எக்செல்தொடர்-எக்செல்லில் -விரைவு பகுப்பாய்வு(Quick Analysis)எனும் கருவியை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?-2

II. பல கிடைவரிசைகளுக்கான/நெடுவரிசைகளுக்கான %ஐ கணக்கிடுக
எக்செல்லில்கிடைவரிசைகளுக்கான /நெடுவரிசைகளுக்கான தொகையையும் எண்ணிக்கை மதிப்புகளையும் கூட்டிமொத்தம் கண்டது போன்று % இன்மொத்த மதிப்புகளையும் கூட்டிமொத்தம்காணலாம். நம்மிடம் ஒரு தரவுத்தொகுப்பு உள்ளது, மேலும் ஒவ்வொரு தயாரிப்பிற்கும் , ஒவ்வொரு மாநிலத்திற்கும் சதவீத மொத்த மதிப்பைப் பெற விரும்புவதாக கொள்க. அச்சுப்பொறிகள் அல்லது வருடிகளின் மொத்த விற்பனையின் சதவீதம் எவ்வளவு என்பதை காணலாம். இதேபோன்று, நெடுவரிசையில் மொத்த மதிப்பின் சதவீதத்தையும் எந்த மாநிலத்தின் விற்பனையில் எவ்வளவு சதவீதம் பங்களிக்கிறது என்பதை காணலாம்.
இதைச் செய்வதற்கான படிமுறைகள் பின்வருமாறு:

1.முதலில்தேவையானத் தரவுத்தொகுப்பைத் தேர்ந்தெடுத்திடுக,
2.(Quick Analysis) எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,

3.Totals எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக,
4.%Total எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

1
மேலே கூறிய படிமுறைகள் புதிய கிடைவரிசையைச் செருகும், இது அனைத்து தயாரிப்புகளின் மொத்த % சதவீதத்தைக் காண்பிக்கும்.
இதேபோன்று, அனைத்து மாநிலங்களின் மொத்த சதவீதத்தைப் பெற விரும்பினால், அதே படிமுறைகளை மீண்டும் செய்யலாம், மேலும் படிமுறை 4 இல், இரண்டாவது % Total வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்திடுக (மஞ்சள் நிறத்தில் உள்ளது). இது ஒவ்வொரு மாநிலத்தின் சதவீத வாரியான விற்பனையைக் காட்டும் புதிய நெடுவரிசையைச் செருகும்.

2
III. குறிப்பிட்ட மதிப்பை விட அதிக மதிப்புடன் அனைத்து கலண்களையும் முன்னிலைப்படுத்துதல்
நாம்எண்களாலான தரவுகளுடன் பணிபுரிகின்றோம் ஒரு குறிப்பிட்ட மதிப்பை விட அதிகமான மதிப்பைக் கொண்ட அனைத்து கலண்களையும் விரைவாக முன்னிலைப்படுத்த விரும்பினால், விரைவு பகுப்பாய்வு கருவியைப் பயன்படுத்தி சிலசொடுக்குதல்களில் அதைச் செய்யலாம். பல்வேறு மாநிலங்களுக்கான விற்பனை புள்ளிவிவரங்கள் உள்ள தரவுத்தொகுப்பு உள்ளது, மேலும் மதிப்பு 100000க்கு மேல் இருக்கும் அனைத்து கலண்களையும் முன்னிலைப்படுத்திடுவதற்கான படிமுறைகள்:

1.முதலில்விற்பனை மதிப்பைக் கொண்ட வரம்பைத் தேர்ந்தெடுத்திடுக,

2.அவ்வாறு தேர்வுசெய்தலின் கீழ் வலதுபுறத்தில் காண்பிக்கப்படும் (Quick Analysis) எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.அதைக்காண வில்லை எனில்,Ctrl + Q எனும் குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்திடுக,

3.இடம்சுட்டிFormatting எனும்குழுவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்க,
4.அதில் ‘Greater than’ எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக..
5.உடன்திரையில் விரியும் ‘Greater than’ எனும்உரையாடல் பெட்டியில், புலத்தில் 7000 என உள்ளிடுக

6.எந்த வடிவமைப்பு( formatting)என்பதை குறிப்பிடுக அல்லதுஇயல்புநிலை (Light Red Fill with Dark Red Tex) பயன்படுத்தலாம்
7.இறுதியாகOK எனும் பொத்தானை சொடுக்குக
மேலே கூறிய படிமுறைகள் 7,000 க்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட அனைத்து கலண்களையும் உடனடியாக முன்னிலைப்படுத்தும். கலண்களை முன்னிலைப்படுத்த, மேலே உள்ள படிமுறைகள் நிபந்தனை வடிவமைப்பு (Conditional Formatting) எனும் வாய்ப்பினை பயன்படுத்திகொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்க. நிபந்தனை வடிவமைப்பு விதியை மாற்ற விரும்பினால், நிபந்தனை வடிவமைப்பு வாய்ப்பினை (முகப்பு தாவலில்) சொடுக்குதல் செய்த பின்னர் ‘Manage Rules’என்பதைசொடுக்குதல் செய்வதன் மூலம் அதைச் செய்யலாம்.

