வாகணங்களின் இணையம்:

வாகணங்களின் இணையம் (Internet of Vehicles(IoV)) என்பது நான்கு சக்கர வாகணங்கள் ,கனரக வாகணங்கள் ஆகிய அனைத்துவகைகளிலான வாகணங்களுடன் இணைக்கப்பட்ட தற்காலிக வலைபின்னல்களில் உருவாக்கிய தரவுகளைப் பயன் படுத்துவதை ஆதரிக்கும் ஒரு விநியோகிக்கப்பட்ட வாகணங்களுக்கான பிணையமாகும். , வாகணங்களை இயக்கும் மனித ஓட்டுநர்கள், பாதசாரிகள், பிற வாகனங்கள், சாலையோர உள்கட்டமைப்புவசதிகள், வாகண மேலாண்மை அமைப்பு ஆகியவை களுடன் நிகழ்வுநேரத்தில் தொடர்பு கொள்ள அனுமதிப்பதே இந்த IoV இன் முக்கிய குறிக்கோளாகும்.இந்த IoV ஆனது பின்வரும்ஐந்து வகைகளாலான பிணைய தகவல் தொடர்புகளை ஆதரிக்கின்றது:
1.ஆன் போர்டு யூனிட்கள் (OBU )என்பதன் மூலம் வாகனத்தின் உள் செயல்திறனைக் கண்காணிக்கும் வாகனத்திற்குள்ளான Intra-Vehicleஎனும் அமைப்புகள்.
2.வாகணத்தை சுற்றியுள்ள மற்ற வாகனங்களின் வேகம், நிலை ஆகியவை குறித்த கம்பியில்லா தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் வாகனங்களுக்கிடையேயான (Vehicle to Vehicle (V2V)) அமைப்புகள்.
3.குறிப்பிட்ட வாகனம் ,சாலையோர ஆதரவுஅலகுகள் (RSUs) ஆகியவற்றிற்கிடையே கம்பியில்லா தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வாகனமும் உள்கட்டமைப்புக்கிமான (Vehicle to Infrastructure (V2I)) அமைப்புகள்
4.பயன்பாட்டு நிரல் இடைமுகங்கள் (API) மூலம் இணையத்திலிருந்து கூடுதல் தகவல்களை அணுக வாகனத்தை அனுமதிக்கும் வாகனமும் மேககணினிக்குமான (Vehicle to Cloud (V2C)) அமைப்புகள்.
5.பாதசாரிகள் மிதிவண்டி ஓட்டுநர்கள் போன்ற பாதிப்புக்குள்ளாககூடிய சாலை பயனாளர்களின் (VRU) விழிப்புணர்வை ஆதரிக்கின்ற வாகனமும் பாதசாரி களுக்குமான(vehicle to Pedestrian (V2P)) அமைப்புகள்.
இதுகுறித்து 5 ஜி,புத்திசாலித்தனமான போக்குவரத்து அமைப்புகளின் (Intelligent transport systems (ITS)) சூழல் ஆகியவற்றுடன் விவாதிக்கப்படும்போது, மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வகையான வலைபின்னல்கள் ஒருசில நேரங்களில் வாகனத்திலிருந்து எல்லாவற்றிற்குமான (Vehicle to Everything (V2X)) தகவல்தொடர்பு என குறிப்பிடப் படுகின்றன. சந்தை ஆராய்ச்சியின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளாவிய இந்த IoV சந்தையின் மதிப்பானது 2024 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் பிஎம்டபிள்யூ ,டைம்லர் ஆகியோர் உட்பட பலவாகன உற்பத்தியாளர்கள், பாதைகளின் மேலாண்மை,திறனுடைய நிறுத்தங்கள் போன்ற IoV சேவைகளை இணைக்கும் முதன்மை தகவல் மையத்திற்கான ஒரு தளத்தை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளனர்.. ஆப்பிள், சிஸ்கோ, கூகிள், ஐபிஎம், இன்டெல், மைக்ரோசாப்ட், எஸ்ஏபி ஆகியவை இதற்கான கட்டமைவை தற்போது உருவாக்கி கொண்டுள்ளன.என்ற கூடுதல் தகவல்களை மனதில் கொள்க

நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை OSSN எனும்கட்டற்ற சமுதாயவலைபின்னலின் உதவியுடன் உருவாக்கி கொள்க.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்பன போன்ற சமுதாய வலைபின்னல்கள் நமக்கு போதுமானவையாக இல்லை இன்னும் மேலும் சாதிக்கவேண்டும் என விரும்பினால் OSSN என சுருக்கமாக அழைக்கப்படும் கட்டற்ற சமுதாயவலை பின்னல்(Open Source Social Network) எனும் கருவியைகொண்டு நாம்விரும்பியவாறான மிகச்சிறந்த நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை நாமே வடிவமைத்து உருவாக்கி கொள்ளமுடியும் இவ்வாறான நம்முடைய சொந்த சமுதாய வலைபின்னலை உருவாக்குவதற்கென தனியாக குறிமுறைவரிகள் எதுவும் எழுதவேண்டிய அவசியமில்லை இதை கட்டமைவு செய்வது பராமரிப்பு செய்வது பிற்காப்பு செய்வது ஆகிய பணிகளுக்காகவென நமக்கு தனியான தொழில்நுட்பமோ அனுபவமோகூட தேவையில்லை இதனை பயன்படுத்தி கொள்வதற்காக மிகஎளிதாக AppStore ஐ அனுகமுடியும் விண்டோ செய்தியாளர் ஆண்ட்ராய்டு கைபேசி பயன்பாடுகள் போன்றவை கட்டணமில்லாமல் கிடைக்கின்றன இதில் இணையும் நபர்கள் தங்களுடைய சொந்த நண்பர்களின் குழுவை தாமே எளிதாக உருவாக்கி கொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது படங்களின் தொகுப்பு போன்ற சமுதாய வலைபின்னலின் அனைத்து பணிகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும் நாம் விரும்பினால் மேலும்கூடுதலான உள்ளடக்கங்களை இதில் சேர்த்து கொள்ளமுடியும்இது மிகவிரைவாக திறனுடன் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி செயல்படுகின்றது ஆங்கிலம் மட்டு மல்லாது நாம் விரும்பும் எந்தவொரு மொழியிலும்செயல்படுமாறுஇதனை கட்டமைத்து கொள்ள முடியும் இதனை செயல்படுத்தி பயன்பெறுவதற்காக நம்முடைய சொந்த சேவையாளர் கணினியெனில் 512MB ரேமும் , 10GB வன்தட்டும் அதனோடு JSON , XML ஆகியவற்றை அதரிக்ககூடிய PHP பதி்ப்பு 5.6உம் அதற்குமேலும் கொண்டது அவ்வாறே MYSQL 5 உம் அதற்குமேலும் கொண்டது 1v CPU உடன் x64 bits. சேவையாளர் இயக்கமுறைமை ஆகியவை போதுமானவையாகும் இந்த கட்டற்ற பயன்பாட்டினை http://www.opensource-socialnetwork.org/download எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய சொந்த வலைபின்னலை உருவாக்கி பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்-படுகின்றது

கட்டற்ற முதன்மையான வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பக மென்பொருட்கள்

