மின்னோபோர்டு எனும் கணினிக்கான திறமூல வன்பொருள்

 

பொதுவாக நாம் இதுவரை கணினியின் மென்பொருளிற்கு மட்டுமே திறமூல மென்பொருட்கள் உள்ளன என தவறாக எண்ணிஇருந்து வருகின்றோம் ஆனால் தற்போது கணினியினுடைய வன்பொருட்களில் கூட திறமூல வன்பொருட்கள் உள்ளன மின்னோபோர்டு என்பதும் இவ்வாறானதொரு கணினியினுடைய திறமூல வன்பொருள் ஆகும் .இது இன்டெல்X86இன் கட்டமைப்பை அடிப்படையாக கொண்டதாகும் இது yacto projectஇலிருந்து உருவாக்கபட்ட ஒரு திறமூல வன்பொருளாகும் இந்த மின்னோபோர்டு ஆனது நம்முடைய சொந்த லினக்ஸ் உட்பொதிந்த வழங்குநரை நாமே உருவாக்கிட அனுமதிக்கின்றது இதில் luresஎன்ற கூடுதல் இணைப்பின்மூலம் இந்த மின்னோபோர்உருவாக்கிடும் பணியை பூர்த்தி செய்து முடிவிற்கு கொண்டுவரமுடியும் இதன் மூலம் இந்த lures ஆனது மின்னோபோர்டின் செயல்களை கூடுதலாக உயர்த்துகின்றது. இந்த மின்னோபோர்டில் உள்ள துனைஉறுப்புகள் பின்வருமாறு

செயலி

1GHz Intel Atom E640 processor,

1GB DDR2 RAM

இணைப்பான்

SPI,GPIO,I2C,CAN,SATA,SDIO,PCI Express Micro SD card slot,DVI

Gigabit Ethernet

USB host(x2)

மென்பொருள்

4GBmicro Sd card உடன் உட்பொதிந்த லினக்ஸ் இயக்கமுறைமையான AngstomOS

இதன் அளவு

    1. X 10.66 (4.2” x 4.2”)

இந்த மின்னோபோர்டை செயல்படுத்திடும்போது ஏற்படும் சந்தேகங்களை பின்வரும் இணையதளத்திற்கு சென்று தீர்வுசெய்து கொள்க

http://www.elinux.org/Minnowboard/ , http://www.minowboard.org/

இந்த மின்னோபோர்டை ஆதரிக்கும் இயக்கமுறைமையாக தற்போது AngstomOS என்பது உள்ளது ஆயினும் இது ஆண்ட்ராய்டு ,உபுண்டு ஆகிய லினக்ஸ் இயக்கமுறைமைகளையும் ஆதரிக்கின்றது

இதனை 199 யூஎஸ் டாலரில் உலகமெலாம் கடைவிரித்துள்ள Mouser,DigitKey,Element14,Special Computing ஆகிய விநியோகஸ்தர்களின் மூலம் பெறமுடியும்

இந்த மின்னோபோர்டினுடைய செயலை lures எனும் கூடுதல் இணைப்பின் வாயிலாக விரிவாக்கம் செய்திடமுடியும் என கண்டோம் இந்த மின்னோபோர்டில் BreakoutBoard (BOB),trainer lure,beacon lure ஆகிய luresஇன் வகைகளில் ஒன்றை பயன்படுத்தி கூடுதல் இணைப்பை பெற்றிடுக

இந்த lures ஐ பற்றி மேலும் அறிந்த கொள்ள http://www.elinux.org/Minnoboard:Lures_Specificationஎன்ற இணைய தளத்திற்கு செல்க

இந்த மின்னோபோர்டினை கொள்முதல் செய்திடும்போது ஒரு மின்னோபோர்டு ,ஒரு யூஎஸ்பி கேபில் ,4 ஜீபி மைக்ரோஎஸ்டி கார்டு, பவர்அடாப்டர் ஆகியன வழங்கபடுகின்றதாவென சரிபார்த்திடுக .

மேலும் விவரங்களுக்கு http://www.minowboard.org/என்ற இணைய தளத்திற்கு செல்க

9.1

9.1

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.