குறிமுறைவரிகளில்லாத (No-Code) தொழில்நுட்பம் என்றால் என்ன?

தற்போதைய நவீன கணினிதொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட இவ்வுலகில், “பாரம்பரிய” மென்பொருள் மேம்பாட்டிற்கு, தருக்கம், இடைமுகம் , பயன்பாட்டின் பிற பகுதி ஆகியவற்றை உருவாக்க மேம்படுத்துநர்கள் மில்லியான் கணக்கான குறிமுறைவரிகளை எழுத வேண்டியிருக்கும் போது அதற்குபதிலாக, குறைந்த-குறிமுறைவரிகள் (Low-Code) அல்லது குறிமுறைவரிகளேஇல்லாத (No-Code) புதியவழிமுறையானது ஒரு வரைகலை பயனாளர் இடைமுகத்தை (GUI) ஐப் பயன்படுத்துகிறது . இதற்காக பல்வேறு குறைந்த-குறிமுறைவரிகள் (Low-Code) -குறிமுறைவரிகளில்லாத (No-Code) கருவிகளும்,தளங்களும் நாம் பயன்படுத்தி கொள்வதற்காக தயாராக உள்ளன WordPress ,Budibase, Open Standard Business Platform(OSBP) போன்றவை இதற்கான அதிலும் திறமூல தளங்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
இந்நிலையில் குறிமுறைவரிகளில்லாத (No-Code) தொழில்நுட்பம்என்றால் என்ன என்ற கேள்வி எழும் நிற்க
“ஒரு குறிமுறைவரிகளில்லாத(No-Code) மேம்படுத்திடும் தளமானது, நிரலாளர்கள், நிரலாளர்கள் அல்லாதவர்கள், பாரம்பரிய கணினி நிரலாக்கத்திற்கு பதிலாக வரைகலை பயனாளர் இடைமுகங்களின்(GUI) உள்ளமைவு மூலம் பயன்பாட்டு மென்பொருளை உருவாக்க நம்மை அனுமதிக்கிறது.” ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி இவ்வாறான பல்வேறு பயன்பாடுகள் உருவாக்கப் பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடபட்டுகொண்டிக்கின்றன. “
அவர்கள் அதை எவ்வாறு உருவாக்கு கின்றார்கள்?”
பல மேம்படுத்துநர்கள் ஒவ்வொரு நாளும் முடிவில்லாத குறிமுறைவரிகளை எழுதுகின்ற ஒரு வளர்ந்துவரும் மென்பொருள்நிறுவனங்களின் செயல்களை காட்சிப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், அது உண்மையாக கூடஇருக்கலாம், ஆனால் இந்த புதிய கருவிகளையும் தளங்களையும் கொண்டு புதிய பயன்பாட்டினை உருவாக்கி மேம்படுத்திடுவதற்காகவென எவரும் நிரலாக்க அறிவினை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான்.
இணைய அடிப்படையிலான அல்லது கைபேசி பயன்பாடுகள் , கணினியின் பயன்பாடுகளை, குறிமுறைவரிகளில்லாத(No-Code) கருவிகளைப் பயன்படுத்தி நாமே உருவாக்கலாம்.
குறிமுறைவரிகளில்லாத கருவிகள் பிரபலமாவதற்கான அடிப்படை காரணம் என்னவென்றால்,கணினியில் நமக்குத்தேவையான எந்தவொரு புதிய பயன் பாட்டினையும் நாமே உருவாக்குவதற்காகவென பல குறிமுறைவரிகளை, எழுத்துக்களை ,எண்களைக் கொண்ட கறுப்பு வெள்ளைத் திரையை நாம் வெறித்துப் பார்க்க வேண்டியதில்லை. அதாவது குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் அடிப்படை கருத்தமைவு என்னவென்றால்,நாம் நம்முடைய பயன்பாட்டை வரைகலை இடைமுக சூழலில் (GUI)உருவாக்கிகொள்ளலாம் என்பதேயாகும். நம்முடைய பயன்பாட்டினை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்காக, இதில் இழுத்துசென்று விடுதல்(drag and drop) எனும் ஒரு எளிய வழிமுறையேப் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. “பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளின் எதிர்காலம் குறிமுறைவரிகளே இல்லாததாகும்.” என GitHub இன் CEO கூட ஒருமுறை கூறினார்:
எனவே, குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் மூலம், நாம் நமக்குத்தேவையான பயன்பாடுகளை உருவாக்குவதற்காகவென நாம் குறிமுறைவரிகள் எதையும் எழுத வேண்டிய தேவையேயில்லை என்பதாகும். முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் நாம் குறிமுறைவரிகளில்லாத(NoCode) இயங்குதளத்தைப் பயன்படுத்தும்போது,நாம் பயன்படுத்தும் தளத்திற்குப் பின்புலத்தில் மேம்படுத்துநர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டு நாம் பயன்படுத்த தயார்நிலையில் உள்ள மென்பொருட்களைமட்டுமே பயன்படுத்திகொள்கின்றோம் என்பதேயாகும். நாம் நமக்குத்தேவையானவற்றை இழுத்து சென்று விடுகின்ற அல்லது நம்முடையசெயல் திட்டத்துடன் இணைக்கின்ற ஒவ்வொரு மென்பொருளையும் மேம்படுத்துநர்கள் ஏற்கனவே அதற்காக உருவாக்கி நாம் பயன்படுத்துவதற்காக தயாராக வைத்துள்ளனர். நம்மால் எழுதப்படாத ஆனால் அதற்கான குறிமுறைவரிகளை மட்டும் நாம் நமக்கான பயன்பாடுகளை உருவாக்கி கொள்வதற்காக அவற்றை பயன்படுத்தி கொள்கின்றோம்,ஆனால் அவை நம்முடைய கண்ணுக்கத்தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, நாம் அவ்வாறான குறிமுறைவரிகள் எதையும் தனியாகமுயன்று எழுத வேண்டிய தில்லை.
எளிமையாகச் சொல்வதென்றால், குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் மூலம், நாம் அதற்கான மூலக் குறிமுறைவரிகளை நம்முடைய பார்வைக்குக் கொண்டுவராமலேயே அதனை கையாளுகின்றோம். இந்தக் கருவிகளில் பெரும்பாலானவை பயன்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான விரிவாக்கங்களையும் கூடுதலான உள்ளிணைப்புகளையும் கொண்டுள்ளன. இந்த வழிமுறையில், நாம் இணையபயன்பாடு ,கைபேசி பயன்பாடுஆகியவற்றிற்கான பின்புல, முன்புற மென்பொருட்களை உருவாக்கலாம். ஆனால்,இந்த கருவிகளில் சில நன்மைகளும் தீமைகளும் உள்ளன அவை பின்வருமாறு

குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் நன்மைகள்
குறிமுறைவரிகளை எழுதுகின்ற அனுபவம் இல்லாதவர்கள்கூட கைபேசி பயன்பாடுகளை உருவாக்கமுடியும்.
மிகக் குறைவானஅனுபவம் அல்லது, குறிமுறைவரிகளைஎழுதும் அனுபவமே இல்லாதவர்கள்கூட கைபேசி பயன்பாட்டையும் இணையப் பயன்பாட்டையும் உருவாக்கமுடியும்.
பெரிய பன்முகத்தன்மை , எளிதாக இழுத்து விடுவதன் மூலம் பயன்பாடுகளை மாற்றியமைக்கும் திறன். அதனால் பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்காகவென தனியாக பயன்பாடுகளின் மேம்படுத்துநர்களின் குழுக்கள் தேவைப்படாமல் போகலாம் என்பதால் அதற்கானவளங்களைச் சேமித்தல்.
ஆகியவை இவைகளின் நன்மைகளாகும்

குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் தீமைகள்
குறிமுறைவரிகளில்லாத கருவிகள் எவ்வளவு பயனுள்ளதாகவும் மேம்பட்டதாகவும் இருந்தாலும், சிலநேரங்களில் நாம் விரும்பும் வகையில் நம்முடைய பயன்பாட்டை உருவாக்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
வேறொருவர் எழுதிய குறிமுறைவரிகளைப் பயன்படுத்துவதில் சாத்தியமான பல்வேறுபாதுகாப்பு அபாயங்கள் குறுக்கிடக்கூடும். அதாவது தீங்கிழைக்கும் நோக்கத்தை மனதில் கொண்ட ஒருவர் குறிமுறைவரிகளின் துனுக்குகளை இந்த கருவிகளில் புகுத்துகிறார் எனக்கொள்வோம். அதனால் ஏதாவதுபிரச்சனை உருவாக வாய்ப்புகள் அதிகம்.ஆகியவை இவைகளின் தீமைகளாகும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.