பொதுவாக நாம் அறிந்திராத வாட்ஸ்அப்பின் வசதிவாய்ப்புகள்

தற்போது மிகவும் பிரபலமான இந்த வாட்ஸ்அப் எனும் தயார்நிலை செய்தியாளரை ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்கள் உலகமுழுவதும் பயன்படுத்தி வருகின்றனர் அதிலும் 250 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு புதிய வசதி வாய்ப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அவ்வப்போது வெளியிடப்பட்டுகொண்டேயிருந்தாலும் நம்மில் பெரும்பாலானோர் பின்வரும் வசதிவாய்ப்புகள் பற்றிய விவரஙகளை தெரியாததால் பயன்படுத்தாமலேயே இருந்துவருகின்றன. கடந்த பிப்பரவரி 2018 முதல் நம்முடைய நண்பர்களுக்கு தேவையான தொகையை இந்த வாட்ஸ்அப்பின் வாயிலாக அனுப்பிவைத்திடும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக WhatsApp > Settings > Payments > Send Payment > Send to UPI ID என்றவாறு கட்டளைகளை செயல்படுத்தி பயன்பெறுக
அடுத்ததாக குழுவிவாதத்தின் போது நாம் வாட்ஸ்அப்பில் சேமித்து வைத்திராத புதிய எண்களுடனும் குழுவிவாதத்தில் கலந்துகொள்ள செய்வதற்காக Click to Chat எனும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்கமேலும் செய்திகளையும் இவ்வாறு சேமித்து வைத்திராத எண்களுக்கு அனுப்பி வைத்திடலாம்
மூன்றாவதாக வழக்கமான எமோஜி ஸ்டிக்கருடன் நாம் அனுப்பிடும் உருவப்படங்களிலும் கானொளி படங்களிலும் நடப்பு நேரத்தினையும் இடத்தினையும் ஸ்டிக்கராக சேர்த்து அனுப்பிடலாம் இதற்காக பயனாளர் ஒருவர் தேவையான உருவப்படம் அல்லது கானொளி படத்தினை தெரிவுசெய்தபின்னர் எமோஜி ஸ்டிக்கரை மட்டும் தெரிவுசெய்தால் போதுமானதாகும்
நான்காவதாக நாம் ஏதேனும் ஒரு உருவப்படத்தினை தவறுதலாக ஒருவருக்கு அனுப்பிவிட்டதாக தெரியவரும்போது “Delete for Me” , “Delete for Everyone” எனும் வாய்ப்புகளில் உள்ள Delete எனும் வாய்ப்பினை பயன்படுத்தி நீக்கம்செய்து கொள்க
ஐந்தாவதாக இந்தியாவில் பெரும்பாலும் நாமனைவரும் இந்த வாட்ஸ்அப்பானது ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்தி கொள்ளமுடியும் தமிழ் போன்ற மொழிகளில் பயன்படுத்திகொள்ளமுடியாதுஎன அறியாமல் உள்ளனர் Settings > Chats > App Language > Select a language என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் தோன்றிடும் திரையில் தமிழ் போன்ற பத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் நாம் விரும்பும் இந்திய மொழியை தெரிவுசெய்தபின்னர் பயன்படுத்தி கொள்ளலாம்

வாட்ஸ் அப் பயன்பாட்டினை செயல்படுத்தாமலேயே தொடர்பாளருடன் விவாதிக்க முடியும்

வாட்ஸ்அப் வெப் என்பதுடன் கூடுதல் இணைப்பாக இந்த வாட்ஸ் அப்பினை இணைத்து பயன்படுத்திடும் புதிய வசதியால் இந்த வாட்ஸ் அப் பயன்பாட்டினை செயல்படுத்தாமலேயே தொடர்பாளர்களுடன் விவாதிக்கமுடியும் இதற்காக வாட்ஸ் அப் ஆனது wa.me எனும் இணைய பெயருடன் http://www.api.whatsapp.com/ எனும் இணையமுகவரியில் செயல்படுமாறு செய்யப்பட்டுள்ளது இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதற்காக முதலில் பயனாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் எனும் பயன்பாட்டின் பதிப்பினை வாட்ஸ் அப்பின் 2.18.138 எனும் பதிப்பிற்கு மேம்படுத்தி நிகழ்நிலை படுத்திகொள்ளவேண்டும் இதனைதொடர்ந்து பயனாளர்கள் தங்களுடைய அலைபேசியில் https://wa.me/ எனும் இணையமுகவரியை உள்ளீடு செய்வதுடன் தொடர்ந்து விவாதம் செய்திடவிரும்பும் தொடர்பாளர்களின் அலைபேசி எண்ணையும் (cell phone number) உள்ளீடு செய்திடுக அதனை தொடர்ந்து இந்த இணைய முகவரியானது தானாகவே நம்மை விவாத திரைக்கு அழைத்து செல்லும் பிறகு தொடர்பாளரின் அலைபேசி எண்ணானது வாட்அப்வெப் என்பதுடன் கூடுதல் இணைப்பாகவாட்ஸ் அப்பினை இணைத்து கொண்டு நாம் விவாதம் செய்வதற்கு தயாராகிவிடும் அதனைதொடர்ந்து நாமும் குறிப்பிட்ட தொடர்-பாளருடன் நம்முடைய வாட்ஸ் பயன்பாட்டினை செயல்படுத்தாமலேயே விவாதம் செய்திடலாம் தொடர்பாளரின் அலைபேசிஎண்ணானது வாட்ஸ்அப்பில் பதிவுசெய்யா-திருந்தால் phone number shared via url is invalid என்ற செய்தி நம்முடைய அலைபேசியில் தோன்றிடும் தொடர்பாளரின் அலைபேசிஎண்ணானது வாட்ஸ்அப்பில் பதிவுசெய்யா-திருந்தால் வாட்ஸ் அப் பயன்பாட்டினை செயல்படுத்தாமலேயே தொடர்பாளர்களுடன் விவாதிக்கமுடியும் இந்த வசதியானது ஏற்கனவே இருக்கும் WhatsApp Web service எனும் விரிவாக்கவசதி போன்றதேயாகும்

