மென்பொருளையும் சேர்த்து உருவாக்கபட்டு 2006 இல் வெளியிடபட்ட திறமூலஇசைமென்பொருளே இந்த அட்யூன் எனும் இசைமென்பொருளாகும் இது நம்முடைய விருப்பமான பாடல் இசைக்கும்போது நாமும் அதனுடன் சேர்ந்திசை செய்வதற்கு அனுமதிகின்றது இதுயூட்யூப் தளத்துடன் ஒத்திசைவு செய்திடும் திறன் கொண்டதுஅதுமட்டுமல்லாது ஏதாவது காரணத்தினால் இடையிடையே தடைபட்ட இசையைகூட சரிசெய்து தொடர்ந்து இயக்கும் திறன் கொண்டது

2,3 அடாசியஸ் என்பது உபுண்டு இயக்கமுறைமையில் இயல்புநிலையில் இணைந்து கிடைக்கின்றது இது ரிதம்பாக்ஸ் போன்று இருந்தாலும் பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துகொள்ளலாம். அனைத்துவகையான இசைவடிவமைப்பையும் இது ஆதரிக்கின்றது கூடுதலான வசதிஎதுவும் தேவையெனில் அதனை உள்ளிணைத்து கொள்ளவும் அனுமக்கின்றது

2,4 கிளமென்டைன் இது அமராக்கின் ஒருதனித்துறையாக விளங்கினாலும் இதில் பயனாளரின் இடைமுகம் மிகஎளிமையாக உள்ளது மேலும் அனைத்துவகை சாதனத்திற்கும் ஏற்றவாறு இசைத்திட முன்கூட்டியே கட்டமைக்கபட்ட பல்லூடக மாற்றிஇதில் உள்ளது மழைபொழிதல் ,பறவைகளின் ஒலி போன்றவைகளை வழக்கமான நம்முடைய இசைகளின் ஊடே இணைத்து கேட்டிடுவதற்கேற்ற திறன் கொண்டது. இது ட்ராப் பாக்ஸ் ,கூகுள்ட்ரைவ் போன்றவற்றில் இசைத்தொகுப்புகளை சேமித்து வைத்து கொள்ளவும் அவ்வாறான இசைத்தொகுப்புகளை நேரடியாக இசைக்கும் திறனும் கொண்டதாகும்.

2,5 மிர்ரோ இது ஆர்எஸ்எஸ் இணைய தொலைகாட்சி ஆகியவற்றை ஆதரிக்கின்றது. இது பைத்தான் எனும் மொழியில் எழுதி 2006 இல் வெளியிடபட்டது ஐட்யூன்போன்று மிக எளிதாக தூய்மையான இசையை கேட்க உதவுகின்றது

 

இயக்கமுறைமையை சரியாக வழிநடத்தி செல்வதற்கான முக்கியமான திறமூல கருவிகள்

 தற்போது கணினியின் இயக்கமுறைமையின் அமைவை மிகச்சரியாக பராமரித்திட ஏராளமான கருவிகள் உள்ளன அதிலும் திறமூலகருவிகள்கூட ஏராளமான அளவில் கிடைக்கின்றன அவைகளுள் சிறந்த கருவிகள் எவை எந்தெந்த செயலிற்கு எந்தெந்த கருவியை பயன்படுத்தி கொள்வது என குழப்பமில்லாது தொடர்ந்து செயற்படுத்திட பின்வரும் கருவிகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

