அக்சஸ்-2007- 25 நகல் உருவாக்குதல் (Replication) தொடர்ச்சி

ஒரு Replica set ஐ உருவாக்குதல்

1.நடப்பில் உள்ள தரவுதளத்தின் கோப்பினை Design Master  ஆக உருமாற்றம் செய்க.

2.பின்னர் இந்த Design Master  இலிருந்து பல்வேறு Replica set நகல்குழுவாக நகல்எடுத்துகொள்க.

3. Replica set  இற்குள் பயனாளர்கள் செயல்படுவதற்கு அனுமதிப்பதற்கான அட்டவணையை தேவையானால் மாறுதல்கள் செய்து கொள்க.

4. பயனாளர்கள் தாம் பயன்படுத்திடும் Replica set கோப்புகளில் தாம் ஏற்படுத்திய மாறுதல்களை அவ்வப்போது குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஒத்திசைவுசெய்வதன் மூலம் புத்தாக்கம்  செய்து கொள்க.

5.கட்டமைப்பின் மாறுதல்கள் எனில் Design Master  இல் மட்டும் செயற்படுத்துக.

6.ஏதெனும் பிரச்சினை அல்லது பிழைஏதும் ஏற்பட்டால் அவ்வப்போது சரிசெய்து கொள்க.

7. DoCmd object இன்  DoMem item வழிமுறையில் அக்சஸில் மறைக்கப்பட்ட கட்டளை பட்டியை திறக்கவேண்டும் இல்லையெனில் அதற்குபதிலாக DAO வை பயன்படுத்தி கொள்க.

8.இயல்புநிலையில் பயனாளர்கள் இந்த Replica set குழுவை பயன்படுத்துவதற்கு Administrator இன் அனுமதிபெற்றபின்னரே செயற்படுமாறு அமைப்பதே நல்லது.

Design Master  ஒவ்வொன்றும் ஏராளமானஅளவில் object களை கொண்டு Replica set இற்குள் இவற்றை பரிமாறிக்கொள்கின்றன. ஒருசிலமட்டுமே உள்ளுர் object  ஆக செயல் படுகின்றன அவற்றை எல்லாஇடத்திலும் பயன்படுத்தவதற்கான முழுதளாவியாக (Global)மாற்றியமைத்திட குறிப்பிட்ட   object  இன்மீது இடச்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை  தெரிவுசய்து சொடுக்குக. உடன் விரியும் குறுக்குப் பட்யியலில் உள்ள Properties என்பதை  தெரிவுசெய்து சொடுக்குக. உடன்தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியில் உள்ள Replicable என்பது தெரிவு செய்யபட்டுள்ளதாவென உறுதி படுத்திகொள்க.பின்னர்  ok என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக (படம்-25-6)இப்போது இந்த பொருளானது முழுதளாவியாக (Global) உருமாறிவிடும்.

25.6

படம் -25-6

Replicabw செயற்படும்போது ஏற்படும் பிரச்சினைகள்

1.வடிவமைப்பு பிழை(Design error): கட்டமைப்பில் வடிவமைப்பு பிழை ஏற்படுவது மிகஅரிதான செயலாகும் ஏனெனில் இந்த கட்டமைப்பை Design Master இல் மட்டும் செயற்படுத்தமுடியம் மற்ற replica set  குழுஉறுப்பினர்களில் செயற்படுத்திடமுடியாது

Mysysshema prop என்ற அட்டவணையில் வடிவமைப்பு பிழை பிரிதிபலிக்கும்.இந்த அட்டவனையை பார்த்து பிரச்சினையை சரிசெய்வதற்காக பொருளின்பெயரை மாற்றியமைத்திடுக.

2.ஓத்திசைவில் பிரச்சினை எழுந்தால்  jet engine  ஆனது முதலில் ஆவணத்தின் பதிப்பு எண்களை சரிபார்க்கினறது பிரச்சினை எழும்போது s_Generation fieldஎன்பதில் உள்ள  பதிப்பு எண்ணை ஒப்பிட்டு சரிபார்க்கின்றது  அதிக அளவு மாறுதல்கள் மற்றும் சமீபத்திய மாறுதல்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒத்திசைவு செய்து கொள்கின்றது. இரண்டு பதிப்புஎண்கள் ஒரேமாதிரியாக இருந்தால் ReplicaID எண்ணை தெரிவுசெய்து கொள்கின்றது.இவ்வாறான சமயத்தில் Conflict table (side bar) ஒன்றைஉருவாக்கி கொள்கின்றது.இந்த அட்டவணையின் மூலம் ஒத்திசைவில் பிரச்சினை ஏற்படும்போது ஒப்பிட்டுபார்த்து ஏதெனும் ஒன்றை தெரிவுசெய்துகொண்டு மற்றொன்றை நீக்கம் செய்துவிடுகின்றது அதற்காக பின்வரும் நிரல்தொடர் பயன்படுகின்றது.

