கொள்கலன்கணினிகள் , மெய்நிகர் கணினிகள் (VMs): என்ன வேறுபாடு & எப்போது எதைப் பயன்படுத்த வேண்டும்

கொள்கலன்கணினிகளும்(Containers) மெய்நிகர்கணினிகளும் (VMs) இன்று நமக்குத் தெரிந்த விவரங்களின்படி மேககணினி தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு ஊக்கமளித்து வருகின்றன என்பதுதான் . தற்போது மேககணினி தொழில் நுட்பத்தை மேம்படுத்துவது பெருநிறுவனங்களுக்கு இன்றியமையாததாக உள்ளது, மேலும் மேககணினிக்கு வெற்றிகரமாக இடம்பெயர்வதற்கும் செயல்படுவதற்கும் ஒரு முக்கியமான காரணியாக திகழும் கொள்கலன் கணினிகள்(Containers) மெய்நிகர்கணினிகள் (VMs) ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதுதான் சிறந்த தீர்வாகும். இந்த புதிய மெய்நிகராக்க தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புடன், நிறுவனங்கள் தங்களுடைய பயன்பாடுகளை வரிசைபடுத்திடவும்(deploy) பராமரிக்கவும் பல்வேறு வழிகள் உள்ளன. இப்போது நாம் கொள்கலன்கணினிகளை .மெய்நிகர் கணினிகளுடன் ஒப்பிட்டு, ஒவ்வொன்றின் வரலாற்றையும் ஆராய்ந்து, அவைகளின் நன்மை தீமைகளை எடைபோடுவோம்.
மெய்நிகர் கணினிகள் (VMs) என்றால் என்ன?
மெய்நிகர் கணினிகள் (VMs) என்பவை கணினி வன்பொருட்களின் சுருக்கமான தொகுப்பாகும், இது ஒரு இயக்க முறைமை அதன் வன்பொருளை ஒன்று அல்லது ஒன்றிற்குமேற்பட்ட கிளைக்கணினி இயக்க முறைமைகளால் பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த கிளைக்கணினி இயக்க முறைமைகளுக்கான வன்பொருளைப் பின்பற்றுவதற்குப் பொறுப்பான மென்பொருள் மீகண்காணிப்பாளர்( hypervisor) என்று அழைக்கப்படுகிறது. ஒரு மீகண்காணிப் பாளர் ஆனவர் இந்த மெய்நிகர் கணினிகளை புரவலர் கணினி ,அதன் சொந்த இயக்க முறைமையின் ஆதாரங்களில் (CPU, நினைவகம், வட்டு போன்றவை) பங்களிப்பதன் மூலம் நிர்வகிக்கிறது. ஒவ்வொரு மெய்நிகர் கணினியும் தனித்தனியான வன்பொருட்களையும் , இதரவளங்களையும் கொண்ட ஒரு தனிப்பட்ட கணினி போன்று செயல்படுகிறது. இதன் பொருள், ஒரு பயன்பாடு அதன் ஆதாரங்களை மற்ற பயன்பாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு பொறுப்பாகாது, அது கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங் களையும் பயன்படுத்தி கொள்ளலாம், ஏனெனில் மீகண்காணிப்பாளர் ஒவ்வொரு மெய்நிகர் கணினிக்கும்(VM) அதே சேவையாளரில் உள்ள மற்ற மெய்நிகர்கணினிகளில் (VMs) இருந்து தனித்தனியாக இருக்கும் சொந்த மெய்நிகர் வன்பொருளை வழங்குகிறது.
மெய்நிகர் கணினிகள்(VMs) வளங்களின் பாதிப்பின் எதிர்மறையான தாக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன, ஏனெனில் அவை இயக்க முறைமைகளைப் பகிரவில்லை அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட சொந்த ஆதாரங்களைக் கொண்டுள்ளன. மெய்நிகர்கணினிகள்(VMs) ஆனவை ஒரு தொட்டுணரக்கூடிய தனித்தனியான கணினியை வெவ்வேறு மெய்நிகர் கணினிகளாகப் பிரிக்கும் திறன், பயன்பாட்டுத் தனிமைப்படுத்தலைப் பராமரிக்கும் போது கணினியின் செயல்கள் வன்பொருளை மிகவும் திறமையாகப் பயன்படுத்த உதவுகிறது.
