அக்சஸ் 2007-7-படிவத்தை உருவாக்குதல்

அக்சஸ்2007-இல்  படிவத்தை உருவாக்குவது மிக எளிதான செயலாகும், இதற்காக Create என்ற தாவியின் பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் Create என்ற பட்டியின்  Form என்ற குழுவில்  உள்ள பின்வரும் வெவ்வேறு படிவங்களை உருவாக்கும் பொத்தான்கள் உள்ளன,

1,Form:புதியதாக படிவத்தை உருவாக்கி தகவல்களை உள்ளீடுசெய்ய இந்த பொத்தான் உதவுகின்றது,மேலும் குறிப்பிட்ட படிவத்தை தெரிவுசெய்யவும் திறந்து மாறுதல் செய்யவும் இந்த பொத்தான் உதவுகின்றது,

2.Split Form:படிவத்துடன் உள்ள திரையின் தோற்றத்தை மேல்பகுதியில் தரவுத்தாளாகவும் கீழ்பகுதி படிவமாகவும்பிரிக்கப்பட்டு பிரிதிபலிக்கப் பயன்படுகின்றது,மேலும் தரவுத்தாளில் தெரிவுசெய்யப்பட்ட ஆவணங்களின் தகவல்களை படிவத்தில்உள்ளீடு செய்யவும் பயன்படுகின்றது

3.Multiple items:வரிசைக்கொன்றாக ஒன்றுக்குமேற்பட்ட ஆவணங்களை தரவுத்தாளில் வரிசையாக பிரிதிபலிக்கப்பயன்படுகின்றது,

4.pivot chart:படிவத்தை உருவாக்குவதற்கான தயார்நிலையில் உள்ள ஆய்ந்தறி வரைபடம்  பயன்படுகின்றது,

5.Blank Form:கட்டுப்பாட்டு பொத்தான்கள் எதுவுமில்லாமல் காலியான படிவத்தை உருவாக்கப் பயன்படுகிறது,

6.Form Design View: இது ஒரு முழுமையான படிவத்தை காலியான படிவத்திலிருந்து உருவாக்கப்  பயன்படுகின்றது

7.More Form:மேலே கூறிய படிவங்களின் வகை போதவில்லையெனில்இந்த பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் பட்டியலிலிருந்து மேலும் நமக்குத்தேவையானதை தெரிவுசெய்து கொள்ள இது உதவுகின்றது,

7.1

படம் -7-1

I.புதிய படிவத்தை உருவாக்குதல்

1,முதலில் வழிகாட்டி பலகத்தின் மூலம்tbl product என்றவாறு தெரிவுசெய்து  சொடுக்குதல் செய்து ஏற்கனவே நாம் உருவாக்கிய அட்டவணையை  திறந்து கொள்க,

2, அதன் பின்னர் create என்ற தாவியின் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் create என்ற பட்டியின்  form என்ற குழுவில்  உள்ள form என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் புறவமைப்பு காட்சியில் tbl product என்ற அட்டவணையில் உள்ள புலங்களுடன் புதியதான படிவம் ஒன்றினை  திரையில் பிரிதிபலிக்கச் செய்கின்றது,

II.பிரிந்த படிவத்தை (Split Form) உருவாக்குதல்

1, முதலில் வழிகாட்டி பலகத்தின் மூலம்tbl product என்றவாறு தெரிவுசெய்து ஏற்கனவே நாம் உருவாக்கிய அட்டவணையை திறந்து கொள்க,

2, அதன் பின்னர் create என்ற தாவியின் பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் create என்ற பட்டியின்  form என்ற குழுவில்  உள்ள split form என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் புறவமைப்பு காட்சியில் tbl product என்ற அட்டவணையின் அடிப்படையில் மேல்பகுதியில் தரவுத்தாளும் கீழ்பகுதியில் படிவமும் சேர்ந்து இரண்டுபாகமாக பிரிந்துதோன்றும்,

III.பலபொருட்களை (Multiple items) உருவாக்குதல்

1, முதலில் வழிகாட்டி பலகத்தின் மூலம்tbl product என்றவாறு தெரிவுசெய்து  சொடுக்குதல் செய்து ஏற்கனவே நாம் உருவாக்கிய அட்டவணையை திறந்து கொள்க,