நிரல்தொடர் -25-1

  Sub Resolve (dp as Database)

Dim tdfTest As DAO.TableDef

Dim rsConflict As DAO.Recordset

‘The For Each….Next loop looks at each

‘Conflict Table property for each tablein the

‘replica. If the Conflict.Table isnot a null

‘string run through the records in the conflict

‘table and perform some action on them:

For Each tdfTest In db.TableDefs

If (tdfTest.ConflictTable <> **) Then

‘Conflict occurred:

Set rsConflict = –

Db.OpenRecordset(tdfTest.ConflictTable)

‘Process each record:

rsConflict.Movefirst

Do while Not rsConflict.EOF

‘<<<

‘Perform conflict resolution in this loop.

‘Perhaps display or report each record.

‘or email a message to the replica’s owner.

‘>>>

rsConflict.Delete

‘Remove confliction record when finished:

rsConflict.MoveNext.

Loop

rsConflict.Close

End if

‘Move to  next table in rplica:

Next tdfTest

End sub

 

Replica set குழுவிற்குள் உள்ள உறுப்பினர்களுக்குள் ஒத்திசைவு செய்து கொள்வதற்காக பல்வேறுவகையான எண்ணற்ற ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. அவ்வாறெ அதேகுழுவிற்குள் உறுப்பின்ர்களுக்குள் ஒன்றுக்கொன்று எந்தநெரத்திலும் ஒத்திசைவு செய்துகொள்ளும்படியான ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன.இந்த ஒத்திசைவு செயல்கள் குறிப்பிட்ட வரிசைகிரமமாக செயற்படுத்தப்பட்டு  ஒழுங்குமுறையில் தரவுதளத்தில் புத்தாக்கம் செய்யப்படுகின்றது இவ்வாறான வரிசைகிரமமான ஒத்திசைவுசெய்வதையே Topology என அழைக்கப்படுகின்றது

பொருட்களை அடையாளம் காண்பதற்காக Replica set குழுவிற்கு முழுதளாவியாக (Global)  ஒத்த IDயை ஒரு அட்டவணைக்கு  ஜெட் எனும் இயந்திரம் (jet Engine) உருவாக்கி பயன்படுத்தி கொள்கின்றது. இந்த Design Master  இன் IDகூட சமயத்தில் பயன்படுத்திகொள்ளப்படுகின்றது.

ஜெட் எனும் இயந்திரம் (jet Engine)ஆனது Replicable வடிவமைப்பிற்கு ஏராளமான அட்டவணைகளை தரவுதளத்திற்கு உருமாற்றம் செய்கின்றது அதேபோன்று  உருமாற்றும் பண்பின் System object வாய்ப்பினை காண்பதற்காக Tools =>option =>என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்க .உடன் தோன்றிடும்  பட்டியலில்  அட்டவணையின்விவரம் (படம்-25-7)பிரதிபலிக்கும்.இவை பலமுறை ஒத்திசைவுசெய்துகொண்டேபோவதால் பெரியதாக வளர்ந்துவிடுகின்றன அதனால் அவ்வப்போது மிகப்பழையவற்றை மட்டும் நீக்கம்செய்துநினைவக இடம் போதுமான அளவிற்கு இருக்குமாறு பராமரித்துகொள்க.இந்த அட்டவணையின் உறுப்புகள் பின்வருமாறு

25.7

படம் -25-7

MSysRep Info :இது Design masterஐ சுட்டிகாட்டுவதால்  GUIDபோன்ற பல்வேறு முடிவான நகல்குழு இதில் தேக்கிவைக்கப்பட்டுள்ளன.

MSysReplicas: இது ஒவ்வொரு நகல் குழுஇருக்குமிடத்தின் பாதைபற்றிய தகவல்களை கொண்டிருக்கும்.

MSysTable Guid:  ஒவ்வொரு உண்மைநகல் கோப்பு பற்றிய தகவல்களை ஒரு Guid இற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும்.

MSys Schema Prob: இது வடிவமைப்பு ஒத்திசைவு பிழையை தேக்கிவைத்துள்ளது.

MSysError: இது ஒத்திசைவுபிழையைமட்டும் தேக்கிவைத்துள்ளது.

MSys Exchange Log: இது ஒத்திசைவின் அனைத்துதகவல்களையும் கொண்டுள்ளது.

