வலைபூ உருவாக்குபவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உதவதாயராக இருக்கும் சிறந்த இலவச கருவிகள்

வலைபூ உருவாக்குபவர்களும் எழுத்தாளர்களும் தம்முடைய சொந்த கருத்துகளை அனைவரையும் கவருமாறு மெருகூட்டிட உதவிக்கு கைகொடுப்பதே பின்வரும் கட்டற்ற இலவச கருவிகளாகும்
1 BuzzSumo எனும் கருவியானது நம்முடைய வலைபூவின் உள்ளடக்கத்தை சந்தை படுத்துதலுக்கும் SEO campaigns செய்வதற்காகவும் பயன்படுத்திகொள்வதற்கான மிகச்சிறந்த கருவியாகும் பொதுவாக மக்கள் அனைவரும் என்ன விரும்புகின்றார்கள் என அறிந்துகொண்டு அதற்கேற்ற தகவல்களை வழங்க உதவுகின்றது அதுமட்டு-மல்லது போட்டியாளர்களின் உள்ளடக்கங்களைபற்றி ஆய்வுசெய்து நம்முடைய உள்ளடக்கத்தை மேலும் மேம்படுத்தி கொள்ள பயன்படுத்தி கொள்ள முடியும்
2 Portent Title Maker நம்முடைய வலைபூவில் அன்றாடம் உருவாக்கப்படும் செய்திகளுக்கு அனைவரையும் கவருமாறு பொருத்தமான தலைப்புகளை இடுவதற்கும் பதிய கருத்துகளை உருவாக்குவதற்கும்இந்த தளம் உதவுகின்றது மிக எளிதாகவும் விளையாட்டாகவும் தலைப்புகளை உருவாக்கிடவும் ஏராளமான கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது
3 Grammarly எனும்கருவியானது நம்முடைய வலைபூ மட்டுமல்லாது மின்னஞ்சலிலும் நாம் உருவாக்கிடும் தொகுப்பான ஆவணத்தகவல்களில் ஏற்படும் எழுத்துப்பிழை இலக்கணப்பிழை நிறுத்தக்குறியீடுகள் பாவணைகள் போன்றவற்றை சரிபார்த்திட உதவுகின்றது
4 Yoast WordPress SEO இணைபபு இதுநம்முடைய வலைபூவை தேடுபொறியில் சரியாக கொண்டுசென்றிடவும் நடப்பு உள்ளடக்கஆய்விற்கும் பயன்படுகின்றது நம்முடைய வலைபூவினை அனைவரையும் சென்றடைவதற்கான மிகச்சிறந்த கருவியாக இது விளங்குகின்றது

