தகவல்தொழில்நுட்பத்துறையில் சுதந்திரமாக பணிபுரிவதற்காக உதவிடும் இணையதளங்கள்

வரைகலை வடிவமைப்பாளர்கள், உருவப்பட வடிவமைப்பாளர்கள், லோகோ வடிவமைப்பாளர்கள், இணைய வடிவமைப்பாளர்கள், போன்ற திறமையுடைவர்கள் தகவல்தொடர்பு நிறுவனத்தில் நேரடியாக பணியில் சேர்ந்து தகவல்தொடர்புநிறுவனங்களின் அலுவலகத்திற்குள் ளேயே எட்டுமணிநேரம் அமர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற நிலை தற்போது மலையேறிவிட்டது அதற்கு பதிலாக இந்த திறமையுடைவர்கள் தாம் இருந்த இடத்திலிருந்த வாறே தாம் விரும்பிய நேரத்தில் பணிபுரிந்து போதுமான வருமானம் ஈட்டக்கூடிய நிலைக்கு தற்போது வளர்ந்துவிட்டோம் அதுமட்டுமல்லாது SEO சேவைகள் ,உள்ளடக்கங்களை உருவாக்கும் சேவைகள் மொழிமாற்றும் சேவைகள் ஆகியவற்றின் வாயிலாகவும் இருந்த இடத்திலிருந்த வாறே விரும்பிய நேரத்தில் பணிபுரிந்து போதுமான வருமானம் ஈட்டமுடியும் இதற்காக உதவ காத்திருப்பவைகள்தான் பின்வரும் சுதந்திர இணையதளங்கள்
1. Upwork என்பது சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கு மிகச்சிறந்தஉதவியாளராக விளங்குகின்றது நாம் விரும்பிய வகையான பணியை இதில் தெரிவுசெய்து கொள்ளலாம் இதற்காக கட்டணம் எதுவும் செலுத்ததேவையில்லை அனுபவம் இல்லாத புதியவர்கள்கூட அதற்கேற்ற பணியினை அடையமுடியும் மிகமேம்பட்ட பாதுகாப்பினை இதனுடைய உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது புதியபுதிய பணிகள் தினமும் இதில் பட்டியலிடப்பட்டு கொண்டே உள்ளது அதில் நமக்கு பொருத்தமானதை நாம் தெரிவுசெய்து கொண்டு போதுமான வருமானம்ஈட்டமுடியும் இதற்கான இணையமுகவரிhttps://www.upwork.com/ ஆகும்
2. Freelancer என்பது உலகின்மிகப்பெரிய பணிவாய்ப்பகம் ஆகும் இதில் கட்டணத்துடன் அல்லது கட்டணமில்லாததுஆகிய இருவகைகளில் பயன்படுத்தி கொள்ளமுடியும் சுதந்திரமாக பணிபுரிபவர்களுக்கான மிகநம்பகமான புகழ்பெற்ற தளமாகும் அனுபவமிக்க-வர்களுக்கு மிகச்சிறந்த தளமாக விளங்குகின்றது மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் https://www.freelancer.com/எனும் இணைய முகவரிக்கு செல்க
3. Fiverr என்பது சிறிது வித்தியாசமான மிகப்பெரிய சுதந்திரமான வேலைவாய்ப்பு தளமாகும் கானொளி காட்சிகள் ,அசைவூட்டுபடங்கள், ஆவணங்கள் எழுதுதல் மொழிமாற்றம் செய்தல் வரைகலை வடிவமைப்பு செய்தல்என்பனபோன்றவை மட்டு-மல்லாமல் இணையசந்தை, நிரலாளர்கள், விளம்பரங்கள் ஆகிய ஏராளமான வகைகளில் இணையத்தின் வாயிலாக பணிபுரிய வாய்ப்பினை வழங்க காத்திருக்கின்றது மிகச்சிறிய-பணிமுதல் மிகப்பெரியபணிவரை நாம் விரும்பியவகைகளை தெரிவுசெய்து பொருள் ஈட்டிடலாம் இதற்கான இணையமுகவரிhttps://www.fiverr.com/ஆகும்
4. Guru என்பது நிறுவனங்களுடனான வலைபின்னல் இணைப்பின் வாயிலாக சுதந்திர பணிவழங்குவதில் மிகபெரிய தாக விளங்குகின்றது இதில் கட்டணத்துடன் அல்லது கட்டணமில்லாமல் பதிவுசெய்து கொள்ளலாம் இதில் பொறியியல் துறைமட்டுமல்லாது கணினிவிளையாட்டுகளை உருவாக்குதல் நிரல்தொடர்எழுதுதல் போன்ற பல்வேறு சிறப்புவகை பணிகளை பெற்று பொருளீட்டமுடியும் இதில் தினமும் பல்வேறு வகையான பணிகள் பட்டியலிடப்படுகின்றன அவைகளுள் நமக்கு பொருத்தமானதை தெரிவுசெய்து கொள்ளலாம் மணிகணக்கில் நாள்கணக்கில் பணிகணக்கில் பொருளீட்டமுடியும் மேலும் விவரங்களுக்கு https://www.guru.com/என்ற இணைய முகவரிக்கு செல்க
5. College Recruiter என்பது சமீபத்தில் கல்லூரியிலிருந்து வெளியில் வரும்புதியவர்கள் அனைவருக்கும் தொழில்பழகுநர் பணி அல்லது பகுதிநேர பணிபுரிய விரும்புவோர் ஆகியோர்களுக்கும் இதுஉதவுகின்றது புதியதொழிலை தெரிவுசெய்யவிரும்பும் புதியவர்களுக்கு மிகச்சிறந்த தளமாக விளங்குகின்றது இதற்கான இணையமுகவரி https://www.collegerecruiter.com/ ஆகும்
6. People Per Hour என்பது இணைய வடிவமைப்புபணிகளுக்கு மிகமுககிய தளமாக விளங்குகின்றது இணைய வடிவமைப்பு செய்திடும் நிறுவனங்கள் இந்த தளத்தின் வாயிலாகவே தங்களுக்க தேவையான வல்லுனர்களை தெரிவுசெய்து கொள்கின்றன இதில் நாம் எவ்வளவு நேரம் பணிபுரிகின்றோமோ அதற்கேற்ப பொருள்ஈட்டிடமுடியும் இதில் வடிவமைப்பாளர் ,மேம்படுத்துனர் ,SEO வல்லுனர் சமூகபல்லூடக தொழில்வல்லுனர் ,உள்ளடக்கஎழுத்தாளர் இணையவடிமைப்பாளர் என்பனபோன்ற பல்வேறு பணிகளுக்கு நல்வாய்ப்பாக அமைகின்றது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக https://www.peopleperhour.com/ எனும் இணையமுகவரிக்கு செல்க
இவைமட்டுமல்லாது https://www.ifreelance.com/ , https://99designs.com/ , https://www.techgyd.com/10-tips-become-successful-seller-craigslist/ , https://www.designcrowd.com/ என்பன போன்ற இணையதளங்கள் சுதந்திரமாக பணிசெய்திட உதவகாத்திருக்கின்றன இவைகளை நம்முடைய விருப்பத்திற்கேற்றவகையில் பயன்படுத்தி பயன்பெறுக என பரிந்துரைக்கப்படுகின்றது