வரைச்சட்டத்தில் அல்லது மேககணினியில் மெய்நிகர்கணினிகளை(VMs)இயக்க நம்மை அனுமதிக்கின்ற பல வழங்குநர்கள் உள்ளனர். இந்த மெய்நிகர் கணினி(VM) வழங்குநர்களின் சிறிய மாதிரிகள் பின்வருமாறு:
• VirtualBox ( on-prem , திறமூலம்)
• VMWare (open-prem அல்லது மேககணினி)
• AWS EC2 அல்லது Lightsail (மேககணினி)
• Azure VMs (மேககணினி)
கொள்கலன்கணினி(Container) என்றால் என்ன?
இன்று, நிரலாளர்கள் கொள்கலன்கணினிகளைப் பற்றி பேசும்போது, பொதுவாக லினக்ஸ் கொள்கலன்கணினிகளை பற்றியே குறிப்பிடுகிறார்கள். லினக்ஸ் கொள்கலன்கணினிகளானவை cgroups எனும் கட்டுப்பாட்டு குழுக்களை உள்ளடக்கியவைகளாகும், இதுலிக்ஸின் உருவாக்கமையத்தை CPU, நினைவகம் , வலைபின்னல் I/O போன்ற தொட்டுணரக்கூடிய வளங்களை செயல் முறைகளின் குழுவிற்கு வரம்பிடவும் தனிமைப்படுத்தவும் அனுமதிக்கிறது. இதனுடைய ஒரு மீகண்காணிப்பாளர் ஆனவர் ஒரு மெய்நிகர் கணினியின் கிளைக்கணினி இயக்க முறைமைக்கான ஆதாரங்களை உருவாக்குகின்ற வழிமுறையைப் போன்றது, ஆனால் Linuxஇன்cgroups மூலம் ஒரு மீகண்காணிப் பாளரைப் பொருட்படுத்தாமல் Linux இயக்க முறைமைக்குள் நேரடியாக வளங்களைப் பிரிக்க முடியும். கொள்கலண்கணினிகள் மூலம், பயன்பாடுகளை கிளைக்கணினி இயக்க முறைமை முழுவதையும் பின்பற்றாமல் அவற்றின் சொந்த ஆதாரங்களுடன் இயக்குகின்றோம்.
கொள்கலன்கணிகள் மெய்நிகர்கணினிகள் ஆகிய இரண்டும் பல பயன்பாடுகளை இயக்குவதை எளிதாக்குகின்றன. கொள்கலன்கணினிகள் ஒரு கொள்கலன் கணினியின் மூலம் புரவலர் இயக்க முறைமையில் நேரடியாக இயங்குகின்றன, மேலும் ஒவ்வொரு கொள்கலன் கணினியும் அதன் சொந்த பயன்பாட்டுக் கோப்புகள், எண்ணிமங்களையும் நூலகங்களையும் கொண்டிருக்கின்றன. கொள்கலன்கணினிகளை சில நொடிகளில் இயக்கி அதனைசெயல்படுத்திடத்தொடங்கலாம் அளவிடலாம், ஏனெனில் அவற்றின் சொந்த இயக்க முறைமை இதற்கு முழுமையாகத் தேவையில்லை. மேககணினியில் கொள்கலன்கணினி மெய்நிகர்கணினி ஆகிய இரண்டின் செலவினையும் கருத்தில் கொள்ளும்போது, மெய்நிகர்கணினிகளின்மீது கொள்கலண்கணினிகளை இயக்கும் செலவு குறைவாகவும் மெய்நிகர் கணினிகளை மட்டும் தனியாக இயக்குவதற்கு ஆகும் செலவு மிக அதிகமாகவும் இருப்பதை காணலாம் உண்மையில் இவ்வாறு இவைகளை செயல்படுத்தி பயன்படுத்தி கொள்வதற்கான செலவினை ஒப்பிட்டு அறிந்துகொள்வது மிகஅவசியமாகும். பல மேககணினி வழங்குநர்கள் பயனாளர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட சேவையகங்களை வழங்க மெய்நிகர்கணினி தொழில்நுட்பத்தையேச் சார்ந்துள்ளனர், எனவே மேககணினியில் கொள்கலன் கணிகளை இயக்கினால், நமக்காக வழங்கப்பட்ட மெய்நிகர்கணினி களின் மீது கொள்கலன்கணினிகளை இயக்கலாம். மேககணினி,செலவைக் குறைப்பதற்கான முக்கியகாரணி வரிசைபடுத்துதலின் (deployment) அளவினை மேம்படுத்துவதன் மூலம் கொள்கலன்கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது பயன்பாடுகளை மிகவும் இலகுவாகவும் கையடக்கமாகவும் மாற்றுகிறது, எனவே பல்வேறு பயன்பாடுகளை செயல்படுத்தி கொள்வதற்காகவென அதிக செலவில்பல்வேறு மெய்நிகர் கணினிகளைப் செயல்படுத்தி பயன்படுத்துவதை விட ஒரேயொரு மெய்நிகர்கணினியின்மீது இந்த கொள்கலன்கணினியை பயன்படுத்தி பல்வேறு பயன்பாடுகளை குறைந்து செலவில் இயக்கி பயன்பெற முடியும்.