1,1 Nmonஎனும் கருவியானது   கணினியினுடைய இயக்கமுறைமையின் அமைவை நிருவகிக்கும் கருவிகளுள் முதன்மை இடத்தை வகிக்கின்றது இது sar(system activity report) எனும் அறிக்கையை ஒவ்வொரு இருநொடிக்கு ஒருமுறை மேம்படுத்தி திரையில் அளிக்கின்றது அல்லது சிஎஸ்வி வடிவமைப்பில் பின்னர் ஆய்வு செய்து வரைபடமாக காட்சிபடுத்துவதற்காக ஏற்றுமதி செய்கின்றது   இது சிபியூ, நினைவகம் என்பன போன்ற கணினியினுடைய இயக்கமுறைமையின் அமைவைபற்றிய விவரங்களிற்காக ஒவ்வொன்றிற்கும் தனித்தனி கட்டளைஎன இல்லாமல் ஒரேயொரு கட்டளைவாயிலாக நமக்கு தேவையான அனைத்துவகை. அறிக்கைகளையும் வழங்கிடும் திறன் கொண்டது

1,2 Rsyslog இது ஒரு திறமூலகருவியாகும் .இது ஒன்றிற்கு மேற்பட்ட முனைமங்களை கொண்ட கணினிகளுக்கான ஒரு மைய உள்நுழைவு சேவையாளராகவும் பெரும்பாலான தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் பாதுகாப்பிற்கான அடிப்படை கட்டமைவாகவும் அனைத்து வகையான லினக்ஸ் வெளியீடுகளின் உள்நுழைவு சேவையாளராகவும்   விளங்குகின்றது

1,3 Logstash இது ஒரு திறமூலகருவியாகும் இது ஒவ்வொரு நிகழ்வையும் உள்நுழைவையும் மிகமுக்கியமாக உற்பத்தி சேவையாளர்களை ஆய்வுசெய்து அதன் பின்புலத்தையும் அதனால்ஏற்படும் விளைவுகளையும் மேலேகூறிய Rsyslog , syslog போன்றவற்றின் வாயிலான அறிக்கையாக கணினியின் நிருவாகிக்கு சமர்ப்பிக்கும் திறன்மிக்கதாகும்

1,4 Git இது ஒரு திறமூலகருவியாகும் இது சிறியசெயல்திட்டங்கள் முதல் பெரியசெயல்திட்டங்கள் வரை அச்செயல்திட்டங்களின் வெளியீட்டு பதிப்பெண்களை கட்டுபடுத்திடும் திறன்வாய்ந்தது. இது கணினியினை நிருவகிப்பவருக்கும் மென்பொருட்களை மேம்படுத்துபவருக்கும் தலைசிறந்த கருவியாக விளங்குகின்றது

1,5 Puppet இது கணினியினுடைய கட்டமைவை நிருவகிக்கும் ஒரு திறமூலகருவியாகும் பெரும்பாலான கணினியினுடைய நிருவாகியின் பணியானது செய்த செயலையே திரும்ப திரும்ப செய்யும் சுவராசியமற்ற ஏதேனும் தவறுகள் ஏற்படவாய்ப்புள்ள பணியாக இருப்பதால் அச்செயல்களை இது தானியங்கியாக செயல்படுத்தி மிகவிரைவாகவும் எளிதானசெயலாகவும் ஆக்குகின்றது இது தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மேககணினி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு கணினியினுடைய கட்டமைவை நிருவகிக்கும் மிகச்சிறந்த கருவியாக விளங்குகின்றது

1,6 Ntopng வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்தி கண்காணித்தல் என்பதே ஒரு நிருவாகியின் வழக்கமான மிகமுக்கியமான செயலாகும்   அவ்வாறான வலைபின்னலின் தகவல் போக்குவரத்தை கட்டுபடுத்தி கண்காணித்தல் செயலை இந்த கருவி செய்கின்றது. இது தகவல் தொழில்நுட்பத்தின் வெவ்வேறு மரபொழுங்குமுறைக்கேற்றவாறு தரவுகளின் போக்குவரத்தை வரிசைபடுத்தி வலைபின்னலின் தகவல் போக்குவரத்தில்மிகசிறந்த திறமூல கருவியாக விளங்குகின்றது