2, அதன் பின்னர்  create என்ற தாவியின் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் create என்ற பட்டியின்  form என்ற குழுவில்  உள்ள multiple item என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் புறவமைப்பு காட்சியில்  tbl product என்ற அட்டவணையின் அடிப்படையில் தரவுத்தாள் போன்ற தோற்றத்துடன் பலஆவணங்களடங்கிய காட்சிவிரியும்,

IV. காலியான படிவத்தை உருவாக்குதல்(Blank form)

1, முதலில் வழிகாட்டி பலகத்தின் மூலம்tbl product என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ஏற்கனவே நாம் உருவாக்கிய அட்டவணையை திறந்து கொள்க,

2, அதன் பின்னர் create என்ற தாவியின் பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் create என்ற பட்டியின்  form என்ற குழுவில்  உள்ள blank form என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் புறவமைப்பு காட்சியில்  tbl product என்ற அட்டவணையின் அடிப்படையில் புதியகாலியான படிவம் ஒன்று திரையில் தோன்றும்,

VI.தரவுத்தாள் போன்ற படிவத்தை உருவாக்குதல்

1, முதலில் வழிகாட்டி பலகத்தின் மூம்tbl product என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ஏற்கனவே நாம் உருவாக்கிய அட்டவணையை திறந்து கொள்க,

2, அதன் பின்னர் create என்ற தாவியின் பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் create என்ற பட்டியின்  form என்ற குழுவில்  உள்ள more form என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியலிலிருந்து data sheet form என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன்tbl product என்ற அட்டவணையின் அடிப்படையில் புதியகாலியான படிவம் தரவுத்தாள் போன்றதோற்றத்துடன் திரையில் தோன்றும்,

VI.படிவ வழிகாட்டியை (Form wizard)  பயன்படுத்தி படிவத்தை உருவாக்குதல்

அக்சஸ்-2003 ஐ போன்று  வழிகாட்டியின் உதவியுடன் இவர் கேட்கும் கேள்விக்கு நாம் பதில் அளித்து வந்தால் இறுதியில் நாம் அளித்த பதிலுக்கு ஏற்றவாறு  புதிய படிவத்தை உருவாக்குவது போன்று அக்சஸ் -2007 லும் புதிய படிவத்தை உருவாக்கலாம்,

1, முதலில் வழிகாட்டி பலகத்தின் மூலம்tbl prnoduct என்றவாறு தெரிவுசெய்து  சொடுக்குதல் செய்து ஏற்கனவே நாம் உருவாக்கிய அட்டவணையை திறந்து கொள்க,

2, அதன் பின்னர் create என்ற தாவியின் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் விரியும் create என்ற பட்டியின்  form என்ற குழுவில்  உள்ள more form என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் பட்டியிலிலிருந்து form wizard என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் விரியும் form wizard இல் tble/queryஎன்பதில்  உள்ள கீழிறங்கு பட்டியிலில் இருந்து நாம் உருவாக்கப்போகும் படிவத்திற்கான அட்டவணையை தெரிவு செய்க,

பின்னர் விரியும் அட்டவணையிலிருக்கும் புலங்களின் பட்டியல்கள் available field என்பதன் கீழ் தோன்றும் .இவையனைத்தும் தேவையெனில் மையத்தில் இருக்கும் >> என்ற இரட்டைக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் selected fieldஎன்பதன்கீழ் இவை சென்று அமர்ந்துவிடும், குறிப்பிட்ட ஒருசில புலம் மட்டும் தேவையெனில் அதனைமட்டும் தெரிவுசெய்து  >என்ற ஒற்றைக் குறியை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் தெரிவுசெய்த ஒருபுலம் மட்டும் selected field-இல்  சென்றமர்ந்துவிடும்,

selected field-இல் உள்ள புலங்களில் தேவையற்றதை நீக்குவதற்கு மையத்தில் உள்ள  <என்ற ஒற்றைக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக,உடன் குறிப்பிட்ட புலம் நீக்கம்செய்யப்பட்டுவிடும் பின்னர் next என்ற பொத்தானை சொடுக்குதல் செய்து அடுத்த படிமுறைக்கு செல்க,

