திறமூல பயன்பாடுகளை மேம்படுத்திடும்(DevOps) கருவிகள்


DevOps என்பது நவீன தகவல் தொழில்நுட்ப நடைமுறைகளின் தொகுப்பை விவரிக்கப் பயன்படும் ஒரு சொல்லாகும், இது மென்பொருள் உருவாக்குநர்கள் அதனை செயல்படுத்திடும் பணியாளர்களை மிகவும் நெருக்கமாக ஒன்றிணைத்து அதே செயல்திட்டத்தில் அதிக ஒத்துழைப்புடன் பணியாற்ற முயற்சிக்கிறது. தகவல்தொழில்நுட்பத் (IT) துறையின் இரு தரப்புக்கும் இடையே பாரம்பரியமாக இருந்த தடைகளைத் தகர்ப்பதன் மூலம், புதிய மென்பொருள் பதிப்புகளைப் பயன்படுத்துவதில் உள்ள நேரத்தையும் உராய்வையும் நிறுவனங்கள் குறைக்கலாம் என்பதே இதனுடைய முக்கிய நோககமாகும். இந்த முயற்சியானது குறுகிய வளர்ச்சி சுழற்சிகளுக்கு வழிவகுக்கும், இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது, மேலும் நீண்ட, பாரம்பரிய வளர்ச்சி சுழற்சிகளுடன் மற்றவர்களுக்கு எதிராக நிறுவனத்திற்கு போட்டித்தன்மையை அளிக்கிறது.
நடப்பாண்டான 2022உம் அதற்குப் பிறகும் DevOps நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானவைகளைாக கருதுகின்ற சிலதிறமூல DevOps கருவிகளைபற்றி சுருக்கமாக இப்போது காண்போம்

1.GitLab இந்த DevOps இயங்குதளமானது ஒரு பயன்பாட்டில் மென்பொருளைத் திட்டமிடுவதற்கும், உருவாக்கிடுவதற்கும், பாதுகாப்பதற்கும் இயக்குவதற்கும் தேவையான திறனை வழங்குகிறது. அதன் அத்தியாவசிய வசதிவாய்ப்புகளில் தற்காலிக சேமிப்பு , செயற்கைநினைவக மேலாண்மை ஆகியவை அடங்கும்.
DevOps நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு GitLab மிகவும் எதிர்கால வசதிகளில் ஒன்றாகும்.
ஆரம்ப வெளியீடு 2014
நிலையான வெளியீடு 14.6.0
இது ரூபி, கோ , ஜாவாஸ்கிரிப்ட் ஆகிய கணினிமொழிகளில்எழுதப்பட்டது
உரிமம் – எம்ஐடி உரிமம்
இணையதளம் http://www.gitlab.com
முக்கிய வசதிவாய்ப்புகள்: அதிக அளவில் அளவிடக்கூடியது . ஒஏத்துழைப்பை ஆதரிக்கிறது.வளாககணினியின், மேககணினியின் நிறுவுகையை ஆதரிக்கிறது.

