RCMD எனும் கட்டளை வரியை செயல் படுத்த உதவிடும் செயலி

RCMD என்பது விண்டோ இயக்கமுறைமை செயல்படுகின்ற கணினிகளுக்கான தொலைதூர கட்டளை வரி remote command செயலியாகும். இது கைபேசியை அல்லது மடிக்கணினியை தொலைதூர முனைமமாக மாற்றுகிறது. இதன்வாயிலாக cmd எனும் கட்டளைகளைப் பயன்படுத்தி கணினியிலிருந்து தரவுகளை அனுப்பலாம் பெறலாம். இவ்வாறு தொலைதூரத்திலிருந்து பயன்படுத்தி கொள்வதற்காகவென நூற்றுக்கணக்கான cmd கட்டளைகள் உள்ளன. ஆனால் இந்த பயன்பாடு அவ்வனைத்து கட்டளைகளையும் ஆதரிக்காது ஆயினும் அவைகளில் பெரும்பாலான கட்டளைகளை ஆதரிக்கிறது.
இதனை செயல்படுத்திட தொடங்குவதற்காக

  1. முதலில் நம்முடைய கணினியில் rcmd சேவையகத்தின் நிறுவகை பதிப்பு, கையடக்க பதிப்பு ஆகிய இரண்டு பதிப்புகளில் தேவையான ஒன்றினை. பதிவிறக்கம் செய்திடுக..
  2. பின்னர் இதனை நிறுவுகைசெய்வதற்குமுன் windows defenderஇன் செயலை நிறுத்தம் செய்திடுக அதன்பின்னர் பதிவிறக்கம் செய்த இதனுடைய சேவையாளரை நிறுவுகைசெய்து இயக்கிடுக..
  3. பிறகு பிளே ஸ்டோரில் இருந்து rcmd android பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து நிறுவுகைசெய்திடுக.
  4. பின்னர் இறுதியாக IP முகவரியைப் பயன்படுத்தி கைபேசி பயன்பாட்டை கணினி பயன்பாட்டுடன் இணைத்திடுக.
    அதனை தொடர்ந்து இந்த பயன்பாட்டினை இயக்கி பயன்பெறுக
    இந்த நிரலை நிறுவுகைசெய்ததை நீக்க விரும்பினால், முதலில், பணி மேலாளரிடமிருந்து rcmd சேவையகத்தை மூடிடுக.
    அவ்வாறு இதனுடைய சேவையகத்தை மூட விரும்பினால், அதற்குமுன்பணி மேலாளரிடமிருந்து செயல்முறைகள் முடிந்ததாவென உறுதிசெய்துகொண்டபின் மூடிடுக.
    முக்கிய வசதிவாய்ப்புகள்: பெரும்பாலான cmd கட்டளைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது நாமே செயல்படுத்தி பயன்பெறலாம். இதன் வாயிலாகcmd வெளியீட்டுத் தரவுகளைகூடதிரையில் காண்பிக்க முடியும். இதன்வாயிலாக செயல்படுத்தப்படும் எந்தவொரு கட்டளையின் செயல்களும் முடிவடையும் வரை காத்திருக்க தேவையில்லை, தேவையெனில் மற்ற கட்டளைகளை இயக்கி பயன்பெறலாம். முன்பு உள்ளிடப்பட்ட கட்டளைகளை எளிதாக மீட்டெடுக்க முடியும். ஆனால் பயன்பாட்டை மூடிய பிறகு அனைத்து கட்டளைகளும் மறைந்துவிடும். ஏனெனில் தரவுத்தள இணைப்பு இல்லை.வளாக அல்லது இணைய தரவுத்தள இணைப்பு இல்லை. எனவே, இது பாதுகாப்பானது.
    மேலும் விவரங்களுக்கும் இதனுடைய சேவையை பயன்படுத்தி கொள்ளவும் https://sourceforge.net/projects/rcmd/ எனும் இதனுடைய இணையதளமமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.