Xschem எனும் மின்சுற்றுகளை எளிதாக வரையஉதவிடும்கட்டற்ற பயன்பாடு

Xschem என்பது ஒரு அமைப்புபடகாட்சி படபிடிப்பு நிரலாகும், இது மேலிருந்து கீழ்நோக்கிய அணுகுமுறையுடன் மின்சுற்றுகளின் படிநிலை பிரதிநிதித்துவத்தை உருவாக்க அனுமதிக்கிறது. இடைமுகங்கள், படிநிலை, நிகழ்வு பண்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒரு சிக்கலான அமைப்பை எளிமையான கட்டுமைப்புத் தொகுதிகளின் அடிப்படையில் விவரிக்க முடியும். ஒரு VHDL அல்லது Verilog அல்லது Spice netlist வரையப்பட்ட அமைப்பு படத்திலிருந்து உருவாக்கலாம், இது மின்சுற்றின் உருவகப்படுத்துதலை அனுமதிக்கிறது. நிரலின் முக்கிய வசதி C இல் எழுதப்பட்ட அதன் வரைதல் இயந்திரம் , நேரடியாக Xlib வரைதல் தொடக்கநிலையை பயன்படுத்துகிறது; இது மிகப் பெரிய மின்சுற்றுகளில் கூட நல்ல விரைவான செயல்திறனை அளிக்கிறது. இதில் பயனர் இடைமுகம் Tcl-Tk கருவித்தொகுப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது, tcl என்பது நீட்டிப்பு மொழியாகவும் பயன்படுத்தப் படுகிறது. SVG, PNG, PDF, ஆகிய வடிவமைப்புகளில் அமைப்புடங்களை அச்சிடலாம். XSCHEM ஆனது Linux அல்லது மற்ற Unix-Likes இல் Xorg சேவையகத்துடன் இயங்குகிறது மேலும் Windows இல் Cygwin அடுக்கும் தேவையான கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது.

முக்கியவசதிவாய்ப்புகள்

• படிநிலை அமைப்புபட வரைபடங்கள், அளவில் வரம்புகள் இல்லை • அமைப்புபடத்தில் உள்ள எந்தவொரு பொருளும் எந்த வகையான பண்புகளையும் கொண்டிருக்கலாம் (VHDL இல் உள்ள பொதுவானவை, Spice அல்லது Verilogஇல் உள்ள அளவுருக்கள்) • புதிய Spice/ Verilog இன் தொடக்கநிலைகளை உருவாக்கலாம் netlist வடிவமைப்பை பயனரால் வரையறுக்க முடியும் • tcl நீட்டிப்பு மொழி உரைநிரலை உருவாக்க அனுமதிக்கிறது; வரைதல் சாளரத்தில் உள்ள எந்த பயனர் கட்டளையும் தொடர்புடைய tcl கட்டளையைக் கொண்டுள்ளது • VHDL / Verilog / Spice netlist, உருவகப்படுத்துதலுக்குத் தயாராக உள்ளது • நடத்தை VHDL / Verilog குறிமுறைவரிகளின் அமைப்புபடத் தொகுதியின் பண்புகளில் ஒன்றாக உட்பொதிக்க முடியும், Xschem UNIX கணினிகளில் X11 , Tcl-Tk எனும் கருவித்தொகுதி நிறுவப்பட்ட நிலையில் இயங்குகிறது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக(GPLv3)எனும் உரிமத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ளது .மேலும் விவரங்களுக்கு https://xschem.sourceforge.io/stefan/index.html எனும் இணையதளத்தைப் பார்வையிடுக.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.