2. Jenkins என்பது பயன்பாட்டு வாழ்க்கைச் சுழற்சி நிர்வாகத்தில் பயன்படுத்தப் படுகின்ற கருவிகளுடன் ஒருங்கிணைப்பை வழங்குகின்ற ஒரு திறமூலக் கருவியாகும், இது ஒரு பயன்பாட்டின் உருவாக்கம் முதல் சோதனை , நேரியல் வரிசைப்படுத்துதல் வரை அனைத்து செயல்பாடுகளையும் தானியங்கிபடுத்துகிறது. பல துவக்கநிலையாளர்கள் இதன் மூலம் தங்களுடைய தானியங்கி பயன் பாட்டிற்கான பயணத்தைத் தொடங்குகின்றனர். இதனை கற்றுக்கொள்வது எளிதானது மேலும் ஆதரவிற்காக பெரிய சமூகுழுஒன்றும் உள்ளது.தொடர்ச்சியான ஒருங்கிணைப்பையும் ,விநியோகத்தையும் உள்ளடக்கிய pipeline உருவாக்க இது ஒரு எளிய வழியை வழங்குகிறது. செருகுநிரல் அடிப்படையிலான கட்டமைப் பானது, pipelineஇல் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்த உதவுகிறது; எனவே, ஒரே நேரத்தில் பல கலாச்சாரமாற்றங்களை தவிர்க்கலாம்.
ஆரம்ப வெளியீடு 2011
நிலையான வெளியீடு 2.324
ஜாவாஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது
உரிமம் எம்ஐடி
இணையதளம் http://www.jenkins.io
முக்கிய வசதிவாய்ப்புகள் :இது Docker, FreeBSD, Gentoo, MacOS X, OpenBSD, OpenSUSE, Red Hat/Fedora/CentOS, Ubuntu/Debian, Windows, Generic Java தொகுப்பு (.war) ஆகியவற்றிற்கு துணைபுரிகிறது. பணிகளை எளிதாக நிர்வகிப்பதற்காக கோப்புறைகளுடன் பல பார்வைகளும் ஆதரிக்கப்படுகின்றன. முகப்புதிரைக்கான இதனுடைய புதிய UI பயன்படுத்த எளிதானது. இதில்pipelineஐ எளிதாகக் குறியீடாக உருவாக்க புதிய UI உள்ளது.இதில் pipeline குறியீடு/பலபிரிவு pipeline என pipelineகளை எளிதாகக் களஞ்சியங்களில் நிர்வகிக்கலாம்.இது விநியோகிக்கப் படுகின்ற கட்டமைப்புகளை திறம்பட நிர்வகிக்க உதவுகின்றது. பணிகள்/ கோப்புறைகள் / pipeline கள்/உள்ளமைவுகள்/செயல்களின் அடிப்படை யில் பயனாளர்களுக்கான பங்கீடு அடிப்படையிலான அணுகலைகொண்டது.செயலில் உள்ள அடைவு, LDAP ,உள் ளகதரவுத்தளத்துடன் ஒருங்கிணைப்பு கொண்டது.

3.Docker என்பது இலகுரக DevOps கருவியாகும், இது நம்முடைய மென்பொருள் மேம்பாட்டு வாழ்க்கைச் சுழற்சியில் பல்வேறு பணிப்பாய்வுகளை ஒருங்கிணைக்கப் பட்ட முறையுடன் துரிதப்படுத்தவும் எளிதாக்கவும் உதவுகிறது. டோக்கர் கொள்கலண் image என்பது ஒரு பயன்பாட்டை இயக்குவதற்குத் தேவையான அனைத்து சார்புகளையும் கொண்ட ஒரு முழுமையான தொகுப்பாகும். Cgroups, Linux இன் உருவாக்கமையங்கள் போன்ற ஆதார தனிமைப்படுத்தும் வசதிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு புரவலர் இயக்க முறைமையில் கொள்கலன்களை உருவாக்க, நேரியலாகவரிசைப்படுத்த , நிர்வகிக்க இது ஒரு சிறந்த திறமூல இலகுரக கருவியாகும். ஒரு கொள்கலன் தொகுப்பில் பயன்பாட்டுக் குறியீடு, நூலகங்கள் , உள்ளமைவுகள் இருக்கலாம். கொள்கலன் இயந்திரம் புரவலரான இயக்க முறைமையில்OS நிறுவப்பட்டுள்ளது.
துவக்கநிலை வெளியீடு 2013
நிலையான வெளியீடு 20.10.11
கோஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது
உரிமம் அப்பாச்சி உரிமம் 2.0
இணையதளம் https://hub.docker.com/https://www.docker.com/
முக்கிய வசதிவாய்ப்புகள் பயன்பாடுகளின் எளிதான மேலாண்மை டோக்கர் hub – பொதுப் பதிவுகொண்டது .சீரான கட்டுகளை கொண்டது. Kubernetடன் நன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

