இயந்திரகற்றலும்(Machine Learning),திறன்பேசியும் (Smartphone) ஒன்றிணைந்தால் மிக சிறந்த பயனை நாம் அடையமுடியம்

அது எவ்வாறு என்பதுதான் நம்மனைவரின் முன்உள்ள மிகப்பெரியகேள்வியாகும் இயந்திரகற்றல்(Machine Learning) என்பது கணினியை மனிதனை போன்று மேம்படுத்துவதாகும் திறன்பேசி (Smartphone) என்பது கையடக்க கருவியாகும் இவையிரண்டையும் ஒன்றிணைப்பது எவ்வாறு கவலையே படவேண்டாம் இதற்காக பின்வரும் இருவாய்ப்புகள் நமக்காக பயன்பட காத்திருக்கின்றன
1கைபேசிகளில் உள்ளிடுதல் வெளியிடுதல் மட்டும் செய்தல் தேவையான உள்ளீடுகளை மட்டும்கைபேசி வாயிலாக பெற்று இயந்திரகற்றல்(Machine Learning) இற்கான சேவையாளர் கணினிக்கு அனுப்பி முடிவுகளை கைபேசிவாயிலாக பெறுவது .
2 இயந்திரகற்றல்(Machine Learning) இற்கான சிறப்பு அமைவு இதற்கான கட்டமைப்பை கைபேசிகளிலேயே அமைவுசெய்து பயன்படுத்தி கொள்ளலாம்
இவையிரண்டிலும் நன்மையும் தீமையும் உண்டு பொதுவான குறைபாடுகளானவை
1.பேச்சொலியை அறி்ந்தேற்பு-செய்தல்,
2.உருவப்படங்களை அறி்ந்தேற்புசெய்தல்,
3.பொருட்களை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுதல்,
4. பயனாளர்களை அறி்ந்தேற்புசெய்தல்,
5. பேசும் மொழியை மொழிமாற்றம் செய்தல்
போன்றவைகளை சரிசெய்து மேம்படுத்தினால் போதும் திறன்பேசியையும் இயந்திரகற்றலிற்காக பயன்படுத்தி கொள்ளமுடியும்.
பின்வரும் இரு வரைச்சட்டங்கள் திறன்பேசிகளில் இயந்திர கற்றலை வலுப்படுத்துகின்றன
1. TensorFlow முதலில் ஆண்ட்ராய்டு ஸ்டுடியோவை இதற்கான தளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க அவ்வாறே TensorFlowஎன்பதை
https://githup.com/tensorflow/ எனும்இணையமுகவரியிலிருந்து பதிவிறக்கம்செய்து நிறுவுகை செய்து கொள்க தொடர்ந்து
allprojects {
repositories {
jcenter()
}
}
depedencies {
compile ‘org.tensorflow:tensorflow-android:+’
}
எனும் குறிமுறைவரிகளை கொண்டு tensorflowஐஆண்ட்ராய்டு பயன்பாடாக சேர்த்து கொண்டு செயல்படுத்திடுக.மேலும் செயல்முறை விளக்கபயன்பாடுகளை(Demo) பதிவிறக்கம் செய்து செயல்படுத்திபார்த்து அறிந்து கொள்க அல்லது முழுவிளக்கம் வேண்டு- மெனில் https://codelabs.developers.google.com/codelabs/tensorflow-forpoets-2-tflite/#0. என்ற தளத்திற்கு சென்று அறிந்து கொண்டு பயன்படுத்திடுக
2. Bender இதுஒரு நவீண இயந்திரகற்றலின் வரைச்சட்டமாகும் இது ஐஓஎஸ் பயன்பாடுகளிலும் இயற்கையான வலைபின்னலுடன் செயல்படும் தன்மைகொண்டது இதனை 1.நடப்பிலுள்ளTensorFlowஎன்பதை பயன்படுத்தியும் செயல்படுத்திடலாம்.
2. Metal PerformanceShaders(MPS) ஐ பயன்படுத்தி வரைகலைசெயலகமாக பயன்படுத்தி கொள்ளலாம் 3.நேரடியாக Benderஐ பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்ளலாம்
மேலும் விவரங்களுக்கு https:github.com/xmartlabs/Bender/ என்ற இணையதளத்திற்குசெல்க.