Pythonஇற்கான இணைய வாடிக்கையாளரான httpxஐ எவ்வாறு பயன்படுத்துவது

httpx package எனும் httpxஇன் தொகுப்பானது Pythonஇற்கான HTTP உடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு சிறந்த, நெகிழ்வான தகவமைவாகும்.இந்த httpx தொகுப் பானது பைதானிற்கான ஒரு அதிநவீன இணைய வாடிக்கையாளருமாகும். கணினி யில் அதை நிறுவியவுடன், வலைத் தளங்களிலிருந்து தரவைப் பெற அதைப் பயன்படுத்தலாம். வழக்கம் போல், அதை pip எனும் பயன்பாட்டு நிரலுடன் நிறுவ எளிதான வழியாகும் அதற்கான கட்டளைவரி பின்வருமாறு:
$python-mpipinstallhttpx–user
இதைப் பயன்படுத்த, இதை ஒரு பைதான் உரைநிரலில் பதிவிறக்கம் செய்த பின்னர் இணைய முகவரியிலிருந்து தரவைப் பெற, get எனும் செயலியை(function) பயன்படுத்திடுக அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
importhttpx
result=httpx.get(“https://httpbin.org/get?hello=world”)
result.json()[“args”]
இந்த எளிய உரைநிரலின் வெளியீடு பின்வருமாறு இருக்கும்:
{‘hello’:’world’}
இது HTTP இன் பதிலியாகும்
இயல்பாக, httpx 200 அல்லாத நிலையில் பிழைகளை எழுப்பாது.
தொடர்ந்து பின்வருகின்ற குறிமுறைவரிகளை முயற்சித்திடுக:
result=httpx.get(“https://httpbin.org/status/404”)
result
இதன் விளைவு பின்வருமாறு இருக்கும்:

வெளிப்படையாக ஒரு பதிலை எழுப்ப முடியும்.அதற்கான விதிவிலக்குகளை கையாளுபவரைச் சேர்த்திடுக அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
try:
result.raise_for_status()
exceptExceptionasexc:
print(“woops”,exc)
இதன் விளைவு பின்வருமாறு இருக்கும்:
woops Client error’404 NOT FOUND’forurl’https://httpbin.org/status/404′
Formoreinformation check: https://httpstatuses.com/404
வழக்கமான வாடிக்கையாளர்
எளிமையான உரைநிரலைத் தவிர வேறு எதற்கும் தனிப்பயன் வாடிக்கையாளரைப் பயன்படுத்துவது பயனுள்ளதாகும். ஒன்றாக சேர்த்துஇணைத்தல் போன்ற நல்ல செயல்திறன் மேம்பாடுகளைத் தவிர, வாடிக்கையாளரை உள்ளமைக்க இது ஒரு நல்ல இடமாகும்.பின்வரும் எடுத்துக்காட்டு குறிமுறைவரிகளில் குறிப்பிட்டவாறு, தனிப்பயன் அடிப்படை URL ஐ அமைக்கலாம்:
client=httpx.Client(base_url=”https://httpbin.org”)
result=client.get(“/get?source=custom-client”)
result.json()[“args”]
இதனுடைய மாதிரி வெளியீடு பின்வருமாறு இருக்கும்:
{‘source’: ‘Custom-client’}
ஒரு குறிப்பிட்ட சேவையகத்துடன் விவாதிப்பதற்கு வாடிக்கையாளரைப் பயன்படுத்தும் வழக்கமான சூழ்நிலைக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, bothbase_urlandauth ஐப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பின்வருமாறான குறிமுறைவரிகளின் வாயிலாக ஒரு நல்ல சுருக்கமான விவரங்களை உருவாக்கலாம்:
client=httpx.Client(
base_url=”https://httpbin.org”,
auth=(“good_person”,”secret_password”),
)
result=client.get(“/basic-auth/good_person/secret_password”)
result.json()
இதனுடைய வெளியீடு பின்வருமாறு இருக்கும்:
{‘authenticated’: True, ‘user’: ‘ good_person’}
இதைப் பயன்படுத்தக்கூடிய நல்ல செய்திகளில் ஒன்று, வாடிக்கையாளரை உயர்மட்ட “main” எனும் செயலியில் உருவாக்கியபின்னர் அதைச் சுற்றிலும் அனுப்புவதாகும். இது மற்ற செயலிகளை வாடிக்கையாளரைப் பயன்படுத்த அனுமதிக்கிறது மேலும் வளாக WSGI எனும்பயன்பாட்டிற்கு இணைக்கப்பட்ட வாடிக்கைளர் unit-சோதனை பெற அனுமதிக்கிறது. அதற்கான குறிமுறைவரிகள் பின்வருமாறு:
defget_user_name(client):
result=client.get(“/basic-auth/good_person/secret_password”)
returnresult.json()[“user”]
get_user_name(client)
‘good_person’
defapplication(environ,start_response):
start_response(‘200 OK’,[(‘Content-Type’,’application/json’)])
return[b'{“user”: “pretty_good_person”}’]
fake_client=httpx.Client(app=application,base_url=”https://fake-server”)
get_user_name(fake_client)
இதனுடைய வெளியீடு பின்வருமாறு இருக்கும்:
‘pretty_good_person’
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் python-httpx.org எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.