தற்போதுமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Power Fx ஆனது திறமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது


மைக்ரோசாப்டின் குறைந்தபட்ச-குறிமுறைவரிகளுடைய நிரலாக்க மொழியான Power Fx ஆனது தற்போது https://github.com/microsoft/Power-Fxஎனும் இணையதள முகவரியில் MIT உரிமத்தின் கீழ் கட்டற்றதாக செய்யப்பட்டுள்ளது. 2021 ஆண்டு இறுதிக்குள் உண்மையான மூலக் குறிமுறைவரிகளைத் திறமூலமாககூடிய திட்டத்துடன், இந்த தொழில்நுட்ப நிறுவனமானது தற்போது இந்த கணினிமொழியின் ஆவணங்களை கட்டற்றதாக செய்துள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் எனும் நிறுவனமானது அதனுடைய Power Fx ஐ அதிகாரப்பூர்வமாக திறமூலமாக ஆக்குவதாக அறிவித்துள்ளது, இது மைக்ரோசாஃப்ட் எக்செல் அடிப்படையிலான குறைந்தபட்ச குறிமுறைவரி களுக்கான திறமூல சூத்திரத்தி்ற்கான கணினி மொழியாகும். இந்த கணினிமொழி Powerஎனும் தளத்தின் வாடிக்கையாளர்களை பயன்பாட்டு தர்க்கத்தை உருவாக்கவும் தனிப்பயனாக்கவும் அனுமதிக்ககூடும் என்று கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான மில்லியன் பயனாளர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான சூத்திரங்களைப் பயன்படுத்தி, Power Fx ஆனது பரந்த அளவிலான நபர்களுக்கு ஏற்கனவே தங்களுக்கு தெரிந்த திறன்களை குறைந்தபட்ச குறிமுறைவரிகளின் தீர்வுகளுக்கு கொண்டு வர அனுமதிக்கிறது. இந்தPower Fx ஆனது வணிகப் பயனாளர்களுக்கும் தொழில்முறை மேம்படுத்தநர்களுக்கும் தர்க்கத்தை வெளிப்படுத்தவும் சிக்கல்களைத் தீர்வுசெய்திடவும் உதவுகின்ற பொதுவானதொரு தளமாகின்றது. விசுவல் ஸ்டுடியோ குறிமுறை போன்ற உரைபதிப்பாளர்களில் பயன்பாட்டினை நேரடியாகத் திருத்தும் திறன், மூலக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்ற திறன் உட்பட, ஒரு தொழில்முறை நிபுணர் எதிர்பார்க்கின்ற கருவிகளை Power Fx கொண்டுள்ளது, இது மேம்படுத்துநர்களை மில்லியன் கணக்கான உருவாக்குநர்களுடன் பொதுவான நிலையை விரைவாகச் சென்று கண்டறிய உதவுகிறது. Power Fxஆனது எக்செல் போன்ற அதே தொடரியல் , செயலிகளை மட்டும் பகிர்ந்து கொள்ளாது, இது ஒரு பழக்கமான வழிமுறையில் செயல்படுகிறது. இதில்எக்செல் போலவே, சூத்திரங்களும் அறிவிக்கக்கூடியவை களாகும் ,விரிதாளைப் போலவே உடனடியாக மீண்டும் கணக்கிடுகின்ற திறன்கொண்டது. எவ்வாறு அல்லது எப்போது- Power Fx நமக்காக அதைச் செய்கிறது என்பதை விவரிக்காமல், பயன்பாட்டிற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதன் நன்மை உருவாக்குநர்களுக்கு உள்ளது, மாறிகள், தரவுகளின் அட்டவணைகளை கைமுறையாக புதுப்பித்த நிலையில் வைத்திருக்கின்ற கடினமான பணியிலிருந்து மேம்படுத்துநர்களை விடுவிக்கிறது. பாரம்பரிய நிரலாக்க மொழிகளின் மூலம், மாறியைப் பாதிக்கின்ற அனைத்து குறிமுறைவரிகளையும் புரிந்துகொள்வது சவாலாக இருக்கலாம், ஆனால் சூத்திரங்கள் மூலம், மதிப்பைக் கணக்கிடுவதற்கு ஒரேயொரு வழியை இது உள்ளது, இதுஅனைவரும் ஒரே உண்மை மூலத்திலிருந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.