4.Kubernetes அல்லது k8s என்பது Google ஆல் உருவாக்கப்பட்ட ஒரு திறமூல, நீட்டிக்கக்கூடிய ,சிறிய கொள்கலன் ஒருங்கிணைப்பு orchestration தளமாகும். இது நேரியல் வரிசைப்படுத்துதலுக்கான அறிவிப்பு உள்ளமைவு,தானியங்கியை வழங்குகிறது. இதனுடைய கொத்துகளில்(cluster)நேரியல்வரிசைப்படுத்தல், மேலாண்மை, அளவிடுதல் பயன்பாடுகளுக்கான அதன் திறன்கள், அம்சங்கள் காரணமாக இது DevOps நடைமுறைகளுக்கான மிகவும் பிரபலமான கருவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது வளங்களை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. இதனுடைய ஒரு கொத்துகளில்(cluster) ஆனது நிகழ்விடத்தின்(on-premise) சூழலிலும் தனியார் , பொது மேககணினிகளிலும் உருவாக்கலாம். பொது மேககணினியின் நிர்வகிக்கப்பட்ட சேவைகளை வழங்குகிறது. Google Cloud Platform ஆனது Google Kubernetes பொறியமைவைக் கொண்டுள்ளது, AWS இல் Amazon Elastic Kubernetes Services (EKS) , Azure ஆனது Azure Kubernetes Service (AKS) ஐக் கொண்டுள்ளது.
துவக்க வெளியீடு 2014
நிலையான வெளியீடு 1.22.2
கோஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது
உரிமம் அப்பாச்சி உரிமம் 2.0
இணையதளம் https://kubernetes.io/
முக்கிய வசதிவாய்ப்புகள் : விநியோகிக்கப்பட்ட கட்டமைப்பினை கொண்டது. டோக்கருடன் எளிதான ஒருங்கிணைப்பு கொண்டுள்ளது. hybrid, on-premise அல்லது மேககணினி சூழல்களை ஆதரிக்கிறது.

5.Prometheus இது கண்காணிப்பு, விழிப்பூட்டலுக்கான ஒரு திறமூல கருவியாகும். Prometheus சுற்றுச்சூழல் அமைப்பில் Prometheus சேவையாளர், வாடிக்கையாளர் நூலகங்கள், push நுழைவுவாயில், சேவைகளுக்கான பதிவேற்று பவர்கள், எச்சரிக்கை மேலாளர் ,ஆதரவு கருவிகள் போன்ற கூறுகள் உள்ளன.
இது பல பரிமாண தரவு மாதிரி, நெகிழ்வான வினவல் மொழி ,பல முறைகளில் வரைதல்,முகப்புத்திரை ஆதரவு போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
துவக்கநிலை வெளியீடு 2012
நிலையான வெளியீடு v2.32.0
கோஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது
உரிமம் பேச்சி உரிமம் 2.0
இணையதளம் https://prometheus.io/
முக்கிய வசதிவாய்ப்புகள்: பல பரிமாண தரவு மாதிரி கொண்டது ஒரு நெகிழ்வான வினவல் மொழியாக (PromQL) திகழ்கின்றது . சேவை கண்டுபிடிப்பு அல்லது நிலையான உள்ளமைவுக்கான ஆதரவு உள்ளது

6.Terraform இந்த திறமூல ‘Infrastructure as Code’ எனும்கருவி, HashiCorp ஆல் உருவாக்கப்பட்டது, இதுகட்டமைப்பு சறுக்கல் சிக்கலைத் தவிர்க்க மாறாத உள்கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது. இது தளங்களுக்கான-அஞ்ஞான அறிவிப்புக் குறியீட்டு கருவியாகும், இது மேம்படுத்துநர்களுக்கு உள்கட்டமைப்பை நிர்வகிக்க உயர்-நிலை உள்ளமைவு மொழியைப் பயன்படுத்த உதவுகிறது. இது AWS, Azure, Google Cloud Platform போன்ற பல்வேறு மேககணினி வழங்குநர்களை ஆதரிக்கிறது.
துவக்கநிலை வெளியீடு 2014
நிலையான வெளியீடு 1.0.10
கோஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது
உரிமம் Mozilla பொது உரிமம் v2.0
இணையதளம் https://www.terraform.io/
முக்கிய வசதிவாய்ப்புகள்: declarative config கோப்புகளைப் பயன்படுத்தி உள் கட்டமைப்பை குறியீடாக நிர்வகிக்கிறது. சார்பு வரைபடங்களை கொண்டது நிலையின் நிர்வாகத்திற்கு உதவகின்றது

