நாகரிக வாழ்விற்கான மிகவும் அதிக பயனுள்ள இணையதளங்கள்

இணைய இணைப்பில் நாம் பயன்படுத்திகொள்வதற்காக இலட்சகணக்கான இணையதளங்கள் உள்ளன அவைகளில் ஒரு சில நம்முடைய நாகரிக வாழ்விற்கு மிகவும் அதிக பயனுள்ளவையாகவும் வேறுசில சாதாரணமாக நம்முடைய பொழுதினை போக்குவதற்காக மட்டுமென்றும் உள்ளன அவற்றுள் பின்வருபவை மிகச்சிறந்த நம்முடைய நாகரிக வாழ்விற்கு மிகவும் அதிக பயனுள்ளவையாக உள்ளன

1 Grooveshark இதனுடைய இணையதளமுகவரி www.grooveshark.com/ஆகும் இந்த தளத்தில் உலகில் உள்ள அத்தனை பாடல்களும் அவைகளின் வகைக்கேற்ப பதிவுசெய்யபட்டு வைக்கபட்டுள்ளன அவைகளுள் நாம் விரும்புவதை மட்டும் உடன் பதிவிறக்கம்செய்து அல்லது இதிலுள்ள Grooveshark Radio என்ற இணைய வானொலியின்மூலம் கேட்டுமகிழலாம் .நம்முடைய சொந்த பாடல்களையும் இதில் பதிவுசெய்து வைத்திடலாம்

2 1DayLater இதனுடைய இணையதளமுகவரி http://www.1daylater.com/ ஆகும் அடடா குறிப்பிட்ட செலவிற்கான பட்டியல் வாங்குவதை மறந்து விட்டோமே என தவிப்பவர்கள் இந்த தளத்தின்மூலம் தேவைப்படும்போதெல்லாம் தேவையான பொருட்களின் பட்டியலை பெற்றுகொள்ளுமாறு வழிஏற்படு்ததபட்டுள்ளது

78.2.1

3 Dropbox இதனுடைய இணையதளமுகவரி http://www.1daylater.com/ ஆகும் நம்முடைய ஆவணங்கள்.படங்கள் ,ஒலிஒளிபடங்களை ஆகியவற்றை சேகரித்து பாதுகாப்பாக வைத்திட நம்முடைய கணினியில் போதுமான காலி நினைவக இடம் இல்லையே என மறுக வேண்டாம் இந்த தளத்தில் கட்டணமெதுவுமில்லாமல் கோப்புகளை பாதுகாத்து வைத்திடவும் நம்முடைய நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அவைகளை பகிர்ந்து கொள்ளவும் நாம்விரும்பும் அளவிற்கு காலி நினைவகத்தை நமக்கு வழங்குகின்றனர் இதனை உலகமெலாம் உள்ள ஐம்பது மில்லியனிற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்ரனர்

4 Showoff the Visualizer இதனுடைய இணையதளமுகவரி http://www.showoff.com/apps/default.aspxஆகும் இதில் நம்முடைய வீட்டினை எப்படியெல்லாம் மாறுதல்செய்து அலங்கரிக்கலாம் என நமக்கு வழிகாட்டுகின்றது இதற்காக நம்முடைய வீட்டின் படத்தைமட்டும் இந்த தளத்தில் மேலேற்றினால் போதுமானதாகும்

 

5 Dailylit இதனுடைய இணையதளமுகவரி http://www.dailylit.com/ஆகும் நாம் விரும்பி குறிப்பிட்டதொரு புத்தகத்தினை படிக்கவிருக்கின்றோம் ஆனால் நம்மால் அதற்காக நேரத்தை மட்டும் ஒதுக்கமுடியவில்லை என்றநிலையில் பரவாயில்லை எப்போது நமக்கு ஓய்வு கிடைக்கின்றதோ அப்போது மட்டும் நாம்விரும்பும் அளவைமட்டும் அப்புத்தக்ததை படிப்பதற்கு ஏற்ப பகுதிபகுதியாக பிரித்து இந்த தளம் நமக்கு வழங்குகின்றது

6 Yaptaஇதனுடைய இணையதளமுகவரி http://www.yapta.com/ஆகும் இந்த தளமானது ஒருநாட்டிற்குள்ளேயே பயனம் செய்யவும் அல்லது நாடுகளுக்கிடையே பயனம் செய்திடவும் அதற்கான குறைந்த செலவு எந்த விமானசேவை நிறுவனம் வழங்குகின்றது என்ற தகவலையும் அதற்கான எச்சரிக்கை அறிவிப்பையும் நமக்கு அளிக்கின்றது அதனை தொடர்ந்து குறைந்த கட்டணசேவையில் பயனம் செய்ய பதிவுசெய்துகொள்ளவும் பயனம் செய்யஇயலவில்லையெனில் அந்த பயனத்தை இரத்துசெய்து நாம்செலுத்திய கட்டணத்தொகையை திரும்ப பெறவும் இந்த தளத்தில் வழிவகை செய்யபட்டுள்ளது

7 Google Voice இதனுடைய இணையதளமுகவரி www.google.com/voice/ஆகும் இணையத்தின் வாயிலாக Skype போன்று உலகில் ஒருவர் எங்கிருந்தாலும் அவரோடு மின்னஞ்சல் பெட்டிவழியாக உரைவழி மின்னஞ்சலிற்கு பதிலாக ஒலிவழியானமின்னஞ்சல் சேவையை இந்த தளம் வழங்குகின்றது இதன்மூலம் நம்முடைய தொலைபேசியில் நாம் அழைத்து பேசிடமுடியும்

8 Jolicloudஇதனுடைய இணையதளமுகவரி www.jolicloud.com/ஆகும் நமக்கு செந்தமாக தனியாள் கணினியோ மேஜைக்கணினியோ இல்லையே மற்றவர்களை போன்று நாம் எவ்வாறு அனைத்து வகை செயலையும் செய்வது என மருகி தவிப்பவர்களுக்கு இந்த தளம் உதவுகின்றது இதனை பயன்படுத்தி ஒரு மெய்நிகர் மேஜைக்கணினிபோன்று Gmail, Office Liveபோன்ற செயல்களையும் Dropbox, Skype, Google Voice, or VLC போன்ற தளங்களின் சேவையையும் நம்முடைய மேஜைகணினிமூலம் பெறுவதை போன்றே அந்த சேவைகள் அத்தனையும் பெறமுடியும் மேலும் இதிலுள்ள app centerஎன்பதின்மூலம் மேலும் நமக்குத்தேவையான பயன்பாடுகளை செயல்படுத்திகொள்ளமுடியும்

78.2

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.