கணினியில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள்

பொதுவாக நாமனைவரும் நம்முடைய கணினியை பயன்படுத்தி மிகமுக்கியமான பணியை செய்து-கொண்டிருக்கும்-போது திடீரென கணினியின் இயக்கம் தானாகவே நின்றுபோதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அவைகளுள் ஒருசில கணினி தொழில்நுட்ப வல்லுனர் வந்தால் மட்டுமே தீர்வுசெய்யமுடியும் ஆயினும் வேறுசில பிரச்சினைகளை பயனாளர்களாகிய நாமே முயன்று சரிசெய்து நம்முடைய பணியை தொடரமுடியும் அவ்வாறானவை பின்வருமாறு
1 கணினியின் இயக்கம் மிகமெதுவாக இருப்பது இவ்வாறான நிலையில் திரைப்படங்கள் உருவப்படங்கள் இசைகள் போன்றவைகளுக்கான பயன்பாடுகள் நாம் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் பின்புலத்தில் இயங்கிகொண்டேஇருக்கும் அவைகளின்இயக்கத்தை நிறுத்திவிடுக அவ்வாறே Visipics என்பதை பயன்படுத்தி தேவையற்றபயன்பாடுகளின் தன்னியில்பான இயக்கத்தை அறவே நீக்கிவிடுக மேலும் அதனோடு செயல்நினைவகமான தற்காலிக நினைவகத்தில்(RAM) அத்தியாவசிய பயன்பாடுகள் தவிர மிகுதியை நீக்கம் செய்வதுமேலும் பயனுள்ளதாக அமையும் இதற்காக start எனும் பொத்தானை அழுத்துக உடன்விரியும் திரையின் தேடுதல் பகுதியில் msconfig என தட்டச்செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியபின் விரியும் திரையில் Startup எனும்தாவியின் திரையை தோன்ற செய்திடுக அதில் Google Update, AdobeAAMUpdater, Steam Client Bootstrapper, Pando Media Booster, andSpotify போன்றவைகள் தெரிவுசெய்திருப்பதை நீக்கம் செய்துகொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்னர் வழக்கமாக செயல்படுத்துவதை போன்று கணினியின் இயக்கத்தை நிறுத்தம்செய்து மறுதுவக்கம் செய்திடுக இதன்பின்னர் கணினியின் இயக்கம் வேகமாக இருப்பதை காணலாம்

2.2 இணையஇணைப்பின்வேகம்மெதுவாக இருப்பது இதனை சரிப்பார்ப்பதற்காக Speedtest.net எனும் இணையபக்கத்திற்கு சென்று நம்முடைய கணினியின் இணைய இணைப்பின் வேகம் எவ்வளவு என பரிசோதித்து பார்த்திடுக பொதுவாக ISP இன் விளம்பரத்தில் 50 சதவிகிதம் என்றும் நம்முடைய ping இன் வேகம் 100 சதவிகிதம் என்றும் கூறப்படுகின்றது அவைகளை சரிபார்த்துகொள்க மேலும நம்முடைய கணினியில் இணைய இணைப்பினை ஏற்படுத்திடும் மோடத்தின் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதுவக்கம் செய்திடுக

3 நாம் இணையத்தினை பயன்படுத்தாதபோதும் விளம்பரங்கள்மேல்மீட்பு பட்டியாக வந்து தொல்லைகொடுத்தல் Adware எனும் பெயர்கொண்ட இவைகளை மால்வேர் பைட்ஸ் வாயிலாக அறவே நீக்கம் செய்திடுக

4 Wi-Fiஎனும் அருகலை இணைப்பில்லாதிருத்தல் இதற்காக நம்முடைய கணினியின் wireless adapter என்பதன் இயக்கி சரியாக நிகழ்நிலைபடுத்தப்பட்டுள்ளதாவென சரிபார்த்து நிகழ்நிலைபடுத்திகொள்க

