நிகழ்வுகளை எளிதாக்குவதற்கான Casebook எனும் இயங்குதளம்

நிகழ்வுபுத்தகம் (Casebook) என்பது சமூக சேவைகளுக்கான ஒருதளமாகும் பெரும்பாலான தகவல் மேலாண்மை மென்பொருட்கள் மனிதசமூகத்தின் சேவைகளுக்காக உருவாக்கப் படவில்லை; நிகழ்வுபுத்தகம் (Casebook)ஆனது மனிதசமூக சேவை வல்லுநர்களுடன் கைகோர்த்து அவ்வாறான சேவைகளை வழங்குவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது, இது நாம்தினமும் செய்யவேண்டிய பணிகளின் அடிப்படையில் நாம் கண்காணிக்க வேண்டிய அணுக வேண்டிய தகவல்கள் எவையெவையென புரிந்துகொள்கின்றது, மேலும் அதைச் சுற்றி செயல்படுமாறு இதனுடைய முழு தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

பயனாளர் நட்பு:இந்த இயங்குதளம் நம்மைப் போலவே செயல்படுகின்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மற்றொரு நிகழ்வினைப் பற்றிய கேள்வியைக் கேட்க திசையை மாற்றவும் அல்லது திட்டமிடப்படாத அழைப்பைப் பற்றிய குறிப்புகளை எழுதவும் நம்மை அனுமதிக்கிறது, பின்னர் நம்முடைய இடத்தை இழக்காமல் முந்தைய பணிக்குத் திரும்பி செல்வதற்கும் இது அனுமதிக்கின்றது.

தனிநபர்மையம்:இது(Casebook) ஒரு மையஅச்சில் ஒரு வாடிக்கையாளர் பற்றிய அனைத்து தகவல்களையும் தொகுத்து, அவர்களின் தொடர்புகள், உறவுகள், தேவைகள் போன்ற பலவற்றைப் பற்றிய முழுமையான பார்வையை நமக்கு வழங்குகிறது. இது தரவுகளின் புள்ளிகள் மட்டுமல்ல, முழு நபரின் அடிப்படையிலும் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

நெகிழ்வானது:இது(Casebook) நாம் விரும்பியவாறு மாற்றியமைக்கக்கூடியது, அதாவது எந்தெந்தத் தகவல் முன்புற செயலாக செய்யப்படவேண்டும், எந்தெந்தத் தகவல் பின்புல மையத்தில் செயல்படவேண்டும் ஆகிய உள்ளமைத்திடவேண்டிய தேவைகளையும் , எந்தெந்த வகையிலான எச்சரிக்கைகளைப் பெற விரும்பு கின்றோம் என்றாவாறான நிகழ்வுகளை நாம் விரும்பியவாறு கட்டமைத்து கொள்ளமுடியும், மேலும் வாடிக்கையாளர்களை கவணித்துகொள்வற்கான கண்காணிப்பு அல்லது நிகழ்ச்சிநிருவாகத்தின் மூலம் திறம்பட நிர்வகித்திடுமாறு அமைத்திடலாம் வலுவான அறிக்கைகளை விரைவாகஉருவாக்கலாம்.

கைபேசியில் செயல்படும்தன்மை: இதன் வாயிலாகநம்முடைய “அலுவலக” செயல்பாடுகள் முன்னெப் போதையும் விட அதிகஅளவில் கைபேசியில் செயல்படுகின்ற தன்மையுடன் கட்டமைத்திடலாம். எந்தவொரு இணைய உலாவி இயக்கப்பட்ட சாதனத்திலும் செயல்படுமாறு இது கட்டமைக்கப்பட்டுள்ளது. கைபேசி மடிக்கணினி மேக் அல்லது கணினிஆகியஎந்தவொரு சாதனத்தில் இருந்தும் இதனை அணுகலாம்.