WAMPசேவையாளரை கொண்டு வேர்டு பிரஸ்ஸின் இணையபக்கபயன்பாடுகளை எளிதாக உருவாக்கிடுக

  4

இணையபக்கத்தை உருவாக்குவதற்கான சிறந்த மேதையாகவோ அறிஞராகவோ இல்லாத புதிய அறிமுகமானவர்கள்கூட வேர்டுபிரஸ்ஸிலுள்ள நூற்றுக்கமேற்பட்ட மாதிரிபலகங்களையும் வடிவமைப்புகளையும் பயன்படுத்தி இலவசமாக இணைய பக்கங்களையுோ வலைபூக்களையோ நாமே உருவாக்கமுடியும்.  மேலும் இது ஒரு சிறந்த உள்ளடக்கமேலாண்மை அமைவாகும்  அதிலும் WAMP சேவையாளரை பயன்படுத்தி வேர்டு பிரஸ்ஸின் இணையபக்கபயன்பாடுகளை எளிதாக உருவாக்கிடமுடியும் இங்கு   WAMP என்பது  Window Apache MySQL PHP ஆகியவை சேர்ந்த அவற்றின் சுருக்குபெயராகும் இதனைhttp://www.wampserver.com/en/   என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவுகை செய்துகொள்க பின்னர் http://locaslhost/ என்ற தளத்தின் வாயிலாக இதிலுள்ள Apache,MySQL  ஆகியவை சரியாக செயல்படுகின்றதா என சரிபார்த்துகொள்க  அதன்பின்னர் விண்டோ செயல்பட்டையிலுள்ள WampServer என்பதன் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்  phpMyAdmin என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.  அதன்பின்னர் நம்முடைய தரவுதளத்திற்கு wordpress_dp என்றவாறு பெயரிட்டு createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் http:s//wordpress.org/ என்ற தளத்திலிருந்து வேர்டுபிரஸ்ஸை பதிவிறக்கம் செய்து அதன்கட்டினை பிரித்துc:/wamp\www\ என்ற இடத்தில் வைத்திடுக   அதன்பின்னர் http://localhost/wordpress/ என்ற இணைய பக்கத்தை திறந்துகொள்க அதில் நாம் பயன்படுத்திடவிரும்பும் மொழியை தெரிவுசெய்துகொண்டு continue என்றபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் வேர்டுபிரஸ்ஸின் வரவேற்பு திரைதோன்றிடும்அதில் 1.தரவுதளத்தின் பெயர்wordpress_dp என்றும், 2.பயனாளரின் பெயர் இயல்புநிலையில் WAMP சேவையாளரின் மூலப்பகுதியும், 3.கடவுச்சொற்கள்  இயல்புநிலையில் காலியாகவும் இருக்கும். இங்கு Let’s go  எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அடுத்து தோன்றிடும் திரையில் wpஎன்ற முன்னொட்டு எழுத்துகளை உள்ளீடு செய்துகொண்டு மிகுதி விவரங்கள் அனைத்தையும் உள்ளீடு செய்துகொள்க  அடுத்துவிரியும் திரையின் படிவத்தில் இணையதளத்தின் பெயர், நிருவாகியின் பெயர், கடவுச்சொற்கள் மின்னஞ்சல் முகவரி போன்ற தேவையான விவரங்களை  உள்ளீடு செய்துகொண்டு  Install எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன் பின்னர் இணையபக்கத்திற்குள் வழக்கமாக உள்நுழைவு செய்திடும் login  வாயிலாக உள்நுழைவு செய்திடலாம்.இதில் நிருவாகியாக httP://localhost/wordpress/wp-admin/ என்றமுகவரியின் வாயிலாக உள்நுழைவுசெய்திடலாம்  தேவையான திருத்தங்களை செய்திடலாம்

செல்லிடத்து பேசி மூலம் வலைபூவிற்கு செல்லாமலேயே வெளியிடமுடியும்

நம்முடைய செல்லிடத்து பேசி போன்ற சாதனங்களிலிருந்து கூட மின்னஞ்சல் அனுப்பவதன்மூலம் நம்முடைய கட்டுரை போன்ற தகவல்களை  நம்முடைய வலைபூவிற்கு குறிப்பிட்ட வலைதளத்தின் பக்கத்திற்கு செல்லாமலேயே பின்வரும் வழிமுறையை பின்பற்றி வெளியிடமுடியும்

7.1

முதலில் நம்முடை வலைபூவின் முகப்பு பக்கத்திற்கு செல்க பின் Dashboard => My Blogs=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக

7.2

பின்னர் தோன்றிடும் திரையில் New Post என்பதன் கீழுள்ள Screen options என்பதன் அம்புக்குறியை சொடுக்கி விரியசெய்க அதிலுள்ள Post by e mail என்றவாய்ப்பிற்கு நம்முடைய வலைபூவின் முகவரியை தேடிபிடித்து அதற்குரியEnable என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

7.3

இதற்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரியை வீகார்டின்மூலம் பதிவிறக்கம் செய்து கொள்க அல்லது புதியதாக regenerateஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி உருவாக்கி கொண்டு நம்முடைய மின்னஞ்சல் முகவரியில் பதிவுசெய்து சேர்த்து கொள்க

இதன்பின் நம்முடைய மின்னஞ்சலின் புதியமின்னஞ்சல் பக்கத்தை திறந்து அதில் To என்பதற்கருகிலுள்ள உரைபெட்டியில்  வலைபூவில் கட்டுரைகளை வெளியிடுவதற்காக சேமி்த்து வைத்த முகவரியை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க

பின்னர்subject என்ற பகுதியில் நம்முடைய வலைபூவின் தலைப்பை உள்ளீடு செய்து மின்னஞ்சல் உள்ளடக்கமாக நம்முடைய வலைபூ கட்டரையின் உள்ளடக்கத்தை உள்ளீடு செய்து என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நம்முடைய மின்னஞ்சல் சென்று சேர்ந்து  வலைபூவில் வெளியிடபட்டு அந்த விவரங்களை அறிவிக்கும் மின்னஞ்சல் ஒன்று நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து சேரும்

