SkyTube எனும் ஆண்ட்ராய்டுக்கான ஒரு கட்டற்ற கட்டணமற்றபயன்பாடு

SkyTubeஎன்பது ஆண்ட்ராய்டுக்கான கட்டற்றகட்டணமற்ற Yotube ஐ வசதியாக கண்டுகளிப்பதற்கான ஒரு பயன்பாடாகும். இந்த பயன்பாடானது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையால் குனு தனிநிலையற்ற பொதுமக்களுக்கான உரிமத்தின்(GNUGPL3) விதிமுறைகளின் கீழ் வெளியிடபெற்றுள்ளது நாம் அதை மறுபகிர்வு செய்யலாம் /அல்லது மாற்றியமைத்திடலாம் .
இதை பயன்படுத்தி கொள்வதற்காகவென நமக்கு Google/YouTube கணக்கு எதுவும் இல்லாமலேயே YouTubeஐ வசதியாகப் பயன்படுத்த இது நம்மை அனுமதிக்கிறது, எனவே இந்த பயன்பாடானது YouTubeவசதியாக கண்டுகளிப்பதற்கான அணுகலை மட்டுமே வழங்குகிறது.
கானொளிகளை தடுத்தல்
இதன்வாயிலாக தேவையற்ற கானொளிகளை இப்போது தடுக்கலாம்! கானொளி அலைவரிசைகளை கருப்பு பட்டியல்/வெள்ளைபட்டியல் என்பதன்மூலம் வகைபடுத்தி வடிகட்டலாம் நமக்குத்தேவையான மொழியைமட்டும் வடிகட்டிடலாம், குறைவாகப் பார்க்கப்பட்ட/அதிக விரும்பாத கானொளியைத் தடுத்திடலாம் ஆகிய வசதிகளை இது ஆதரிக்கிறது.
புதுமையான வடிவமைப்பு
மிகவும் பிரபலமான கானொளிகள், கானொளியையும் சிறுபடத்தையும் பதிவிறக்குதல், கானொளி மறுபதிவேற்றம் செய்தல், சிறுபடத்தில் கானொளி மதிப்பீடுசெய்தல்என்பன போன்ற பல்வேறு புதுமையான வசதிகளைக் கொண்டுள்ளது!
விளம்பரங்கள் இல்லை
இதில் இப்போது YouTube விளம்பரங்கள் என்பது கடந்த காலத்தின் ஒரு செய்தியாகிவிட்டது.
இது GAPPS/Google Apps (அதாவது YouTube அதிகாரப்பூர்வ பயன்பாடு) சார்ந்தது அன்று.

மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://skytube-app.com/ எனும் இணையதள முகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.