1,7 Clonezilla இது கணினியினுடைய நினைவகத்தின் தரவுகளை பிற்காப்பு செய்வதிலும் மீட்டெடுப்பதிலும் மிகச்சரியாக பிரதிஎடுத்தல் எனும் செயலின்மூலம் அந்த செயலை மிகஎளிதான செயலாக்குகின்றது ஒற்றையான கணினிஎனில் Clonezilla Live என்ற பதிப்பும் ஒன்றிற்கு மேற்பட்டதுஎனில் ClonezillaSE(Server Edition) என்ற பதிப்பும் தரவுகளை பிற்காப்பு செய்வது ,மீட்டெடுப்பது ஆகிய பணிகளை விரைவாக எளிதாக செயல்படுத்துகின்றது இது லினக்ஸ் மட்டுமல்லாது அனைத்து வகை இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்வாய்ந்த கருவியாக விளங்குகின்றது

1,8 SystemRescueCD கணினியினுடைய இயக்கம் தொங்கலாக அல்லது இயங்காது முடங்கிய நிலையில்   குறுவட்டு நெகிழ்வட்டு யூஎஸ்பி ஆகியவற்றின் வாயிலாக அவ்வாறான கணினியை செயல்படசெய்து அவற்றை பழையநிலைக்கு கொண்டு சென்று செயல்படுமாறு செய்திட இந்த கருவி ஆபத்துகாலத்தில் உதவிடும் நண்பனாக விளங்குகின்றது

1,9 RackTables பொதுவாக கணினியில் தரவுகளை நிருவாகியானவர் அல்லது நிருவாக குழுவானது விரிதாளில் பராமரிக்கின்றது   பின்னர் அவ்விரிதாளில் பராமரிக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் பல்வேறு வகையான அறிக்கைகள் நம்முடைய தேவைக்கேற்ப உருவாக்கபடுகின்றன. இது மையபடுத்தபட்ட Rack அமைவாக தரவுகளை பராமரிப்பு செய்வதால் வலைபின்னல் சாதனங்களின் வாயிலாக சேவையாளரின் வாயிலாக நாம் கோரும் மிகசிக்கலான அறிக்கைகளைகூட அந்த தரவுகளிலிருந்து மிகஎளிதாக நமக்கு வழங்குகி்ன்றது ஐபி முகவரியையும் அதற்கான காலி நினைவகத்தையும் ஏதேனும் அறி்க்கை வெளியிட்டபின்னர் அறிவிப்பது மட்டுமல்லாது மேலும் உள்ள காலி நினைவகத்தையும் நமக்கு அறிவிப்பு செய்கின்றது .

