USB-C எனும் நம்முடைய சிறந்த நண்பரை சந்தித்திடுக

இந்தUSBஇணைப்பு என்பது தற்போது நம்முடைய வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டதை நாமனைவரும் அறிவோம் அதாவது திறன்பேசி ,கைபேசி ,படப்பிடிப்பு கருவிகள் ஆகிய கையடக்க சாதனங்களின் தரவுகளை கணினியுடன் இணைத்து மேலேற்றம் செய்திடவும் கணினியிலிருந்து இவைகளுக்கு நமக்கு தேவையான தரவுகளை பதிவிறக்கம் செய்திடவும்இந்த USBஎனும் வாயில் மிகமுக்கிய பங்காற்றுகின்றன நம்முடைய மடிக்கணினி மேஜைக்கணினி ஆகியவற்றில் இணைத்திட பயன்படும்USB-வாயில்கள் USB-A வாயில்களாகும் அதாவது மிகதடிமணான கம்பிகளுடன் பெரியஅளவு வாயில்களாக கொண்டவையாகும் கையடக்க படப்பிடிப்பு கருவி ,திறன்பேசி, கைபேசி ஆகிய ஆண்ட்ராய்டு சாதனங்களின்USB வாயில்கள் USB-B வாயில்கள் ஆகும் அதாவது இவை மிகமெல்லிய கம்பிகளுடனான சிறிய அளவு இணைப்பு வாயில்களாக கொண்டவையாகும் இதேபோன்று USB-C எனும் புதியதலைமுறைமூன்றாவது வகை இணைப்பு வாயில்களும் தற்போது புழக்கத்தில் வரவுள்ளன இது மிகவும்சிறிய அதாவாது micro USB ஆக ஆனால் தட்டையாக முட்டைவடிவ மாக இதன் அமைப்பு உள்ளது இது இருபுறமும் வாயில்களில் இணைத்து பயன்படுத்திடும் வகையில் எளிதாக வசதியாக யார்வேண்டுமானாலும் பயன்படுத்திகொள்ளுமாறுஉள்ளது இந்த வாயிலானது மடிக்கணினி(laptops), கைக்கணினி(tablets) போன்ற சாதனங்களிலும் பயன்படுத்திகொள்ளும் வண்ணம்
தரவுகளை நகலெடுப்பதற்கு மட்டுமல்லாது மின்னேற்றம் செய்வதற்காகவும் அதாவது இரண்டு பயன்பாடுகளையும் ஒரேவாயிலில் அதே கம்பியன் வாயிலாக பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த வசதிகளின் மூலம் முந்தைய USB-A,USB-B ஆகிய இரு வாயில்களைவிட மிகச்சிறந்ததாக மிளிறுகின்றது மின்னல் போன்ற வேகத்தில் ஒரேயொருகைநொடி நேரத்தில் 10Gbps அளவு தரவுகளை பரிமாறிகொள்ளவும் 100w அளவு மின்னேற்றம் செய்திடவும் முடியும் அனைவரும் வருக இந்த புதிய தலைமுறை USB-C எனும் நம்முடைய சிறந்த நண்பரை பயன்படுத்தி கொள்க

1 பின்னூட்டம் (+add yours?)

  1. T.Ponnappan celll 9842306144
    ஜூன் 11, 2017 @ 04:18:03

    will you pl. tell me about the best downloader for videos

    மறுமொழி

T.Ponnappan celll 9842306144 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.