பத்தேநிமிடங்களில் நம்முடைய சொந்த கட்டற்ற இணையபக்கத்தை WIX எனும் பயன்பாட்டின்மூலம் நாமே உருவாக்கிடலாம்

 இதற்காக நமக்கு குறிமுறைவரிகளை எழுததெரியாதே இணைய வடிவமைப்ப செய்த அனுபவம் எதுவும் எனக்கில்லையே என்ற எந்தவொரு தடங்கலுமின்றி இந்த விக்ஸ் எனும் பயன்பாட்டின் உதவியுடன் நமக்கு சொந்தமான இணைய பக்கத்தை உருவாக்கிடமுடியும் இது ஒரு இலவசமான இணயபக்கத்தை உருவாக்கிடும் ஏராளமான வசதிகளையும் வாயப்புகளையும் தன்னகத்தே கொண்டதொரு பயன்பாடாகும் பொதுவாக ஒரு இணைய பக்கத்தை உருவாக்குவதற்கென   HTML or CSஆகிய குறிமுறைவரிகளின் அழகழகான இணையபக்கத்தை உருவாக்கிடுவதற்கான அனுபவ அறிவு நமக்கு இல்லையெனினும் நம்மாலும் மிகஅழகான பிரமாதமான இணைய பக்கத்தை இந்தவிக்ஸின் உதவியுடன் உருவாக்கிடமுடியும்

இதற்காக முதலில் www.wix.com/ எனும் இதனுடைய இணைய தளபக்கத்திற்கு செல்க அதில் மின்னஞ்சல் முகவரி ,கடவுச்சொற்கள் ஆகியவிவரங்களை உள்ளீடு செய்து உள்நுழைவு செய்திடுக

1

1

 உடன் விரியும் Welcom to Wix! Select a category ad view customizable templates that fit you best எனும்திரையில் Music, Entertainment, Hotel & Travel, Restaurant, One-Page, Arts, Business, Photography, Retail and even Online Shops என்பன போன்ற முதன்மை வகைகளில் நாம் எந்தமுதன்மை வகை இணைய பக்கத்தை உருவாக்கிட விரும்புகின்றோம் என்பதையும் பின்னர் அவைகளின் துனைவகைகளில் ஒன்றையும் தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் விரியும் மாதிரி படிமங்களின் பட்டியலிலிருந்து நாம்விரும்பும் மாதிரி படிமத்தை தெரிவுசெய்துகொண்டு View எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பார்வையிடுக அல்லது Edit எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் தேவையெனில் மேலும் இந்த இணைய பக்கத்தை எவ்வாறு மாறுதல் செய்து மெருகூட்டுவது என்ற ஒலிஒளி படக்காட்சி திரையில் தோன்றிடும் அதனை பார்த்துவழிமுறைவிவரங்களை அறிந்த பின்னர்   Designஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன்பின்னர் தோன்றிடும் சாளரத்தில் backgrounds, colors and fonts போன்றவைகளை அமைத்துகொள்க பின்னர் இவ்வாறு மாறு செய்த இணையபக்கத்தின் தோற்றத்தினை Before & After images என்பதன் கீழ் பார்வையிடுக மேலும் colors, fonts, textures, patterns, styles ஆகிய எந்தவொன்றையும் மாறுதல் செய்வதால்ஏற்படும் தோற்றத்தையும் பார்வையிட்டு நாம்விரும்பியவாறு சரிசெய்து அமைத்துகொள்க இதில்உள்ள உரைகளையும் தெரிவுசெய்து தேவையானவாறு மாறுதல்கள் செய்து மெருகூட்டிடுக

2

2

 இதுமட்டுமல்லாது வேறுஏதாவது சேர்த்திடவிரும்பினால் Add எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து images, text, galleries, media, shapes, lines,ஆகியவற்றில் ஒன்றை சேர்த்திடுக மேலும் தேவையெனில் புதிய பக்கங்களை கூட சேர்த்து கொள்க அதோடு   தேவையெனில் newsletter forms, social share, calendars for events and other great features ஆகியவற்றில் ஒன்றினையும் நம்முடைய இணையபக்கத்தில் சேர்த்துகொள்க

3

3

Wix App Market என்பதன் வாயிலாக அதிலுள்ளவைகளுள் தேவையானவைகளை மட்டும் தெரிவுசெய்துகொண்டு Add to Site எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய இணையபக்கத்தில் இவைகளை சேர்த்து கொள்க இறுதியாக Settings எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய இணையபக்கத்திற்கான site address, SEO , statistics போன்ற விவரங்களை உள்ளீடு செய்துகொள்க அனைத்து பணிகளும் முடிவடைந்தது என திருப்பதியுற்றால் Preview எனும்   பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய இணையபக்கத்தை பார்வையிடுக மிகச்சரியாக இருக்கின்றது என திருப்பதியுற்றால் Publish எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய இணைய பக்கத்தை வெளியிடுக அப்போது நம்முடைய இணைய பக்கத்திற்கான பெயரை உள்ளீடு செய்து Save Now எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நம்முடைய இணைய பக்கத்தை சேமித்திடுக

4

4

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.