மின்னஞ்சல் செல்லும் செயல்முறை ஒரு அறிமுகம்

வலைபின்னலில் ஒரு கணினியானது மின்னஞ்சல்களின் மெய்நிகர் அஞ்சலகமாக செயல்படுவதையே மின்னஞ்சல் சேவையாளர் என அழைக்கபடுகின்றது நாம் தண்டர்பேர்டு வாயிலாக ஒரு மின்னஞ்சலை அனுப்புவதாக கொள்வோம்
அதற்காக நாம் நம்முடைய மின்னஞ்சல் கணக்கின் விவரங்களை உள்ளீடு செய்து Send எனும் பொத்தானை அழுத்தியவுடன் இந்த தண்டர்பேர்டானது Postfix என்பதை தொடர்புகொண்டு நம்முடைய மின்னஞ்சலை அனுப்பிட கோருகின்றது அவ்வாறு நம்முடைய மின்னஞ்சலை நாம் அனுப்புவதற்குமுன் உரிய அனுமதிக்கபட்ட நபர்தானா நாம் என Simple Authentication and Security Layers (SASL) என்பதை பயன்படுத்தி இது சரிபார்க்கின்றது இந்த சரிபார்ப்பு பணியின் பின்புலமாக Dovecot என்பது இருந்துகொண்டு பயனாளரின் பெயர் கடவுச்சொல் ஆகியவற்றை கொண்டு அந்த செயலை கட்டுபடுத்துகின்றது அதன்பின் இந்த Postfix நம்முடைய மின்னஞ்சலை அனுப்பி வைக்கஅனுமதிக்கின்றது அவ்வாறு மின்னஞ்சலை அனுப்பிடும்போது எந்த முகவரிக்கு செல்லவேண்டும்என சரிபார்க்கின்றது இதன்மூலம் முடிந்தவரை குப்பை மின்னஞ்சல்களை குறிப்பிட்ட முகவரியாளருக்கு அனுப்பவதை இந்த Postfix தவிர்த்து அனுமதிக்கபட்ட நபர்களிடமிருந்து மட்டும் மின்னஞ்சல்களை பெற்று குறிப்பிட்ட நபரின் முகவரிக்கு மின்னஞ்சலானது சென்றடையுமாறு செய்கின்றது . பிறகு இந்த Postfix ஆனது குறிப்பிட்ட மின்னஞ்சலை Simple Mail Transfer Protocol (SMPT) என்பதன் வாயிலாக Amavisdஇற்கு முன்னோக்கி செலுத்துகின்றது. பின்னர் இந்த Amavisd ஆனது தன்னிடம் வந்து சேர்ந்தது குப்பை மின்னஞ்சலா(Spam) என Spam Assassin என்பதை கொண்டும் நச்சுநிரலா (virus) என ClamAVஎன்பதை கொண்டும் சரிபார்க்கின்றது. ஏதேனும் மின்னஞ்சல் சேவையாளரிடமிருந்து வரும் மின்னஞ்சல் இவ்விரண்டில் ஒன்றாக அமைந்துவிட்டிருந்தால் குறிப்பிட்ட மின்னஞ்சல் சேவையாளரை black listஇல் சேர்த்துவிடும் அதன்பின் அம்மின்னஞ்சல் சேவையாளரிடமிருந்து வரும் மின்னஞ்சலை இந்த Amavisd ஆனது ஏற்காது . அதன்பின் இந்த Amavisd ஆனது அம்மின்னஞ்சலை Simple Mail Transfer Protocol (SMPT) என்பதன் வேறொரு வழியின் வாயிலாக மீண்டும் Postfix இற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றது இப்போது இந்த Postfixஇல் மின்னஞ்சல்கள் வரிசையாக காத்திருப்பு செய்கின்றன

6.1

இறுதியாக மின்னஞ்சலின் பிரிப்பகமான MX DNS என்பது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியின் சேவையாளரை தொடர்புகொண்டு அம்மின்னஞ்சலை அனுப்பி வைக்கின்றது

6.1

சிஇப்பிஹெச்(Ceph) எனும் திறமூல தரவுகளின் தேக்கும் கருவி

மனித நாகரிகம் தோன்றியவுடன் தங்களுடைய ஆவணங்களையும் தரவுகளையும் பல்வேறு வழிகளில் சேமித்து வைப்பதற்கு முயற்சிசெய்தனர் ஆனாலும் ஏதனும் ஒரு வழியில் சேமித்து வைத்தால் பின்னாளில் அதனை அனுகி மீட்டெடுப்பதில் மிகசிரமபடும் நிலையிருந்துவந்தது. அவ்வாறானதொரு நிலையில் தாட்களும் எழுதுபொருட்களும் கண்டுபிடிக்கபட்டு பயன்படுத்தபட்டன அதன்பின் நாகரிக வளர்ச்சியின் அடுத்தகட்டமாக கணினியில் தரவுகளையும் ஆவணங்களையும் பயன்படுத்தி சேமிக்கும் நிலைக்கு உயர்ந்து வளர்ந்தது தற்போது நம்முடைய மனிதகுல ஆசையானது பேராசையாக உயர்ந்ததால் ஆரம்பகால கணினியும் தற்போதை நம்முடைய கணினியும் தரவுகளை சேமித்து வைப்பதற்கு போதுமானதாக இல்லை அதனால் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுடன் தனியுடைமை , திறமூலம் என புதியதுபுதியதான பல்வேறு பரிமானத்துடன் இந்த தரவுகளை தேக்கி வைத்திடும் செயல் வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது இவ்வளர்ச்சியில் ஒரு அங்கமான சிஇப்பிஹெச்(Ceph) எனும் திறமூல தரவுகளின் தேக்கும் அமைப்பை பற்றி இப்போது காண்போம் RADOS(reliable autonomic distributed object store) என்றவகையில் கட்டமைக்கபட்ட கோப்பு அமைவில் மிகச்சிறந்ததாக இந்த சிஇப்பிஹெச் இருக்கின்றது.

