விண்டோ 10 இயக்கமுறைமை செயல்படும் மடிக்கணினியில் கடவுச்சொற்களை எவ்வாறு கையாளுவது

நம்முடையமடிக்கணினியில் சேமித்துவைத்துள்ள தரவுகளை கோப்புகளை, கானொளி காட்சிகளை நாம் அல்லது நம்மால் அனுமதிப்போர் தவிர மற்றவர்கள் யாரும் அனுகுவதை தடுப்பதற்காக இந்த கடவுச்சொற்கள் அல்லது PIN போன்றவை பெரிதும் பயன்படுகின்றது இதனடிப்படையில் நாம் நம்முடைய .விண்டோ 10 இயக்க-முறைமை செயல்படும் மடிக்கணினியில் கடவுச்சொற்களை அல்லது PIN ஐ கட்டமைத்து பாதுகாத்திருப்போம் ஆயினும் அவ்வப்போது குறிப்பிட்ட காலஇடை-வெளியில் இதனை மாற்றிகொண்டே இருந்தால்தான் பாதுகாப்பானதாக இருக்கும் நீண்டகாலத்திற்கு அப்படியே வைத்திருந்தால் அபகரிப்போர் எப்படியாவது நம்முடைய கடவுச்சொற்களை யூகித்தறிந்துகொண்டு நாம் இல்லாத போது உள்நுழைவுசெய்திடுவர் அதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வாறு விண்டோ10 இயக்க-முறைமையில் கடவுச்சொற்களை மாற்றியமைப்பதுஎன இப்போது காண்போம் முதலில் நம்முடைய .விண்டோ 10 இயக்கமுறைமை செயல்படும் மடிக்கணினியின் இடதுபுறம் கீழ்பகுதியில் search எனும் வாய்ப்பில் Control panel எனதட்டச்சுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

1
உடன் விரியும் Control panel எனும்பலகத்தில் user account எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

2
அதன்பின்னர் விரியும் user account எனும் திரையில் Make changes to my account in PC settings எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் விரியும் சாளரத்தின் இடதுபுறபலகத்தில் Sign-in options.எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக

3
அதன்பின்னர் விரியும் சாளரத்தில்ஏராளமான வாய்ப்புகள் விண்டோ10 கையாளுவதற்காக உள்ளன அவற்றுள் Change என்ற பொத்தானை மட்டும்தெரிவுசெய்துசொடுக்குக

4
பின்னர் விரியும் திரையில் Change PassWord எனும் சாளரத்தில் currentpassword என கோருவதில் நடப்பு கடவுச்சொற்களை தவறில்லாமல் உள்ளீடுசெய்து கொண்டு next என்ற பொத்தானை மட்டும்தெரிவுசெய்துசொடுக்குக அடுத்து தோன்றிடும் திரையில் Change PassWord எனும் சாளரத்தில்New Password என்பதில் நாம்மாற்றவிரும்பும் புதிய கடவுச்சொற்களையும் Re-enter password என்பதில் மீண்டும் அதே புதிய கடவுச்-சொற்களையும் Password hint மறந்துவிட்டால் மீட்பதற்கானஆலோசனையில் தேவையான விவரங்களையும் உள்ளீடு செய்து கொண்டு finishஎன்ற பொத்தானை அழுத்துக இதன்பின்னர் நம்முடைய மடிக்கணினியில் புதிய கடவுச்சொற்களுடன் மட்டுமே உள்நுழைவுசெய்திடமுடியும்

விண்டோ10 இயக்கமுறைமைகளில் ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்வுசெய்து கொள்க