5இணையத்தில்உலாவருமபோது பாதுகாப்பு எச்சரிக்கை திரையில் தோன்றுதல்இந்த பிரச்சினையைதீர்வுசெய்வதற்காக நம்முடைய கணினியின் நேரம் காட்டும் பகுதியின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Change date and time settings என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து கணினியின் நேரத்தை சரியாக மாற்றி அமைத்து கொள்க

அறிமுகம் பீகிள்போன்ப்ளாக்

பீகிள்போன்ப்ளாக் என்பது மிககுறைந்த மின்னேற்றத்திலும் செயல்படும் திறமூல ஒரு ஒற்றையான அட்டையில் மட்டுமே செயல்படும்மிகச்சிறிய கணினியாகும் இதில் உட்பொதிந்த பல்லூடக கட்டுபாட்டாளராக(embedded Multimedia Controller(eMMC) செயல்படுகின்றது ஒரே சிலிகான் டையிற்குள் மின்வெட்டு நினைவகத்தையும் நினைவக கட்டுபாட்டாளரையும் கொண்டதாகும் இது1கிலோஹெர்ஸ் செயலியையும் 512 எம்பி ரேமையும் கொண்டதாகும் 32கேபிக்கு பதிலாக 4 கேபியாக குறைக்கப்பட்ட அளவையும் 4 ஜிபிநன்டு கேட் கொண்ட மிகமேம்பட்ட வரையறுக்கப்பட்ட பல்லூடக இடைமுகத்தையும் யூஎஸ்பி இடைமுகத்தையும் கொண்டது இது செயல்படுவதற்கு 4 ஜிபி நினைவகம் கொண்ட எஸ்டி அட்டை தேவையாகும் இந்த பீகிள்போன்ப்ளாக் என்பது இயந்திரமனிதன், மின்மோட்டார்இயக்கி, ட்விட்டர் அச்சுப்பொறி, தானியங்கியாக தரவுகளைபிற்காப்புசெய்தல்,போன்ற தானாகவே செயல்படும் செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றதுஎந்தவொரு செயலையும் வாடிக்கையாளர் விரும்பியவாறு திருத்தியமைத்து மிகவிரைவாக செயல்படுமாறு செய்யலாம் MATLABஉடன் ஒத்தியங்கிடும் தன்மைகொண்டதாகும் இதில் நாமே கட்டளைவரிகளை உள்ளீடு செய்து நாம் விரும்பும் செயலை தானாகவே செயல்படுமாறு செயல்படுத்தி கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளவும் http://debian.beagleboard.org/ என்ற இணைய பக்கத்திற்கு செல்க