மெய்நிகர் கணினிகளை போன்றே, பல்வேறு வழங்குநர்களும் கொள்கலன் கணினிகளை இயக்கக்கூடிய பல்வேறு வழிமுறைகளும் உள்ளன. கொள்கலன்கணினிகள், கொள்கலன்கணினிகளின் வகைகள் ஆகியவற்றை வரைச்சட்டத்தில் உருவாக்குகின்றோமா அல்லது மேககணினியில் உருவாக்குகின்றோமா ஆகியன கொள்கலன்கணினி வழங்குனருக்கான நம்முடைய முடிவைப் பாதிக்கின்ற காரணிகளாகும், ஆனால் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
• லினக்ஸ் கொள்கலன்கணினிகள்
• இணைபபாளர்(Docker)கொள்கலன்கணினிகள்
• விண்டோ சேவையாளர் கொள்கலன்கணினிகள்
கொள்கலன்கணினி மெய்நிகர்கணினி ஆகியவற்றின்: நன்மை தீமைகள்
கொள்கலன்கணினிகள்
கொள்கலன்கணினிகள் மீகண்காணிப்பாளரால் நிர்வகிக்கப்படும் கிளைக்கணினி இயக்கமுறையில் இயங்குவதற்குப் பதிலாக, கொள்கலன் கணினியில் நேரடியாக இயங்கும் நன்மையைக் கொண்டுள்ளது. இது அவற்றை கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய இலகுரகமானதாகவும், எளிதில் அளவிடக்கூடிய தாகவும் ஆக்குகிறது. இந்த பண்புக்கூறுகள் மீச்சிறு சேவைகள் மேககணினி பயன்பாடுகளுக்கு கொள்கலன்கணினிகளை சரியானதாக்குகின்றன, அவை விரைவாக அல்லது பல சூழல்களில் அளவிட வேண்டும். எவ்வாறாயினும், மெய்நிகர்கணினியின் மீகண்காணிப்பாளர் கொள்கலன்கணினியை ஒப்பிடும் போது கொள்கலன்கணினிகளுக்கு ஒரு குறைபாட்டைக் காண்பிக்கிறது. கொள்கலண்கணினிகள் பகிரப்பட்ட உருவாக்கமையத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதால், ஒவ்வொரு கொள்கலன்கணினிக்கும் ஒரு மெய்நிகர் கணினிப் போன்ற தனித்தனியான தொட்டுணரக்கூடிய வளங்கள் இல்லாததால், கொள்கலன் கணினிகளுடன் தனிமைப்படுத்தப்படுவது குறைவு. பயன் பாடுகளை இதற்கு முன் பயன்படுத்தாமல் இருந்தால் அல்லது ஏற்கனவே உள்ள ஒற்றைப் பயன்பாட்டை நகர்த்துவதற்கான வழியைத் தேடுகின்றோ மெனில், அவற்றைக் கொள்கலன்கணினியாக செய்வது கடினமாக இருக்கும்.
