IUP-எனும் கருவிகளின்தொகுப்பு

IUP என்பது வரைகலை பயனாளர் இடைமுகங்களை உருவாக்குவதற்கான பல்வேறு-தளங்களின் செயல்படுகின்ற கருவிகளின்தொகுப்பாகும். இது C, Lua , LED ஆகியமூன்று அடிப்படை கணினி மொழிகளில் API களை வழங்குகிறது:. உரையாடல்களை உருவாக்குவதற்கும் கையாளுவதற்கும் என இதனுடைய நூலகத்தில் சுமார் 100 செயலிகள் உள்ளன. எந்தவொரு நிரலையும் சிறிதும் மாற்றமின்றி வெவ்வேறு அமைப்புகளில் இயங்க அனுமதிப்பதே இந்தIUP யின் முக்கிய நோக்கமாகும் .இந்த கருவித்தொகுப்பானதுபயன்பாட்டு பெயர்வுத் திறனை வழங்குகிறது. ஆகியவை GTK+, Motif , Windows. IUP TEX உரை பதிப்பாளரிலிருந்து பெட்டிகள்,இந்த கருவிகளின் தொகுப்பால் ஆதரிக்கப்படும் அமைப்புகளாகும் ஒட்டுதல் முன்னு தாரணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுருக்க அமைவு மாதிரியைப் பயன்படுத்திகொள்கிறது. இந்த மாதிரி, உரையாடல்-விவரக்குறிப்பு (LED) அல்லது (IupLua) உடன் இணைந்து உரையாடல் உருவாக்கும் பணியை நெகிழ்வான தாகவும் வரைகலை அமைப்பின் தீர்மானத்திலிருந்து சுதந்திரமானதாகவும் ஆக்குகிறது. தற்போது கிடைக்கின்ற இதனுடைய இடைமுகக் கூறுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
பழமையானவை (பயனுள்ள பயனாளர் தொடர்பு): உரையாடல், label, பொத்தான், உரை, பல வரிகள், பட்டியல், மாற்று, canvas, சட்டகம், உருவப்படம்.
கலவையாக்குதல் (உறுப்புகளை காண்பிப்பதற்கான வழிகள்): hbox, vbox, zbox, நிரப்புதல்.
குழுவாக்குதல் (உறுப்புகளின் குழுவிற்கான பொதுவான செயல்பாட்டின் வரையறை): வானொலி.
பட்டியல் (பட்டியல்களின் பட்டிகள் மேல்மீட்பு பட்டியல்களுடன் தொடர்புடையது): பட்டியல், துனைப்பட்டியல், உருப்படி, பிரிப்பான்.
கூடுதல்இணைப்புகள் (முக்கிய நூலகத்திற்கு வெளியே கட்டப்பட்ட கூறுகள்): dial, gauge, matrix, tabs, valuator, OpenGL canvas, வண்ண தேர்வு, வண்ண உலாவி.
உரையாடல்கள் (பயனுள்ள முன் வரையறுக்கப்பட்ட உரையாடல்கள்): கோப்பு தேர்வு, செய்தி, அலாரம், தரவு உள்ளீடு, பட்டியல் தேர்வு.
எனவே கிடைக்கக்கூடிய மற்ற இடைமுக கருவித்தொகுப்புகளை விட IUP சில நன்மைகளைக் கொண்டுள்ளது:
பயன்படுத்த எளிமையானது: குறைந்த எண்ணிக்கையிலான செயலிகளும் அதன் பண்பு பொறிமுறையின் காரணமாக, ஒரு புதிய பயனாளருக்கான கற்றல் திறன் பெரும்பாலும் விரைவாக இருக்கின்றது.
பெயர்வுத்திறன்: ஒவ்வொரு தளத்திலும் ஒரே செயலிகள் செயல்படுத்தப் படுகின்றன, இதனால் இடைமுக அமைப்பின் பெயர்வுத்திறனை உறுதி செய்கிறது.
தனிப்பட்ட நெகிழ்வுத்தன்மை: அதன் சுருக்க தளவமைப்பு வழிமுறை உரையாடல் உருவாக்கத்திற்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. விரிவாக்கத்தன்மை: நிரலாளர்கள்தம்முடைய தேவைக்கேற்ப புதிய இடைமுகக் கூறுகளை உருவாக்க முடியும்.
இந்த IUPஆனது கட்டணமற்ற பயன்பாட்டு மென்பொருளாகும், பொதுவான பயன்பாடுகளுக்கும் வணிக பயன்பாடுகளுக்கும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
இது MIT License ,எனும் அனுமதியின் அடிப்படையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது .மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://sourceforge.net/projects/iup/ எனும் இணையதள முகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.