இவ்வாறு அனைத்து படிமுறைகளிலும் வழிகாட்டி கேட்கும் கேள்விக்கு தக்க பதிலை அளித்து இறுதியாக finish என்ற  பொத்தானை சொடுக்குக உடன் நாம் விரும்பியவாறான  படிவம் ஒன்றினை திரையில் பிரிதிபலிக்கச் செய்யும்,

7.2

படம்-7-2

இவ்வாறு மேலே கண்ட படிமுறைகளில்ஒன்றை பின்பற்றி ஒருபடிவத்தை உருவாக்கியவுடன் திரையில் designஎன்ற தாவி பொத்தான்  எனும் சூழ்நிலை பட்டியுடன் வடிவமைப்பு நிலையில் படிவம் ஒன்று தோன்றும்,இந்த designஎன்ற தாவிபொத்தானின்  சூழ்நிலை பட்டியின்  control என்ற குழுவின்கீழ் உள்ள பல்வேறு கட்டுபாடுகளில் நாம் விரும்பியவற்றை மட்டும் படிவத்தில் சேர்த்து கொள்ளலாம், இந்த கட்டுப்பாடுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்,அவை

1,கட்டுண்ட கட்டுப்பாடுகள்(bound control): இவைகள் தொடர்புடைய அட்டவணைகளின் புலங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் படிவத்தில் செய்யும் மாறுதல்கள் உடனுக்குடன் தொடர்புடைய அட்டவணையின் புலங்களிலும் மாறுதலாகி நிகழ்நிலை படுத்திவிடும்,

2,கட்டற்ற கட்டுப்பாடுகள்(unbound control):இவைகள் அட்டவணைகளின் புலங்களுடன் தொடர்புகொண்டிருக்காது,படிவத்தில் செய்தமாறுதல் வேறு எங்கும் மாறுதலாகி நிகழ்நிலை படுத்தபடாது, இவை படிவத்தில் உரையின் பெயர்பட்டியை உருவாக்க பெரிதும் பயன்படுகின்றன,

3,கணக்கிடப்பட்ட கட்டுப்பாடுகள்(calculated control):இவை செயலி (function ) அல்லது கணக்கீடுகளின் அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றது,இதுவும் கட்டுண்ட படிவத்தை போன்றதே கட்டுப்பாடுகளில் செய்கின்ற மாறுதல்கள் உடனுக்குடன் தொடர்புடைய புலங்களில் மாறுதலாகி நிகழ்நிலை படுத்தபடும்

எந்தவொருபடிவத்திலும் கட்டுப்பாடுகளை (control)இரண்டுவழிகளில் சேர்க்கமுடியும்

1,design  என்ற தாவிபொத்தான்  எனும் சூழ்நிலை பட்டியின்  control என்ற குழுவில் உள்ள control என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  இடம்சுட்டியை படிவத்தில் செவ்வகம் போன்ற உருவத்தை unbound control ஐ உருவாக்கலாம்,

2,அட்டவணையின் புலப்பட்டியிலிலிருந்து ஒரு புலத்தை பிடித்து இழுத்து வந்து காலியான படிவத்தில் விடுவதன்மூலம் உருவாக்கலாம்,

பின்வரும் படிமுறைகளை பின்பற்றி ஒருபடிவத்தில் unbound controlஐ உருவாக்கலாம்,

1,create என்ற தாவியின் பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் create என்ற பட்டியின்  form என்ற குழுவில்  உள்ள form design என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன்  புதிய காலியான படிவம் ஒன்று திரையில் design என்ற சூழ்நிலை பட்டியுடன் வடிவமைப்பு காட்சியில் தோன்றும்,

2,இந்த பட்டியின்  control என்ற குழுவில் உள்ள text என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் குறிப்பிட்ட படிவம் வித்தியாசமான வண்ணத்தில் தோன்றும்,

3,இடம்சுட்டியை சாளரத்திற்குள் கொண்டுசெல்க உடன் இடம்சுட்டியின் தோற்றம் மாறிவிடும்,இடன் சுட்டியின்  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்து கட்டுபாட்டை வரைக,