7.SonarQube இது ஒரு சுத்திகரிப்பான் போன்ற பணி செய்கிறது.மேலும் குறியீட்டில் உள்ள பிழைகள், பாதிப்புகள் , குறியீடு உள்ளதாவென்பதை தேடிபிடித்து அழிக்க உதவுகிறது. இது நிலையான குறியீடு பகுப்பாய்வு (SCA) க்கு 20 க்கும் மேற்பட்ட நிரலாக்க மொழிகளை ஆதரிக்கிறது.Pipeline ஐ SonarQube இன் குறியீடாகப் பயன்படுத்தி நிலையான குறியீடு பகுப்பாய்வை ஒருங்கிணைப்பது மிகவும் எளிதானது. இந்தக் கருவி, தரமான வாயில்கள் , சுயவிவரங்களைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தை கையேட்டில் இருந்து தானியங்கி குறியீடு மதிப்பாய்வுக்கு மாற்ற உதவுகிறது.
துவக்கநிலை வெளியீடு 2006-07
நிலையான வெளியீடு 8.9
ஜாவாஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது
உரிமம் Lesser GNU General Public License
இணையதளம் https://www.sonarqube.org/
முக்கிய வசதிவாய்ப்புகள்: C#, C, C++, JavaScript, TypeScript, Python, Go, Swift, COBOL, Apex, PHP, Kotlin, Ruby, Scala, HTML, CSS, ABAP, Flex, Objective- C, PL/I, PL/SQL, RPG, T-SQL, VB.NET, VB6 , XML ஜாவா (ஆண்ட்ராய்டு உட்பட)ஆகிய நிரலாக்க மொழிகளுக்கான ஆதரவினை கொண்டுள்ளது. தரமான வாயில்களை கொண்டது

8.Grafana இந்த திறமூல கருவியானது Grafana cloud மூலம் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் நம்முடைய உள்கட்டமைப்பில் நிறுவன பதிப்பை சுயமாக நிர்வகிக்கும் வாய்ப்புகளுடன் இயக்கலாம்..நாம் குபெர்னெட்ஸைப் பயன்படுத்திகொள்கின்ற மிகவும் பிரபலமான கருவிகளில் ஒன்றாகும். இதனை நிறுவுகைசெய்வது, கட்டமைப்பது, நிர்வகிப்பது Prometheusஐ தரவு ஆதாரமாக வைத்து அளவீடுகளை கண்காணிப்பது எளிது.
துவக்கநிலை வெளியீடு 2014
நிலையான வெளியீடு 8.3.3
Go, TypeScript ஆகிய கணினிமொழிகளால் எழுதப்பட்டது
உரிமம் General Public License பதிப்பு 3.0
இணையதளம் https://grafana.com/

9.Ansible என்பது ஒரு திறமூல தகவல்தொழில்நுட்ப(IT) தானியங்கி/உள்ளமைவு மேலாண்மை கருவியாகும், இது குறுக்கு-தளங்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இது பயன்படுத்த எளிதானது, ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பான தத்தெடுப்புக்கான பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் வழங்குகிறது. வெளியீட்டு மேலாண்மை நடவடிக்கைகளில் நேரியல்வரிசைப்படுத்தல், உருட்டுதல் புதுப்பிப்புகள் ஆகிய வற்றிற்கு இது பிரபலமானது. இதுமற்ற பிரபலமான உள்ளமைவு மேலாண்மை கருவிகளிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் இது முகவர் இல்லாதது. இது Kerberos, LDAP ,போன்ற பிற அங்கீகார மேலாண்மை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றது.
துவக்கநிலை வெளியீடு 2012
நிலையான வெளியீடு 5.0.1
பைதான், பவர்ஷெல், ஷெல், ரூபி ஆகிய கணினிமொழிகளில் எழுதப்பட்டது
உரிமம் குனு பொது பொது உரிமம்
இணையதளம் https://www.ansible.com/
முக்கிய வசதிவாய்ப்புகள்:விநியோகிக்கப்பட்ட கட்டமைப்பினை கொண்டது
டோக்கருடன் எளிதான ஒருங்கிணைப்பு உடையது.hybrids, வளாகத்தில் on-premise அல்லது மேகக்கணி சூழல்களை ஆதரிக்கிறது

10.Trivy என்பது ஒரு திறமூலகருவியாகும், ஆனால் கொள்கலன்கள்போன்ற பிற செயற்கைபொருட்களுக்கான எளிய , விரிவான பாதிப்பு/தவறான கட்டமைப்பு வருடுதலை கொண்டது
நிலையான வெளியீடு V0.22.0
கோஎனும் கணினிமொழியில் எழுதப்பட்டது
உரிமம் அப்பாச்சி-2.0 உரிமம்
இணையதளம் https://aquasecurity.github.io/trivy/v0.22.0/
முக்கிய வசதிவாய்ப்புகள்: Docker Images, Red Hat Enterprise Linux, CentOS, Oracle Linux, Debian, Ubuntu, Amazon Linux போன்ற பிற OS தொகுப்புகளுக்கான பாதிப்பைக் கண்டறிய உதவுகி்ன்றது.பயன்படுத்திட எளிதானது, விரைவானது , நிறுவுகைசெய்திட எளிதானது

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.