சிறிய நிறுவனங்கள்முதல் பெரிய நிறுவனங்கள் வரை தம்முடைய தரவுகளை பிற்காப்புசெய்தல், மீட்டெடுத்தல் ஆகியபணிகளை செய்வதற்கான மென்பொருட்கள் அனைத்தும் அவ்வாறான தரவுகளை எந்தவொரு சூழலிலும் இழக்காமல் பாதுகாத்திட உத்திரவாதம் அளிக்கின்றனஅதிலும் வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பக(Network attached storage (NAS)) மென்பொருட்கள் மிகப்பேருதவியாய் விளங்குகின்றன அவற்றுள் முதன்மையானவை பின்வருமாறு
1.FreeNAS எனும் கட்டற்றமென்பொருளானது SMB/CIFS,NFS , AFP, FTP, iSCSI, WebDAV என்பன போன்ற அனைத்து இயக்கமுறைமைகளின் கோப்பு பகிர்வுகளை ஆதரிக்கின்றது மேலும் இது செந்தர வலைபின்னல் ஒழுங்குமுறைமுதல் LDAP ,VLAN போன்ற ஒழுங்குமுறைவரையில் ஆதரிக்கின்றது அதனோடு Bacula, CouchPotato, BitTorrent, ownCloud,என்பனபோன்ற எண்ணற்ற கூடுதல் இணைப்புகளையும் ஆதரிக்கின்றது இதனுடைய சமீபத்திய பதிப்பு 11.2-RC2ஆகும் இதனை https://www.freenas.org/ எனும் இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

2.XigmaNAS என்பது மற்றொரு கட்டற்ற வலைபின்னல் பிற்காப்பு சேவையாளர் மென்பொருளாகும் இது FreeBSD கட்டளைவரிகள் இல்லாமலேயே வலைபின்னல் முழுவதையும் கட்டுபடுத்திடும் திறனை வழங்குகின்றது இது விண்டோ லினக்ஸ் ஐஓஎஸ் ஆண்ட்ராய்டு ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளுடன் இணக்கமாக செயல்படும்திறன்மிக்கது இது SMB, LDAP, active directory, FTP, SFTP, NFS, SSH, UPnP, BitTorrent and Bridge, CARP and HAST. ஆகிய அனைத்து ஒழுங்குமுறைகளையும் ஆதரிக்கின்றது இதனை நிறுவுகை செய்திடாமலேயே LiveCD அல்லது LiveUSB வாயிலாக பயன்படுத்தி கொள்ளமுடியும் .இதனுடைய சமீபத்திய பதிப்பு 11.2.0.4.6195ஆகும் இதனை https://www.xigmanas.com/ எனும் இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

3.Openmediavault என்பது மிகமேம்பட்ட அடுத்தலைமுறையிலான கட்டற்றவலை பின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பு மென்பொருளாகும் இது S.M.A.R.T, RAID என்பனபோன்ற மிகமேம்பட்ட சேமிப்பக நிருவாகியாக செயல்படுகின்றது அதைவிடLVM2எனும் கூடுதல் இணைப்பையும் ஆதரிக்கின்றது இதுSMB/CIFS, FTP, RSync, NFS, SSH, TFTP , RSync, BitTorrent என்போன்ற சேவைகளை வழங்குகின்றது. மேலும் இதுIPv6 , Wake on LAN போன்றவைகளைகூட கூடுதல் இணைப்பின் வாயிலாக ஆதரிகின்றது.இதனுடைய சமீபத்திய பதிப்பு4.1.12ஆகும் இதனை https://www.openmediavault.org/ எனும் இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளமுடியும்

வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பகம் (Network attached storage (NAS)) ஒரு அறிமுகம்

வலைபின்னலுடன் இணைக்கப்பட்ட சேமிப்பகமானது கோப்பு பயன்பாடு , பகிர்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுமொரு அர்ப்பணிப்பு பயன்பாட்டு சேவையகமாக கருதப்படுகிறது, . முந்தைய கோப்பு சேவையின் நேரடி இணைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் ஒப்பிடுகையில், இந்த NAS ஆனது தரவு சேமிப்பு, அணுகல் மேலாண்மை ஆகியபணிகளில் மிகமேம்பட்ட செயல்பாடுகளை வழங்குகின்றது. இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டஇயக்ககத்துடன் இணைந்த தருக்கநிலையில் அல்லது RAIDஇன் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும் இது கோப்புகளை பகிர்ந்து கொள்ள network file sharing (NFS) ,server message block (SMB) அல்லதுApple file protocol (AFP)என்பனபோன்ற ஒழுங்கமைவுமுறைகளை பின்பற்றுகின்றது இந்த NAS ஆனது நிமிடத்திற்கு மில்லியன் கணக்கான நடவடிக்கைகளை கையாளும் திறன்கொண்டது பெரிய நிறுவனங்களின் நம்பிக்கைகுகந்த அமைவாகஇது விளங்குகின்றது இதுஎண்ணிக்கைகளற்ற வகையில் குறைந்த செலவில் தரவுகளை சேமித்து வைத்து மீளப்பெறுவதற்கு பேருவதவியாய் இருக்கின்றது

