மைக்ரோசாப்ட்டின் ஒன்நோட்டிற்கு மாற்றான பயன்பாடுகள்

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த மைக்ரோசாப்ட்டின் ஒன்நோட்டினை பயன்படுத்திவருவது அனைவரும் அறிந்த செய்தியே இதற்கு மாற்றாக இதே வசதிவாய்ப்புகளை கொண்ட கட்டற்ற பயன்பாடுகளும் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக உள்ளன அவைகளை பற்றிய பறவை பார்வை பின்வருமாறு
1. Simplenote இதுஒன்நோட்டிற்குமாற்றான ஒரு கட்டற்ற பயன்பாடாகும் இதனைhttps://simplenote.com என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
2. Evernote என்பதுமற்றொரு ஒன்நோட்டிற்குமாற்றான கட்டற்ற பயன்பாடாகும் இது விண்டோ, மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது மேலும்இது வாடிக்கையாளர் விரும்பியவாறு கட்டமைப்பை மாற்றியமைத்து கொள்ள அனுமதிக்கின்றது இதனைhttps://evernote.com/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
3 . Laverna என்பதுமூன்றாவதான ஒன்நோட்டிற்குமாற்றான கட்டற்ற பயன்பாடாகும் இது விண்டோ, மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இதனை https://laverna.cc/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
4. Turtl என்பதுநான்காவதான ஒன்நோட்டிற்குமாற்றான கட்டற்ற பயன்பாடாகும் இது அனுமதியற்ற மற்றவர்கள்யாரும் இதனை அணுகாதவாறு பாதுகாப்பு வசதியை வழங்குகின்றது அதனோடு உருவப்படங்களையும் கையாளும் வசதியை வழங்குகின்றது இது விண்டோ, மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஸ் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இதனை https://turtlapp.com/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க
5. Google Keep என்பதுஒன்நோட்டிற்கு மாற்றான உருவப்படங்களிலும் உரையை உள்ளீடு செய்திடும் வசதியை அளிப்பதோடு அவைகளை எளிதாக கையாளும் வசதியை வழங்குகின்றது இதனை https://www.google.com/keep/ என்ற இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்க

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.