அதாவது தரவுகளை ஒரு வாளிக்குள் ஒட்டுமொத்தமாக குவித்து வைப்பதை போன்று இதில் தரவுகள் தேக்கி வைக்கபடுகின்றன. இந்த RADOS ஆனது OSD(object store daemons)என்ற அடிப்படையில் தரவுகளை தேக்கிவைக்கும் பணியைசெய்கி்ன்றது எவ்வாறெனில் இந்த OSD ஆனது Cephஇன் தனித்தனி முனைம தொகுதியாக பிரித்து பராமரிக்கபடுகின்றது இந்த OSD யே கோப்புகளை படிப்பதற்கும் எழுதுவதற்குமான பொறுப்பை வகிக்கின்றது இதில் இதனை உருவாக்கியவரின் பெயர் உருவாக்கிய அல்லது மாறுதல் செய்த நாள் போன்ற விவரங்கள் இந்த தரவுகளை அடையாளம் காண்பதற்காக குறிப்பிடபடுகின்றன. இவ்வாறு சேமித்து வைக்கபடும் தரவுகளின் ஏதனுமொரு OSD பிழையாகி அல்லது தவறாகிவிட்டாலும் மிகுதியாக உள்ள OSDயை கொண்டு நாம் சேமித்து வைத்த தரவுகளை மீட்டாக்கம் செய்துகொள்ள முடியும் என்பதே இதனுடைய முக்கிய சிறப்பு தன்மையாகும். இதனுடைய தரவுகளை ஒட்டுமொத்தமாக அனுகி பெறுவதற்கு பதிலாக OSD யின் தனித்தனி முனைமமாகவும் பெறமுடியும் இது சி சி++மொழியில் எழுதபட்ட திறமூல பயன்பாடாகும் இது ஒரு பொதுபயன்பாட்டு கோப்பு அமைப்பாக இருக்கின்றது. இதனை பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு http://ceph.com/என்ற இணைய பக்கத்திற்கு செல்க

5.1

5.1

பிரபலமான திறமூல லினக்ஸ் இயக்கமுறைமைகள் ஒரு அறிமுகம்

இன்று இந்தியாவில் விண்டோ எனும் தனியுடைமை இயக்கமுறைமையானது மிகஅதிகஅளவு பயன்படுத்தபடுகின்றது ஆயினும் இது கட்டணம் செலுத்தினால் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்ற நிலையில் இருப்பதால் பெரும்பாலான தனிநபர்கள் இதனை கட்டணமில்லாத புறவழிகளில் பயன்படுத்துகின்றனர் அதனால் நச்சுநிரலர்கள் இவர்களின் கணினிக்குள் மிகஎளிதாக இணையம் வாயிலாக உட்புகுந்து தரவுகளை கையாடல் செய்தல் தரவுகளை அழித்தல் என தங்களுடைய திருவிளையாடல்களை மிகசர்வசாதாரணமாக செய்கின்றனர் அதனை தவிர்த்து திறமூல இயக்கமுறைமையான லினக்ஸின் மிகபிரபலமாக விளங்கும் பொதுப்பயன்பாடுகளுக்கான பின்வரும் வெளியீடுகளில் தங்களுக்கு பொருத்தமானதை கட்டணமில்லாமல் மிகபாதுகாப்பாக பயன்படுத்திகொள்க என பரிந்துரைக்க படுகின்றது

