லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-46-வாடிக்கையாளர்விரும்பியவாறு லிபர் ஆஃபிஸ்ரைட்டரில் மாற்றியமைத்தல்

 லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரின் திரையில் நடப்பில் இருக்கும் பட்டியல்களின் பட்டிகள் , கருவிகளின் பட்டிகள்,குறுக்குவழி விசைகள் போன்றவைகளையும் புதிய பட்டியலின் பட்டி,புதிய கருவிகளின் பட்டி,தானியங்கி செயலியைஒதுக்கீடு செய்தல் போன்றவை களையும் லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரில் வாடிக்கையாளர் தாம் விரும்பியவாறு சேர்க்கவோ மாறுதல் செய்துகொள்ளவோ முடியும் . இவையல்லாது வேறுஏதேனும் வேண்டுமெனில் அவை லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரில் விரிவாக்க செயலிகளாக சேர்த்து கொள்ளமுடியும்.

 இவ்வாறான பட்டியல்களின் உள்ளடக்கங்களை வாடிக்கையாளர் தாம் விரும்பியவாறு மாற்றியமைத்திட முதலில் லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டியில் Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்திடுக உடன்விரியும் Customizeஎனும் உரையாடல் பெட்டியில் Menusஎனும் தாவிப்பொத்தானின் திரைக்கு செல்க

46.1

1

 அங்கு Save Inஎனும்கீழிறங்கு பட்டியிலிலிருந்து for the application (Writer) அல்லது for a selected documentஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே Menu எனும்கீழிறங்கு பட்டியிலின் முதன்மை பட்டி, துனைபட்டி ஆகியவற்றில் தேவையான வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க பின்னர் Menu அல்லது Modifyஆகிய இரு பொத்தான்களில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக அதுமட்டு மல்லாது தேவையெனில் Addஎனும் பொத்தானைகூட தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் எந்தவிடத்தில் இந்த பட்டியலின் பட்டி அமைந்திருக்க வேண்டும் என்பதற்காகmenu content entries என்ற உரைபெட்டிக்கு அருகிலுள்ள நகரும் பெட்டியை பிடித்து இழுத்துசென்று சரிசெய்து அமர்த்திகொள்க. இறுதியாக இந்தபணிஅனைத்தும் முடிந்தபின்னர் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 புதியபட்டியலின்பட்டியை உருவாக்குவதற்காக இதே Customizeஎனும் உரையாடல் பெட்டியில் Menusஎனும் தாவியின் திரையில் New எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் விரியும் New Menuஎனும் உரையாடல் பெட்டியில் இதற்கொரு பெயரை Menu Name என்ற உரைபெட்டியில் உள்ளீடு செய்துகொள்கபின்னர்menu position என்ற உரைப்பெட்டிக்கு அருகிலுள்ள மேல்நோக்கு அல்லது கீழ்நோக்குஅம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து சரிசெய்து அமர்த்திகொண்டபின்னர் OK எனும்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்புதிய பட்டியலின் பட்டி Customizeஎனும் உரையாடல் பெட்டியில் சேர்ந்து தோன்றிடும்.

46.2

2

 இதன்பின்னர் நடப்பிலுள்ள நாமேமுயற்சிசெய்து உருவாக்கியஅல்லது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ள பட்டியல்களின் பட்டியை மாறுதல் செய்வதற்காக முதலில் தேவையானதை Menuஎனும் பட்டியலில் தெரிவுசெய்துகொண்டபின்னர் Menuஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் திரையில் Move, Rename, Deleteபோன்ற கட்டளை வாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிசெய்துகொள்க

 எச்சரிக்கை ஏற்கனவே முன்கூட்டியே கட்டமைக்கபட்டு வருகின்ற பட்டிகளை Rename, Delete ஆகிய இருக்கட்டளைகளை பயன்படுத்தி மாறுதல்கள் செய்யமுடியாது அவ்வாறே துனைப்பட்டிகளை Move எனும் கட்டளையை பயன்படுத்தி மாறுதல்கள் செய்ய முடியாது எனும் செய்தியை மனதில் கொள்க

 புதியதாக உருவாக்கிய பட்டியை நாம் விரும்பும் இடத்திற்கு நகர்த்தி சரிசெய்து அமரச்செய்வதற்காக திரையின் மேல்பகுதியிலுள்ள Menu => Move=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Menuஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில்menu position என்ற உரைப்பெட்டிக்கு அருகிலுள்ள மேல்நோக்கு அல்லது கீழ்நோக்குஅம்புக்குறிகளில் தேவையானதை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து சரிசெய்து அமர்த்திகொண்டபின்னர் OK எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 இதிலுள்ள துனைபட்டிகளை சரிசெய்திட முதன்மை பட்டியை முதலில் தெரிவுசெய்து கொள்க பின்னர் அதிலுள்ள நகரும் முக்கோன அம்புக்குறி பொத்தானை பிடித்து கொண்டு அதனை மேலும் கீழும் நகர்த்தி சென்று தேவையான துனைபட்டியை தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் Menuஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் Rename எனும் கட்டளையை பயன்படுத்தி மாறுதல்கள் செய்துகொள்க

 இவைமட்டுமல்லாது இந்த பட்டிகளின் கட்டளைகளுக்கு அடிக்கோடிடுதல் போன்றசெயலை செய்வதற்காக தேவையான கட்டளைகளை தெரிவுசெய்துகொண்டு (~)என்ற குறியீட்டை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்துகொள்க

 இவ்வாறு கட்டளைகளை மட்டும் அமைத்தால் போதாது அதனை செயல்படுமாறு செய்திடவேண்டுமல்லவா அதற்காகCustomizeஎனும் உரையாடல் பெட்டியில் Menusஎனும் தாவியின் திரையில் நாம் புதியதாக சேர்த்த அல்லது மாறுதல் செய்த பட்டியை தெரிவு செய்து கொண்டு Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Add Commandsஎனும் உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில்Category என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் தேவையானவகையையும் அதுதொடர்பான கட்டளை செயல்களைcommands என்பதிலிருந்தும் தெரிவுசெய்துகொண்டுAdd என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக மேலும்தேவையானவைகளையும் இவ்வாறே தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அமைத்தபின்னர் இறுதியாக closeஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக.

46.3

3

 இந்த கட்டளைபட்டியை வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல்கள் செய்வதை போன்று கருவிகளின் பட்டிகளையும் நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்ள முடியும் அதற்காக தேவையான கருவிகளின் பட்டியை தெரிவசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில்Customize என்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Toolbars => Customize=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுTools => Customize => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லதுஇதேCustomizeஎனும் உரையாடல் பெட்டியில் Toolbarsஎனும் தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 பின்னர் இந்ததிரையில்முன்பு கட்டளை பட்டிகளுக்கு செய்ததைபோன்று புதிய கருவிபட்டியை சேர்க்கலாம் நடப்பிலிருப்பதை மாறுதல்கள் செய்துகொள்ளலாம் இறுதியாக okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இந்த பணியை முடிவுக்கு கொண்டுவந்தபின்னர் இந்த கருவிகளின் பட்டிகளை செயல்படுமாறு செய்வதற்காக கட்டளைபட்டிகளுக்கு செய்ததை போன்று Add Commandsஎனும் உரையாடல் பெட்டிதிரையின் துனையுடன் முன்பு மேலே கட்டளை பட்டிகளுக்கு கூறியவாறு செய்துகொள்க கூடுதலாக இங்கு கருவிகளின் பட்டியில் கருவிகளை அதற்கான உருவபொத்தானாக தோன்றிட செய்திடவேண்டும் அதற்காக இதேCustomizeஎனும் உரையாடல் பெட்டியில் தேவையான கருவிகளின் பெயரை தெரிவசெய்துகொண்டுModify => Change icon => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் Change iconஎனும் உரையாடல் பெட்டிதிரையில்தோன்றிடும் அதில் iconsஎனும் உரைபெட்டியில் தேவையான உருவத்தை தெரிவுசெய்துகொண்டுokஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து

  இந்த பணியை முடிவுக்கு கொண்டுவருக அல்லது நாமே வரைகலையில் இதற்கென தனியானதொரு உருவத்தை உருவாக்கி தனிக்கோப்பாக சேமித்துவைத்திருந்தால் இந்த Change iconஎனும் உரையாடல் பெட்டியின் திரையில் importஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்து iconsஎனும் உரைபெட்டிக்குள் கொண்டுவந்து சேர்த்தபின் வழக்கம்போன்று மேலேகூறியவாறு தெரிவுசெய்து அமைத்துகொள்க

 குறுக்குவழிவிசைகளை வாடிக்கையாளர் விரும்பியவாறு ஒதுக்கீடு செய்து கொள்ளமுடியும் அதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Customize => Keyboard=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Customize எனும் உரையாடல் பெட்டியானது Keyboardஎனும் தாவியின் திரையாக தோன்றிடும்

46.4

4

 இதில் மேலே வலதுபுற மூலையிலுள்ளlibre office எனும் தேர்வுசெய்பொத்தானை தெரிவுசெய்துகொண்டுFunctions என்பதற்கு கீழுள்ளcategory என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் தேவையான வகையையும் அதுதொடர்பான செயல்களைfunction என்பதிலிருந்தும் தெரிவுசெய்துகொண்டுModify என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக மேலும்தேவையானவைகளை இவ்வாறே தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அமைத்தபின்னர் இறுதியாக Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