ஜிமெயில் ஹாட்மெயில் போன்ற மின்னஞ்சல் சேவையாளர்கள்கூட இந்த வசதியை ஆதரிக்கின்றன மேலும் இதற்காக நம்முடைய மின்னஞ்சல் உள்ளீடு செய்யும்போது rich text or formatted ஆகிய நிலையில் வைத்து கொள்வது நல்லது

இணைப்பு படங்களையும் பிடிஎஃப் போன்ற ஆவனங்களையும் இணைப்பாக வலைபூவில் வைத்திடமுடியும்

இன்ட்லியின் புதிய Follower Widgetஐவலைபூவில் இணைக்க

தமிழ் திரட்டிகளில் முக்கிமானதும் வலைபூக்களுக்கு அதிக வாசகர்களை அளிப்பதும் ஆன இன்ட்லி எனும் திரட்டிமூலம் நம்மை தொடர்வதால் நம்முடைய இடுகைகளை வாசகர்கள் முகப்பு பக்கத்தில் பெறமுடியும். இதனால் Followers எண்ணிக்கை கணிசமாக உயர்கின்றது. இந்த இன்ட்லி தளம் சமீப காலமாக புதிய ஏராளமான மாற்றங்களை செய்து வருகிறது.  இந்த வரிசையில் தற்போது புதிய Indli Follower என்ற விட்ஜெட்டை அறிமுகம் செய்து உள்ளது.  இந்த விட்ஜெட்டை நம்முடைய வலைபூவில் இணைப்பதால் நம்முடைய Followers மேலும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. வாசகர்களும் இந்த விட்ஜெட்டில் உள்ள தொடர்க என்ற பட்டனை அழுத்தி சுலபமாக நம்மை பின்தொடரலாம். இதற்காக இன்ட்லி தளம் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த விட்ஜெட்டை நம்முடைய வலைபூவில் இணைப்பதற்காக முதலில் http://ta.indli.com/ என்ற  தளத்திற்கு செல்க அந்ததளத்தில் உள்ள பக்கபட்டையில் புதியதாக Follower Widget என்பது இருக்கும்.

படம்-1

 இதில் பயனர் பெயர் என்ற இடத்தில் நம்முடைய இன்ட்லியின் பயனர் பெயரை vikupficwa  என்றவாறு நம்முடைய பெயர் இருக்கும்

அகலம்- 250 என இருக்கும். தேவையெனில் மாற்றி கொள்க.

படவரிசை- 4 என இருக்கும். தேவையெனில் மாற்றி கொள்க

தலைப்பு- வேண்டாமென்றால் தேர்வுசெய்திருப்பதை நீக்கி விடுக.

இந்த மாற்றங்களை செய்தவுடன் கீழே விட்ஜெட் இற்க்கான நிரல் தொடர் தோன்றிடும்  அதனை நகலெடுத்துகொள்க

படம்-2

பின்னர்  நம்முடைய www.skopenoffice.blogspot.com  என்ற வலைபூ பக்கத்திற்கு சென்று அங்கு  Design என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் வலைபூவின் வடிவமைப்பு திரையில் Add a Gadget என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் தோன்றும் Blogger: Add a Gadgetஎன்ற திரையில் HTML/Java script  என்பதை தெரிவு செய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில்  ஏற்கனவே நகல் எடுத்த நிரல்தொடரை ஒட்டி சேமித்துகொள்க

படம்-3

அதற்கு பதிலாக நிரல்தொடருக்கு கீழ்பகுதியில் உள்ள Add to Blogger என்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் Add page Element  என்ற திரையில்  Add Wedget என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இதன்பிறகு வாசகர்கள் இன்ட்லி தளத்திற்கு செல்லாமலேயே நேரடியாக இந்த விட்ஜெட்டின் மூலம் நம்முடைய வலைபூவை பின்தொடரலாம்.

