அனைவருக்கும் விருப்பமான யூ.எஸ்.பி இயக்கக லினக்ஸ் வெளியீடு கள்.

ஒரு கணினியின் இயக்கத்தை துவக்கி செயல்படுத்திடுவதற்கான இயக்கமுறைமையை (அதாவது லினக்ஸை) அந்த கணினியில் நிறுவுகைசெய்திடாமலேயே லினக்ஸை இயக்க முடியும் என்ற செய்தியை மனதில் கொள்க. பொதுவாக எந்தவொரு கணினியிலும் ஏதேனுமொரு இயக்க முறைமையை நிறுவுகை செய்துதான் அந்த கணினியை இயங்கிடுமாறு துவக்க முடியும் என்பதை பயனாளர்கள் பலரும் அறிந்திருக்கிறார்கள், ஆனால் லினக்ஸ் எனும் இயக்கமுறைமைஆனது வேறுபட்டதாகும் வித்தியாசமானதாகும் நம்முடைய கணினியில் அதனை நிறுவுகைசெய்யத்தேவையில்லை கணினிக்கு தேவையான கணினியின் வன்தட்டுஇயக்ககம் கூட தேவையில்லை. யூ.எஸ்.பி இயக்கக்கதிலிருந்து பலநாட்கள்அல்லது பலமாதங்கள் அல்லது பலஆண்டுகள் கூட லினக்ஸை இயக்கலாம் என்ற செய்தியை மனதில் கொள்க . இயற்கையாகவே, இவ்வாறு செயல்படுவதற்காக தேர்வு செய்ய ஒருசில வேறுபட்ட “நேரடியாக செயல்படும்” பல்வேறு லினக்ஸ் விநியோகங்கள் உள்ளன. அவைகளுள்ஒருசில பின்வருமாறு

1. Puppy Linux 3-வது உலக நாடுகளில் உடனடியாகக் கிடைக்கக்கூடிய குறைந்த விலையிலான-இறுதியான பழைய வன்பொருள் மீது இது தன்னுடையகவணத்தினைசெலுத்துகின்றது; இது சமீபத்திய நவீன கணினி அமைவுகளில் செயல்பட முடியாததாக இருந்தாலும் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பழைய கணினிகளை எளிதாக செயல்படச்செய்கிறது .இதுதற்காலி நினைவகமான ரேமில்(RAM) திறனுடன் இயங்குகின்றது , மேலும் இதனை பயன்படுத்திடும்போது ஒருசில சுவாரஸ்யமான பாதுகாப்பு வசதிகளை வழங்குகின்றது. ஒற்றையான SFS கோப்பில் ஏற்கனவே உள்ள கணினி / பயன்பாடுகள் / கோப்புகளை கட்டளை வரிகளுடன் பிற்காப்புசெய்தல், மீட்டமைத்தல் அல்லது மற்றொரு நிறுவுகைசெய்த கணினிக்கு நகர்த்துதல் ஆகிய பணிகளின்போது பயனாளர் கோப்புகளையும் அமர்வுகளையும் இது கையாளும் விதம் மிகவித்தியாசமாகஉள்ளது, . இது பழைய வன்பொருளை ஆதரிப்பதால் கணினி விரைவாக துவங்கிடுமாறு செய்கின்றது மேலும் . முதல் முறையாக லினக்ஸை முயற்சிப்பவர்கள் GUI மிகவும் எளிதாக பயன்படுத்த அனுமதிக்கின்றது. இது எதையும் உண்மையாக இயக்குகின்ற நேரடியாகசெயல்படக்கூடியதொரு வெளியீடாகும். பழைய நிராகரிக்கப்பட்ட microATX tower உடன் உடைந்த optical drive இலிருந்தது, அதாவது வன்தட்டு இல்லாத (தரவு களின் பாதுகாப்பிற்காக இது அகற்றப்பட்டிருந்தாலும்), தற்காலிக நினைவகமான ரேமும் இல்லாதநிலையிலும் SD card slotஇல் வைத்து Puppy Linux ஐ இயக்கமுடியும் பல நாட்களுக்கு அல்லது பல ஆண்டுகளுக்கு இதை இயக்கமுடியும். யூ.எஸ்.பி இயக்ககத்தின் வாயிலாக லினக்ஸ் வெளியீட்டினைப் பயன்படுத்துவதில் அவ்வளவு அனுபவம் இல்லாதவர்கள்கூட Puppy Linux ஐ கொண்டு கணினியை எளிதாக இயக்கமுடியும் .