46.5

5

 மிகச்சுலபமான வழிமுறையாக நாம் லிபர்ஆஃபிஸ் ரைட்டரில் செய்திடும் செயலை தானியங்கியாக செய்வதற்காக முதலில் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Options => LibreOffice => Advanced=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Enable macro recordingஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்தானியங்கி செயலை இயலுமை செய்துகொள்க பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Macros => Record Macro=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் நம்முடைய கணினியின் செயலை சிறிய பதிவுசெய்திடும் Record Macroஎனும் உரையாடல் பெட்டி திரையின் மேலே வலதுபுறமூலையில் தோன்றிடும் அதன்பின்னர் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert => Special Characters=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் Special Charactersஎனும் திரையில் தேவையான எழுத்துருக்களைen-dash (U+2013) and em-dash (U+2014) ஆகியவற்றிலிருந்து தெரிவுசெய்து கொண்டு Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக இவ்வாறு பதிவு செய்திடும் பணி முடிவடைந்ததும் இந்த Record Macroஎனும் உரையாடல் பெட்டியின் திரையில் Stop Recording எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த செயலை சேமித்துகொள்க உடன் LibreOffice Basic Macros dialogஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் மேலே இடதுபுறமுள்ள Macro nameஎனும் உரைபெட்டியில் இதற்கொரு பெயரினை உள்ளீடு செய்துகொள்க பின்னர் அதன்கீழேsave macro in என்பதன்கீழுள்ள mymacro-standard என்பதில் துனைபெயராக module1என்பதை தெரிவுசெய்துகொண்டு save என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக

 அதன்பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Customize => Keyboard=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் Customize எனும் உரையாடல் பெட்டியின் Keyboardஎனும் தாவியின் திரையில் Short keys என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் அதன் நகரும்பெட்டியை பிடித்து நகர்த்தி சென்று தேவையானவாறு Ctrl+Shift+M போன்ற இதுவரை பயன்படுத்தாத விசைகளின்குழுவை தெரிவுசெய்துகொண்டு Functions என்பதற்கு கீழுள்ளcategory என்ற பெட்டியின் கீழுள்ளவைகளில் தேவையானmodule1 என்பதுபோன்ற வகையையும் அதுதொடர்பான Emdashஎன்பன போன்ற செயல்களைfunction என்பதிலிருந்தும் தெரிவுசெய்துகொண்டு Modify என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் key என்பதன்கீழ் நாம் தெரிவுசெய்து Ctrl+Shift+M எனும்குறுக்குவழிவிசைகள் தோன்றிடும் மேலும் தேவையானவைகளை இவ்வாறே தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து அமைத்தபின்னர் இறுதியாக Okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

 பிறகுஇதனை ஒரு கோப்பாக சேமிக்கவேண்டுமல்லவாஅதற்காக Customize எனும் உரையாடல் பெட்டியில் saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Save Keyboard Configurationஎனும் உரையாடல் பெட்டியில் Save as Typeஎனும் வகைபட்டியில் All filesஎன்பதை தெரிவுசெய்துகொள்க File name எனும் உரைபெட்டியில் இதற்கொரு பெயரினை உள்ளீடு செய்துகொண்டு இந்த கோப்பினை சேமிக்க வேண்டியஇடத்தை தெரிவுசெய்துகொண்டு saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 தானியங்கி செயல்களை விரிவாக்கமாககூட சேர்த்து கொள்ளமுடியும் இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Extension Manager=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Add.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது*.oxt எனும் பின்னொட்டுடன் உள்ள தேவையான விரிவாக்க கோப்பினை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் Extension Managerஎனும் திரைதோன்றிடும் எச்சரிக்கை பெட்டியும் தோன்றிடும் அதில் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து இதனை நிறுவுகை செய்திடும் பணியை தொடரச்செய்திடுக

 Extension Managerஎன்பதன்வாயிலாக நேரடியாக நிறுவுகை செய்வதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Tools => Extension Manager=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் Extension Manager எனும் உரையாடல் பெட்டியில் Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக விரியும் கோப்பினை தேடிடும் உரையாடல் பெட்டியில் தேவையான விரிவாக்க கோப்பினை தெரிவுசெய்துகொண்டுவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் விரியும் திரையில் openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

46.6

6

  பின்னர் விரியும் பெட்டியில்உள்ள “for all users” (shared) அல்லது “only for me” (user).ஆகிய இருபொத்தான்களில் “for all users” என்பதை தெரிவசெய்துகொள்க உடன் இந்த விரிவாக்க செயலிகள் நிறுவுகை செய்யப்படும் இந்த நிறுவுகை செயலின் போது license agreementதொடர்பாக நம்முடைய ஆமோதிப்பை தெரிவுசெய்துகொள்க மேலும் விரிவாக்க செயல் தேவையெனில் http://extensions.libreoffice.org/.எனும் இணையபக்கத்திற்குசென்று தேவையானதை பதிவிறக்கம்செய்துகொள்க.

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-45-படிவங்களின் பின்புலமான தரவுதளத்தை உருவாக்கி இணைத்தல்

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர் தொடர் 44இல் ஒரு புதிய படிவத்தை எவ்வாறு உருவாக்குவது என கண்டுவந்தோம் தற்போது அவ்வாறு உருவாக்கிய படிவத்தில் வாடிக்கையாளர் உள்ளீடு செய்திடும் தரவுகளை ODBC, MySQL, Oracle JDBC,spreadsheets என்பன போன்ற தரவுகளாக எவ்வாறு சேமித்துவைத்து  பின்னர் தேவைப்படும்போது அவைகளை பயன்படுத்துவது என இந்த தொடரில் காண்போம்.  பொதுவாக இந்த தரமூலங்களை உருவாக்குபவர் படிக்கவும் திருத்தவும் முடியும் வாடிக்கையாளர்படிவங்களில் கோரும் தரவுகளைமட்டும் உள்ளீடுசெய்திடமுடியும் என்றவாறு அமைத்திருப்பார்கள்

இவ்வாறான ஒரு தரவுதளத்தை உருவாக்குவதற்காக முதலில் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளைபட்டையில் File => New => Database => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Database Wizardஎன்ற வழிகாட்டி திரையில் விரியும்

1

1

அதில் இடதுபுறம் stepsஎன்பதன்கீழ் Select Databaseஎன்பது  தெரிவுசெய்யபட்டிருக்கும் வலதுபுறம் create anew database என்ற வாய்ப்பு பொத்தான் தெரிவுசெய்யபட்டிருக்கும் அதனால் next என்றபொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக

குறிப்பு.இந்நிலையில் தற்போது பயன்படுத்திவரும் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் ஆதரிக்கும் தரவுமூலங்கள் யாவை என அறிந்துகொள்ள  இதே  வழிகாட்டியின் திரையில்  Connect to an existing databaseஎன்ற வாய்ப்பு பொத்தான் தெரிவுசெய்திடுக உடன்மாறிடும் திரையில்open என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்கியவுடன் ODBC, MySQL, Oracle JDBC,spreadsheets என்பன போன்றவை பட்டியலாக விரியும்.

அடுத்து தோன்றிடும் திரையில் Yes, register the database for me and Open the database foreditingஎன்பது  தரவுமூலங்களை அனுகுவதற்கான அனுமதியை வழங்குவதாகும் இதனை தெரிவுசெய்துகொண்டு finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தரவுதள கோப்பானது முதலில்சேமிக்கபட்டு New Database.odb-libre office base என்ற பெயரில்திரையில் தோன்றிடும்

  இதுdatabase,tasks,description ஆகிய மூன்று பலகங்களை கொண்டதாகும் இடதுபுறமுள்ள database  எனும் பலகத்தில்Tables, Queries, Forms , Reports ஆகியஉருவபொத்தான்கள் உள்ளன  அவற்றுள் Tables என்ற உருவபொத்தானை மட்டும் தெரிவுசெய்து கொண்டு நடுவிலுள்ள tasks எனும் பலகத்தில் Create Table in Design Viewஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக  பின்னர் விரியும் New Database.odb-Tables 1-libre office base எனும் திரையில் நாம் Name, Address,  Telephoneஆகியமூன்று புலங்களை  கொண்ட தரவு தளத்தை  உருவாக்கவிருக்கவிருப்பதாக கொள்வோம் அதனால்   Field Nameஎன்பதன்கீழ் IDஎன்றும்    Field Typeஎன்பதன்கீழ் Integer[INTEGER] என்றும்  தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தவுடன் இடதுபுறத்தில் விரியும் சாம்பலான பெட்டியை இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Primary Keyஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில்கீழ்பகுதியில் Field Propertiesஎன்பது தானியங்கி மதிப்பாக(Auto Value ) இருக்கும் அதில்Yesஎன்ற வாய்ப்பு பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வலதுபுறமுள்ள Descriptionஎன்ற பலகத்தின் கீழ்  Primary keyஎன்பதை உள்ளீடு செய்துகொள்க இவ்வாறே  Name, Address,  Telephoneஆகியமூன்று புலங்களை  Field Nameஎன்பதன்கீழ் இவைகளுக்கான பெயர்களையும்  Field Typeஎன்பதன்கீழ்Text [VARCHAR] என்றும்   Description என்ற பலகத்தின் கீழ் காலியாகவும் விட்டிடுக பிறகு திரையின் மேலே கட்டளைபட்டையில்  File => Save  => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் இதற்கு வேறுஒரு பெயரை உள்ளீடு செய்துகொண்டு OKஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இறுதியாக  தரவுதளத்தின் முதல் திரைக்கு வந்து அங்கும்  திரையின் மேலே கட்டளைபட்டையில்  File => Save => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து வழிகாட்டித்திரையை மூடுதல் செய்து தரவுதளம்முழுவதுமான கோப்பினை சேமித்துகொள்க