எம்.எஸ்.ஆஃபிஸ்-வேர்டு-2007-ன்உதவியுடன் ஒரு வலைபூவை எவ்வாறு உருவாக்குவது

ஒரு வலைபூவை எவ்வாறு உருவாக்குவது என்று விவரம் தெரியாத ஒரு சாதாரண நபரும் எம்.எஸ்.ஆஃபிஸ்-வேர்டு-2007 என்ற பயன்பாட்டை பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் மிக எளிதாக சிறந்த தொழில்முறை வலைபூ எழுதுபவரை போன்று இணையத்தில் வலைபூஒன்றை உருவாக்கிடமுடியும்  இதற்கான படிமுறை பின்வருமாறு

படிமுறை1 எம்.எஸ்.ஆஃபிஸ்-வேர்டு-2007 என்ற பயன்பாட்டின் திரையின் மேலே இடதுபுறமூலையிலிருக்கும் எம்எஸ்ஆஃபிஸ் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் பட்டியில் new என்பதையும் அதன்பின் தோன்றிடும் திரையில்newblogpost என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்கியபின் create என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்  Enter post title here.doc என்ற வேர்டு-2007 சாளரம் blogpostஎன்ற ரிப்பனின் திரையுடன் தோன்றும் அதன்பின்னர் [Enter Post Title Here] என்ற பகுதியில் உங்களுடைய வலைபூவிற்கு ஒருதலைப்பை உள்ளீடு செய்க

 படிமுறை2. பின்னர் நாம் கூறவிரும்பும் செய்தியை காலியான அதன் உள்ளடக்க பகுதியில் உள்ளீடுசெய்க இந்த உரையை மேலும் மெருகுகூட்டிடவிரும்பினால் திரையின் மேல்புறம் இருக்கும் தேவையான ரிப்பனை பயன்படுத்தி வடிவமைத்து கொள்க..

  படிமுறை3.இந்த பதிவில் படங்களையும் ஒலிஒளிகாட்சிகளையும் உள்ளிணைத்து கொள்க மேலும்தேவையானால் ஒலிஒளிகாட்சி சேவைத்தளத்திலிருந்துகூட நேரடி இணைப்பை ஏற்படுத்திகொள்க

படம்-1

  அதன்பின்னர் மேலேBlogpostஎன்ற ரிப்பனின்  Blogஎன்ற குழுவிலுள்ள  publish என்ற கீழிறங்கு பட்டியல் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பட்டியில் publishஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் தோன்றிடும்  register a blog accountஎன்ற உரையாடல் பெட்டியில் register an  accountஎன்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அதன்பின்னர் விரியும் new blog accountஎன்ற உரையாடல் பெட்டியில் choose your blog provider என்றகீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் word press என்றவாறு நம்முடைய வலைபூவழங்குநரின் பெயரை தெரிவுசெய்து கொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும்  new word press account என்பதில் நமக்கு ஏற்கனவே வலைபூகணக்கிருந்தால் அதன் விவரங்களை உள்ளீடு செய்து அல்லது புதியதாக இருந்தாலும் தேவையான விவரங்களை உள்ளீடுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

உடன் நம்முடைய கணினி இணைய இணைப்புடன் இருந்தால் நம்முடைய வலைபூவின் புதியபதிவு இணையத்தில் வெற்றிகரமாக வெளியிடபட்டதாக அறிவிக்கும் சிறு உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும் அதில்   ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த செயலைமுடிவிற்கு கொண்டு வருக.

இதன்பிறகு Open existing அல்லது  home page ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் நம்முடைய வலைபூவை நேரடியாக எம்எஸ்வேர்டு-2007- இலிருந்து திறந்து பார்வையிடமுடியும்

 படம்-2

 

ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது போது அதனை செயல்படாது வைத்திருப்பதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவதா

ஒருசில நேரங்களில் நமக்கு ஃபேஸ்புக் கணக்கு தேவைப்படாது அப்போது அதனை செயல்படாது வைத்திருப்பது நல்லதா அல்லது முழுவதுமாக நீக்கம்செய்துவிடுவது நல்லதா என குழப்பம் ஏற்படும்

இந்த ஃபேஸ்புக் கணக்கு நமக்கு தேவைப்படாதபோது செயல்படாமல் வைத்திட்டால் நம்முடைய நண்பர்கள் நம்மைபறறிய விவரங்களையும் நம்முடைய உருவபடங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. புதியவர்கள் நம்மைபற்றிய விவரத்தை தேடி அறிந்து கொள்ளவே முடியாது

ஆனால் ஃபேஸ்புக்  தளமானது இந்த விவரங்களை தன்னுடைய நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் இது ஒருதற்காலிகமான ஏற்பாடாகும் தேவைபடும்போது மீண்டும் செயல் படுமாறு செய்து  நம்மை பற்றிய விவரங்களில் பழையநிலையை பராமரிக்கமுடியும்

இவ்வாறு செய்வதற்காக இந்த தளத்தின் மேலே கட்டளைபட்டியில் Account=> Account Settings=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.