USB-C எனும் நம்முடைய சிறந்த நண்பரை சந்தித்திடுக

இந்தUSBஇணைப்பு என்பது தற்போது நம்முடைய வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டதை நாமனைவரும் அறிவோம் அதாவது திறன்பேசி ,கைபேசி ,படப்பிடிப்பு கருவிகள் ஆகிய கையடக்க சாதனங்களின் தரவுகளை கணினியுடன் இணைத்து மேலேற்றம் செய்திடவும் கணினியிலிருந்து இவைகளுக்கு நமக்கு தேவையான தரவுகளை பதிவிறக்கம் செய்திடவும்இந்த USBஎனும் வாயில் மிகமுக்கிய பங்காற்றுகின்றன நம்முடைய மடிக்கணினி மேஜைக்கணினி ஆகியவற்றில் இணைத்திட பயன்படும்USB-வாயில்கள் USB-A வாயில்களாகும் அதாவது மிகதடிமணான கம்பிகளுடன் பெரியஅளவு வாயில்களாக கொண்டவையாகும் கையடக்க படப்பிடிப்பு கருவி ,திறன்பேசி, கைபேசி ஆகிய ஆண்ட்ராய்டு சாதனங்களின்USB வாயில்கள் USB-B வாயில்கள் ஆகும் அதாவது இவை மிகமெல்லிய கம்பிகளுடனான சிறிய அளவு இணைப்பு வாயில்களாக கொண்டவையாகும் இதேபோன்று USB-C எனும் புதியதலைமுறைமூன்றாவது வகை இணைப்பு வாயில்களும் தற்போது புழக்கத்தில் வரவுள்ளன இது மிகவும்சிறிய அதாவாது micro USB ஆக ஆனால் தட்டையாக முட்டைவடிவ மாக இதன் அமைப்பு உள்ளது இது இருபுறமும் வாயில்களில் இணைத்து பயன்படுத்திடும் வகையில் எளிதாக வசதியாக யார்வேண்டுமானாலும் பயன்படுத்திகொள்ளுமாறுஉள்ளது இந்த வாயிலானது மடிக்கணினி(laptops), கைக்கணினி(tablets) போன்ற சாதனங்களிலும் பயன்படுத்திகொள்ளும் வண்ணம்
தரவுகளை நகலெடுப்பதற்கு மட்டுமல்லாது மின்னேற்றம் செய்வதற்காகவும் அதாவது இரண்டு பயன்பாடுகளையும் ஒரேவாயிலில் அதே கம்பியன் வாயிலாக பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த வசதிகளின் மூலம் முந்தைய USB-A,USB-B ஆகிய இரு வாயில்களைவிட மிகச்சிறந்ததாக மிளிறுகின்றது மின்னல் போன்ற வேகத்தில் ஒரேயொருகைநொடி நேரத்தில் 10Gbps அளவு தரவுகளை பரிமாறிகொள்ளவும் 100w அளவு மின்னேற்றம் செய்திடவும் முடியும் அனைவரும் வருக இந்த புதிய தலைமுறை USB-C எனும் நம்முடைய சிறந்த நண்பரை பயன்படுத்தி கொள்க

கணினியில் அதனுடன் இணைக்கப்பட்ட வெளிப்புற நினைவகத்தை அனுக முடியவில்லை என்னசெய்வது

இவ்வாறான பிரச்சினை பொதுவான பிரச்சினை அன்று கணினியில் உருவாகும் மிகவும் வித்தியாசமான பிரச்சினையாகும் அதாவது அந்த வெளிப்புற நினைவகத்திற்கான இயக்ககம் பழுதடைந்திருக்கலாம் அல்லது நம்முடைய கணினியானது அந்த வெளிப்புற நினைவகத்தின் இயக்ககத்தை தொடர்புகொள்ள மறந்துவிட்டிருக்கலாம் எதுஎப்படியிருந்தாலும் இந்த பிரச்சினையை எளிதாக தீர்வுசெய்திடமுடியும் நம்முடைய கணினியின் search box எனும் தேடிடும் பெட்டியில் cmd என தட்டச்சுசெய்திடுக பின்னர் இதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Run as Administrator எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் இந்த கட்டளை வரிகளை உள்ளீடு செய்திடும் பகுதியானது திரையில் விரியும் அதில் chkdsk /e அல்லது/f: என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக இங்கு வெளிப்புற இயக்ககத்திற்கு /e அல்லது/f அல்லது நம்முடைய கணினியின் இடப்பட்டுள்ள பெயருக்கு ஏற்றவாறு அடுத்த ஆங்கில எழுத்தினை பயன்படுத்திகொள்க
chkdsk எனும் இந்த கட்டளைவரியில் கடைசி எழுத்தானk என்ற எழுத்திற்கு பிறகு காலியிடைவெளியும் சாய்வுக்குறியீட்டையும் உள்ளீடு செய்திட மறக்காதீர்கள் அதன்பின்னர் நம்முடைய வெளிப்புற இயக்ககத்தின் ஆங்கிலஎழுத்தினை /e அல்லது/f என்றவாறு உள்ளீடு செய்துகொண்டு இறுதியாக :என்ற முக்காற்புள்ளியை உள்ளீடு செய்திடுக இதன்பின்னர் நம்முடைய கணினியானது அந்த இயக்ககத்தை வருடச்செய்து பிழையை சரிசெய்து கொண்டு நாம் அனுகுவதற்கு தயாராக ஆக்கிவிடும்