2

2

நடப்பிலுள்ளதரவுதளகோப்பினை அனுகுவதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில்  File => New => Database=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் தரவுதளவழிகாட்டித்(Database Wizard)திரையில்   Connect to an existing database என்ற வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்திடுக உடன்மாறிடும் திரையில்open என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்கியவுடன் விரியும். ODBC, MySQL, Oracle JDBC,spreadsheets ஆகிய கீழிறங்கு பட்டியலுள் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சேமித்துகொண்டு அடுத்ததிரைக்கு செல்க அங்கு Yes, register the database for meஎன்பது தெரிவு செய்யப்பட்டுள்ளதா வென்றும் Open the database for editingஎன்பதில்தெரிவுசெய்யாது விடப்பட்டுள்ளதாவென்றும் சரிபார்த்துகொள்க

பிறகு திரையின் மேலே கட்டளைபட்டையில்  File => New => Text Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும்  திரையில் நாம் உருவாக்க விரும்பும் படிவத்தை முந்தைய தொடர்-44 இல் கூறியவாறு உருவாக்கிகொள்க  இந்நிலையில்திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Toolbars => Form Controls => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து படிவகட்டுப்பாட்டுபட்டையை திரையில் தோன்றிடசெய்திடுக  இதில் Design Mode On/Offஎனும் உருவபொத்தான தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து படிவத்தை வடிவமைப்பு நிலைக்கும்Select என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அவைகளைசெயல்படும் நிலைக்கும்  அமைத்திடுக  பிறகு Form Controlsஎனும் கருவிபட்டையில்Text Box எனும் உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்துகொண்டு  நாம் உருவாக்கவிரும்பும் ஆவணத்தை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து சுட்டியின் பொத்தானைஅழுத்தி பிடித்துகொண்டு தேவையான அளவிற்கு இழுத்துசென்று படிவத்தின் Nameஎனும் புலத்தை உருவாக்குக இவ்வாறே மற்ற புலங்களுக்கான உரைபெட்டியையும் உருவாக்கிடுக.

3

3

பிறகு  Form Controls எனும் படிவகட்டுப்பாட்டுபட்டையில் Formஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நாம் உருவாக்கியுள்ள உரைபெட்டிகளில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Form என்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக உடன் Form Propertiesஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதில் Data tabஎனும் தாவியின் திரையில் Data Sourceஎன்பதில் நாம் பதிவுசெய்த தரவுமூலகோப்பினை தெரிவுசெய்துகொள்க  பிறகுContent Type என்பதில் Tableஎன்றும் Content என்பதில் நாம் உருவாக்கிய அட்டவணையின் பெயரையும் அமைத்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியைமூடிவெளியேறுக

4

4

இந்த படிவத்தின் புலங்களுள் ஒன்றினை தெரிவுசெய்துகொண்டு  Form Controls எனும் படிவகட்டுப்பாட்டுபட்டையில் Controlஎன்ற உருவபொத்தானை தெரிவசெய்து சொடுக்குக அல்லது நாம் உருவாக்கியுள்ள உரைபெட்டிகளில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின்வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Control என்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக உடன்  PropertiesText boxஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதில் Data tabஎனும் தாவியின் திரையில் Data Field நாம் உருவாக்கிய புலங்களின் பெயரான Name, Address and Telephoneஎன்பவைகளுள் ஒன்றினை தெரிவசெய்துகொள்க மற்றவைகளை இயல்புநிலையில் இருப்பதைஅல்லது தேவையானவாறு மாற்றியமைத்து கொண்டு இந்த பண்பியல்புஉரையாடல்பெட்டியிலிருந்து வெளியேறுக

பிறகுForm Controls எனும் படிவகட்டுப்பாட்டுபட்டையில்உள்ள Design Mode On/Offஎனும் உருவபொத்தானில்  Offஎன்பதை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து இந்த படிவத்தை வடிவமைப்பநிலையை செயலற்றதாக ஆக்கிகொள்க   பின்னர் மேலே கட்டளைபட்டையில்  View => Toolbars => Form Navigation=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து  Form Navigationஎன்ற கட்டளைபட்டையானது திரையில் செயலில் இருக்குமாறு செயற்படுத்திகொள்க இதன்பின் இந்த படிவத்தின் புலங்களில் தேவையானவாறு தரவுகளை உள்ளீடு செய்துகொண்டு உள்ளீட்டு பொத்தானை அழுத்துக  தேவையானபோது Form Navigationஎன்ற கட்டளைபட்டையிலுள்ள உருவபொத்தானை படிவத்தில் தரவுகளை உள்ளீடு செய்வதற்காக பயன்படுத்தி கொள்க.

இதன்பின்னர் இந்த புலங்களில் தானியங்கிசெயலான மேக்ரோக்களை இணைத்து செயல்படச்செய்வதற்காக Form Controls எனும் படிவகட்டுப்பாடுபட்டையில்உள்ள Design Mode On/Offஎனும் உருவபொத்தானில்   On என்பதை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்துபடிவத்தின் நிலையை வடிவமைப்பு நிலையில் அமைத்துகொண்டு தேவையான புலத்தினை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின்வலதுபுற பொத்தானை தெரிவசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Controlஎன்ற கட்டளையையும் பின்னர் விரியும் PropertiesText boxஎனும் உரையாடல் பெட்டியில் Eventsஎனும் தாவிபொத்தானின் திரையையும் தோன்றிட செய்திடுக  அதில் browsஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Assign actionஎனும் உரையாடல் பெட்டியைவிரியசெய்திடுக  இந்த உரையாடல் பெட்டியில்Macroஎனும் பொத்தானையும் Macro Selectorஎனும்உரையாடல் பெட்டியில் அந்த செயலிற்கு தேவையானசெயலையும்  தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தபின்  Assign actionஎனும் உரையாடல் பெட்டிக்கு திரும்பிடுக இறுதியாக OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் இந்த உரையாடல் பெட்டியை மூடிவெளியேறுக இவ்வாறே படிவத்தையும் Assign actionஎனும் உரையாடல் பெட்டியின் வாயிலாக மேக்ரோவை ஒதுக்கீடுசெய்துகொள்க

5

5

இவ்வாறு உருவாக்கிய படிவத்தை மற்றவர்கள் திருத்தம் செய்யமுடியாதவாறு அமைத்திட திரையின் மேலே கட்டளைபட்டையில் உள்ளவைகளுள் File => Properties => Security=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துபின்விரியும் திரையில் Open file read-onlyஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்க

இந்த படிவத்தை பயன்படுத்துபவர்கள் தேவையான தரவுகளை இந்த படிவத்திற்குள் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தரவுகளை உள்ளீடு செய்திட  அனுமதிக்க வேண்டும்   அதற்காக இந்த படிவம் வடிவமைப்பு நிலையில் உள்ளதாவென சரிபார்த்து கொள்க அதன்பின்னர் படிவத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Formஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக  பின்னர் விரியும்  Form Propertiesஎனும் உரையாடல் பெட்டியின் Dataஎனும் தாவிபொத்தானின் திரையில்  Allow additions, Allow deletions,Allow modifications ,Add data onlyஆகிய ஒவ்வாரு வாய்ப்பிற்கும் Yes அல்லது No ஆகிய இருவாய்ப்புகளில்  தேவையானவாறு அமைத்திடுக .குறிப்பிட்ட புலத்தினை  படிக்கமட்டும் என்றவாறும் திருத்தம் செய்திட அனுமதிக்கமுடியாதுஎன்றவாறு அமைத்திடவிரும்பினால்  அந்தக் குறிப்பிட்ட புலத்தை மட்டும் தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Controlஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக  பின்னர் விரியும் PropertiesText boxஎனும் உரையாடல் பெட்டியில்Generalஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக  அதில் file read-onlyஎன்ற வாய்ப்பிற்கு  Yes என  அமைத்திடுக

வடிவமைப்பு வாய்ப்புகளை நாம்விரும்பியவாறு மாற்றியமைத்திட form control  என்பதை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Controlஎன்ற கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக  பின்னர் விரியும் Propertiesboxஎனும் உரையாடல் பெட்டியில்Generalஎனும் தாவிபொத்தானின் திரையை தோன்றிட செய்திடுக

அதில்Label boxஎன்பதில் உரைப்பெட்டிக்கான பெயர் இதரவிவரங்களையும், அச்சிடவேண்டுமெனில் Printஎனும் வாய்ப்பினையும் உரையின் நீளத்தையும் உயரத்தையும் எழுத்துருவின் அளவையும் , கடவுச்சொற்களுடன் பாதுகாத்திடுவதற்கான வாய்ப்பையும் தெரிவுசெய்துகொண்டு முப்பரிமானதோற்றமா நகர்த்திடும் பட்டையா சுற்றியும் பட்டை வேண்டுமா என்பனபோன்றவைகளை அமைத்துகொண்டுஇவைகளைசேமித்துகொள்க