முதலில் நம்முடைய விண்டோ10 இயக்கமுறைமை நிகழ்நிலைபடுத்தப்பட்டுள்ளதாவென உறுதி படுத்தி கொள்க அதன்பின்னர் Windows key + I ஆகிய விசைகளை அழுத்துக உடன்விரியும் திரையில் Update & Security > Windows Update என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக நிகழ்நிலை படுத்தியபின் கணினியின் இயக்கத்தை நிறுத்தம்செய்து மறுதுவக்கம்செய்திடுக பொதுவாக நம்மில் பலர் கணினியில் அச்சுபொறி போன்ற பல்வேறு துனைச்சாதனங்களை இணைத்து இயக்கி பயன்பெறுவோம் அவைகளை OBit Driver Boosterஅல்லது Snappy Driver Installerஎனும் பயன்பாட்டின் வாயிலாக நிகழ்நிலை படுத்தி கொண்டால் பிரச்சினைஏதுமில்லாமல் இவை சரியாக செயல்பட ஏதுவாகவிடும் அடுத்து FixWin 10எனும் பயன்பாடுஇயக்க முறைமையில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்து சரியாக இயங்கசெய்கின்றது அதற்கடுத்ததாகUltimate Windows Tweaker 4எனும் பயன்பாடு விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் பல்வேறு பயன்பாடுகளை தூண்டிவிட்டு தொடர்ந்து நன்கு இயங்கிடுமாறு செய்கின்றது Windows Repairஎனும் பயன்பாடு விண்டோ 10 இயக்கமுறைமையில் ஏற்படும் பல்வேறு பழுதுகளையும் சரிசெய்து சரியாக இயங்க உதவுகின்றது ஏதேனும் வசதி வாய்ப்புகளை விண்டோ10 இயக்கமுறைமையில்நிறுவுகைசெய்திடாமல் இருந்திட்டால் அதை நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ளMissed Features Installerஎனும் பயன்பாடு மிகப்பேருதவியாக விளங்குகின்றது

உருவப்படங்களை நகலெடுத்து கொண்டுசெல்வதற்குவிண்டோவின் snipping tool எனும் கருவியை பயன்படுத்திகொள்க

snipping tool எனும் கருவியானது screenshot என்பதைபோன்று திரையின் உருவப்படத்தை பதிவுசெய்து வேறொரு இடத்திற்கு நகலெடுத்து கொண்டுசெல்ல பயன்படுகின்றது ஆயினும் screenshot என்பது திரைமுழுவதையும் பதிவுசெய்து கொண்டுசெல்லவும் snipping tool என்பது திரையின் உருவப்படதோற்றம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி (cut out) பதிவுசெய்து நகலெடுத்து கொண்டு செல்லவும் பயன்படுகின்றது
இதனை Start > All Programs > Accessories > Snipping Tool என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுவதன் வாயிலாக செயல்படுமாறு செய்திடலாம் உடன் விரியும் திரையின் New எனும் பொத்தானிற்கு அருகிலுள்ள முக்கோனஅம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும்திரையில் Free Form Snip, Rectangular Snip ,Window Snip ,Full-Screen Snip ஆகிய நான்கு வாய்ப்புகளுடன்பட்டியல்ஒன்று விரியும் இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் சுட்டியின் இடதுபுற-பொத்தானை அழுத்திபிடித்து கொண்டு திரையின் உருவப்படத்தை தெரிவு செய்திடும்பகுதியின்மீது மேலூர்தல்செய்து தெரிவுசெய்து கொள்க பின்னர் save என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நாம் தெரிவுசெய்து குறிப்பிட்ட பகுதியை தனியாக ஒரு பெயரிட்டு சேமித்து கொள்க தேவையெனில்அதில் திருத்தம்செய்தும் சேமித்துகொள்ளமுடியும்