4.1 உபுண்டு தற்போது பொதுவான திறமூல இயக்கமுறைமை பயன்பாடுகளில் லினக்ஸ் வெளியீடு என எடுத்துகொண்டால் உபுண்டு மிக முக்கிய இடம் வகிக்கின்றது இது பயனாளரின் மிகமுக்கிய நண்பனாகவும் மிகவும் பிரபலமான லினக்ஸ் இயக்கமுறைமையாகவும் உலகமுழுவதும் 20 மில்லியன் பயனாளர்களை கொண்டதாகவும் தனியாள் கணினி மட்டுமல்லாது ஸ்மார்ட் போன் ,டேப்ளெட் ஆகியவைகளில் பயன்படுத்திகொள்ளும் வண்ணம் இது விளங்குகின்றது இதனை http://www.ubuntu.com/என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க

4.1

4.1

4.2 லினக்ஸ்மின்ட் உபுண்டுவில் உள்ள ஒருசில குறைகளை சரிசெய்து வெளியிடபட்ட மிககுறுகிய காலஅளவிலேயே மிகபிரபலமாக விளங்கிடுமாறு வளர்ந்த லினக்ஸே லினக்ஸ்மின்ட் எனும் இயக்கமுறைமையாகும் புதியவர்கள் கூட மிகஎளிதாக பயன்படுத்திகொள்ளும் வகையில் இந்த லினக்ஸ்மின்ட் இயக்கமுறைமை திகழ்கின்றது இதனை http://www.linuxmint.com/என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க

4.2

4.2

4.3 ஃபெடோரா மேலேகூறிய இரு லின்க்ஸ் இயக்கமுறைமைகளும் டெபியன் எனும் குழுவில் உருவானவையாகும் இந்த ஃபெடோரா என்பது ஆர்பிஎம் எனும் குழுவில் உருவானதுஆகும் இதுவும் பொதுபயன்பாட்டிற்கான சிறந்த இயக்கமுறைமையாக விளங்குகின்றது ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் ஒருமுறை இதனுடைய புதிய பதிப்பு வெளியிடபடுகின்றது புதியவர்கள் கூட மிகஎளிதாக பயன்படுத்திகொள்ளும் வகையில் இந்த ஃபெடோரா எனும் இயக்கமுறைமை மிகஎளிமையாக இருக்கின்றது இதனை http://fedoraproject.org/என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க

4.3

4.3

4.4 ஓப்பன் சுசி இதுஒரு பொதுவான பயன்பாடுகளுக்கான லினக்ஸ் இயக்க முறைமையாகும் இதனுடைய புதிய பதிப்புகள் எட்டுமாதத்திற்கு ஒருமுறை வெளியிடபடுகின்றது. இதுவும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு லினக்ஸ் இயக்கமுறைமையாக விளங்குகின்றது.இதனை http://www.opensusi.org/என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க

4.4

4.4

4.5 பிசி லினக்ஸ்ஓஎஸ் இதுஒரு பிரபலமான தனியாள் கணினிக்கான இயக்கமுறைமையாக விளங்குகின்றது. திறமூல இயக்கமுறைமைகளில் அனைவராலும் விரும்பப்படும் முழுமையானதொரு சிறந்த இயக்கமுறைமையாகவும் நம்முடைய அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் இயக்கமுறைமையாகவும் தற்போது இது வளர்ந்துள்ளது. இதனைhttp://www.pclinuxos.com/என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க

5.1

4.5

Previous Older Entries

Follow

Get every new post delivered to your Inbox.

Join 83 other followers