4,இவ்வாறே option என்ற பொத்தானை சொடுக்குதல் செய்து படிவத்தில் வரைக,

5,மேலும் இவ்வாறே check box என்ற பொத்தானை சொடுக்குதல்செய்து படிவத்தில் கட்டுபாட்டை வரைக,

புலப்பட்டியிலில் இருந்து கட்டுபாட்டை இணைத்தல்

Design என்ற  தாவி பட்டியின்  tools  என்ற குழுவில் உள்ள field list என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் தோன்றும் விண்டோவின் வலதுபுற பலகத்தில் அட்டவணையிலுள்ள புலங்கள் பட்டியலாக பிரிதி பலிக்கும்  இதிலிருந்து தேவையான புலத்தை பிடித்து இழுத்து சென்று படிவத்தில் விடுவதன்மூலம் கட்டுண்ட கட்டுப்பாடுகளை உருவாக்கலாம் எந்த இடத்தில் சுட்டியின் பொத்தானை விடுவிக்கின்றோமோ அவ்விடத்தில்தான்  புலக்கட்டுப்பாடு உருவாகும்,அதனால் சரியான இடத்தில் சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை விடுவிக்கவும்,தேவையானால் சரியான இடத்திற்கு மாற்றி அல்லது அளவை சரிசெய்து கொள்க,

கட்டுபாட்டை தெரிவுசெய்தல்

இவ்வாறு உருவாக்கிய கட்டுபாடு ஒன்றை தெரிவுசெய்தால் உடன் இதனுடன் தொடர்புடைய attached lable -உம் தெரிவுசெய்யப்படும் இந்த பெயர்பட்டியின் நான்கு முனையிலும் கைப்பிடிபோன்ற தோற்றமளிக்கும் ,இதன் இடதுபுறம் மேல்பகுதியின் முனையிலிருப்பது, கட்டுப்பாட்டை இடம் மாற்றி நகர்த்த உதவும் move handle ஆகும்,இதன் மற்ற நான்கு முனைகளிலும் இருப்பவை இதன் அளவை மாற்றியமைக்க உதவிடும் sizing handle ஆகும்,

7.3

படம்-7-3

ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுபாட்டினை தெரிவுசெய்தல்

1,shiftஎன்ற  விசையை அழுத்தி பிடித்து கொண்டு உருவாக்க விரும்பும் ஒவ்வொருகட்டுப்பாட்டையும் தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வதன்மூலம்

2, நாம் வரையவிரும்பும் கட்டுப்பாடுகள் அனைத்தையும்சுட்டியைவைத்து தெரிவுசெய்துஇழுத்துசெல்வதன்மூலம்

3,வரைவுகோட்டில் சுட்டியைவைத்து சொடுக்குதல்செய்து நாம் வரையவிரும்பும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தெரிவுசெய்யும்படி இழுத்துசெல்வதன்மூலம் தெரிவுசெய்யலாம்,

தெரிவுசெய்த கட்டுபாட்டினை விடுவித்தல்

தெரிவுசெய்த கட்டுபாட்டிற்கு வெளியே காலியான படிவத்தில் சுட்டியை வைத்து பிடித்துள்ள சுட்டியின் பொத்தானை விடுவித்துவிடலாம் உடன் கட்டுபாட்டினை சுற்றி தோன்றியிருந்த கைப்பிடிகள் மறைந்துவிடும்

கட்டுபாட்டினை மாறுதல் செய்தல்

1, move handle ஐ பிடித்து இழுத்து சென்று நாம் விரும்பும் இடத்தில் கட்டுபாட்டினை அமரும்படி செய்துவிடலாம்

2, sizing handle ஐ பிடித்து இழுத்து செல்வதன் மூலம் கட்டுப்பாட்டின் உருவத்தை நாம் விரும்பியவாறு மாற்றி அமைக்கலாம்,

தானாகவே கட்டுபாட்டின் உருவஅளவை மாற்றிஅமைத்தல்

மாற்றியமைக்கவிரும்பும் கட்டுபாட்டினை தெரிவுசெய்து கொண்டு layout என்ற  தாவியின் பொத்தானை   தெரிவுசெய்து சொடுக்குக , உடன் விரியும் layout  என்ற பட்டியின்  sizeஎன்ற குழுவில் உள்ள பின்வரும் பொத்தான்களை தெரிவு செய்வதன் மூலம் தானாகவே மாறியமையும்படி செய்யலாம்,