மைக்ரோசாப்ட்டின் விண்டோசேவையாளர்ஒருஅறிமுகம்

இந்த மைக்ரோசாப்ட்சேவையாளர் இயக்கமுறைமைஎன்பது ஒரு சேவையாளர் வாய்ப்பாகும் இது YYMM வடிவமைப்பில்அரையாண்டு சேவையென்றும் (Semi-Annual Channel (SAC)),YYYY என்ற வடிவமைப்பில் நீண்டகால சேவையென்றும் (Long-Term Servicing Channel (LTSC))இரண்டுசேவைகளாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன இவற்றுள் அரையாண்டு சேவையானது நீண்டகால சேவையுடன் ஒத்தியங்காது மேலும் இது வரைகலை இடைமுகப்பு செய்யஇயலாது ஆனால் நீண்டகாலசேவையானது அனைத்து வடிவமைப்புடன் ஒத்தியங்கிடும் மேலும் இது வரைகலை இடைமுகப்பு செய்திடும் வசதிகொண்டது அதுமட்டுமல்லாது அவ்வப்போது புத்தாக்கம்செய்துகொள்ளும் தன்மைகொண்டது ஆயினும் இதனுடைய LTSC Server Core பதிப்பானது வரைகலை இடைமுகப்புடன் ஒத்தியங்காது இந்த நீண்டகாலசேவையானது Essential, Standard ,Datacenter ஆகிய மூன்றுவகை பதிப்புகளில்ஐந்தாண்டு பயன்பாடாக கிடைக்கின்றது தேவையெனில் மேலும் ஆறாண்டுகளுக்கு இதனை விரிவுபடுத்தி கொள்ளமுடியும்

விண்டோ இயக்கமுறைமை செயல்படும் கணினியை இயக்கதுவங்குவதற்கான கடவுச்சொற்கள் மறந்துவிட்டோம் என்னசெய்வது

இவ்வாறு தவித்திடும் நிலையில் நம்மிடம் கைவசம் யூஎஸ்பி வாயிலாக லின்க்ஸ் இயக்கமுறைமையுடன் செயல்படும் பென்ட்ரைவ் உள்ளதாக கொள்க அதனை அதற்கான வாயிலில் செருகி இந்த யூஎஸ்பி வாயிலாக செயல்படும் லினக்ஸ் இயக்குமுறைமையுடன் கூடிய பென்ட்ரைை செயல்படுத்தி நம்முடைய கணினியை இயக்கதுவங்கிடுக உடன் விரியும் திரையில் Try Fedora என்றவாறான வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் live-userஎனும் திரையிலிருந்து வெளியேறி root.என்பதற்குள் உள்நிழைவு செய்திடுக (இந்த படிமுறை தேவையில்லைஇருந்தாலும் நம்முடைய பணிதொடர்ந்து நன்றாக அமைவதற்கு இந்த படிமுறையைபின்பற்றிடுக) தொடர்ந்து sudo dnf install -y chntpw என்ற கட்டளைவரியின் வாயிலாகchntpw எனும் துனைச்-செயலியை இணையஇணைப்புடன் நம்முடைய கணினி உள்ளதாவென உறுதிபடுத்திக் கொண்டு நிறுவுகை செய்து கொள்க பிறகு sfdisk -l …என்பதன் துனையுடன் எந்தெந்த பிரிக்கப்பட்ட பகுதிகள் mounted செய்யப்பட்டுள்ளன எனசரிபார்த்து கொள்க தொடர்ந்து sudo mount /dev/sda2 /mnt/Microsoft/என்ற கட்டளைவரியை உள்ளீடுசெய்து (அதாவது/dev/sda2)எனும் பகுதி பிரிப்பானை செயல்படுத்திடுக பிறகு cd /mnt/Microsoft/Windows/System32/config/ என்ற கட்டளைவரியை உள்ளீடுசெய்து config எனும் கோப்பகத்திற்கு மாறிகொள்கSecurity Account Manager (SAM) எனும் தரவுதளத்தில் பயனாளரின் ஆவணங்களை சரிபார்த்து கொள்க பின்னர் அதில் sudo chntpw -i SAMஎனும் கட்டளைவரியை உள்ளீடுசெய்து இந்த SAMஎனும் பயனாளர்கணக்கு ஆவணங்களை திருத்தம் செய்திட தயாராகஆகுக தொடர்ந்து அதில் Edit user data and passwords:என்பதில் 1 எனஉள்ளீடுசெய்திடுக பின்னர் Archit-PC என்றவாறு நம்முடைய பயனாளர்பெயரை உள்ளீடு செய்திடுக பிறகு இந்த Archit-PC என்றவாறான பயனாளர் பெயருக்கான கடவுச்சொற்களை திருத்தம்செய்திட 1 என்பதை உள்ளீடுசெய்துபழைய கடவுச்சொற்களை நீக்கம்செய்திடுக அல்லது 2 என உள்ளீடுசெய்துபுதிய கடவுச்சொற்களை அமைத்திடுக இதனை சேமித்து வெளியேறுக இதன்பின்னர் நம்முடைய விண்டோ இயக்கமுறைமையுள்ள கணினியை யூஎஸ்பி இல்லாமல் செயல்படுத்திடுக தோன்றிடும் திரையில் 1 என உள்ளீடுசெய்தபின் தோன்றிடும் திரையில் Sign in என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கடவுச்சொற்கள் இல்லாமல் கணினிக்குள் உள்நுழைவுசெய்திடுக அல்லது 2 எனகொடுத்து கடவுச்சொற்களை மாற்ரியமைத்திருந்தால் அந்த கடவுச்சொற்களின் வாயிலாக உள்நுழைவுசெய்திடுக