மெய்நிகர்கணினிகள் (VMs)
மெய்நிகர்கணினிகள் (VMs) ஒரு முழு இயக்க முறைமையின் உள்ளே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஒற்றைப் பயன்பாட்டை எளிதாக்குகிறது. தன்னமைவிற்குப் பிறகு, மெய்நிகர்கணினிகள்ஒப்பீட்டளவில் பெரியதாகவும் மெதுவாகத் தொடங்குவதற்கும் காரணமாக, கொள்கலன் கணினிகளைக் காட்டிலும் குறைவான செயல்திறன் குறைவான அளவிடக்கூடியதாக இருக்கின்றன. மேலும், மெய்நிகர்கணினிகள் ஒரு மீகண்காணிப்பாளரால் நிர்வகிக்கப்பட வேண்டும், இது மெய்நிகர்கணினிகளை நிர்வகிக்க அதிக அளவிலான கணினி வளங்களைப் பயன்படுத்திகொள்கிறது. மேகக்கணியில் பயன்பாடுகளை இயக்கும்போது, மேககணினிவழங்குநரின் மீகண்காணிப்பாளரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம், இது சேவையகமாகப் பயன்படுத்த மெய்நிகர்கணினியை உருவாக்குகிறது. மெய்நிகர்கணினிகளை வழங்குவதற்கு இந்த சேவையாளரில் நம்முடைய சொந்த மீகண்காணிப்பாளரை இயக்கு கின்றோமெனில்,நாம் ஒரு கொள்கலன்கணினியை மட்டுமே பயன்படுத்தினால், நம்முடைய பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய கூடுதல் ஆதாரங்களை நாம் எடுத்துக் கொள்வோம்.
இணைப்பாளர்(Docker) மெய்நிகர்கணினி (VM) ஒப்பீடு
கொள்கலன்கணினிகளை உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் இணைப்பாளர்(Docker) ஆனது மிகவும் பிரபலமான வழிமுறையாகும், ஆனால் இந்த இணைப்பாளரை(Docker) பயன்படுத்திகொள்வதற்காக தொடங்கப்பட்ட ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் Linux இல் கொள்கலன்கணினிகளை இயக்குவதற்கான பிற பிரபலமான தீர்வுகளை containerd, CRI-O , Podman போன்றவை இருந்து வந்தன. இணைப்பாளரை(Docker) மெய்நிகர் கணினிகளுடன் ஒப்பிடுவது என்பது உண்மையில் எப்போதும் நாம் உண்ணும் ஆப்பிள் பழத்தை மற்ற ஆப்பிள் பழங்களுடன் ஒப்பிடுவதில்லை என்பது போன்றதாகும், ஏனெனில் இணைப்பாளர்(Docker) ஆனது ஒரு கொள்கலன் கணினியின் கருவியாகும். நாம் கற்றுக்கொண்டது போன்று, மேககணினியின் கொள்கலன்கணினிகளானவை மெய்நிகர்கணினிகளின் களின் மேல் இயங்க கூடியவை, எனவே கொள்கலன்கணினிகளானவை மெய்நிகர்கணினிகளுக்குப் பதிலாக இணைப்பாளரைப்(Docker) பயன்படுத்திகொள்ளலாம்.
கொள்கலன்கணினிகளுக்கு பதிலாக மெய்நிகர்கணினிகளை எப்போது பயன்படுத்த வேண்டும்
கொள்கலன்கணினிஅல்லது மெய்நிகர்கணினி எது நமக்கு சரியானது பொருத்தமானது எனஒப்பிடும்போது, உண்மையில் கொள்கலன்கணினிகள் மெய்நிகர் கணினிளுக்கு எதிரானது அன்று , . பொது மேககணினியின் சூழல்கள் ஒரு பயன்பாட்டிற்கு முழு சேவையகங்களையும் அரிதாகவே அர்ப்பணிப்பதால், நம்முடைய பயன்பாடுகளை இயக்க மீகண்காணிப்பாளரை நாம் எப்போதும் பயன்படுத்திக் கொள்கின்றோம் நாம் அதை உணராவிட்டாலும் கூட. நம்முடைய பயன்பாடுகளை மேகக்கணியில் இயக்கும்போது, கொள்கலன் கணினிகள், மெய்நிகர்கணினிகளைப் பயன்படுத்துவதையோ அல்லது மெய்நிகர்கணினிகளை மட்டும் பயன்படுத்துவதையோ நாம் தீர்மானிக்கின்றோம்.