இந்த படிவவடிமைப்பின் முடிவாக  World Wide Web Consortium (W3C)ஆல் அனுமதிக்கபட்ட XForms 1.0எனும் இணைய XMLஎனும்வடிவ படிவத்தை கூட லிபர் ஆஃபிஸ்ஆதரிக்கின்றது என்ற செய்தியை மனதில்கொள்க  இந்த  XForms ஆனது இணையத்தின் வாயிலாக லிபர்ஆஃபிஸ் ரைட்டர் எனும் பயன்பாட்டில் நேரடியாக வாடிக்கையாளரிடமிருந்து தரவுகளை பெறுவதற்காக  பயன்படுத்தி கொள்க

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-44-படிவங்களை உருவாக்கி பயன்படுத்துதல்

பொதுவாக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உருவாக்கப்படும் செந்தரமான உரைஆவணங்களான கடிதம், அறிக்கை, சிற்றேடு போன்றவைகளை படிக்கமட்டுமே முடியும். அதில் திருத்தம் எதுவும் செய்யமுடியாது .அதற்குபதிலாக வினாவங்கி போன்ற உரையை வாடிக்கையாளரிடம் வழங்கி அவர்கள் அதில்கோரியுள்ள கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை நிரப்புதல் செய்வதுதான் படிவமாகும் . லிபர் ஆஃபிஸில் தேர்வுசெய்பெட்டி, வாய்ப்பு பொத்தான்,கீழிறங்கு பட்டியல் என்பன போன்ற கட்டுப்பாடுகளை பயன்படுத்தி எளிமையான படிவத்தை வடிவமைப்பு செய்து உருவாக்கி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவைத்திடமுடியும் .அதனை தொடர்ந்து வாடிக்கையாளர் அந்த படிவங்களில்  தேவையான விவரங்களை நிரப்புதல் செய்து சேமித்து நமக்கு அனுப்பி வைத்திடுவார்கள். பிறகு நாம் இவ்வாறு வாடிக்கையாளர் அனுப்பிவைத்த அனைத்து விவரங்களாலும் நிரப்பபட்ட படிவங்களை திறந்து படித்தறிந்து நம்முடைய தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளமுடியும். .இவ்வாறான படிவங்கள் குழுவான நபர்களிடம் தேவையான விவரங்களை கோரி பெறுவதற்கு வினாவங்கியாகவும்  தரவுதளங்களில் தரவுகளை இணைப்புகளுடன் உள்ளீடு செய்வதற்காகவும், நூலகங்களில் கையிருப்பில் உள்ள புத்தகங்களை பட்டியலாக காண்பிக்கச்செய்து விவரங்களை  அறிந்துகொள்வதற்காகவும் இந்த படிவம் பெரிதும் பயன்படுகின்றது. லிபர் ஆஃபிஸின் பேஸ் எனும் பயன்பாட்டிலும் இந்த படிவம் தரவுகளை அனுகுவதற்காக பயன்படுகின்றது.. மேலும் லிபர் ஆஃபிஸின் இதர பயன்பாடுகளான கால்க், இம்பிரஸ், ட்ரா ஆகியவைகூட இந்த படிவங்களை ரைட்டர் போன்று ஆதரிக்கின்றன என்ற செய்தியைும மனதில் கொள்க.

இந்த படிவத்தை லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் உருவாக்குவதற்காக முதலில் இந்த திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில் File => New => Text  document => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி புதிய ஆவணத்தை உருவாக்கிடுக.பின்னர் இந்த லிபர் ஆஃபிஸின் புதிய ஆவணத்தில் புதியதாக படிவம் ஒன்றினை உருவாக்குவதற்காக Form Controls , Form Design ஆகிய இரண்டு கட்டுப்பாட்டு பட்டைகள் உதவுகின்றன  இவை திரையின் மேல்புறத்தில் தோன்றிடவில்லையெனில் View => Toolbars =>Form Controls =>, அல்லது View => Toolbars => Form Design =>என்றவாறு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து படிவத்தை திரைக்கு கொண்டுவருக. அல்லது Form Controls எனும் கருவிபட்டையிலிருந்தும் Form Design எனும் கருவிபட்டையை திரைக்கு கொண்டுவரலாம்.  மேலும் இந்த கருவிகளின் பட்டையை திரையில் எந்தஇடத்திலும் கொண்டுசென்று நிலையாக நிற்குமாறு கட்டிவைத்திடலாம். அல்லது அப்படியே மிதந்துகொண்டிருக்குமாறு  செய்திடலாம். .இவ்விரு கருவிகளின் பட்டைகளிலும் இதனுடைய மேல்பகுதியில் இடதுபுறமூலையிலுள்ள Controls Mode On/Off, Design Mode On/Off,ஆகிய பொத்தான்களை  தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக செயலிற்கு கொண்டுவரவும் அதன்பின்னர் செயல்படாது இருக்குமாறும் செய்திடமுடியும்.

இதன்பின்னர் ரைட்டர் ஆவணத்தின்  தேவையான பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு இந்த படிவங்களின் கட்டுபாடுகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக.உடன் சுட்டியானது கூட்டல் குறியீடுபோன்று உருமாறிவிடும். அதனை பிடித்து இழுத்துசென்று தேர்வுசெய்பெட்டி அல்லது வாய்ப்பு பொத்தான் போன்றவைகளாக உருவாக்கி கொள்க. அடுத்து கட்டுப் பாட்டின் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முன்பு கூறியவாறு பிடித்து இழுத்து உருவாக்கி கொள்க.  பின்னர் படிவங்களின் கட்டுபாட்டு பட்டையில் Selectஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தல் அல்லது  நாம் தெரிவுசெய்த கட்டுபாட்டு உருவப் பொத்தானையே மீண்டும் தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தல் ஆகியஇரு வழிகளில்  கட்டுப்பாட்டு பொத்தான்களை ரைட்டரில் உள்ளிணைப்பதை நிறுத்தம் செய்யலாம்   தனித்தனியாக தேர்வுசெய்பெட்டி, வாய்ப்பு பொத்தான் ஆகியவற்றின் உருவ பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அவைகளை உருவாக்குவதற்கு பதிலாக Wizards On/Offஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து குழுவான  group box, list box,  combo boxஆகியவற்றை  ஒட்டுமொத்தமாக  தொகுதியாக உருவாக்கலாம் என்ற செய்தியையும் மனதில் கொள்க. இவ்வாறு  வரைந்து  படிவத்தை வடிவமைப்பு மட்டுமே செய்துள்ளோம் இதனை செயலில் கொண்டுவரவில்லை அதற்காக அவைகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Control என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன்அல்லது  படிவங்களின் கட்டுப் பாடுகளின்மீது எங்குவேண்டுமானாலும் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  விரியும் திரையில் பண்பியல்பு எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் பண்பியல்பு பெட்டி திரையில் விரியும் அதில் தேவையான புலங்களை தெரிவுசெய்து இந்த கட்டுப்பாடுகளை கட்டமைவு செய்துகொள்க.  இந்த கட்டப்பாடுகளின் பெயர் அவைகளுடைய செயல்போன்ற விவரங்கள்  அட்டவணை1,2களில் வழங்கப்பட்டள்ளன அவைகளை படித்தறிந்து விவரங்களை அறிந்துகொள்க

 முதலில் File => New => Text Document => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதில் தேவையான விவரங்களை மட்டும் தட்டச்சு செய்து கட்டுப்பாடு பொத்தான்கள் எதுவுமில்லாத சாதாரணபடிவமாக உருவாக்கிகொள்க.

