Kaplanஎனும் கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடு

Kaplan எனும் எனும் பயன்பாடானது மொழியியலாளர்களுக்கான கணினி வாயிலான மொழிபெயர்ப்பிற்கானகட்டணமற்ற கட்டற்ற CAT கருவியை வழங்குகிறது. இது ஒரு மொழியியல் வல்லுநரால் பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட செயல்திட்டமாகும், ஆனால் தற்போது இது மிகநீண்ட தூரம் வளர்ந்து வந்துவிட்டது.
இது பைதான் நூலகத்தை கொண்டுள்ளதால் ( அதைச் சுற்றி உருவாக்கப்பட்ட மேசைக்கணினி பயன்பாடான இந்தபயன்பாடு) .docx, .odp, .ods, .odt, .po, .sdlxliff, .txt , .xliff ஆகிய வடிவமைப்பு கோப்புகளைக் இதன்வாயிலாககையாள முடியும். இந்த பயன்பாட்டினால் உருவாக்கப்பட்ட இருமொழி கோப்புகளான .kxliff – .xliff v2.1 இன் சற்று மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு – அதாவது .xliff v2.1 ஐக் கையாளும் எந்த CAT கருவியும் .kxliff கோப்புகளை எளிதாகக் கையாளுகின்ற திறன்மிக்கது.
இந்த பயன்பாடானது தன்னுடைய சொந்த வடிவமைப்பையையே மொழிபெயர்ப்பு நினைவுகளுக்கும் , termbaseகளுக்குப் பயன்படுத்துகிறது, மேலும் அவற்றை பதிவிறக்கம் செய்கின்ற (.xliff , .csv) , பதிவேற்றம்செய்திடுகின்ற (.xliff) திறனை வழங்குகிறது.
இதனுடைய உதவியை தனிப்பட்ட மொழியியலாளர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டாலும்,குழுக்களின் பயன்பாட்டிற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய இதனுடைய வசதிவாய்ப்புகள், மொழியியலாளர்கள் MySQL தரவுத்தளத்தை மேககணினியின் TM சேவையகமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இதன்வாயிலாக மொழியியலாளர்கள் செயல்திட்ட/திரும்ப தொகுப்புகளையும் உருவாக்கலாம்.
இதனுடைய kaplan-desktop Public என்பது கணினி உதவி மொழிபெயர்ப்பு கருவியாக திகழ்கின்றது
இதனுடைய மற்றொரு பதிப்பான kaplan-Cloud Public என்பது மேககணினி இது அடப்படையிலான மொழிபெயர்ப்பு நிர்வாக அமைப்பை கொண்டது

இது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக MIT எனும் அனுமதியின் படி வெளியிடப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://kaplan.pro/எனும் இணையதளமுகவரிக்கு செல்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.