உடன் தோன்றும் திரையின் இடதுபுறத்தில்  உள்ள Security என்ற தாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

பின்னர் விரியும் Security என்ற தாவியின் திரையில் Deactivate my account என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

அவ்வாறு செயற்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் நம்முடைய கணக்கினை செயல்படாது வைத்திருப்பதற்கான காரணங்களை பட்டியலாக காண்பிக்கும் அவற்றுள் ஒன்றை தெரிவுசெய்து Confirm என்ற பொத்தானை சொடுக்கி நம்முடைய ஃபேஸ்புக் கணக்கின் கடவுச்சொற்களை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

உடன் நம்முடைய கணக்கு செயல்படாததாக மாறிவிடும் மீண்டும் செயல்படுத்திட இந்த தளத்தில் நம்முடைய  மின்னஞ்சல்முகவரியையும் கடவுச்சொற்களையும் உள்ளீடுசெய்து உள்ளீட்டு விசையை அழுத்துக

ஆனால் நம்முடைய ஃபேஸ்புக் கணக்கை நீக்கம்செய்தால் நம்மைபற்றிய விவரமுழுவதும் நிரந்தரமாக நீக்கம்செய்துவிடும்  நமக்கு ஃபேஸ்புக் கணக்கே தேவையில்லை எனும் போது மட்டும் நீக்கம் செய்வதற்கு என தனியான தொரு  delete என்ற பொத்தான் எதுவும் இந்த தளத்தில் இல்லை ஆயினும் பின்வரும் இணைய முகவரியை இதற்காக பயன்படுத்தி கொள்ளலாம் https://www.facebook.com/help/contact.php?show_form=delete_account  அல்லது “delete my account என்ற கட்டளையை செயற்படுத்துவதன்மூலம் இந்த தளத்திற்கு செல்லமுடியும்  நீக்கம் செய்வதற்கான  இணைப்பு முகவரியை சொடுக்கியவுடன் இந்த தளமானது this action is permanent and that you cannot reactivate.என்ற ஒரு எச்சரிக்கை செய்தியை நமக்கு தெரிவிக்கும்  தொடர்ந்து கண்டிப்பாக நீக்கம் செய்யவிரும்பினால் Submit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய கடவுச்சொல்லையும் கேப்ஷா எழுத்துகளையும் உள்ளீடுசெய்து  Okay. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் நம்முடைய கணக்கை நீக்கம் செய்யாமல் பராமரித்திட மீண்டும் ஒரு வாய்ப்பாக மேலும் 14 நாட்களுக்கு மட்டில் நம்கணக்கு பற்றிய விவரங்களை நீக்கம் செய்திடாமல் பராமரிப்பதாகவும் தேவையெனில் இந்த காலக்கெடுவிற்குள் நம்முடைய கணக்கை மீட்டு கொள்ளலாம் என்றும் எச்சரிக்கும்

அவ்வாறு அளிக்கபட்ட 14நாட்கள் கொடுமுடிந்தவுடன் பின்வருமாறு செய்தி உறுதி செய்து கொள்வதற்காக தோன்றிடும்

அதில் Confirm Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் முழுவதுமாக நம்முடைய ஃபேஸ் தளத்தின் கணக்கு  நீக்கம் செய்யபட்டுவிடும் அல்லது  மனம்மாறி Cancel Deletion என்ற பொத்தானை சொடுக்கினால் நம்டைய கணக்கு நீக்கம் செய்யாமல் பராமரிக்கபடும்

 

செல்லிடத்து பேசியிலும் நம்முடைய வலைபூவை காணும்படி செய்யலாம்

புதியதாக வலைபூ ஒன்றை உருவாக்கி அதை பல்வேறு வழிகளில் மேம்படுத்தி கணினி மட்டுமல்லாது செல்லிடத்து பேசியிலும் பார்த்து மகிழும்படி செய்யமுடியும் இவ்வாறு செல்லிடத்து பேசியில் நம்முடைய வலைபூவை காண்பதற்கான வழிமுறை பின்வருமாறு