அதற்கடுத்ததாகView => Toolbars => Form Controls =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கட்டுப்பாட்டு பட்டையை திரையில் தோன்றிட செய்க பின்னர் இதில் உள்ள Design Mode On/Offஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்து இந்தகட்டுபாட்டுபட்டையை செயலிற்கு கொண்டுவருக.  பின்னர் Text Boxஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்துகொண்டு ஆவணத்தில் இடம்சுட்டியை வைத்து தேவையான உருவம் வரும்வரை பிடித்து இழுத்துசெல்க. அதன்பின்னர்  Wizards On/Offஎனும் உருவபொத்தான் செயலில் உள்ளதாவென சரிபார்த்து கொண்டு  More Controls எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து மேலும் கூடுதலான கட்டுப்பாட்டு பட்டையை திரையில் கொண்டு வருக. அதில் Group Boxஎனும்  உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முன்புபோலவே உருவாக்கி கொள்க அதன்பின்னர் விரியும் வழிகாட்டித்திரையில் Male ,Femaleஆகிய இரு வாய்ப்பு பெயர்களில்  ஒவ்வொன்றையும் தெரிவுசெய்துகொண்டு >> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Next >>.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

வழிகாட்டியின் அடுத்ததிரையில் No, one particular field is not going to be selected.என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Next >>.என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. அதற்கடுத்து தோன்றிடும் வழிகாட்டியின் திரையில் which value do you want to assign to each option?என்ற உரைபெட்டியில் நாம் இரண்டு வாய்ப்பு மட்டும் வைத்துள்ளோம் எனில் முதல் புலத்திற்கு 1 என்றும் அதற்கடுத்த புலத்திற்கும்2 என்றும் இதற்குமேல் வாய்ப்புகளை நாம் தெரிவுசெய்திருந்தால் தெரிவுசெய்த புலங்களின் அளவுகளுக்கேற்ப 3, 4  எனத்தெரிவுசெய்து கொண்டு Next >>.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .அதற்கடுத்து தோன்றிடும் வழிகாட்டிபெட்டியில்  Group Boxஎனும் பெட்டிக்கு தலைப்பு பெயர் புதியதாக உள்ளீடு செய்திடுக  அல்லது இருப்பதை நீக்கம் செய்தபின்னர்  Finish.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த வழிகாட்டித்திரையின் பணியை முடிவிற்கு கொண்டுவருக. அதற்கடுத்ததாக  Wizards On/Offஎனும் உருவபொத்தான் செயலை நிறுத்தம் செய்துகொண்டு List Boxஎன்ற   பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் பிடித்துகொண்டு நாம்விரும்பும் உருவம் வருமாறு பிடித்து இழுத்துசென்று பட்டிபெட்டியை வரைக. அதற்கடுத்ததாக  Check Box எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் பிடித்துகொண்டு நாம்விரும்பும் உருவம் வருமாறு பிடித்து இழுத்துசென்று தேர்வுசெய்பெட்டியை வரைக. இப்போது நாம் உருவாக்கிய இந்தபடிவமானது படத்தில் உள்ளவாறு இருக்கும்

1

1

   இதன்பின்னர் இந்த படிவத்தை வாடிக்கையாளர்களுக்கு படிக்கமட்டும் என்றவாறு அமைவில் அனுப்பிவைத்திடுக  பார்வையாளர்கள் இந்த படிவத்தில் காலியான இடத்தில் கோரும் விவரங்களை மட்டுமே உள்ளீடு செய்து நமக்கு அனுப்பிடமுடியும் இந்த படிவத்தை வாடிக்கையாளர்கள் மாறுதல் எதுவும் செய்திடமுடியாது.  அவ்வாறுஆவணத்தை படிக்கமட்டும் என்றவாறுகட்டமைவு செய்வதற்காக  திரையின்மேலே கட்டளை பட்டையில் File => Properties=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

2

2

பின்னர் விரியும் திரையில் Securityஎன்ற தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்து அதில் Open file read-onlyஎன்றவாய்ப்பினை தெரிவு செய்து சொடுக்குதல் செய்தபின்னர் இந்த படிவக்கோப்பினை சேமித்திடுக.

அட்டவணை 1.படிவ கட்டுப்பாட்டு கருவிகளின் பட்டை(Form Control toolbar)

வ.எண் கட்டுப்பாடுகளின்பெயர் அவைகளின் பயன்பாடு
1 Select மற்ற செயலினை செயற்படுத்துவதற்காக படிவத்தின் கட்டுப்பாடுகளை தெரிவு செய்தல்
2 Design mode on/off வடிவமைப்பு நிலையை செயல்படுத்துதல்,நிறுத்துதல்
3 Control வெவ்வேறு கட்டுப்பாடுகளை உருவாக்குதல்
4 Form படிவத்தின் பயன்பியல்களை கொண்டுவருதல்
5 Check Box தேர்வுசெய்பெட்டியை உருவாக்குதல்
6 Text Box உரை பெட்டியை உருவாக்குதல்
7 Formatted Field எண்களை உள்ளீடு செய்வதற்காக புலங்களை வடிவமைத்தல்
8 Push Button மேக்ரோவுடன்இணைப்பதற்கானபொத்தான்களைஉருவாக்குதல்
9 Option Button வாய்ப்புகளுக்கான பொத்தான்
10 List Box பட்டியலுக்கான பெட்டி
11 Combo Box ஒருங்கிணைந்த பெட்டி
12 Label Field புலங்களுக்கான பெயர்பட்டி
13 More Controls மேலும் கட்டுப்பாடுகளை திரைக்கு கொண்டுவருதல்
14 Form Design படிவடிவமைப்பு நிலை
15 Wizards On/Off வழிகாட்டி செயலில் செயலற்று இருத்தல்
16 Spin Button சுற்றிவரும் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தல்
17 Scrollbar நகரும் பெட்டி
18 Image Button உருவபொத்தான்
19 Image Control உருவத்தின் கட்டுபாடு
20 Date Field நாளினை குறிக்கும் புலம்
21 Time Field நேரத்தினை குறிக்கும்புலம்
22 File Selection கோப்பினை தெரிவுசெய்தல்

அட்டவணை 1.படிவ கட்டுப்பாட்டு கருவிகளின் பட்டை(Form Control toolbar)தொடர்ச்சி

வ.எண் கட்டுப்பாடுகளின்பெயர் அவைகளின் பயன்பாடு
23 Numeric Field எண்களுக்கான புலம்
24 Currency Field பணத்தொகையை குறிப்பதற்கான புலம்
25 Pattern Field தரவுதளத்துடன் இணைப்பதற்கான புலம்
26 Group Box குழுவான பெட்டி
27 Table Control தரவுதளத்திற்கான அட்டவணைகட்டுப்பாடு
28 Navigation Bar வழிகாட்டிடும் பட்டை

View=> Toolbars= > Form Navigation=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இதனை கொண்டுவரலாம்

அட்டவணை 2 படிவ வடிவமைப்பு கட்டுப்பாட்டு கருவிகளின் பட்டை(Form Design toolbar)

வ.எண் கட்டுப்பாடுகளின்பெயர் அவைகளின் பயன்பாடு
1 Add Field புலங்களை கூடுதலாக சேர்த்திட பயன்படுத்துதல்
2 Activation Order செயல்படுத்திடும் முன்னுரிமை வழிமுறை
3 Open in Design Mode வடிவமைப்புநிலையில் திறத்தல்
4 Automatic Control Focus தானியங்கிகட்டுப்பாட்டினைமுன்னுரிமை வைத்தல்
5 Position and Size நிலையையும் அளவையும்சரியாக வைத்தல்
6 Change Anchor நங்கூரத்தை மாற்றியமைத்தல்
7 Alignment சரிசெய்தல்
8 Display Grid பிரதிபலிக்கும் கட்டம்
9 Snap to Grid சிறு கட்டம்
10 Guides when Moving நகரும்போது வழிகாட்டுதல்

லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர்-தொடர்-43-புலங்களில் பணிபுரிதல் தொடர்ச்சி

லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டரில் புலங்களை உருவாக்கி பணிபுரியும்போது மேற்கோள்களை ( references) புலங்களில் உருவாக்கவோம்.. அவ்வாறு உருவாக்குவதற்காக Page, Chapter, Reference, Above/Below, As Page Style ஆகிய வடிவமைப்புகள் நாம் பயன்படுத்துவதற்கு தயாராகஉள்ளன. கூடுதலாக Number (no context), Number (full context)ஆகிய இரு வாய்ப்புகளும் உள்ளன. தானியங்கியாக இல்லாமல் நாமே முயன்று ஒரு cross-reference உருவாக்கிடும்போது bookmarks அல்லது set references. ஆகிய இரண்டில் ஒன்றினை பயன்படுத்தவேண்டும் .

இந்த Bookmarksஆனது வழிகாட்டித்(Navigator)திரையில் பட்டியலாக இருந்தால் தேவையான பகுதிக்கு நேராக செல்வதற்காக சுட்டியை சொடுக்குவதன் வாயிலாக செல்லமுடியும் . அதற்காக மீஇணைப்பு செய்திடவேண்டும். இவ்வாறு மீஇணைப்பை உருவாக்குவதற்காக முதலில் தேவையான உரையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4. ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Bookmark=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் Bookmark எனும் உரையாடல் பெட்டியின் திரையில் சிறு காலியான உரைப்பெட்டியில் இந்த புத்தகக்குறிக்கான பெயரை உள்ளீடு செய்துகொண்டு OK.எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக.

1

1

அதன்பின்னர் மேற்கோள்களை அமைப்பதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Cross reference=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது விசைப்பலகையில் உள்ள Ctrl+F2 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக. உடன்விரியும் உரையாடல் பெட்டியின் Cross reference எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ்உள்ளவைகளுள் set reference என்பதை தெரிவுசெய்திடுக. பின்னர் தேவையான ஆவணத்தை தெரிவுசெய்து கொண்டு இந்த உரையாடல் பெட்டியில் Nameஎனும் உரைப்பெட்டியில் இதற்கு ஒரு பெயரிட்டு insertஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Selection என்பதன்கீழ் நாம் மேற்கோள் செய்த பெயர் பட்டியலாக வீற்றிருக்கும்.. இதே படிமுறையை மேலும் மேற்கோள்கள் செய்வதற்கும் செயல்படுத்திடுக.

