அக்சஸ்2007 -5-வினாவில் செயற்குறி , வெளிப்பாடுஆகியவற்றின் பயன்

  செயற்குறி , வெளிப்பாடு ஆகியவற்றை பயன்படுத்தி கணக்கீடு செய்து தகவல்களை பெறுவது,மதிப்புகளை ஒப்பீடுசெய்வது, பல்வேறு வடிவமைப்பில் மதிப்புகளை பிரிதிபலிக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் ஒரு வினாவை உருவாக்கி பயன்படுத்தமுடியும்

     இந்நிலையில்  செயற்குறி(Operator) என்றால் என்ன? என்ற கேள்வி எழும்,

 எண்களை கூட்டுதல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல் போன்ற கணக்கீடு செயல்களை செய்தல், மதிப்புகளை ஒப்பீடு செய்தல்,எழுத்துகளை சரமாக தொகுத்தல், தரவுகளை வடிவமைப்பு செய்தல் என்பன போன்ற பணிகளை செய்ய உதவிடும் குறியீடுகளையே செயற்குறி என்பர்,

   இந்த செயற்குறிகளும் இதரபொருட்களும் சேர்ந்ததையே வெளிப்பாடு (Express) என்பர்,

இந்த செயற்குறிகள் பலவகையாகவுள்ளன,அவை

கணக்கீடுகளுக்கு உதவிடும் +,-,/,*, என்பனபோன்றவை கணித செயற்குறிகள் ஆகும்,

உறவுகளை குறிப்பிடுவதற்கு உதவிடும் =,<,>,=>,<= என்பன போன்றவை உறவு செயற்குறிகள் ஆகும்,

எழுத்துகளில் பயன்படுத்தப்படும் &, ? என்பன போன்றவை உரை செயற்குறிகள் ஆகும்,

தருக்கங்களை குறிப்பிட உதவிடும் or,not,and என்பன போன்றவை தருக்க செயற்குறிகள் ஆகும்

இவற்றிற்குள் அடங்காதவைகளே இதர செயற்குறிகள் ஆகும்,

இந்த செயற்குறிகளின் முன்னுரிமை வரிசை பின்வருமாறு

முதலில் கணிதசெயற்குறி,பின்னர் தருக்க செயற்குறி என்றவாறு வரிசைக்கிரமமாக அமையும்,

பல்வேறுநிபந்தனைளை குறிப்பிடுவதற்கும், சிக்கலான வினாவை உருவாக்குவதற்கும் இந்த செயற்குறிகள் பெரிதும் உதவிபுரிகின்றன,

ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற மதிப்புகளை குறிப்பதற்கு Notஅல்லது <>ஆகிய செயற்குறிகள் வினாவின் வெளிப்பாடுகளுக்கு முன்பகுதியில் பயன்படுத்தப் படுகின்றன,

இந்த செயற்குறிகளை பயன்படுத்துவதற்கான செயல்முறை பின்வருமாறு

1,முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl contacts , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

 2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name,state ஆகிய புலங்களை QBEயில் சேர்த்திடுக

3, இதன்பின்னர்QBEயில் state என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4, பின்னர்இதே புலத்தில்  TN என தட்டச்சு செய்க,

உடன் TN  என்பதன் முன்புறமும் பின்புறமும் அக்சஸ் ஆனது தானாகவே மேற்கோள் குறியை (படம்-1) உருவாக்கிவிடும்,

 5.1படம்-1

எண்களுடன் கூடிய நிபந்தனையை உள்ளீடுசெய்தல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2.பின்னர் priceஎன்ற புலத்தை tbl sales என்ற அட்டவணையிலிருந்தும் description , category ஆகிய புலங்களை tbl product என்ற அட்டவணையிலிருந்தும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக

3, அதன்பின்னர் QBEயில் Priceஎன்பதன்கீழ்உள்ள sort என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4,உடன் தோன்றும் நிபந்தனைதிரையில் Ascending என்பதை கீழிறங்கு பட்டியலிலிருந்து தெரிவு செய்க,

5,பின்னர் QBEயில் Price என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

6, அதன்பின்னர் அதில் <10000 என தட்டச்சுசெய்க (படம்-2), உடன் ரூபாய் 10000 க்கு மேல் உள்ளவற்றை மட்டும் பட்டியலிடும்,

 5.2   படம்-2

OR செயற்குறியை ஒரு புலத்தில் பல மதிப்புகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்துதல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name,state ஆகிய புலங்களையும்,     tbl sales என்ற அட்டவணையிலிருந்து Sale date என்ற புலத்தையும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக.

3, அதன்பின்னர் QBEயில் state என்பதன்கீழ்உள்ள sort என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4,உடன்தோன்றும் கீழிறங்கு பட்டியலிலிருந்து Ascending என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.

5, மீண்டும் QBEயில் state என்பதன்கீழ்உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

6,பின்னர்TN,AP என தட்டச்சு செய்க, உடன் QBE படம்-3-ல் உள்ளவாறு இருக்கும்,

 5.3படம்-3

வெற்று மதிப்பை தேடுதல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product , tbl salesஆகிய இரண்டு அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name ஆகிய புலங்களையும், tbl sales என்ற அட்டவணையிலிருந்து Sale dateஎன்ற புலத்தையும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக.

3, இதன்பின்னர்QBEயில் Sale date என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக

4, அதில் is null என தட்டச்சு செய்க,இதன் QBE படம்-4-ல் உள்ளவாறு இருக்கும்,

 5.4படம்-4

And என்ற செயற்குறியைபுலங்களுக்கிடையே நிபந்தனையை குறிப்பிடுவதற்கு

செய்முறை பயிற்சி:

1 முதலில்,வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product,tbl product  , tbl salesஆகிய மூன்று அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர்tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name ஆகிய புலங்களையும்,description என்ற  புலத்தை tbl product என்ற அட்டவணையிலிருந்தும் கொண்டுவந்து QBEயில் சேர்க்கவும்

3, இதன்பின்னர்QBEயில் state என்பதன்கீழ்உள்ள sort என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

4,அதில் KLஎன தட்டச்சு செய்க,

5, பின்னர் Query by Example(QBE)யில் description என்பதன்கீழ் உள்ள criteria என்பதை தெரிவுசெய்து சொடுக்குக,

6. இதன்பின்னர்savy என்பது போன்று தட்டச்சு செய்க,

கணக்கீடு புலத்தைவினாவில் உருவாக்குதல்

1, முதலில் வடிவமைப்பு காட்சித்திரையில் புதிய வினாவை திறந்துகொள்க,அதில் tbl product,tbl product  , tbl salesஆகிய மூன்று அட்டவணைகளை  கொண்டுவந்து சேர்த்திடுக,

2, பின்னர் tbl contacts என்ற அட்டவணையிலிருந்து last name, first name ஆகிய புலங்களையும், price,discount price  ஆகிய புலங்களை tbl sales என்ற அட்டவணையிலிருந்தும் கொண்டுவந்து QBEயில் சேர்த்திடுக

3, இதில் (QBEயில் )காலியான கடைசி செல்லை தெரிவுசெய்து சொடுக்குக

4,அதில் dicountamt: [tblsales].[price]*[tblesales].[discountpercent]என தட்டச்சு செய்து (படம்-5) வேறு செல்லை தெரிவுசெய்து சொடுக்குக, இந்த வினாவை இயக்குக உடன் திரையில்கழிவுத்தொகை() சரியாக கணக்கிட்டு  பிரிதிபலிக்கசெய்யும்,

 5.5படம்-5

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.