MinGWஎனும்விண்டோவின் சொந்த பயன்பாடுகளுக்கான குறைந்தபட்ச மேம்பாட்டு சூழல்

      

“விண்டோவிற்கான குறைந்தபட்ச குனு(Minimalist GNU for Windows)” என்பதன் சுருக்கமானபெயரே MinGW ஆகும், இது விண்டோவின் சொந்த பயன்பாடு களுக்கான குறைந்தபட்ச மேம்பாட்டு சூழலாகும்.மேலும் இந்த MinGW ஆனது பொது நலனுக்கான மென்பொருளின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையை கொண்டுள்ளது. இதனுடைய பதிவு எண் 86017856 ஆகும்; இது MinGW.OSDN சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது ,வேறு எந்த செயல் திட்டத்தையும் அதன் பயன்பாடால் அங்கீகரிக்கப்படாதது.
மிகமுக்கியமாகMinGW என்பது விண்டோவின் சொந்த GNU Compiler Collection (GCC) இன் வாயிலாகும், கட்டணமற்ற விநியோகிக்கக்கூடிய பதிவிறக்க நூலகங்கள், விண்டோவின் சொந்த பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தலைப்புக் கோப்புகளையும் C99 செயலியை ஆதரிக்க MSVC இயக்க நேரத்திற்கான நீட்டிப்புகளை உள்ளடக்கியது. MinGW இன் அனைத்து மென்பொருட்களும் 64பிட் விண்டோஇயங்குதளங்களில் செயல்படுகின்றன.
MinGW ஆனது ஒரு முழுமையான திறமூல நிரலாக்க கருவி தொகுப்பை வழங்குகிறது, இது MS-Windows சொந்த பயன்பாடுகளின் மேம்பாட்டிற்கு ஏற்றது, மேலும் இது எந்த மூன்றாம் தரப்பு C‑Runtime DLL களையும் சார்ந்திருக்காது. (இது இயக்கமுறைமைகளின் கூறுகளாக மைக்ரோசாப்ட் வழங்கும் DLLகளின் எண்ணிக்கையைச் சார்ந்தது; இவற்றில் குறிப்பிடத்தக்கது MSVCRT.DLL, மைக்ரோசாஃப்ட்டின் சி இயக்க நேர நூலகம். கூடுதலாக, திரிக்கப்பட்ட பயன்பாடுகள் கட்டணமற்ற விநியோகிக்கக்கூடிய நூலாக ஆதரவினை DLL உடன் அனுப்பப்படுவதை MinGW இன் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது).
MinGW தொகுப்பாளர்கள் Microsoft C இயக்க நேரம் , சில கணினிமொழி சார்ந்த இயக்க நேரங்களின் செயல்பாடுகளுக்கான அணுகலை வழங்குகின்றன. MinGW, குறைந்தபட்சமாக இருப்பதால், MS‑Windows இல் POSIX பயன்பாட்டு நேரியல் வரிசைப்படுத்தலுக்கான முழு POSIX இயக்க நேர சூழலை வழங்க முயற்சிப்பது இல்லை. இந்த தளத்தில் POSIX பயன்பாட்டைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு பதிலாக Cygwin ஐப் பயன்படுத்திகொள்க.
முதன்மையாக சொந்த MS‑Windows தளத்தில் பணிபுரிகின்ற மேம்படுத்துநர்களின் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் குறுக்குதள-புரவலாராக செய்யப்பட்ட பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது,   இதில் பின்வருபவைஉள்ளடங்கும்:—
• C, C++, ADA , Fortran இயந்திரமொழிமாற்றிகள் உட்பட GNU Compiler Collection (GCC) வாயில்;
• Windows க்கான GNU Binutils (சில்லுமொழிமாற்றி, இணைபு்பி, காப்பகமேலாளர்)
• MS-Windows இல் MinGW, MSYS வரிசைப்படுத்தலுக்கான வாய்ப்பு GUI முன்-இறுதியுடன் (mingw‑get) கட்டளை வரி நிறுவுகை வசதிகொண்டது
• GUI முதன்முதலா அமைவு கருவி (mingw‑get-setup), mingw‑get மூலம் உற்சாகமாக இயக்கிடுக.
MSYS, என்பது”Minimal SYStem” என்பதன் சுருக்கமான பெயராகும், ஒரு Bourne Shell கட்டளை வரி மொழிபெயர்ப்பான் அமைப்புடன். மைக்ரோசாப்டின் cmd.exe க்கு மாற்றாக வழங்கப்படுகிறது, இது ஒரு பொது நோக்கத்திற்கான கட்டளை வரி சூழலை வழங்குகிறது, இது MS-Windows இயங்குதளத்திற்கு பல திறமூல பயன்பாடுகளை வாயிலாகசெய்வதற்கு, MinGW உடன் பயன்படுத்த மிகவும் பொருத்தமானது; Cygwin‑1.3 இன் இலகு எடையுள்ள கிளையாக, அந்த நோக்கத்தை எளிதாக்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட Unix கருவிகளின் சிறிய தேர்வை உள்ளடக்கியது.
MS‑Windows இயங்குதளத்தில் பணிபுரிகின்ற மேம்படுத்துநர்களால் பயன்படுத்தப்படுகின்ற கருவிகளை MinGW  வழங்கும் அதே வேளையில், பல மேம்படுத்துநர்கள் MS‑Windows இல் நேரியல்வரிசைப்படுத்துவதற்கான பயன்பாடுகளை உருவாக்க, GNU/Linux போன்ற தளங்களில் MinGW கருவிகளின் குறுக்கு-தொகுப்பு மாறுபாடுகளை இயக்கத் தேர்வு செய்கிறார்கள். இந்த மேம்படுத்திடுகின்ற மாதிரியை எளிதாக்க, பல Linux விநியோகப் பாளர்கள் MinGW கருவிச் சங்கிலிகளிலிருந்து பெறப்பட்ட குறுக்குதள-தொகுப்பு கருவிகளை வழங்குகிறார்கள்; இத்தகைய குறுக்குதள-தொகுப்பு கருவிச் சங்கிலிகள்  MinGW.OSDN ஆல் நேரடியாக ஆதரிக்கப்படுவதில்லை, இருப்பினும் MS-Windows பயன்பாடுகளின் மேம்பாட்டின் பிரத்தியேகங்கள் தொடர்பான ஆலோசனைகளை இது வழங்கின்றது
இது (GPLv2) ,(GPLv3) , ஆகியஉரிமங்களின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பெற்றுள்ளது.மேலும் விவரங்களுக்கும் இதனை பயன்படுத்தி கொள்ளவும் https://mingw.osdn.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.