புலங்களைகொண்டு ஒருஆவணத்தின் தலைப்பையும் முடிவையும் உருவாக்குதல் இதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert =>Fields => [item] => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் page number, document title, author, creation date and time, current date and time, or total page ஆகிய விவரங்களை ஒருஆவணத்தின் தலைப்பு பகுதியிலும் முடிவுப் பகுதியிலும் உள்ளிணைத்து பிரதிபலிக்குமாறு அமைத்திடலாம் .அல்லது Insert=> Fields => Other => Cross-references.=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து தலைப்புப் பகுதியையும் இதர விவரங்களையும் உள்ளிணைத்திடலாம். அல்லது Insert => Fields => Other => Document=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து Heading 1, என்பதன்வாயிலாக Chapter number and name போன்ற விவரங்களை உள்ளிணைத்திடலாம். அல்லது Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Fields எனும் உரையாடல் பெட்டியின் Document எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ் Chapter என்பதையும் Format என்பதன்கீழ் Chapter number without separatorஎன்பதையும் தெரிவுசெய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

2

2

அடுத்து பக்கஎண்ணிடலை உள்ளிணைப்பதற்காக Insert => Fields => Page Count=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் விரியும் திரையில் Page 9 of 12 என தோன்றுமாறு செய்வதற்காக Page என தட்டச்சு செய்து Space bar எனும் விசையை அழுத்துக. பின்னர் of என தட்டச்சு செய்து Space bar எனும் விசையை அழுத்துக.

புத்தகங்களில் பின்இணைப்புகளை சேர்த்திடும்போது அதற்கானபக்க எண்களை இந்த புலங்களை கொண்டு அமைத்திடலாம் .

அதற்காக முதலில் புத்தகங்களின் வழக்கமான பகுதிக்கு Heading 1, என்பதன்வாயிலாக Chapterஎன்பதை தெரிவுசெய்துகொண்டு<space> என்ற விசையை விசைப்பலகையில் அழுத்துக. பின்னர் Insert => Fields => Other=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன்விரியும் திரையில் Fields எனும் உரையாடல் பெட்டியின் Variable எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ் Number range என்பதையும் select என்பதன்கீழ் Chapterஎன்பதையும் Formatஎன்பதன்கீழ் Arabic (1 2 3) என்பதையும் தெரிவுசெய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக.. அதன்பின்னர் இதே உரையாடல் பெட்டியில் Variableஎனும் தாவிப்பொத்தானின் திரையில் Type என்பதன்கீழ் Number rangeஎன்பதையும் select என்பதன்கீழ் Appendix என்பதையும் Formatஎன்பதன்கீழ் A B C),என்பதையும் தெரிவுசெய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக..

3

3

இங்கு புலங்களில் பணிபுரியும்போது விசைப்பலகையிலுள்ள Ctrl+F2,ctrl+F8,Ctrl+F9,F9 என்றுள்ளவாறு விசைகளை சேர்த்து அழுத்துதல் செய்து பயன்படுத்திகொள்க..

புலங்களை உரையாக மாற்றுவதற்காக முதலில் தேவையான புலங்களை தெரிவு செய்து கொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Edit => Cut=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது Ctrl+X.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக .அதன்பின்னர் Edit => Paste Special=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் தி்ரையில் Unformatted textஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் okஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக. அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Alt+Shift+Vஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக.

நிபந்தனையுடனான உள்ளடக்கங்களை பயன்படுத்துதல்

உதாரணமாக தமிழ்கம்யூட்டர் எனும் சொல்லிற்கு அருகில் ஆம்எனில் இது திங்கள் இருமுறைவெளியிடப்படும் இதழ்என்றும் தமிழ்கம்யூட்டர் எனும் சொல்லிற்கு அருகில் இல்லையெனில் இது ஒரு வாரஇதழ் அன்றுஎன வருவதற்கு , தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Fields => Other=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப் பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Typeஎன்பதன்கீழ் conditional text என்பதை தெரிவுசெய்து கொண்டு Conditionஎன்ற உரைப்பெட்டியில் தமிழ்கம்யூட்டர் ஆம்” ‘ என்பதையும் Then என்ற உரைப்பெட்டியில் திங்கள் இருமுறைவெளியிடப்படும் இதழ்என்பதையும் Elseஎன்ற உரைபெட்டியில் இது ஒரு வாரஇதழ் அன்று என்பதையும்உள்ளீடு செய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .

4

4

குறிப்பிட்ட உரைப்பகுதியை திரையில் தோன்றிடாமல் மறைத்திடுவதற்காக முதலில் தேவையான உரையை தெரிவுசெய்து கொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4. ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functions எனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Type என்பதன்கீழ் Hidden text என்பதைதெரிவுசெய்துகொண்டு Conditionஎன்ற உரைப்பெட்டியில்தமிழ் கம்யூட்டர் இல்லை” ‘ என்பதையும் hidden text என்ற உரைப்பெட்டியில் இது ஒரு வார இதழ் அன்றுஎன்பதையும் உள்ளீடு செய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் திரையில் நாம் தெரிவுசெய்த உரையானது மறைந்துவிடும்..

அவ்வாறே பத்தியை திரையில் மறையச்செய்யலாம் .அதற்காக முதலில் தேவையான பத்தியை தெரிவுசெய்து கொள்க .பின்னர் லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக. அதில் Typeஎன்பதன்கீழ் Hidden text என்பதைதெரிவுசெய்துகொண்டு Conditionஎன்ற உரைப்பெட்டியில் தமிழ்கம்யூட்டர் இல்லை” ‘ என்பதையும் hidden text என்ற உரைப்பெட்டியில் இது ஒரு வாரஇதழ் அன்றுஎன்பதையும்உள்ளீடு செய்துகொண்டு Insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.. உடன் நாம் தெரிவுசெய்த பத்தியானது மறைந்துவிடும்..

மறையச் செய்த பத்தியை திரையில் தோன்றிட செய்வதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து View => Hidden Paragraphs=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. அல்லது லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Tools => Options => LibreOffice Writer => Formatting Aids=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் Fields:Hidden paragraphs எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக . உடன் மறைக்கப் பட்டப் பத்தி திரையில் தோன்றிடும்.

குறிப்பிட்டப் பகுதியை மறையச்செய்வதற்காக முதலில் தேவையானப் பகுதியை தெரிவு செய்துகொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையிலிருந்து Insert => Section=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Insert Section எனும் உரையாடல் பெட்டியில் Sectionஎனும் தாவிப்பொத்தானின் பக்கத்தில் hide என்ற வாய்ப்பினை தெரிவு செய்து கொண்டு with condidtion எனும் உரைபெட்டியில் தேவையான நிபந்தனகளை உள்ளீடு செய்து கொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக .உடன் நாம் தெரிவுசெய்த பகுதியானது மறைந்துவிடும்..

5

5

மறையச்செய்த பகுதியை மீண்டும் திரையில் தோன்றிடச் செய்வதற்காக லிபர் ஆஃபிஸ்.4. ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Format => Sections=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் Edit Section எனும் உரையாடல் பெட்டியில் Sectionஎனும் தாவிப்பொத்தானின் பக்கத்தில் hide என்ற வாய்ப்பினை தெரிவுசெய்யாது விட்டிட்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

இவ்வாறு மாறுதல்கள் செய்துகொண்டுவரும்போது அவ்வப்போது நிகழ்நிலை படுத்தி கொள்வதற்காக. லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப் பட்டையி லிருந்து Tools => Options => LibreOfficeWriter => General=> ன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் விரியும் திரையில் Update: Automatically என்பதன்கீழ் Fields என்பதை தெரிவுசெய்துகொள்க .

நாமே முயன்று புலங்களில் text, a table, a frame, a graphic, or an object என்பனபோன்ற விவரங்களை உள்ளீடு செய்வதற்காக .லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப் பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Typeஎன்பதன்கீழ் Placeholder என்பதையும் Formatஎன்பதன்கீழ் Placeholder text, a table, a frame, a graphic, or an object ஆகியவற்றில் தேவையான ஒன்றினையும் தெரிவுசெய்துகொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

உள்ளீட்டு புலங்களையும் உள்ளீட்டு பட்டியல்களையும் பயன்படுத்து வதற்காக லிபர் ஆஃபிஸ்.4.ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையிலிருந்து Insert => Fields => Other => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் விரியும் திரையில் Functionsஎனும் தாவிப்பொத்தானின் திரையை தோன்றசெய்திடுக .அதில் Typeஎன்பதன்கீழ் Input fieldஎன்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் Reference எனும் உரைபெட்டியில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் Input fieldஎன்ற சிறு உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும். அதில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக..

6

6

அவ்வாறே இதேஉரையாடல் பெட்டியின்Functionsஎனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎன்பதன்கீழ் Input listஎன்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் Itemஎனும் உரைபெட்டியில் பெயரை உள்ளீடு செய்துகொண்டு Add என்ற பொத்தானை புதியதாக பட்டியலில் சேர்ப்பதற்காக தெரிவுசெய்து சொடுக்குக.

