தொடக்கரேம் வன்தட்டு (intial RAMdisk(initrd))என்றால் என்ன?

தொடக்கரேம் வன்தட்டு (intial RAMdisk(initrd))என்பது ஒரு லினக்ஸின் தொடக்க இயக்கத்தின்போது தற்காலிக மூலகோப்புகளை நினைவகத்திற்கு மேலேற்றிட உதவிடும் ஒரு கருவியாகும் . இந்த அமைவின் கோப்புகளானது கணினியின் தொடக்கஇயக்க பணியை செய்கின்றது.தொடக்கஇயக்கசெயலை மேலேற்றும் (boot loader)கருவியானது முதலில் லினக்ஸ் கெர்னலையும் பிறகு இந்த  initrdயையும் நினைவகத்திற்கு மேலேற்றுகின்றது.பின்னர் கெர்னலை செயல்படுத்த தொடங்கி initrd இன் அமைவிடத்தை அறிவிக்கின்றது. முடிவாக கெர்னலானது இந்த initrdஐ தன்னுடைய மூலகோப்புகளின் அமைவாக பொருத்தி கொள்கின்றது. முடிவான கோப்பு அமைவு நிறுவபட்டதாக கருதிகொண்டு தன்னுடைய முதல் செயலை linuxrcகோப்பின் வாயிலாக செயல்படுத்துகின்றது.  ஆயினும் தற்போது Initrams ,cramfs  ஆகிய பணிகளை புதிய வழிமுறைகளில் செயல்படுத்தபடுகின்றது.

இந்த கெர்னலானது சிறியதாகவும் எளிதானதாகவும் கையடக்கமானதாகவும் இருக்குமாறு பார்த்து கொள்க.  Initrd கோப்பானது படிக்கமட்டும என்றிருப்பதை படிக்கவும் எழுதவுமான கோப்பாக மாற்றியமைத்து நினைவகத்தை தேவையானவாறு பாகப்பிரிவினை செய்து கொள்க பின்னர் (lib*.a)என்ற நிலையான நூலகத்தினை system(),popen(),fork()ஆகிய செயலிகளின் வாயிலாக இணைப்பை ஏற்படுத்தி கொள்க.  பிறகு சரியான Boot loader ஐ தெரிவுசெய்து கொள்க. அதன்பின்னர் linuxrcகோப்பின் மூலம்  Initrd கோப்பினை உருவாக்கி வெளியீடு செய்க. இறுதியாக உட்பொதிந்த வன்தட்டினை வெளியிடுக./mnt எனும் கோப்பகத்தின் இணைப்பை நீக்கம் செய்திடுக  இதன்பின் உட்பொதிந்த வன்தட்டின்(ebedded disk) வாயிலாக தொடக்கஇயக்கத்தை செயற்படுத்திடுக.

 

 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.