1,To fit:கட்டுப்பாட்டில் உள்ள உரைக்கு  ஏற்ப கட்டுப்பாட்டின் உருவஅளவை மாற்றியமையும்படி செய்துகொள்ளும்,

2.To Tallest:கட்டுப்பாட்டின் உயரத்தை மட்டும் அதிகபடுத்தும்

3.To Shortest:கட்டுப்பாட்டின் உயரத்தை மிகவும் குறைத்தவிடும்

4.To Grid:கட்டுப்பாட்டைச்சுற்றியுள்ள கட்டத்திற்கு ஏற்ப கட்டுப்பாட்டின் உருவத்தை மாற்றியமைத்தவிடும்

5..To Widest:கட்டுப்பாட்டின் அகலத்தை மிக அதிகப்படுத்திவிடும்

6.To Narrow:கட்டுப்பாட்டின் அகலத்தை மிககுறைவாக ஆக்கிவிடும்,

கட்டுபாட்டினை சரி(alignment)செய்தல்

layout  என்ற தாவிபொத்தான் பட்டியின்  alignment என்ற குழுவில் உள்ள பின்வரும் பொத்தான்களை பயன்படுத்தி கட்டுபாட்டினை சரிசெய்து அமைக்கலாம்

1,Left:இது கட்டுபாட்டினை படிவத்தின் இடதுபுறம் தள்ளி யமைத்திட உதவுகின்றது

2.Right:கட்டுபாட்டினை படிவத்தின் வலதுபுறம் தள்ளி யமைத்திடஇது உதவுகின்றது,

3.Top: கட்டுபாட்டினை படிவத்தின் மேல்பகுதியில் தள்ளி யமைத்திடஇது உதவுகின்றது,

4.Bottom: கட்டுபாட்டினை படிவத்தின் கீழ்பகுதியில்தள்ளி யமைத்திடஇது உதவுகின்றது,

5.To Grid: கட்டுபாட்டினை படிவத்தின் கட்டத்திற்குள்அமருமாறுஅமைத்திடஇது உதவுகின்றது,

கட்டுபாட்டின் தோற்றத்தை மாற்றியயமைத்திட

மாற்றியமைக்க விரும்பும் கட்டுபாட்டினை தெரிவுசெய்க,design என்ற  தாவியின் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் design  என்ற தாவிபொத்தான் எனும் பட்டியின்  font என்ற குழுவில்  உள்ள font sizeஎன்ற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக,உடன் விரியும் கீழிறங்கு பட்டியலிலிருந்து 15 என்றும் Bold என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து  தடிமனாகவும் font color என்ற பொத்தானை சொடுக்குக விரியும் பட்டியில் தேவையான வண்ணத்தையும் தெரிவுசெய்து கட்டுபாட்டின் மாற்றியமைத்துகொள்க,இதே வழிமுறையை பின்பற்றி மற்ற கட்டுபாட்டின் தோற்றத்தையும் தேவையானால் மாற்றியமைத்துகொள்க,

கட்டுபாட்டினை குழுவாக ஒன்றுசேர்த்தல்

குறிப்பிட்ட சில கட்டுப்பாடுக்ள் ஒத்த செயலை செய்வதால் இவைகளை ஒரே குழுவாக இருந்தால் நல்லது என விரும்புவோம் அந்நிலையில் குழுவாக சேர்க்க விரும்பும் கட்டுப்பாடுகளைshift என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு அனைத்தையும் தெரிவுசெய்து கொள்க,

பின்னர் layout என்ற பட்டியின்  layoutஎன்ற குழுவில் உள்ள Group என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் நாம் தெரிவுசெய்திருந்த கட்டுபாடுகள் அனைத்தையும் சுற்றிசெவ்வகம் போன்ற பெட்டியொன்று உருவாகி ஒன்றாக ஒருங்கிணைத்தவிடும்,இந்த செவ்வக பெட்டிக்குள் சுட்டியைவைத்து layoutஎன்ற பட்டியின்  layoutஎன்ற குழுவில் உள்ள unGroup என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, உடன் நாம்உருவாக்கியிருந்த குழுவான கட்டுபாடுகள் விடுவிக்கப்பட்டு தனித்தனி கட்டுபாடாகிவிடும்,