நம்முடைய வாட்ச்அப் தரவுகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்வது

கடந்த மே25,2018 இல் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது தரவுகளின் பாதுகாப்பு வழிமுறைகளின்(General Data Protection Regulation(GDPR)) அடிப்படையில் இந்த பயன்பாடானது பயனாளிகள் தங்களுடைய தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளஅனுமதிக்கின்றது ஃபேஸ் புக் ,இன்ஸ்டாகிராம் ஆகியவை ஏற்கனவே பயனாளிகள் தங்களுடைய தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதித்துவிட்டன ஆயினும் ஒளிவுமறைவற்ற தரவுகளை பகிர்ந்து கொள்ளும் கொள்கைகேற்ப தற்போது வாட்ச்அப்பும் பயனாளிகள் தங்களுடைய தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளஅனுமதிக்கின்றது வாட்ச்அப்பானது தற்போது இந்த வசதியை அறிமுகநிலை அடிப்படையில்வெளியிட்டுள்ளது என்ற தகவலை மனதில் கொள்க இதனை செயல்படுத்திடுவதற்காக முதலில் இந்த வாட்ச் பயன்பாட்டினை திறந்து கொள்க பின்னர் அதில் Settings என்ற பகுதிக்கு செல்க அதில் Account எனும் தாவியின் திரையை தோன்ற செய்திடுக உடன் விரியும் திரையில் Request account info எனும்வாய்ப்பு இருப்பதை காணலாம் அதனை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து Request account info எனும் திரைக்கு செல்கபிறகு Request reportஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் நாம் பார்வையிட்ட நாள் வாரியான அறிக்கை திரையில் விரியும் அதனை நம்முடைய கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்க பின்னர் தேவையில்லைஎனில் அதனை நீக்கம்செய்து கொள்ளமுடியும் அதனால் நம்முடைய Account தரவுகள் நீக்கம்செய்யப்படமாட்டாது என்ற மிகமுக்கியமான தகவலையும் மனதில் கொள்க

வாட்ஸ் அப்பில் WhatsApp Payments எனும்புதிய வசதி வரவிருக்கின்றது

தற்போது பேடிஎம்,கூகுளின்டெஸ்,டிஜிட்டல்பேமென்ட் ஆகிய பயன்பாடுகள் நம்மில் பெரும்பாலானோர் தங்களுடைய பணபரிமாற்றத்திற்காக பயன்படுத்திவருவது அனைவரும் அறிந்த செய்தியே இவைகளுக்கு போட்டியாக WhatsApp Payments எனும்புதிய வசதியும் இந்திய பயனாளர்களுக்கு விரைவில்வரவிருக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்க இந்தியாவில் வாட்ஸ் அப் எனும் சமுதாய இணைய தளபயன்பாடானது பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றோம் ஆயினும் நம்முடைய இந்திய பயனாளர்கள் தங்களுடைய பணபரிவர்த்தனைக்கு மட்டும் மற்ற பயன்பாடுகளை பயன்படுத்திடவேண்டிய சூழலுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளோம் அதனை தவிர்த்துபணபரிவர்த்தனையையும் இந்த வாட்ஸ்அப்பிலேயே WhatsApp Payments எனும் வசதியின் வாயிலாக வாடிக்கையாளரின் வசதிக்காக அறிமுகபடுத்தபடவுள்ளது . தற்போது ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசி வங்கி ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை இந்த WhatsApp Payments எனும் வசதியில் இணைந்துவிட்டன பாரதஸ்டேட் வங்கியும் இதில் இணைய தயாராக உள்ளது அதனால் பயனாளர்கள் தங்களுடைய வாட்ஸ்அப்பின் குழுவிவாத திரையிலிருந்து வெளியேறாமல் வாட்ஸ்அப் தளத்திலிருந்தே தங்களுடைய பணபரிவர்த்தனையை கிராமபுறபகுதியிலும் எளிதாக செயல்படுத்தி கொள்ளமுடியு் என்ற கூடுதல் செய்தியையும் நினைவில் கொள்க