இது SCP ,FTP.என்பனபோன்ற ஒழுங்கமைவைபின்பற்றி TCP/IP ஆகிய நம்பிக்கைக்குஉரிய தகவல்தொடர்புகளை வழங்குகின்றதுஅதுமட்டுமல்லாது HTTP/HTTPSஐயும் இதுஆதரிக்கின்றது
இணைப்பிற்காக Ethernet, optical fibre ஆகியவை மட்டுமல்லாது802.11. போன்ற கம்பியில்லா இணைப்பையும் தொடர்புகொள்வதற்காக பயன்டுத்தி கொள்கின்றது
தரவுகளை சேமிப்பதற்கான இயக்ககமாக இயல்புநிலையில் SCSI ஐ இதுபயன்படுத்தி கொள்கின்றது மேலும் இது ATA disks, optical disc ,magnetic media போன்றவைகளைகூட தரவுகளை சேமிப்பதற்கான இயக்ககமாக பயன்படுத்தி கொள்கின்றது
மிகமுக்கியாக கணினியை பயன்படுத்தி FTP/SMB/software server ஆகியவற்றின் வாயிலாக தன்னுடைய சேவையை வழங்குகின்றது
MIPS அல்லதுReal Time Operating System(RTOS ) பயன்படுத்திடும் ARM அடிப்படையிலான செயலியின் கட்டமைவுகளைஅல்லது உட்பொதிந்த இயக்கமுறைமையை இதனுடைய NAS சேவையாளர் செயல்படுவதற்கு பயன்படுத்தி கொள்கின்றது
இது TCP/IP ஐயும், கோப்பமைவையும் செயல்படுத்திடுவதற்கு ஒற்றையான ASIC சிப்பினை பயன்படுத்தி கொள்கின்றது
மிகமுக்கியமாக 1TB அல்லது 2TB சேமிப்பு கொள்ளவு தேவைப்படும் சிறியநிறுவனங்கள் செலவேயில்லாமல் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்ஆயினும்இதனைகொண்டு , 1000TB மேல் சேமிப்பகத்தையும் கையாளமுடியும்
இது RAID 0 , RAID 1 முதல் RAID 5வரையிலுள்ள தொழில்நுட்பங்களை ஆதரிப்பதால் குறிப்பிட்ட சேமிப்பகம் செயலிழந்து போனாலும் தரவுகளை இழக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளமுடியும்
பயனாளர்கள் தாம்விரும்பும் கூடுதலான பயன்பாடுகளைகூட பதிவிறக்கம்செய்து இதனோடு இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும் இது செயல்படுவதற்கு மிககுறைந்த அளவு மின் சாரமே போதுமானதாகும் இதனை ஒரு கையடக்க சாதனமாககூட பயன்படுத்தி கொள்ளமுடியம் இது ஒரு கட்டற்றசேவையாளராகும் இருந்தபோதிலும் கட்டணமில்லாமலும் கட்டணத்துடனும் நாம் பயன்படுத்தி கொள்ள கிடைக்கின்றது பயனாளர்கள் தொலைதூரத்திலிருந்து கூட இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு இது மேககணினி அமைவைபயன்படுத்தி கொள்கின்றது பயனாளர்களுக்கு கூடுதல் வசதி வாய்ப்புகளை பெறுவதற்காகஇதில் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளையும் பயன்படுத்தி கொள்ளஅனுமதிக்கின்றது