கணினியின் ஏற்படும்பொதுவான பிரச்சினைகளை எவ்வாறு தீர்வுசெய்வது

1 கணினியின் இயக்கம் மெதுவாக உள்ளது இதற்கான அடிப்படை காரணம் நம்முடைய கணினியின் இயக்கமுறைமைஉள்ள இயக்ககத்தில் போதுமான காலிநினைவகம் இல்லை என்பதே அதனால் உடனடியாக movies, photos, music, போன்றவைகளின் கோப்புகளை வேறு இயக்ககத்திற்கு கொண்டு சென்றுவிடுக மேலும் தேவையற்ற பயன்பாடுகளை நிறுவுகை செய்திருந்தால் அவைகளையும் அவைகளின் கோப்புகளையும் அறவே நீக்கம் செய்திடுக போலியான கோப்புகள் இருந்தால் அவைகளை Visipics எனும் கருவிகொண்டு நீக்கம் செய்திடுக Google Update, AdobeAAMUpdater, Steam Client Bootstrapper, Pando Media Booster,andSpotify.போன்றவைகள் நம்முடைய கணினியில் தானாக இயங்குவதை தவிர்த்திடுக
2 இணைய இணைப்பு மெதுவாக உள்ளது Speedtest.net எனும் இணைய பக்கத்தை பார்வையிடுக அதில் கூறியவாறு நம்முடைய ISP’s ல் குறைந்தபட்சம் 50% ஆவது இருக்கவேண்டும் உடனடியாக ஏதேனும் torrent clients என்பவை பின்புலத்தில் இயங்குகின்றதாவென சரிபார்த்து அவைகளின் இயக்கத்தை நிறுத்தம் செய்திடுக மேலும்network card’s drivers நிகழ்நிலை படுத்தப்பட்டுள்ளதாவென சரிபார்த்து கொள்க இணைய இணைப்பிற்கான மோடத்தின் செயலை நிறுத்தும் செய்து செயல்படச்செய்திடுக
3 கணினியானது தானாகவேநின்றுபின்னர் இயங்குகின்றது இந்த செயலானதுUpdating Windows என்பதற்காகவா என சரிபார்த்திடுக மேலும் தேவையற்ற தற்காலிக கோப்புகளை Disk cleanupஎன்ற கருவியை கொண்டு நீக்கம் செய்து கொள்க அதுமட்டுமல்லாது virus scan , malware scan.போன்றவைகளை இயக்கி கணினியின் இயக்கத்தை புத்தாக்கம் செய்து கொள்க
4 வெய் ஃபி இணைப்பு தொடர்பற்று போதல் நம்முடைய கணினியின் wireless adapterஆனது நிகழ்நிலை படுத்தபட்டுள்ளதாவென சரிபார்த்துகொள்க
5 இணைய உலாவலின்போது தொடர்ச்சியாக “Securityஎச்சரி்க்கை கிடைக்கபெறுதல் இதனை தவிர்ப்பதற்காக முதலில் நம்முடைய கணினியின் கடிகாரநேரம் சரியாக அமைக்கப்-பட்டிருக்-கின்றதா- வென என Change date and time settings என்பதில் சரிசெய்து அமைத்துகொள்க
6 மின்னஞ்சலின் இணைப்பு கோப்புகளை திறக்கமுடியுவில்லை இதற்கு அடிப்படையான காரணம் அவ்வாறான இணைப்பு கோப்பினை திறப்பதற்கான பயன்பாடுகள் நம்முடைய கணினியில் இல்லை உடன் இணையஉலாவியில் அதற்கு பொருத்தமான பயன்பாட்டினை தேடிபிடித்து பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்துகொள்க
7 ஒருசில பயன்பாடுகள் செயல்படவில்லை இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது நாம் நம்முடைய கணினியை நிகழ்நிலைபடுத்தி மேம்படுத்தியிருப்போம் ஆனால் ஒருசில பயன்பாடுகளை மட்டும் அதற்கேற்றவாறு நிகழ்நிலை படுத்தாமல் வைத்திருப்போம் அதனால் உடனடியாக அவ்வாறான பயன்பாடுகளையும் நிகழ்நிலைபடுத்தி கொள்க