MSys Side Table:ஒத்திசைவில் சிக்கல் ஏற்படும்போதுமட்டும் இந்த டேபிள் உருவாகின்றது.

MSys SchChange :இது replicaவின் உள்ளுர் அட்டவணையும் அதில் ஏற்படும் மாறுதல்களையும் கொண்டுள்ளது

MSysTrouble Shoot:ஒத்திசைவின்போது நீக்கம்செய்யபட்டவை பற்றிய தகவல்களை கொண்டிருக்கும்ம் தேவையானால் அதனை தேடிப்பிடித்து மீட்டெடுத்து கொள்ளலாம்

MSysTransAddress: இது replicaகுழுவின் ஒத்திசைவுசெய்யபட்ட அனைத்துதகவல்களையும்  அனைத்து உறுப்பினர்களின் முகவரி விவரங்களையும் கொண்டிருக்கின்றது.

MSysShedule: இது ஒத்திசைவுசெய்வதற்கான வரிசைகிரமத்தை உருவாக்கு வதற்கான அட்டவனையாகும்

MSys GenHistory: இது தலைமுறைதகவல்களை  தேக்கிவைத்துள்ளது கோப்புகளின் முந்தைய பதிப்பு , தற்பொதைய பதிப்பு போன்ற தகவல்களை இதன் மூலம் அறிந்து Replica வின செயல் தொடர்நது நடைபெறுவதற்கு இதனை பயன்படுத்திகொள்ளலாம்

MSysothersHistory: மற்ற நகல் குழுவினை பற்றிய தலைமுறை தகவல்களை அறிந்துகொள்வதற்கு இதுபயன்படுகின்றது.

மேலும் அதிகப்படியான அட்டவணைகளை உருவாக்குவதற்க ஏதுவாக கணிப்பொறியின் நினைவகம் இருக்கின்றதாவென சரிபார்த்துகொள்க.

New field  ஒவ்வொரு Replicable அட்டவணையிலும் ஒவ்வொரு நகலும் Gen_Notes.Gen_Photo s_GUID ஆகிய மூன்று புதிய புலங்களை சேர்ப்பதற்காக ஜெட் எனும் இயந்திரத்தில் (jet Engine) உள்ள Replica Id க்கு சமமான புலம் இருக்கின்றதாவென சரிபார்க்கின்றது. இல்லையென்றால் s_GUID என்ற புதிய புலத்தினை உருவாக்கி Replicable to Auto number ஆக உருவாக்கி கொள்கின்றது.இதுவே மாறுதல்களை மீண்டும் தேடிப்பிடித்து கொண்டுவருவதற்கு பயன்படுகின்றது.

S_Generation: ஒவ்வொரு குழுவிற்கும் இந்த புதிய புலத்தினைஉருவாக்கி கொள்கின்றது. ஒத்திசைவு இல்லை எனில் 0 என இதன் மதிப்பிருக்கும் ஒத்திசைவு செய்துகொண்டால் 1 என மாறிவிடும் இதனடிப்படையில் குறிப்பிட்ட ஆவனமானது ஒத்திசைவு செய்யபட்டுள்ளதா இல்லையாவென அறிந்துகொள்ளலாம்.

S_Lineage  இதுவே ஆவனத்தினை சுட்டும் பெயராகும்  இதனைக்கொண்டு குறிப்பிட்ட ஆவனங்களின் பதிப்பினை அறிந்துகொள்ளலாம்  Auto number   எனும் புலமானது புதிய ஆவனத்தினை கோரும்போது படிப்படியாக புதியஎண்ணைஉருவாக்கி சேர்த்து கொண்டே போகின்றது.அதனால் ஒத்திசைவு செய்திடும்போதும் புத்தாக்கம் செய்திடும்போதும்  பிரச்சினை எழுகின்றது .இதனை தவிர்ப்பதற்காக  Random Auto number   என்றவாறு replicaவை  உருமாற்றம் செய்திடும்போது உருவாக்கிகொள்கின்றது இது  தரவுதளத்திற்குஒரு முதன்மை திறவுகோளாக செயல்படுகின்றது.

Design Master  கட்டமைப்பபை மாறுதல்செய்தல்

இதனுடைய கட்டமைப்பை மாறுதல் செய்வதால் தரவுகளின் ஒத்திசைவில் பிரச்சினை ஏற்படுகின்றது. அதனால் அனுமதிபெற்றவர்கள் மட்டுமே இதனை அனுகமுடியும் என அமைத்துகொள்வது நல்லது.Replicaவில் காப்புநகல் செய்வதை தவிர்த்திடுக. மேலும் அதிகஅளவிற்கு புத்தாக்கம் செய்வதையும் தவிர்த்திடுக.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.