விண்டோ7,8 அல்லது10 இயங்கிடும் கணினியின் கடவுச்சொற்களை எவ்வாறு மறுஅமைவுசெய்வது

பல்வேறு கணினி வல்லுநர்கள் கணினியின் கடவுச்சொற்களை அதற்கான கருவிகள் அல்லது அதனை உடைத்தல் ஆகியவழிமுறைகளை பின்பற்றி கணினியின் கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடுவார்கள் அவ்வாறே புதியவர்கள் எவரும் பின்வழிமுறையை பற்றி கணினி வல்லுநர்கள் போன்று விண்டோ7,8 அல்லது10 இயங்கிடும் கணினியின் கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடலாம்
வழிமுறை1 Ophcrack எனும் கருவியை அதற்கான அதிகாரபூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நெகிழ்வட்டு(CD) அல்லது யூஎஸ்பி (USB)நினைவகத்தில் கணினியின் இயக்கத்தைதுவங்கிடுமாறு நிறுவுகை செய்திடுக பின்னர் இந்த வெளிப்புற நினைவக்ததை கொண்டு கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடவிரும்பும் கணினியின் இயக்கத்தை துவங்கசெய்திடுக உடன் விரியும்திரையில் Ophcrack Graphic Mode – Automatic என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு உள்ளீடடு விசையை அழுத்துக உடன் இந்த கருவியானது கடவுசொற்களை மீட்டெடுத்துவிடும் 6.1

இரண்டாவது  iSeePassword – Windows Password Recovery Pro எனும் கருவியை அதற்கான அதிகாரபூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நெகிழ்வட்டு(CD) அல்லது யூஎஸ்பி (USB)நினைவகத்தில் கணினியின் இயக்கத்தைதுவங்கிடுமாறு நிறுவுகை செய்திடுக பின்னர் இந்த வெளிப்புற நினைவக்ததை கொண்டு கடவுச்சொற்களை மறுஅமைவுசெய்திடவிரும்பும் கணினியின் இயக்கத்தை துவங்கசெய்திடுக உடன் விரியும்திரையில் Reset Password என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து கொண்டு உள்ளீடடு விசையை அழுத்துக உடன் இந்த கருவியானது கடவுசொற்களை மீட்டெடுத்துவிடும்

மூன்றாவதுவழிமுறையில் விண்டோஇயக்கமுறைமை நிறுவுகை செய்துள்ள நெகிழ்வட்டினை அதற்கான வாயிலில் உள்நுழைவுசெய்து கணினியின் இயக்கத்தை நெகிழ்வட்டினை துவங்கசெய்திடுக தொடர்ந்து தோன்றிடும் திரையில் ஒன்றும் செய்திவேண்டாம் அதற்குபதிலாக உள்ளீட்டு விசையை மட்டும் அழுத்துக பிறகு தோன்றிடும் திரையில் Install Nowஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு திரையில் கூறும் அலோசனைகளை பின்பற்றிடுக இறுதியாக கணினியின் இயக்கமானது நிறுத்தபட்டு மறுதுவக்கமாகும் எச்சரிக்கைஇந்த வழிமுறையில் நம்முடைய கணினியின் அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுவிடும்

