வணிக நிறுவனங்களுக்கானGnuCOBOL- எனும் கட்டற்ற பயன்பாடு

COBOL எனும் மூலக் குறிமுறைவரிகளிலிருந்து சொந்த செயலாக்கங்களை இந்த குனுகோபால்(GnuCOBOL)எனும் கணினிமொழியானது உருவாக்குகின்றது. இது ஒரு சுதந்திரமான COBOLஇயந்திரமொழிமாற்றியாக திகழ்கின்றது. இது Linux, BSD,Unixes, macOS , Windows போன்றவற்றில் செயல்படுகின்ற திறன் மிக்கதாக அறியப்படுகிறது. இதனுடைய தற்போதைய வெளியீடு, GnuCOBOL3.1.2 பதிப்பாகும், இது அனைத்து பயனர்களுக்குமான ஒருசிறந்த பதிப்பாகும். இது பல்வேறு தளங்களில் விரிவாக பரிசோதிக்கப்பட்டுள்ளது வணிக அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தகுனுகோபால் ஆனது (முன்னர் OpenCOBOL) ஒரு கட்டணமற்ற கட்டற்ற, நவீன COBOL மொழிமாற்றியாகும். COBOL 85, X/Open COBOL , புதிய ISO COBOL தரநிலைகள் (2002, 2014, 2022) ஆகியவற்றின் கணிசமான பகுதியை இந்த குனுகோபால் செயல்படுத்துகிறது, அதே போன்ற மற்ற COBOL இயந்திரமொழிமாற்றிகளில் (IBM COBOL, MicroFocus ACUCOBOL-போன்ற பல)விரிவாக்கங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.குனுகோபாலானது COBOL ஐ முதலில் C மொழிக்கு மொழிபெயர்க்கிறது மேலும் ஒரு சொந்த இயந்திரமொழி மாற்றியைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட குறிமுறைவரிகளை வளாக கணினியில் தொகுக்கிறது. GNU/Linux, Unix, Mac OS X , Microsoft Windows உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இதனுடைய நிரலாக்கங்களை உருவாக்கி பயன்படுத்தி கொள்ள முடியும். குனுகோபாலானது HP/UX, z/OS, SPARC, RS6000, AS/400 ஆகியவற்றிலும் மெய்நிகர்கணினிகளின், இயக்க முறைமைகளின் மற்ற சேர்க்கைகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2001-2022 இலவச மென்பொருள் அறக்கட்டளையின் பதிப்புரிமை கொண்டுள்ளது,இதனுடைய cobc எனும்இயந்திர மொழிமாற்றியானது ஒரு கட்டணமற்ற மென்பொருளாகும்; FSF ஆல் GNU LGPL உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதால நாம் அதை மறுபகிர்வு செய்யலாம் /அல்லது மாற்றியமைத்திடலாம்; .
முக்கிய வசதிவாய்ப்புகள்

  • கிட்டத்தட்ட தடையற்ற C ஒருங்கிணைப்புடன் COBOL இன் நேர்த்தியான முழுமையான செயலாக்கம் கொண்டது
  • 9740 NIST COBOL 85 ஆகியவற்றின், 1100 க்கும் மேற்பட்ட வளாக சோதனைக் குழுக்களிலும் 2500 சோதனைகளிலும் சோதனைத் தொகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளது
    • COBOL85, X/Open COBOL, COBOL2002, COBOL2014, MicroFocus, IBM, MVS, ACUCOBOL-GT, RM/COBOL, BS2000க்கான பேச்சுவழக்கு ஆதரவு கொண்டது
    • அறிக்கைப் பிரிவு, திரைப் பிரிவு, செயலி-சுட்டி ஆகியவற்றுடன் நிறுவன அட்டவணையை ஆதரிக்கிறது
  • COBOL 2022 நேரடிமொழிமாற்றி தொகுப்பின் முழு ஆதரவு கொண்டது
    • PostgreSQL, Firebird, ODBC, DB2 ,EXEC SQL ஆகியவற்றிற்கான முன்செயலிகள் கிடைக்கின்றன
    • ASCII, EBCDIC, சிறிய endian, பெரிய endian. z/OS OMVS/USSக்காக வெளியிடப்பட்ட உருவாக்கத்தினை கொண்டது
    • பல மூல நிலை பிழைத்திருத்தங்கள் உள்ளன (GDB முன்பக்கங்கள் அல்லது நீட்டிப்புகள் முற்றிலும் தனித்தனி செயல்திட்டங்கள்)
  • GNU Autotools , GCC உடன் கட்டமைக்கப்பட்ட இயந்திரமொழிமாற்றி LLVM clang, VisualStudio அல்லது பிறவற்றிலும் வெற்றிகரமாக உருவாக்கப்படுகிறது
    • ஏறக்குறைய அனைத்து C நூலகங்களுக்கும் நேரடி அணுகல், மேலும் C++ அடிப்படையுடன் செயல்படும் திறன்மிக்கது
  • Java (AWT/SWING), GTK+ அடிப்படையிலான பல நூலகங்கள் உள்ளன
    • Ada, Guile, Lua, Rexx, Javascript, Python போன்ற பிறவற்றை ஒருங்கிணைக்கும் குறிமுறைவரிகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • CGI திறனுடன் மேசைக்கணினியில் செயல்படுகின்ற தயார்நிலையில்உள்ளது
  • இயந்திரமொழிமாற்றி இயக்க நேர செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன;

இதுபொதுமக்களின் பயன்பாட்டிற்கு (LGPLv2) (LGPLv3) ,(GPLv2) (GPLv3)ஆகிய உரிமங்களின் கீழ் கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கு https://gnucobol.sourceforge.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.