2. Fedora and Red Hat இந்த யூ.எஸ்.பி வெளியீடு உண்மையில் செயலில்உள்ள யூ.எஸ்.பி இயக்ககத்தில் இயங்ககூடியது. இது ஒரு இணைய உலாவி, வட்டு பயன்பாடுகள் , முனைம முன்மாதிரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது, எனவே ஒரு கணினியிலிருந்து தரவுகளை மீட்பதற்கு இதைப் பயன்படுத்திகொள்ளலாம் அல்லது தேவைப்பட்டால் ஒருசில பணிகளைச் செய்வதற்காவென இணையத்தில் உலாவரலாம் அல்லது பிற கணினிகளுக்கு ssh செய்யலாம். அம்பலப்படுத்தப்பட வேண்டிய யூ.எஸ்.பி அல்லது பயன்பாட்டில் உள்ள எந்த தரவையும் சேமிக்காமல் இவை அனைத்தையும் சமரசம் செய்து கொள்ளலாம். யூ.எஸ்.பி களில் RHEL7 ,RHEL8 ஆகிய இரண்டு லினக்ஸ் வெளியீடுகளும் UEFI , BIOS க்கு துவக்கும் திறனுடன் முழு பணிச்சூழல்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை நிஜ வாழ்க்கையிலும் நேர சேமிப்பாளர்களாகவும் இருக்கின்றன. இது ஒரு சீரற்ற வன்பொருளை எதிர்கொண்டு சிக்கலை சரிசெய்ய பேருதவியாய் திகழ்கின்றது

3. Porteus இது எப்போதும் ஒரு நெகிழ்வாக செயல்படுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என ஆச்சரியபடலாம்.மேலும் நீண்டகால Slackware பயனாளராக,இருப்பவர்கள் தற்போதைய Slackஇன் கட்டமைப்பையும், நெகிழ்வான சூழலையும் Porteus ஆனது வழங்குவதை கண்டு மகிழ்சியடையலாம். இதனை ரேமில் இயங்கச்செய்துகணினியின் இயக்கத்தினை துவக்கலாம், எனவே யூ.எஸ்.பி இயக்கத்தினை கணினியுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை, அல்லது அதையூஎஸ்பி இயக்ககத்தில் இருந்தும் இயக்கலாம் கணினியின் மாற்றங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பயன்பாடுகளின் தொகுப்புகள் செயல்படுத்திட எளிதானது, மேலும் Slacker குழுவில் ஏற்கனவே தொகுப்புகள் உள்ளன. இது நமக்குத் தேவையான ஒரு நேரடி யாக செயல்படுகின்ற வெளியீடாகும்

4. Knoppix தீம்பொருளால் சேதமடைந்த விண்டோஇயக்கமுறைமை செயல்படுகின்ற கணினிகளில் பயனாளர்கள் கோப்புகளை மீட்க இதைப் பயன்படுத்திகொள்ளலாம் இது கண்ணால் காணமுடியாத பயனாளர்களுக்கு மிகவும் அணுகக்கூடிய விநியோகங்களில் ஒன்றாகும். இதன் ADRIANE இடைமுக காட்சியானது திரைகாட்சி இல்லாமல் பயன்படுத்திடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் எந்தவொரு பயனாளரும் தனக்கு தேவைப்படும் அனைத்து பொதுவான பணிகளையும் ஒரு கணினியில்இதன் வாயிலாக கையாள முடியும். .

5.நேரடியாகசெயல்படும் லினக்ஸைத் தேர்வுசெய்க Slax (டெபியன் சார்ந்த வெளியீடு), Tiny Core, Slitaz, Kali (பாதுகாப்பு மையமாகக் கொண்ட பயன்பாட்டு வெளியீடு), E-live போன்ற பெயர் குறிப்பிடப்படாத யூஎஸ்பியில் செயல்படும் பல்வேறு லினக்ஸ் வெளியீடுகள் நாம் பயன்படுத்தி கொள்வதற்காகவென தயாராக உள்ளன. நம்மிடம் காலியான யூ.எஸ்.பி இயக்ககம் இருந்தால், அதில் இவ்வாறான லினக்ஸ் வெளியீடுகளை வைத்து எந்த கணினியிலும் எந்த நேரத்திலும்லினக்ஸைப் பயன்படுத்திகொள்க! என பரிந்துரைக்கப்படுகின்றது

1 பின்னூட்டம் (+add yours?)

  1. Trackback: AI / ML இல் காட்சிப்படுத்தலுக்கான பிரபலமான திறமூல கருவிகள் – கணியம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.