PriTunl VPN ஆக Raspberry Pi 3B+ஐ நாம் மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்

சிறுவியாபார நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் PriTunl என்பது ஒரு அற்புதமான VPN முனைமதீர்வாகவும் மிகவிரைவாகதனிப்பட்ட வலைபின்னலை அனுகுவதற்காகவும் அமைந்துள்ளது இது ஒரு கட்டற்ற கட்டணமற்ற பெரும்பாலான சிறிய அளவிலான வசதிகளுடனும் பயன்பாடுகளுக்கு போதுமானதாகவும் விளங்குகின்றது ஆயினும்இது கட்டணத்துடன் மிகமேம்பட்ட வசதிவாய்ப்புகளை வழங்குகின்றது PriTunl ஆனது நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்ள எளிதானது Raspberry Pi 3B+ஐ மாற்றி யமைத்திட சிறிது சிக்கலானது ஏனெனில் PriTunl ஆனது AMD64 , i386 ஆகிய பைனரிகளை வழங்குகின்றது Raspberry Pi 3B+ ஆனது ARM கட்டமைவுகளை பயன்படுத்தி கொள்கின்றது அதனால் நம்முடைய சொந்த பைனரிகளை மூலத்திலிருந்து உருமாற்றம் செய்யவேண்டியுள்ளது அதற்காக பயப்படவேண்டாம் கட்டளைகளை நகலெடுத்து ஒட்டுதல் செய்து அதன்பின்னர் என்ன நடை பெறுகின்றது என கவணித்துவந்தால் போதுமானதாகும் . இதனைபயன்படுத்தி கொள்வதற்காக PriTunl ஐ நிறுவுகை செய்வதற்குமுன் 64-பிட் இயக்கமுறைமையை Raspberry Pi 3B+யின்மீது நிறுவுகை செய்து கொள்க இதற்காக கட்டளைவரிதிரையில்
$ wget http://cdimage.ubuntu.com/releases/18.04/beta/ubuntu-18.04-beta-preinstalled-server-arm64+raspi3.img.xz
என்ற கட்டளைவரிவாயிலாக Ubuntu 18.04 ARM64 எனும் 64-பிட் இயக்கமுறைமையை பதிவிறக்கம் செய்துகொள்க தொடர்ந்து
$ xz -d ubuntu-18.04-beta-preinstalled-server-arm64+raspi3.xz
எனும் கட்டளைவரிவாயிலாக கட்டுகளை பிரித்து இந்த இயக்கமுறைமையை நிறுவுகை செய்து கொள்க
SD அட்டையை மேஜைக்கணினி அல்லது மடிக்கணினியாக பயன்படுத்திடும் Raspberry Pi உள்நுழைவுசெய்திடுக உடன் நம்முடைய கணினி அதனை ஒரு /dev/sda அல்லது /dev/sdb இயக்ககமாக ஒதுக்கீடு செய்து கொள்ளும் அதனை உறுதிபடுத்தி கொள்வதற்காக .dmesg எனும் கட்டளையை பயன்படுத்திடுக
அதன்பின்னர்
$ dd if=ubuntu-18.04-beta-preinstalled-server-arm64+raspi3.img of= bs=8M
எனும் கட்டளைவரியை மிககவணமாக உள்ளீடுசெய்து செயற்படுத்திடுக பிறகு SD அட்டையைPiஇல் உள்நுழைவுசெய்து செயற்படுத்தியபின்னர் நம்முடைய வலைபின்னலில் ubuntu/ubuntu எனும் சொற்களுடன் கலந்தவாறான பயனாளர் பெயர் கடவுச்சொற்களை கொண்டு உள்நுழைவுசெய்து கொள்க .தொடர்ந்து
$ sudo apt-get -y install build-essential git bzr python python-dev python-pip net-tools openvpn bridge-utils psmisc golang-go libffi-dev mongodb
என்ற கட்டளைவரியை நம்முடையPi யில் ஒருசில அடிப்படைகளை PriTunl உருமாற்றுவதற்கு தயாரிப்பதற்கு உள்ளீடு செய்து செயற்படுத்திடுக
$ sudo su –
இது நம்முடைய சொந்த root’s இயக்ககத்தை விட்டிடுகின்றது . PriTunl version 1.29.1914.98 ஐ நிறுவுகை செய்வதற்காக பின்வருமாறான கட்டளைவரிகளை உள்ளீடு செய்திடுத ( GitHubஒவ்வொன்றிற்கும்):
export VERSION=1.29.1914.98
tee -a ~/.bashrc << EOF
export GOPATH=\$HOME/go
export PATH=/usr/local/go/bin:\$PATH
EOF
source ~/.bashrc
mkdir pritunl && cd pritunl
go get -u github.com/pritunl/pritunl-dns
go get -u github.com/pritunl/pritunl-web
sudo ln -s ~/go/bin/pritunl-dns /usr/bin/pritunl-dns
sudo ln -s ~/go/bin/pritunl-web /usr/bin/pritunl-web
wget https://github.com/pritunl/pritunl/archive/$VERSION.tar.gz
tar -xf $VERSION.tar.gz
cd pritunl-$VERSION
python2 setup.py build
pip install -r requirements.txt
python2 setup.py install –prefix=/usr/local
தற்போது MongoDB and PriTunl systemd units ஆகியவை செயல்படத் தயாராகி விட்டது நாம் தற்போது root ஆக உள்நுழைவு செய்துள்ளோம் என கருதிகொண்டு பின்வரும் கட்டளைவரிகளை உள்ளீடுசெய்து செயற்படுத்திடுக
systemctl daemon-reload
systemctl start mongodb pritunl
systemctl enable mongodb pritunl
அவ்வளவுதான் PriTunl's இணையஉலாவியானது பயனாளிகளின் இடைமுகத்துடன் பயன்படுத்துவதற்கு தயாராகிவிட்டது அதில் https://docs.pritunl.com/docs/configuration-5 எனும் இணையபக்கத்தில கூறியுள்ளவாறான கட்டமைவுகளை நிறைவுசெய்து கொண்டால் இணையஉலாவலுக்கு போதுமானதாகும்.