முதலில்  நம்முடைய வலைபூவை திறந்து கொள்க பின்னர் அந்த திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள dashboard=> அமைப்புகள் (settings) => மின்னஞ்சல் மொபைல் (email& mobile)=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் திரையில்  mobile template  என்ற தலைப்பின் கீழ் show mobile template என்பதற்கருகே உள்ள 1.Yes. Show mobile template on mobile devices, 2.No. Show desktop template on mobile devices. ஆகிய இரு வாய்ப்புகளில்  No. Show desktop template on mobile devices. என்ற வாய்ப்பை மட்டும் தெரிவு செய்து கொண்டு  அமைப்புகளை சேமி (save settings) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இவ்வாறு மாற்றுவதால் நம்முடைய வலைபூவானது கணினியில் திறந்து பார்ப்பதை போன்று செல்லிடத்து பேசியிலும் திறந்து பார்க்கமுடியும்.

 கருத்துரைபெட்டியின் (comment box) மேல்மீட்பு சாளரம் (popup window)

நம்முடைய வலைபூவின் பதிவுகளுக்கு வாசகர்களின் கருத்துகளை கூறுவதற்காக அதற்கான கருத்துரைபெட்டியை (comment box)  பதிவுக்கு கீழே வைத்திருப்போம்  இதனால்  செல்லிடத்து பேசியிலிருந்து  கருத்துரைகள் உள்ளீடுசெய்வது சற்று சிரமமான செயலாகும்.

எவ்வாறெனில் பதிவை திறப்பதற்கு ஒரு முறையும்  அப்புறம் கருத்துரைபெட்டியை சொடுக்கினால்  இரண்டாவது முறையும்  அதன்பிறகு நம்முடைய கருத்துகளை தட்டச்சு செய்து  apply என்ற பொத்தானை சொடுக்குவதால் மூன்றாவதொரு முறையும் . மறுபடியும் apply என்ற பொத்தானை சொடுக்கியபின்னர்  நான்காவதுமுறையும் பதிவேற்றம் ஆகியபின் பதிவிற்கு கீழே வாசகர்களினுடைய கருத்துகள் திரையில் காண்பிக்கும்.

ஆக, செல்லிடத்து பேசியிலிருந்து  ஒரு வலைபூ பதிவிற்கு கருத்துகளை உள்ளீடு செய்வதற்கு ஏறத்தாழ நான்கு முறை அந்த பதிவு முழுமைக்கும் பதிவேற்றமாகிறது. இதனால் நம்முடைய பதிவிற்கு செல்பேசியில் காண்பவர்களிடமிருந்து  கருத்துரைகள் வருவது குறைய வாய்ப்பு ஏற்படுகின்றது. செல்லிடத்து பேசி வைத்திருப்பவர்களும் எளிதாக நம்முடைய வலைபூவை பார்வையிட்டு தங்களின் கருத்துரைகளை உள்ளீடு செய்வதற்கு ஏதுவாக அதனை popup window ஆக வைத்திடுவது மிகநன்று அதற்காக

Dash board=>  அமைப்புகள் (settings) =>  கருத்துரைகள் (comments)  => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  திரையில் கருத்துரைபடிவஇடம்(comment form placement)  என்பதற்கருகில் உள்ள வாய்ப்புகளில் மேல்தோன்றும் சாளரம் (popup window ) என்ற வாய்யப்பை தெரிவுசெய்து அமைப்புகளை சேமி (save settings) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இதனால் கணினிமூலம் கருத்துரை உள்ளீடு செய்பவர்களுக்கும் எளிது. பதிவு அப்படியே இருக்கும். கருத்துரை பெட்டி புதியசாளரமாக  திறக்கபட்டு செயல்படுத்தபடும்

வலைபூவின் மாதிரிபடிமம் (template) செல்லிடத்து பேசிக்கு ஏற்புடையதாகஉள்ளதா?

ஒருசில வலைபூக்கள் செல்லிடத்து பேசியில் திறக்கமுடியும் , ஆனால் அதில் தமிழ் எழுத்துக்கள் தெரியாது. இதனால் அந்த வலைபூவை செல்லிடத்து பேசியில் படிக்க இயலாது. எனவே இவ்வாறான நிலையில். புதிய மாதிரி படிமத்தை (template) நம்முடைய வலைபூக்களுக்கு தெரிவுசெய்யும் போது செல்லிடத்து பேசிமூலம் அனுகுபவர்களுக்கும் பிரச்சனை இல்லாத சரியான மாதிரி படிமத்தை (template) கவனமாக தேர்ந்தெடுத்திடுக.

Previous Older Entries