பின்னர் பட்டியலில் இந்த பெயர் எந்த இடத்தில் தேவையென அமைவுசெய்வதற்காக move up, move down ஆகிய இருபொத்தான்களையும் நீக்கம்செய்வதற்காக Removeஎன்ற பொத்தானையும் பயன்படுத்தி கொள்க .இந்தபுலத்திற்கு Name என்ற பெட்டியில் பெயரினை உள்ளீடு செய்துகொண்டு இறுதியாக insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

ஏற்கனவே இருக்கும் பட்டியலை சரிசெய்வதற்காக Edit என்றபொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்தபின் அல்லது விசைப்பலகையிலுள்ள Ctrl+Shift+F9.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் விரியும் Edit எனும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு திருத்தம் செய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-42 புலங்களில் பணிபுரிதல்

லிபர் ஆஃபிஸ் ரைட்டரின் புலங்கள் மிகப்பேரளவு வசதிகளை கொண்டது அவை நடப்பு தேதி அல்லது மொத்தப்பக்கங்களின் எண்ணிக்கை போன்ற மாறுபடும் தரவுகள், உற்பத்தி பொருட்களின் பெயர் அல்லது உருவாகி கொண்டிருக்கும் புத்தகங்கள் போன்ற மாறுபடும் அளவுகள், வாடிக்கையாளர் குறிப்பிடும் தொடர்எண்கள், தானியங்கியான குறுக்கு மேற்கோள்கள், சொற்கள் அல்லது பத்திகள் காட்சியாக மட்டும் தோன்றும் அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அச்சிடப்படும் மற்றநேரத்தில் அச்சிடமுடியாது ஆகிய நிபந்தனைகள், உள்ளடக்கங்கள் ஆகியவை இந்த புலங்களின் வசதி வாய்ப்புகளின் ஒருசில எடுத்துகாட்டுகளாகும்.. வரிசைகளின் எண்ணிக்கை உள்ளீடுகள் கூட புலங்களாக உள்ளன .

புலங்களை பற்றியமுழுமையான விவாதங்களையும் விவரங்களையும் கூறுவதற்கு தனியாக புத்தகமே எழுவேண்டிய அளவு தகவல்களை கொண்டது. அதனால் புலங்களை பற்றிய பொதுவான சுருக்கமான விவரங்களை மட்டும் இந்தபகுதியில் விவரிக்கபடவுள்ளன .

ஆலோசனை குறிப்புகள் பொதுவாக இந்த Field shadingsஎனும் வாய்ப்பை தெரிவுசெய்யாது விடும்வரை அல்லது Tools => Options => LibreOffice => Appearance =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயல்படுத்தி பக்ககாட்சியின் போது புலங்களின் பின்புலவண்ணத்தை மாற்றியமைக்காதவரை புலங்களானது திரையில் காணும்போது சாம்பல் பின்னனியுடன் தோன்றிடும் .. ஆனாலும் இந்த புலங்களின் சாம்பல்பின்புலவண்ணம் ஆவணத்தை அச்சிடும்போதும் கையடக்க ப்பிடிஎஃப் ஆவணமாக உருமாற்றம் செய்திடும்போது தோன்றாது. இந்த புலங்களின் பின்புலநிழல் சாம்பல் வண்ணத்தை விரைவாக மாற்றி யமைத்திட View => Field Shadings=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயல்படுத்துக அல்லது விசைப்பலகையில் Ctrl+F8.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக

நம்முடைய லிபர் ஆஃபிஸ் ரைட்டர் ஆவணத்தில் Insert => Fields=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்தியவுடன் விரியும் பட்டியில் தேவையான புலங்களை மிக விரைவாக பொதுவான புலங்களை உள்ளிணைக்கமுடியும்

1

1

File => Properties=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் திரையில் விரியும்Propertiesஎனும் உரையாடல் பெட்டியில் ஆறுவகையான தாவிப் பொத்தான்களின் பக்கங்கள் உள்ளன இதில் உள்ள General ,Statistics ஆகிய இருத் தாவிப் பொத்தான்களின் பக்கங்களின் விவரங்களை இந்த லிபர் ஆஃபிஸானது தானியங்கியாக உருவாக்கிவிடுகின்றது .General எனும் தாவிப்பக்கத்தில் உள்ள ஆவணத்தை உருவாக்கியவர் மாறுதல் செய்பவர்களின் பெயர் போன்ற மற்றவிவரங்கள் Tools => Options => LibreOffice => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக பயனாளர்கள் உள்ளீடு செய்திடும் தரவகளிலிருந்து பெறப்படுகின்றது. அல்லது Internetஎனும் தாவியின் பக்கவிவரங்கள் இணைய பக்கங்களின் ஹெச்ட்டிஎம்எல் ஆவணங்களுடன் மட்டும் தொடர்புடையதாகும் . கோப்புகளை பரிமாறி கொள்ளும்போது பின்பற்றவேண்டிய விவரங்களை கொண்ட Securityஎனும் தாவியின் பக்க விவரங்கள் தனியாக இதேபகுதியில் விவரிக்கபடவுள்ளன. Description Customஎனும் தாவிப்பொத்தானின் பக்கத்தில் பேரளவு தரவுகள் வகைபடுத்தப்பட்டு வரிசைபடுத்திடப்பட்டு தேக்கிவைக்கப்பட்டு தேவைப்படும்போது ஆவணங்கள் மீட்டாக்கம் செய்ய உதவுகின்றது

1

2

சிலபேரளவு தரவுகள் பதிவேற்றம் செய்திடும்போது ஹெச்ட்டிஎம்எல் ப்பிடிஎஃப் ஆவணத்திற்கு சமமானவகையில் இருக்குமாறு செய்கின்றன. ரைட்டரில் உள்ள புலங்களில் சில சமமற்றும் பதிவேற்றம் செய்யயபடாமல் உள்ளன. Custom எனும் தாவிப்பொத்தானின் பக்கத்தில்மாறுபடும் தரவுகளான ஆவணத்தின் தலைப்புகள் தொடர்பு விவரங்கள்செயல்திட்டத்தின்போது மாறுசெய்யபடும் ஆவணத்தின் பெயர் போன்ற விவரங்களை இதன்வாயிலாக ஆவணங்களில் உளள புலங்களில் தேக்கிவைக்கமுடியும். இந்த உரையாடல் பெட்டி மாதிரி பலகத்திற்குள் புலத்தின் பெயர் ரைட்டருக்கு தேவையான தகவல்களை வழங்கும் சேவையாளராக பயன்படுத்தி கொள்ளமுடியும்..Description எனும் தாவிப்பொத்தானின் பக்கத்தில் தலைப்பு புலத்தின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்திடமுடியும் இந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியை திரையில் கொண்டுவருவதற்காகFile => Properties=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக . உடன் திரையில் விரியும் உரையாடல் பெட்டியில் புதிய ஆவணத்தின் காலியான பக்கத்தை இந்த உரையாடல் பெட்டியின் Customஎனும் தாவிப் பொத்தானின் பக்கம் காண்பிக்கின்றது மாதிரிபலகமாக இருந்தால் அதிலுள்ள புலங்களை காண்பிக்கும் இதில் Addஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் வரிசையான பெட்டிகள் கிடைவரிசையில் தோன்றிடும் .

இந்த வரிசையான பெட்டிகளில் Name boxஎன்பது கீழிறங்கு பட்டியலுடன் கூடிய பெயர்கள் பட்டியலாக இருக்கும் தேவையானதை தெரிவுசெய்துகொள்க அல்லது புதியபெயரை சேர்த்துகொள்க. Type column என்பது text, date+time, date, number, duration, or yes/noஆகிய வகைகளில் ஒன்றினைஒவ்வொரு புலத்திற்கும் தெரிவுசெய்து அமைத்திட பயன்படுகின்றது. Value columnஎன்பது இந்த புலத்தின் வாயிலாக ஆவணத்தில் என்ன தோன்றவேண்டும் என விரும்புகின்றோமோ அதனை குறிப்பிட்ட வரைமுறைக்குள் தோன்றச்செய்திட உதவுகின்றது. தேவையில்லாததை நீக்கம் செய்திட இந்த கிடைவரிசை பெட்டிகளில் கடைசியாக உள்ள பெட்டியை பயன்படுத்தி நீக்கம்செய்துகொள்க.