வலைபின்னலுக்கான Faucet எனும் கட்டற்ற மென்பொருளால் வரையறுக்கப்பட்ட கட்டுபாட்டாளர் ஒரு அறிமுகம்

சேவையாளர் தொகுப்பு (clusters)செயல்படுத்திடுவதைபோன்ற பயனாளிகள் வலைபின்னலை இயக்குவதற்கு இயலுமை செய்யஇந்த Faucet எனும் கட்டற்ற மென்பொருளால் வரையறுக்கப்பட்ட கட்டுபாட்டாளர் உதவுகின்றது வலைபின்னலில் உள்ளவன்பொருள் மென்பொருள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்து கட்டுபடுத்தஇந்த கட்டற்ற மென்பொருள் உதவுகின்றது வழக்கமான ஒழுங்கமைவுகள், அருகிலிருப்போரை கண்டுபிடித்தல் அல்காரிதம்களை மாற்றிகொள்வது ஆகிய வலைபின்னலின் அனைத்து பணிகளை எளிதாக கையாளுவது பரிசோதிப்பது, விரிவாக்கம் செய்யவது ஆகிய பணிகளை வழக்கமான மென்பொருட்களுக்கு செயல்படுத்திடுமாறு கடத்தசெய்து சேவையாளரையும் உட்பொதிந்த பழைய செயலிகளையும வழிசெலுத்தியில் செயல்படசெய்கின்றது Allied Telesis, Cisco, NoviFlow போன்ற நடப்பு பயன்பாட்டிலுள்ள வலைபின்னல்கள் இந்த கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திடுகின்றன இது நொடிக்கு 9 டெராபைட் அளவு தரவுகளை கையாளகூடியதாக விளங்குகின்றது இது SCinet எனும் வழிசெலுத்தியை உட்பொதிந்ததாக வைத்துகொண்டு inter-VLAN எனும் வழிசெலுத்தியை தன்னுடைய பணிக்காக பயன்படுத்தி Link Aggregation Control Protocol (LACP)எனும் ஒழுங்குமுறையை பின்பற்றுகின்றது இதனை பற்றிய மேலும் விவரங்களுக்கும் இதனை பயன்படுத்தி கொள்ளவும் https://faucet.nz/ எனும் இணையமுகவரிக்கு செல்க

வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம்

Tor என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) என்பது பயனாளர் ஒருவர் இணையத்தில் முகமிலியாக இணைந்து தான் பயன்படுத்திய இணைய இணைப்பின் விவரங்கள் சாத்தியமான அனைத்து கண்காணிப்புகள் இட கண்காணிப்புகள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக அகற்றி சுதந்திரமாக இணையத்தில்உலாவர உதவிடும் ஒரு வலைபின்னல் கட்டமைப்பாகும்.

அதாவது எந்தவொரு நபரும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து கொண்டு முகமிலியாக இணையத்தில் உலாவருவதற்கு இந்த Torஆனது அனுமதிக்கின்றது மிகமுக்கியமாக எந்தவொரு போக்குவரத்து பகுப்பாய்வு வலைபின்னல் உளவு மூலம் பயனாளர் பாதிக்காமல் அவரைப் பாதுகாக்கின்றது. முகமிலி இணைய இணைப்பிற்கு மிகவும் பிரபலமானதும் பாதுகாப்பானதுமான விருப்பமாக இந்த Tor எனும் வலைபின்னல் கட்டமைவு அமைந்துள்ளது இந்நிலையில்Tor என்பதொரு இணைய உலாவியென குழப்பி கொள்ளவேண்டாம் Tor என்பதுஇணைய உலாவியை எளிதாக அனுக உதவிடுமொரு வலையமைப்பாகும் என்ற செய்தியைமட்டும் மனதில் கொள்க மாற்றியமைக்கப்பட்ட மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸின் ESR வலை உலாவியின் உதவியுடன் இந்த Tor வலையமைப்பை நம்மால் அணுகமுடியும் இந்த Tor வலையமைப்பானது1990 இல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு 2002 இல் நடைமுறைபடுத்தப்பட்டு தற்போதுElectronic Frontier Foundation (EFF).எனும் நிறுவனத்தாரால் பராமரித்து மேம்படுத்துப்பட்டுவருகின்றது
இது வெங்காயவழிசெலுத்தி(onion routing)எனும் வழிமுறை கருத்தமைவின் அடிப்படையில் செயல்படுகின்றது அதாவது பயனாளரின தரவுகளை முதலில் மறைகுறியாக்கம் செய்தபின்னர் இந்த Torவலைபின்னலுடைய வெவ்வேறுசுற்றுகளின் வாயிலாக கடத்தப்படுதல் மீண்டும் மறைகுறியாக்கம் செய்தபின்னர் மீண்டும் வெவ்வேறுசுற்றுகளின் வாயிலாக கடத்தப்படுதல் என்றவாறு மீண்டும் இவ்வாறான பணியையே பயனாளர் தரவின்மீது செயல்படுத்தப்படுகின்றது அதாவது வெங்காயத்தோல்போன்று பல்லடுக்கு மறையாக்கத்தின் வாயிலாக பயனாளரின்பாதுகாப்பு இதன்மூலம் உறுதி படுத்தப்படுகின்றது ஆயினும் நாம் அனுப்புகின்ற தரவானது தொடர்புடைய சேவையளர்பகுதிக்கு ஏதொவொரு சுற்றின் வாயிலாக பாதுகாப்பாக சென்றடையும் வரை ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு குறியாக்கம் தொடர்ந்து மறையாக்கம் என்றவாறு இதில் மாற்றியமைத்து கொண்டேயிருக்கும் கடைசியாக சென்றடையும் மிகச்சரியான சேவையாளர் பகுதிக்கு உண்மையான தரவு பாதுகாப்பாக சென்றடைந்து-விடும் அதனால் இடையில் இந்த தரவினை இடைமறித்து எங்கிருந்துவருகின்றது எங்கு செல்கின்றது உள்ளடக்கம் என்னவென