கொள்கலன்கணினிகள்
கொள்கலன்கணினிகள் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளன மேலும் மெய்நிகர்கணினிளை விட சிறந்த வளங்களின் பயன்பாட்டை அனுமதிக்கின்றன, மேலும் கொள்கலன்கணினிகளையும் மெய்நிகர்கணினிளையும் ஒன்றாகப் பயன்படுத்துவது நம்முடையபயன்பாடுகளை இயக்க ஒரு சக்திவாய்ந்த வழியாகும். பெயர்வுத்திறன், அளவிடுதல் பராமரிப்பில் கவனம் செலுத்தும் புதிய பயன்பாட்டை உருவாக்கினால், கொள்கலன் கணினியின் இயந்திரத்துடன் இயங்கும் கொள்கலன்கணினியாக செய்யப்பட்ட பயன்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேககணினியின் சொந்த பயன்பைடுகள், தனித்தனி கூறுகளாகப் பிரிக்கப்பட்ட பயன்பாடுகள் அதிக அளவிடுதல் பெயர்வுத்திறன் தேவைப்படும் பயன்பாடுகள் கொள்கலன்கணினிகளுக்கான சிறந்த பயன்பாட்டு நிகழ்வுகளாகும்.
மெய்நிகர் கணினிகள் (VMs)
மறுபுறம், நம்மிடம் ஏற்கனவே உள்ள தனிக்கணிமஅடுக்கு பயன்பாடு இருந்தால், அதை மறுகட்டமைப்பு செய்வதற்காகத் திட்டமிடவில்லை அல்லது நம்முடைய பயன்பாடு ஒரு கணினியில் நேரடியாக இயங்குவது போல் ஒரு இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், நாம் மெய்நிகர்கணினிகளைப் பரிசீலிக்க வேண்டும். நம்முடைய பயன்பாட்டிற்கான நேரடி ஆதார தனிமைப்படுத்தல் மிக முக்கியமான இயக்க நேர அம்சமாக இருந்தால், மெய்நிகர்கணினிகள் கொள்கலன்கணினிகளைப் போல இலகுவாக இல்லாவிட்டாலும், நம்முடைய தேவைகளை மெய்நிகர்கணினிகள் சிறப்பாகப் பூர்த்தி செய்யலாம்.. நாம் இயக்க வேண்டிய பயன்பாடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, நம்முடைய பயன்பாடுகளுக்கு கொள்கலன்கணினியாக்கம் செய்ய முடியாத மெய்நிகர்கணினிகளைப் பயன்படுத்துவதும், கொள்கலன்கணினிகள் மெய்நிர்கணினிகளை ஒன்றாகப் பயன்படுத்தி, நம்மால் முடிந்தவரை கொள்கலன்கணினிகளின் நன்மைகளைப் பெறுவதும் நம்முடையவிருப்பமாகும்.
மெய்நிகர்கணினிகள் கொள்கலன்கணினிகளுக்கு முந்தியிருக்கலாம், ஆனால் அவை எந்த வகையிலும் காலாவதியானவை அல்ல. குறிப்பாக இன்று மேககணினி தொழில்நுட்ப உலகில், கொள்கலன்கணினிகளை இயக்க நாம் பயன்படுத்தும் பெரும்பாலான உள்கட்டமைப்புகள் முதலில் இருக்கும் மெய்நிகர்கணினிளைப் பொறுத்தது. இந்த இரண்டு சக்திவாய்ந்த தொழில் நுட்பங்கள் மூலம்,நமக்கான சிறந்த தீர்வு நம்முடைய பயன்பாட்டுத் தேவைகளைப் பொறுத்தது ஆகும். வேறு சொற்களில் கூறுவதெனில், கொள்கலன் கணினிகள் வழங்கும் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா அல்லது நம்முடைய பயன்பாட்டிற்கு முழு மெய்நிகர்கணினியைப் பயன்படுத்த வேண்டுமா? என்பதை நம்முடைய தேவையை பொருத்து ஏதாவெதொன்றினை பயன்படுத்தி கொள்க அதாவது அதிகதிறன்வேண்டிய தனியானதொருபணிஎனில் மெய்நிகர் கணினியைமட்டும் அல்லது ஒன்றிற்குமேற்பட்ட அதிகதிறன்வேண்டிய பணிஎனில் மெய்நிகர்கணினியின்மீது கொள்கலன்கணினையையும் பயன்படுத்தி கொள்க வென பரிந்துரைக்கப் படுகின்றது

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.