நீக்கம் செய்யவிரும்பும் கட்டுபாட்டின்மீது சுட்டியை வைத்துdel என்ற விசையை அழுத்துக, உடன் படிவத்திலிருந்து இந்த கட்டுபாடு நீக்கம் செய்யப்பட்டுவிடும்

பெயர் பட்டியை கட்டுபாட்டிற்குள் இணைத்தல்

எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டில் உள்ள பெயர்பட்டியை நீக்கம் செய்திருந்தால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் உருவாக்கி இணைத்தவிடலாம்

1,design என்றதாவி பொத்தான் பட்டியின்  control  என்ற குழுவில்உள்ள lable என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

2,பின்னர் design என்ற விண்டோவின் படிவத்தில் சுட்டியைவைக்கவும் உடன் இடம் சுட்டியின் உருவம் உரைபெட்டி போன்று மாறியிருக்கும்

3,அதன்பின்னர் சுட்டியின்பொத்தானை சொடுக்குதல்செய்து பிடித்துகொண்டு செவ்வகம்போன்ற உருவத்தை வரைக,

4,பின்னர் இவ்வுருவத்திற்கு ஒருதலைப்புபெயரை தட்டச்சு செய்து செவ்கத்திற்கு வெளியில் சுட்டியை வைத்து பிடித்திருந்த சுட்டியின்பொத்தானை விட்டுவிடுக,

5,அதன்பின்னர் Homeஎன்ற தாவியின் பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Homeஎன்ற தாவி பொத்தான் எனும் பட்டியின்  clib boardஎன்ற குழுவில் உள்ள cut என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக ,

6பின்னர் இந்த உரைபெட்டியை தெரிவுசெய்க,

7,அதன்பின்னர் மீண்டும் Homeஎன்ற தாவிபொத்தான் எனும் பட்டியின்  clib boardஎன்ற குழுவில் உள்ள paste என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக ,உடன் பெயர்பட்டியுடன் உரைபெட்டி ஒன்றிணைந்துவிடும்,

கட்டுபாட்டின் வகையை மாற்றியமைத்தல்

1,lable என்ற கட்டுபாட்டினை தெரிவுசெய்க,del என்ற விசையை அழுத்துக உடன் இந்த பெயர்பட்டி நீக்கம் செய்யப்பட்டுவிடும்

2,ஏதேனும் தேர்வுசெய்பெட்டியின்மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்க. உடன் தோன்றும்  பட்டியலில் change to என்றவாறு தெரிவுசெய்து சொடுக்குக , உடன் விரியும் துனை பட்டியலில்  Toggle என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக ,

3,பின்னர் இதன் அளவை தேவையானவாறு மாற்றி யமைத்திடுக பின்னர் இதன் உரைபகுதியில் இடம்சுட்டியை வைத்து இதன் பெயரை தட்டச்சுசெய்க,

பண்பியல்பு தாளினை பிரிதிபலிக்கச்செய்தல்

நாம் விரும்பும் ஏதேனும் ஒரு கட்டுபாட்டின் மீது சுட்டியைவைத்து design என்றதாவி பொத்தான் பட்டியின்  tools என்ற குழுவில் உள்ள property sheetஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக , உடன் திரையின் வலதுபுறத்தில் property என்ற உரையாடல் பெட்டி தோன்றும் இவ்வாறு பண்பியல்பை மாற்றம்செய்யவிரும்பும் கட்டுபாட்டினை தெரிவுசெய்து தொடர்புடைய பண்பியல்புபெட்டியை திரையில் தோன்றச்செய்தபின்னர் தேவையானவாறு மாற்றியமைத்துவிடலாம்

அந்த பண்பியல்பு பெட்டியில் உள்ள name என்பதில் என்ன தட்டச்சு செய்கின்றோமோ அதுதான் இந்த கட்டுபாட்டின் பெயராக பிரிதிபலிக்கும்,

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.