யாராளும் அடையாளம் காணமுடியாதவாறு பல்லடுக்கான குறியாக்கம் மறைகுறியாக்கம் செய்து பாதுகாத்திடுகின்றது தனியான பயனாளருக்கு முகமிலி பாதுகாப்பு வழங்குவதுமட்டுமல்லாது இணைய பக்கங்களுக்கும் சேவையாளர் கணினிக்கும் மறைகுறியாக்கசேவையை இது வழங்குகின்றது நம்முடைய சுய அடையாளத்தை மறைத்து கொண்டு குறிப்பிட்ட இணையபக்கத்தை அனுக விரும்புவோர்கள் இந்த Torவலைபின்னலை பயன்படுத்தி கொள்ளலாம் பயனாளர் ஒருவர் தடைசெய்யப்பட்ட பகுதியிலும் பாதுகாப்பாக உலாவருவதற்கு இது பெரிதும் பயன்படுகின்றது BitTorrent போன்ற P2P பயன்பாடுகளின் கோப்புகளையும் இந்த Torவலைபின்னலின் வாயிலாக மிகவும் பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் BitTorrent பயனாளர்களின் 10k அளவுடைய IP முகவரிகளை Bad Apple எனும் தாக்குதலின் போது இந்த Torவலைபின்னலானது மிகவும் சிறப்பாகபாதுகாத்தது என்ற செய்தியின் வாயிலாக இதனுடைய பாதுகாப்பு நம்பகத்தன்மையை நாம் அறிந்து கொள்ளமுடியும்
இது மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸின் இணைய உலாவியை ஆதரிக்குமாறு இதனுடைய விரிவாக்க ஆதரவு பதிப்பு ஒன்று செயல்படுகின்றது என்ற கூடுதல்செய்தியையும் மனதில் கொள்க இது கையடக்க சாதனத்திலும் தேவையான இடத்திற்கு கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ளத்தக்க-வகையில் இது கிடைக்கின்றது இது ஒவ்வொருமுறை உலாவவந்துமுடிந்தவுடன் அதனுடைய உலாவந்த வரலாறு முழுவதையும் அதனுடைய குக்கீகளின் இடஅமைவுகளையும் முழுவதுமாக அழித்து நீக்கம் செய்து கொள்கின்றது அதன்வாயிலாக வேறுயாரும் நம்மை தேடிகண்டுபிடித்திட முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாட்டினை செயல்படுத்தி நம்மை பாதுகாக்கின்றது இது விண்டோ லினக்ஸ் மேக் ஆகிய அனைத்து இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன்மிக்கது அதைவிட இது ஆண்ட்ராய்டு சாதனங்களிலும்(Orbot எனும் பெயரில்) கைபேசிகளிலும் (Orfox எனும் பெயரில்) ஐஓஎஸ் கைபேசிகளிலும் செயல்படும் திறன்கொண்டது இதனை பயன்படுத்தி கொள்வதற்காக இதனுடைய https://www.torproject.org/projects/torbrowser.html.en எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்க தொடர்ந்து Tor Browser setup.என்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இயங்க செய்திடுக உடன் விரியும் திரையில் தேவையான நாம் விரும்பும் மொழியை தெரிவுசெய்து கொள்க அடுத்துதோன்றிடும் திரையில் இந்த பயன்பாடு செயல்படும் கோப்பகத்தை தெரிவுசெய்து கொள்க இதற்காக நாம் பணிபுரியும் கணினியின் திரையைகூட தெரிவு செய்து கொள்ளலாம் இறுதியாக Install. எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து நிறுவுகை செய்து கொள்க

Previous Older Entries