Bitfocus Companion எனும் பயன்பாடு


Bitfocus Companion என்பது நியாயமான விலையில் உள்ள Elgato Streamdeck என்பதை பல்வேறு விளக்கக்காட்சி மாற்றிகள், கானொளி மீளஇயக்கிடு மென்பொருள் ,ஒளிபரப்பு உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு தொழில்முறை shotbox மேற்பரப்பாக இருக்க உதவுகின்ற ஒரு பயன்பாடாகும்.
இதைப் பயன்படுத்த நமக்கு உண்மையான தொடரோட்ட தொகுப்பு தேவை யில்லை. கட்டமைக்கப்பட்ட மெய்நிகர்தொடரோட்ட தொகுப்பு , தொடுதிரை பயன்படும் திரைகளுக்கான வலைப்பக்கம் ஆகிய இரண்டுடன் OSC, TCP, UDP, HTTP, WebSocket , ArtNet ஆகியவற்றின்வழியாக பொத்தான்களைத் தூண்டும் திறன் ஆகிய வற்றுடன் வருகிறது. இது பொத்தான்கள் இல்லாமல் அதே பணியைச் செயல்படுத்திடுகிறது.
முக்கிய வசதிவாய்ப்புகள்
பொத்தான் வடிவமைப்பாளர் : வண்ண உரையுடன் அல்லது நம்முடைய சொந்த உருப்படங்களை பதிவேற்றிடுகின்றது
பின்னூட்டம் : நிலையைக் காண்பிக்க சாதனங்கள் பொத்தான்களுக்குப் பின்னூட்டம் வழங்கலாம்
அடுக்கப்பட்ட செயல்கள்: ஒரே பொத்தானில் இருந்து பல செயலிகளை இயக்கிடலாம்
தாமதமான செயலிகள்: ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனியாக தாமத நேரத்தை அமைத்திடலாம்
பல சாதனம்: ஒரே நேரத்தில் பல தொடரோட்ட தொகுப்புகளை இணைத்திடலாம்
வலை நிர்வாகி: வலைபின்னலில் உள்ள எந்த உலாவியிலிருந்தும் கணினியை உள்ளமைத்திடலாம்
வலை பொத்தான்கள்: கைபேசி/மடிக்கணினி/உலாவிக்கான மெய்நிகர் வலை பொத்தான்களை அமைத்திடலாம்
தரவுமின்சுற்று: விசையை கீழும் மேலேயும்அழுத்துவதற்கான தனித்தனி செயல்கள், தாழ்ப்பாள்/மாற்றும் திறன் கொண்டுள்ளது
தொடரோட்ட தொகுப்பு செருகுநிரல்:சொந்த தொடரோட்ட தொகுப்பு பயன்பாட்டில் துணை பொத்தான்களைப் பயன்படுத்திடலாம்
மேலும் விவரங்களுக்கும் இதனை பயன்படுத்தி கொள்ளவும் https://bitfocus.io/companion எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.