பழைய கணினியின் CRT திரையை புதிய கணினியின் LED அல்லது LCDதிரையாக ஆக பயன்படுத்தி கொள்ளலாம்

நம்மிடம் பழைய கணினியின் CRT திரைச்சாதனம் உள்ளது அதனை தற்போதைய கணினியின் LED அல்லது LCDதிரையாக ஆக பயன்படுத்தி கொள்ளமுடியுமா? என்பதுதான் நம்மில் பெரும்பாலானவர்களின் கேள்வியாகும் நீண்டகாலமாக நாம்பயன்படுத்தி வந்த கணினியின் CRT திரைச்சாதனத்தை கயலான் கடையில் போடுவதை விட அதனை தற்போதைய புதிய கணினியுடன் இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியமா என முயற்சி செய்திடுவோம் பொதுவாக நம்முடைய பழைய CRT திரைச்சாதனத்தின் இணைப்பு கம்பியானது 15 கம்பி VGA செருகுவாயிலாகவே இருக்கின்றது ஆனால் தற்போதைய LED அல்லது LCDதிரைஇணைப்பானது அவ்வாறானதன்று அதனால் இவ்விரண்டையும் இணைப்பு ஏற்படுத்துவதற்காக தனியான இணைப்பான்(adopter) உள்ளது அதனுடன் DVI அல்லது HDMI ஆகிய வாயிலில் ஒன்றுடன் நம்முடைய புதிய தற்கால கணினியையும் பழைய கணினியின் CRT திரைசாதனத்தையும் இணைத்திடுக பொதுவாக HDMI எனும் வாயிலின் வழியாக இணைப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகின்றது இதன்பின்னர் வழக்கம்போன்று நம்முடைய கணினியின் CRT திரைச்சாதனத்தை தற்போதை புதிய கணினியில் LED அல்லது LCDதிரைக்கு பதிலாக பிரச்சினை எதுவமின்றி பயன்படுத்திகொள்ளமுடியும்

நினைவக குச்சி எனப்படும் Memory Stick என்பதும் மின்வெட்டு நினைவகம் எனப்படும் USB flash drive என்பதும் ஒன்றானவையா

கணினியின் தரவுகளை சேமித்து வைத்திட பயன்படும் சாதனங்கள் ஏராளமான வகையில் இருப்பதால் இவையிரண்டை பற்றி நம்மெல்லோருக்கும் குழப்பம் ஏற்படுவது இயற்கையேயாகும் அவற்றுள் memory stick என்பது ஒருவகையான SD அட்டையாகும் இதுவும்ஒருவகையான மின்வெட்டு நினைவக சேமிப்பகமாக செயல்படுகின்றது இது சோனி நிறுவனத்தின் ஒரு தனியுடைமை வடிவமைப்பு சேமிக்கும் சாதனமாகும் மேலும் இது அதிவேகமாக செயல்படும் செவ்வக வடிவமான கானொளி படப்பிடிப்பு கருவிகளில் பயன்படுத்தப்படும் சாதனமாகும் இதில் மூன்றுவகையுள்ளன 4 ஜிபி நினைவகம் கொள்ளளவு கொண்ட SD அட்டை என்றும் 32 ஜிபி நினைவகம் கொள்ளளவு கொண்ட SDHC அட்டைஎன்றும் முன்பு வெளியிப் பட்டன தற்போது 256ஜிபி நினைவகம் கொள்ளளவு கொண்ட HD கானொளி படம் எனும் பெயரில் மூன்றாவது வகையான அட்டை அதிவேக செயல்பாட்டுடன் கிடைக்கின்றது இவைகளை கணினியில்USB flash drive இல் பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆனால் USB flash drive என்பது இந்த SD அட்டை மட்டுமல்லாது மற்ற கையடக்க நினைவகங்களனைத்தையும் கணினியில் பொருத்தி பயன்படுத்துவதற்காக உதவிடும் ஒரு நுழைவு வாயிலாகும் என்ற செய்தியை நினைவில் கொள்க
3

Previous Older Entries