சுதந்திரமான மொழிகற்றல்(LibreLingo)

       

சுதந்திரமான மொழிகற்றலின் (LibreLingo) நோக்கம் அதன் பயனாளர்களின் சமூகத்திற்குச் சொந்தமான நவீன மொழி கற்றல் தளத்தை உருவாக்குவதாகும். இது சுதந்திரமாக மென்பொருளை இயக்குவதற்கும், படிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் , மாற்றுவதற்குமான உத்தரவாதம் அளிக்கிறது. இதனை கொண்டுஆசிரியர்கள் தங்கள் வழங்கிடும் படிப்புகளை இலவச உரிமங்களுடன் வெளியிட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
LibreLingo என்பது ஒரு அதிகாரப்பூர்வ இணைய பயன்பாட்டை வழங்குகிறது, இது மிகவும் இலகுவானது இது ஜாவாஉரைநிரலில் svelte எனும்வரைச்சடடத்தையும் pouchDB ஐயும் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது, LibreLingo ஆனது இதனை இணைய உலாவியில் நிறுவுகை செய்திடாமலேயே ஊடாடத்தக்க முறையில் பயனாளர்களுக்கு கல்வியை வழங்கமுயற்சிக்கின்றது,
இது கட்டற்ற கட்டணமற்ற GPLv3 ,AGPLv3 ஆகிய உரிமங்களின் கீழ் மென்பொருளுக்கு உரிமம் வழங்குவதுடன், பாடநெறி உள்ளடக்கத்தினை மென்பொருளிலிருந்து தனியாகதுண்டித்துவிடுகின்றது, மேலும் பொதுகள பாட உள்ளடக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. பாடநெறி உருவாக்குநர்கள் தங்கள் பணியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தேர்வுசெய்யும் சுதந்திரத்தைத் தக்கவைக்க இது அனுமதிக்கின்றது.
இதில் பாடநெறி உள்ளடக்கம் மென்பொருளிலிருந்து சரியாக துண்டிக்கப் பட்டவுடன், பாடநெறி உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான மாற்று வழிகளைப் பரிசோதிக்க முடியும்: எடுத்துக்காட்டாக, ஒலிபுத்தகங்கள் அல்லது அச்சிடப் பட்ட புத்தகங்களை உருவாக்குதல்.
முக்கிய வசதிவாய்ப்புகள்:
bow and arrow: ஊடாடும் பயிற்சிகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்தல்
juggling_person: இடைவெளியுடன் மீண்டும் மீண்டும் பயிற்சியளித்தல்
bar_chart: பயிற்சியின்முன்னேற்றத்தைக் கண்காணித்து சேமித்தல்
arrows_counterclockwise: பல சாதனங்களில் முன்னேற்றத்தை ஒத்திசைத்தல்
people holding hands:நமக்கு சொந்தமானது, இதற்கென தனியாக சமூகம் குழுக்கள் உள்ளன
dove: இதில் பெரும்பாலான படிப்புகள் கட்டணமில்லாமலும், சுதந்திரமான கற்றலை அளிக்கின்றது மூன்றாம் நபர் தலையீடுஇல்லாமல் நேருநேராக அளிக்கின்றது
இது கைபேசிகள், மடிக்கணினிகள் மேசைக்கணினிகள் போன்ற பல்வேறு சாதனங்களில்செயல்படுகின்ற திறன்மிக்கது
மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்
https://librelingo.app/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.