பாதுகாப்பு: இதில் தரவுகளின் பாதுகாப்பு முதன்மையான நிலையில் உள்ளது. இந்த மென்பொருளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் தேவையான அனைத்து இணக்கத் தேவைகளையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பயனாளருக்குமான விலை: வாடிக்கையாளர்களின் தேவைகள் , நிறுவன அளவிற்கு ஏற்றவாறு இதனுடைய விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒவ்வொரு பயனாளருக்கும் விலை நிர்ணயமானது அனைத்து நிறுவனங்களுக்கும் நிறுவன அளவிலான தீர்வுகளை அணுக அனுமதிக்கிறது, மேலும் பழமையான அமைப்புகளைப் பராமரிப்பது தொடர்பான செலவுகளைக் குறைக்க உதவுகிறது. நிகழ்வுபுத்தகமானது எந்தவொரு நிகழ்வுடன் ஒத்துழைப்பதை எளிதாக்குகிறது. : யாரிடம் எந்த கோப்பு உள்ளது என்பதை இனி கண்காணிக்க வேண்டாம். நாம் கண்காணிக்கும் அனைத்து தகவல்களும் மேககணினியில் சேமிக்கப்படுகின்றது, இது நாம் அலுவலகத்தில் இருந்தாலும் சரி, வீட்டிலிருந்து பணிசெய்தாலும் சரி அல்லது பணிபுரிகின்ற களத்தில் இருந்தாலும் சரி நம்முடைய குழுவுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய அனுமதிக்கிறது.

நிகழ்வுபுத்தகம்நம்முடைய தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது: நாம் பணிபுரிகின்ற தாட்கள் ,கோப்புறைகள் ஆகியவற்றினை எளிதில் கைவிட்டிடலாம் அல்லது தற்செயலாக விட்டுவிடலாம், அதாவது நம்முடைய வாடிக்கையாளர் களின் பாதுகாக்கப்பட்ட தகவலை எவரும் பார்க்கலாம். காகித கண்காணிப்பின் தேவையை நீக்கி, கணினி பாதுகாப்பை முன்னணியில் வைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் தரவுகளை சரியான நபர்களால் மட்டுமே அணுக முடியும் என்பதை இது உறுதி செய்கிறது.

நிகழ்வுபுத்தகம்நிகழ்வு எண்ணிற்குபதிலாகதனிநபர் மீது கவனம் செலுத்துகிறது: தரவு என்பது சூழலில் வைக்கப்படாவிட்டால் ஒன்றுமில்லை. நிகழ்வுபுத்தகத்தின் மூலம், ஒரு நபரின் குடும்ப தொடர்புகள், பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள், தேவைகள் போன்ற பலவற்றைப் பற்றிய முழுமையான தகவலை நாம் எளிதாகத் தேடக்கூடிய நபர் சுயவிவரத்தில் பெறலாம். முழு நபரையும் நாம் புரிந்து கொண்டால், நாம் மிகவும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கலாம்.

நிகழ்வுபுத்தகம் என்பது மலிவு விலையில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த தொழில்நுட்பமாகும்:இதனுடைய(Casebook)நெகிழ்வான தன்மையுடன் ஒவ்வொரு பயனாளருக்கும் விலை நிர்ணயமானது எந்த அளவிலான நிறுவனங்களுக்கும் நிறுவன அளவிலான தீர்வுகளை அணுகுவதை சாத்தியமாக்குகிறது.

கோப்புகளுடனும் கோப்புறைகளுடனும் அல்லாது, தனிநபர்களுடன் ஈடுபடுதல்: உதவி செய்பவர்களுக்கு சிறந்த மென்பொருளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் நீண்ட காலமாக காலாவதியான தகவல் மேலாண்மை அமைப்புகளுடன் போராடுகின்ற மனித சேவை வல்லுநர்களிடையே ஏற்பட்ட விரக்திக்கு பதிலளிக்கின்ற வகையில் இந்த இயங்குதளம் உருவாக்கப்பட்டது. பழங்கால தொழில்நுட்பமானது தரவு கண்காணிப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும், அதையொட்டி, இந்த குறைபாடுள்ள தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முக்கியமான கொள்கை முடிவுகளில் அதன் தாக்கத்தையும் கண்டோம். இந்த நிபுணர்களுடன் கைகோர்த்துச் செயல்படுவதன் மூலம், தற்போதைய அமைப்புகளில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது – மேலும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதை கற்றுக்கொண்டு செயல்படுகின்றது. இதனுடைய பல தசாப்த கால தொழில்நுட்ப அனுபவத்தில் இருந்து, இந்த நிகழ்வுபுத்தகத்தை உருவாக்கி, காகித பணிகளில் கவனம் செலுத்தி, மனித சேவை வல்லுநர்கள் சிறப்பாகச் செய்வதை எளிதாக்குகின்றது

மேலும் விவரங்களுக்கும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் https://www.casebook.net/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.