IV. நெடுவரிசையில் அல்லது கிடைவரிசையில் நடப்பு மொத்தத்தை( Running Total) காணுதல்
நம்மிடம்மாத வாரியான விற்பனைத் தரவு உள்ளது விற்பனை மதிப்புகளுக்கு நெடுவரிசையின் நடப்புமொத்தத்தை காண விரும்புவதாக கொள்க. விற்பனை எவ்வாறு முன்னேறுகிறது என்பதை கண்காணிக்க விரும்பும் போது, நெடுவரிசையின் நடப்பு மொத்தத்தை வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்த நெடுவரிசையை விரைவாக வருடுதல செய்து, மொத்த விற்பனை மதிப்பு 30,00 அல்லது 50,000ஐத் தாண்டியதை கண்டுபிடிக்க முடியும். விரைவு பகுப்பாய்வு(Quick Analysis) எனும் கருவியைப் பயன்படுத்தி நடப்பு நெடுவரிசையின் மொத்தத்தை காண்பதற்கான படிமுறைகள் :
1.தேவையானமுழு தரவுத்தொகுப்பையும் தேர்ந்தெடுத்திடுக,
2.அவ்வாறு தேர்வுசெய்தலின் கீழ் வலதுபுறத்தில் காண்பிக்கப்படும் (Quick Analysis) எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.அதைக்காண வில்லை எனில்,Ctrl + Qஎனும் குறுக்குவழிவிசைகளைப் பயன்படுத்திடுக, ,

3.பின்னர் Totals எனும்குழுவிற்கு செல்க ,

4.வலதுபுறத்தில் உள்ள சிறிய அம்புக்குறி உருவப்பொத்தானைசொடுக்குதல் செய்வதன் மூலம் கூடுதல் வாய்ப்புகளைப் பெறுக (அனைத்து வாய்ப்புகளும் முடிவடையும் இடத்தில்). இதை சொடுக்குதல் செய்வதன் மூலம் நாம் பயன்படுத்திகொள்ளக்கூடிய கூடுதல் வாய்ப்புகளைக் காண்பிக்கும்

5.விரியும் திரையில்‘Running Total’ எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

மேலே கூறிய படிமுறைகள் உடனடியாக ஒரு புதிய நெடுவரிசையைச் சேர்க்கும், அது நெடுவரிசையின் நடப்பு மொத்தத்தைக் காண்பிக்கும்.
இது செயல்படுவதற்காக, அருகிலுள்ள நெடுவரிசை (நடப்பு மொத்த மதிப்புகள் நிரப்பப்படும் இடத்தில்) காலியாக இருக்க வேண்டும். அது காலியாக இல்லாவிட்டால், தரவை மேலெழுத அல்லது செயலை நீக்கம் செய்யும்படி கோருகின்ற ஒரு செய்தியை திரையில் காணலாம் நெடுவரிசையின் நடப்பு மொத்த மதிப்புகளுக்குப் பதிலாக hash குறியீடுகளைக் கண்டால், எண்களுக்கு இடமளிக்கும் அளவுக்கு நெடுவரிசையின் அகலம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, நெடுவரிசையின் அகலத்தை விரிவாக்கம் செய்திடுக. நெடுவரிசையின் நடப்பு மொத்தத்தினை எவ்வாறு சேர்ப்பது என்பதற்கான படிமுறைகளை பின்பற்றியது போன்று, கிடைவரிசையின் நடப்பு மொத்தத்தைக் காண்பிக்கின்ற கிடைவரிசையையும் சேர்க்கலாம். இதற்கு, நீல நிறத்தில் உள்ள நடப்பு மொத்தம்( Running Total) எனும் வாய்ப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (இரண்டு நடப்பு மொத்தத்திற்கான வாய்ப்புகள் உள்ளன – கிடைவரிசைகளுக்கு நீல வண்ணமும் நெடுவரிசைகளுக்கு மஞ்சள்வண்ணமும்)

தொடரும்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.