SKYHAWKஎனும் மீட்பு செயல்திட்டம் ( SHRP)

நவீன பயனாளர் இடைமுகப்பு(UI), தனிப்பயன் தளவமைப்பு, பயனுள்ள செயலிகள் போன்றபலவற்றைக் கொண்ட அழகான TWRP அடிப்படையிலான மீட்பு. மீப்பெரும் (UI) உடன் SHRP இன்னும் பலவற்றை வழங்குகிறது. TWRP உடன் தொடர்பு கொள்வதற்கு இது ஒரு புதிய வசதியான வழிமுறையைக் கொண்டுள்ளது, பக்க பட்டியலின்பட்டியில் சேமிப்பகத்தை அணுகுவது, கடவுச்சொல் பாதுகாப்பு போன்ற இவை அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன, இன்னும் ஏராளமானவசதி வர உள்ளன. SHRP ஆனது பொருள் வடைவமைப்பு2 ஆல் ஈர்க்கப்பட்டு, சொந்த TWRPக்கு புதிய வடிவமைப்பைக் கொண்டுவருகிறது. SHRP ஆனது அதன் சிறந்த (UI) அனுபவத்துடன் மேலும் பலவற்றை வழங்குகிறது. புதிய முகப்புபக்கத்தின் TWRP உடன் தொடர்புகொள்வதை மிகவும் எளிதாக்குகிறது. SHRP ஆனது முழுமையான புதிய theming பிரிவு, Flash Magisk (மூலம் அல்லது மூலமற்ற), Camera 2api இயக்கி நேரடியாக முகப்புதிரையிலிருந்து, கடவுச்சொல் பாதுகாப்பு போன்ற சில சிறந்த வசதிகளைப் பெற்றுள்ளது. சுத்தமான நவீன வடிவமைப்பு: புதிய கருப்பொருள்கள், சுத்தமான நவீன வடிவமைப்பு மூலம் TWRP ஐ சிறந்ததாக்குகிறது. பாதுகாப்பு வசதிகள்: TWRP:D ஐப் பாதுகாப்பதற்கு கடவுச்சொல் பாதுகாப்பு கிடைக்கிறது மறுவரையறை செய்யப்பட்ட கோப்பு மேலாளர்: மாற்றியமைக்கப்பட்ட கோப்பு மேலாளர், சேமிப்பக தகவல் drawer, zip போன்ற வசதிகளைச் சேர்த்துள்ளது. அனைத்து புதிய முகப்புபக்கம்: அனைத்து புதிய முகப்புபக்கத்தில் கூடுதல் வாய்ப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன, இப்போது முகப்புபக்கத்திலிருந்து விரைவாக அணுகலாம். வண்ணங்களின் ஆதரவு: கருப்பொருளை கருப்பு, இருண்ட அல்லது தூய வெள்ளைக்கு மாற்ற SHRP theming ஆதரவைக் கொண்டுள்ளது. கூடுதல் தகவமைவுகள்: இறுதி பயனர் அனுபவத்தை மேம்படுத்த சில சிறந்த கூடுதல் பொருட்களைச் சேர்த்துள்ளது. இது(GPLv3) எனும் உரிமத்தின்கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றது மேலும் விவரங்களுக்கும் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும்https://skyhawkrecovery.github.io/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க .

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.