வாட்ஸ் அப்பில் குரலொலிசெய்தியை பதிவுசெய்வதுஎவ்வாறு செயல்படுகின்றது

தற்போது நாம் இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்திடும்போது குரலொலிசெய்தியை பதிவுசெய்வதற்காக மைக் பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டே இருக்கவேண்டும் அதன்பிறகு இந்த குரலொலிசெய்தி அனுப்பபடும் என்றவாறு இருந்துவந்ததது அதற்குபதிலாக தற்போது voice recording lock எனும் புதியவசதியானது குரலொலிசெய்தியை பதிவுசெய்வதற்காக மைக் பொத்தானைபயனாளர் அழுத்தி பிடித்துகொண்டே இருப்பதை தவிர்த்திடுகின்றது இந்தvoice recording lock எனும் புதிய வசதி Android beta testers பதிப்பில் பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆனால் ஐஓஎஸ் பதிப்புகளில் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளமுடியாது இது ஆண்ட்ராய்டின் 2.18.102 பதிப்பு அல்லது அதற்குபிந்தைய பதிப்புகளில்செயல்படும் இந்த Android beta testers ஐ voice recording lockஐசெயலிற்கு பயன்படுத்தி கொள்வதற்காக கூகுள் ப்ளேஸ்டோரில் உள்நுழைவுசெய்திடுக பின்னர் விரியும் திரையில் WhatsApp’sஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து WhatsApp’sஎனும் பகுதிக்கு செல்க அங்கு திரையில் கீழ்பகுதிக்கு சென்று Android beta testers என்பதில் பதிவுசெய்து yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக நம்மை பற்றிய விவரங்கள் நினைவகத்தில் பதிவுசெய்யப்பட்டு நம்மை தொடர்ந்து அனுமதிக்க சிறிது காலஅவகாசம்எடுத்துகொள்ளும் பின்னர் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க

வாட்ஸ்அப்பேமென்ட் எனும் சேவையை பயன்படுத்தி கொள்க

இடையில் வாலட்என்றஇடைத்தரகர் எதுவுமில்லாமல்நேரிடையாக நம்முடைய வங்கி கணக்கில் தொகைகளை வாட்ஸ்அப்பின் இந்த வசதியின் வாயிலாக கையாளமுடியும் இதற்காக நம்முடைய திறன்பேசியானது ஐபோன் எனில் v2.18.22. ஆண்ட்ராய்டு எனில் v2.18.41ஆகிய சமீபத்திய பதிப்பாகஉள்ளதவென சரிபார்த்து கொள்க
முதலில் நம்முடைய வாட்ஸ்அப் கணக்கிற்குள் உள்நுழைவுசெய்திடுக பின்னர் அதில் Settings ->Payments என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக உடன் விரியும் Payments எனும் பட்டியில் Bank Accounts எனும் வாய்ப்பினையும் பின்னர் அதன் Add New Account எனும் துனை வாய்ப்பினையும் தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் விரியும் திரையில் Accept and Continue எனும் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்Verify via SMSஎன்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வங்கி கணக்குடன் இணைப்பு ஏற்படுத்திடும் செயல் செயற்படுத்தபடும்பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய வங்கி கணக்குஎண்,நாம் பணம்அனுப்ப விரும்பும் நபரின் வங்கி கணக்கு எண்ஆகியவற்றை தெரிவுசெய்து கொள்க உடன் அனைத்தும் மிகச்சரியாக நாம் பின்பற்றி செயல்படுத்தி-வந்தால் வங்கி கணக்கினை இணைத்திடும் பணி முடிவிற்கு வந்ததாக UPI Setup Complete என்ற செய்தி திரையில் தோன்றிடும்
அதற்கு பிறகு இந்த வாட்ஸ்அப்பின் விவாத திரையில் நாம் பணம் அனுப்பவிரும்பும் நபரின் திரையை தோன்றச்செய்திடுக அதில் ஆண்ட்ராய்டு எனில் Attach எனும் பொத்தானை ஐபோன்எனில் Plus எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் Paymentஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் எவ்வளவு தொகை ஏதற்காக அனுப்படுகின்றது என்பன போன்ற விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு அனுப்புவதற்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் UPI PIN எனும் ஒருமுறை மட்டுமான கடவுச்சொல்லான ஒருமுறை கடவுச்சொல் எனும் எண் குறுஞ்செய்தியாக நமக்கு வந்து சேரும் அதனை உள்ளீடுசெய்து ஏற்றுகொண்டால் நாம் விரும்பியவாறு பணம் எளிதாக அனுப்பட்டுவிடும்