விண்டோ பயன்பாடுகளை லினக்ஸில் இயங்க உதவும் Wineஎனும் கருவி

என்னதான் பல்வேறு வகையில் தனியுடமை இயக்கமுறைமைக்கு பதிலாக லினக்ஸ் எனும் கட்டற்ற இயக்கமுறைமைக்கு மாறுங்கள் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துமனம் மாறி லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்த தயாராக இருந்தாலும் பழக்கப்பட்ட விண்டோ பயன்பாடுகளை விடமுடியாது அதனையே லினக்ஸிலும் பயன்படுத்துவேன் என அடம்பிடிப்பவர்கள் பலர் உள்ளனர் அவ்வாறானவர்களுக்கு Wineஎனும் கருவியானது லினக்ஸ் எனும் இயக்கமுறைமையின்மீது விண்டோ பயன்பாடுகளை செயல்படுத்தி பயன்பெறுவதற்கு உதவுகின்றது இதனை பின்வரும் படிமுறைகளை பின்பற்றி செயற்படுத்தி பயன்பெறுக.
படிமுறை1 Ctrl- Alt- T எனும் முனைமத்தை திறந்து கொண்டு அதில் sudo add-apt-repository ppa:ubuntu-wine/ppa எனும் கட்டளைவரியை செயல்படுத்திடுக
படிமுறை2 sudo apt-get update && sudo apt-get install wine1.7எனும் கட்டளைவரிவாயிலாக wineஎன்பதை நம்முடைய லினக்ஸ் இயக்கமுறைமை செயல்படும் கணினியில் நிறுவுகை செய்திடுக
படிமுறை3பின்னர் இதனை கட்டமைவு செய்திடுவதற்காக winecfgஎன்ற கட்டளைவரியினை செயல்படுத்திடுக அதன்பின்னர்Libraries எனும் தாவிபொத்தானின் திரையில் Riched20 என்பதை தெரிவுசெய்து சேர்த்துகொண்டு Okஎனும் பொத்தானை சொடுக்குக தற்போது இந்த Wineஎனும் கருவியானது வெற்றிகரமாக நிறுவுகை செய்யப்பட்டு கட்டமைவு செய்யப்பட்டுவிடும்
படிமுறை4 பிறகு விண்டோ அலுவலக பயன்பாடு இயங்குவதற்கேற்ற 32பிட் சூழலை லினக்ஸில் கொண்டுவருவதற்கு exportWINEPREFIX=$HOME/wine32 என்ற கட்டளைவரியை செயல்படுத்திடுக அல்லது 64 பிட் சூழலை லினக்ஸில் கொண்டுவருவதற்கு exportWINEPREFIX=$HOME/wine64 என்ற கட்டளைவரியை செயல்படுத்திடுக
படிமுறை5 பின்னர் 32பிட் சூழல் எனில்export WINEARCH=wine32எனும் கட்டளைவரிவாயிலாக இயலுமை செய்திடுக அல்லது 64பிட் சூழல்எனில்export WINEARCH=wine64எனும் கட்டளைவரிவாயிலாக இயலுமை செய்திடுக
படிமுறை6 Microsoft Office setup என்பதை திறந்து கொண்டு அதிலுலுள்ள Setup.exe எனும் கோப்பின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் open with wine என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை7 உடன் நிறுவுகை திரை தோன்றிடும் அதில் Install Nowஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படிமுறை8 மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலக பயன்பாடு நிறுவுகைசெய்திடும் பணிதுவங்கி முடிவுபெறும் பிறகு கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுபடியும் செயல்டசெய்திடுக இதன்பின்னர் லினக்ஸ் இயக்கமுறை செயல்படும் கணினியில் விண்டோ அலுவலக பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ளலாம்

குறிப்புஇந்த Wineஎனும் கருவியை கொண்டு லினக்ஸ் செயல்படும் கணினியில் .exe என்ற பின்னொட்டுடன் முடியும் அனைத்து விண்டோ பயன்பாடுகளையும் எளிதாக செயல்படுத்தி பயன்பெறமுடியும்

Previous Older Entries