புலங்களின் நாள்மதிப்பை வடிவமைப்பில் மாறுதல்கள் செய்துகொள்வதற்காக Tools => Options => Language Settings => Languages=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக இவ்வாறு செயற்படுத்துவது திறந்து இருக்கும் அனைத்து ஆவணங்களையும் பாதிக்கும் என்ற செய்தியை மனதில் கொள்க

1

3

செயல்திட்டத்தின்போது கடைசியாக அச்சிடுவதற்கு முன் மேலாளரின் பெயர் செயல்திட்டத்தின் பெயர் போன்ற விவரங்களை இந்த புலங்களின் தகவல்களை மாற்றியமைப்பதன் வாயிலாக மாற்றியமைத்திடமுடியும் .மாறுபடும் தகவல்களை கொண்ட புலங்கள் அனைத்திற்குமான விவரங்களை ஒரேஇடத்தில் வைத்துகொண்டு அவ்விடத்தில் செய்திடும் மாறுதல்களானது தானியங்கியாக ஆவணங்கள் முழுவதும் உள்ள புலங்களில் மாறுதல்கள் ஆகிவிடும் . ரைட்டரானது புலங்களை மேற்கோள் காட்டுவதற்கான தகவல்களை தேக்கிவைப்பதற்காக பல்வேறு இடங்களை வழங்குகின்றது. அவைகளில் ஒருசிலவற்றை பற்றி மட்டும் இங்கு காணலாம் Insert => Fields=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக Date, Time, Page Number, Page Count, Subject, Title, and Authorஆகிய ஏழு வகையான ஆவணங்களின் பண்பியல்புகளை ஒரு ஆவணத்திற்குள் கொண்டுவந்து அவைகளுள் தேவையானதை மட்டும் தெரிவுசெய்வதன் மூலம் ஒரு ஆவணத்திற்குள் உள்ளிணைப்பு செய்து கொள்ளமுடியும். சில புலங்களின் தகவல்கள் Document Propertiesஎனும் உரையாடல் பெட்டியின்மூலம் பெற்றுகொள்கின்றன மற்றவை Fields எனும் உரையாடல் பெட்டியின் DocInformation Document pages ஆகிய தாவிப்பக்கங்களின் வாயிலாக பெறுகின்றன. இவையிரண்டையும் அடைவதற்கு Insert => Fields => Other=> என்றவாறு கட்டளைகளை செயற்படுதிடுக அல்லது விசைப்பலகையில் Ctrl+F2ஆகிய பொத்ததான்களை சேர்த்து அழுத்துக

4

4

இங்கு DocInformation தாவிப்பக்கத்தின் Type எனும் பட்டியலில்உள்ள Custom item ஆனது Document Properties எனும் உரையாடல் பெட்டியின்Custom Properties எனும் தாவிப்பக்கத்தின் வாயிலாக பெறப்படுகின்றது. இவைகளுள் ஒன்றினை உள்ளிணைப்பு செய்திட முதலில் Type எனும் பட்டியலில் தெரிவுசெய்து கொண்டபின் Format எனும் பட்டியலில் தெரிவுசெய்து கொண்டபின் இறுதியாக எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதனுடைய ஒருசில Tools => Options => LibreOffice=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின்தோன்றிடும் உரையாடல் பெட்டியில் User Dataஎனும் தாவியின் பக்கத்தில் தேவையானதை தெரிவுசெய்வதன்வாயிலாக தெரிவுசெய்துகொள்ளபடுகின்றது

5

5

மாறுபடும் தகவல்களை இந்த புலங்கள் கொண்டிருந்தாலும் உள்ளடக்கங்களை மாறுபடாமல் இருக்குமாறு Fixed contentஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்வதன் வாயிலாக செய்திடமுடியும் .இதனை தெரிவுசெய்யாது விட்டிட்டால் உள்ளடக்கங்களை மாற்றி யமைத்திடலாம்.

குறிப்பிட்ட புலங்கள் திரும்ப திரும்ப வரும்போது AutoTextஎனும் வாய்ப்பு பேருதவியாக உள்ளது. இதனை செயற்படுத்திட உள்ளிணைப்பு செய்திடும் புலத்தை முதலில் தெரிவுசெய்துகொள்க பின்னர் Edit => AutoText => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக அல்லது விசைப்பலகையில் Ctrl+F3ஆகிய பொத்தான்களை சேர்த்து அழுத்துக. 6

6

உடன் திரையில் விரியும் AutoText எனும் உரையாடல் பெட்டியில் தேவையான குழுவின் பெயரை My AutoTextஎன்றவாறு தெரிவுசெய்துகொண்டு புதிய பெயரை உள்ளீடு செய்துகொண்டு இதனை அடைவதற்கான குறுக்குவழி பொத்தான்களையும் அமைத்துக்கொள்க. பின்னர் AutoTextஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்விரியும் பட்டியில் Newஎன்பதை மட்டும் New (text only)என்பதையன்று தெரிவுசெய்து கொண்டு Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. இதன்பின்னர் தேவையான இடத்தில் குறுக்கவழியை தட்டச்சு செய்து F3எனும் செயலிவிசையை அழுத்தினால் போதும் தானியங்கியாக நாம் உள்ளீடு செய்து வரையறுத்து வைத்துள்ள உரையானது வந்துசேர்ந்துவிடும். ஆவணத்தின் பக்க எண்களை கூட நாம்விரும்பியவாறாக வரையறுத்து அவ்வாறே இருக்குமாறு செய்திடமுடியும். இதற்காக நம்முடைய ஆவணத்தில் தேவையான இடத்தில் இடம் சுட்டியை வைத்துகொண்டு Insert => Fields => Other=>என்றவாறு கட்டளைகளை செயற்படுதிடுக அல்லது விசைப்பலகையில் Ctrl+F3கிய பொத்தான்களை சேர்த்து அழுத்துக.

7

7

உடன் திரையில் விரியும் Fields எனும் உரையாடல் பெட்டியின் Variablesஎனும் தாவிபொத்தானின் பக்கத்தில் Type எனும் பகுதியில் Number range என்பதை தெரிவுசெய்து கொள்க .Format எனும் பகுதியில்நாம்வரும்பும் வகையில் ஒன்றினை அல்லது Arabic (1 2 3) என்பதை தெரிவுசெய்துகொள்க. Nameஎனும் பெட்டியில் step என்றவாறு தெரிவுசெய்துகொண்டு Insertஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்இந்த step எனும் பெயர் Selection எனும் பகுதியில் தோன்றிடும் 1 என்ற எண் அதற்கான பெட்டியில் தோன்றிடும் இந்நிலையில் படிமுறையை மாற்றியமைத்திட மேலே கூறியதை போன்ற படிமுறைகளை பின்பற்றி நாம் விரும்பியவாறு மாற்றியமைத்து கொள்க. பின்னர் Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக .

8

8

இவ்வாறு பல்வேறு படிமுறைகளை ஒவ்வொருமுறையும் பயன்படுத்தி கொள்ள விரும்பாமல் தானாகவே வருமாறு செய்திடவிரும்புவோம் அந்நிலையில்Step1 என அழைக்கபடும் Step (Value=1) , StepNextஎன அழைக்கபடும்Step = Step+1 ஆகிய இரு AutoTextஉள்ளீட்டை மட்டும் செய்து இதே படிமுறையை துனைபடி முறையாக Fields எனும் உரையாடல் பெட்டியில் Formatஎனும் பகுதியின் பட்டியலை கொண்டு உருவாக்கிடமுடியும். Value boxஎனும் பெட்டிக்கருகில் உள்ள பெருக்கல் குறிபோன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பயனாளர் வரையறுத்த மதிப்பை நீக்கம் செய்திடமுடியும் .தானியங்கியான மேற்கோள்களை பயன்படுத்திடமுடியும். இதற்காக Insert => Cross Reference=>என்றவாறு கட்டளைகளை செயற்படுதிடுக அல்லது விசைப்பலகையில் Ctrl+F2கிய பொத்ததான்களை சேர்த்து அழுத்துக

9

.9

உடன் திரையில் விரியும்Fields எனும் உரையாடல் பெட்டியில் Cross-referencesஎனும் தாவிபொத்தானின் பக்கத்தில் Type எனும் பட்டியலில் வாடிக்கையாளர் வரையறுத்தவாறு headings,numbered paragraphs, bookmarksஎன்பன போன்ற பட்டியல் இருக்கும். அவைகளுள் தேவையானதைமட்டும் தெரிவு செய்து சொடுக்குக.பின்னர் selection எனும் பட்டியில்தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க. அதன்பின்னர் Insert referenceஎனும் பட்டியல் பகுதியில் நாம் விரும்பியவாறான அல்லது Reference ,page,Category and Number, Numbering என்றவாறான மேற்கோள்வகைகளை தெரிவுசெய்துகொண்டு Insertஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-41-முதன்மை ஆவணத்தில் பணிபுரிதல்-தொடர்ச்சி

 பொதுவாக அச்சிட்ட புத்தகங்களில் அட்டைப்பகுதியில் பக்கஎண்கள் இருக்காது, ஆனால் அதற்கடுத்ததாக புத்தகத்தை பற்றிய அறிமுக பக்கங்களில் சிறிய ரோமன் எழுத்தில் I என்று தொடங்கி தொடர்ச்சியாக இருக்கும். அதனை தொடர்ந்து மற்ற உள்பகுதியில் அராபிய எண் 1 என்று தொடங்கி தொடர்ச்சியாக இருக்கும். புத்தகத்தின் மிகுதி பகுதிகளின் பக்கங்களானது தொடர்ச்சியான மிகுதி அராபிய எண்ணாகவே இருக்கும். இவ்வாறான பக்கஎண்களுடன்கூடிய முதன்மை ஆவணத்தை அமைவு செய்திட வெவ்வேறு பத்திகளின் பாவணைகளை முதல் பகுதியின் தலைப்பிற்காக இரு சிறப்பு எழுத்துருக்களையும் சேர்த்து ஒதுக்கீடு செய்திடவேண்டும்.

உதாரணமாக புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியையும் Paragraph Style எனும் உரையாடல் பெட்டியில் Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையில்Heading 1 paragraph என்றும் Page number 0எனவும் அமைத்திடுக உடன் மிகுதி பக்கஎண்கள் தானாகவே தொடரச்சியாக உருவாகிவிடும்.41.1

1

பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில்Tools => Outline Numbering=> என்றவாறு கட்டளையை செயற்படுத்தி அமைக்கபட்ட புறஅமைப்பு நிலையானது Outline Level 1.என்றவாறு ஒதுக்கீடு செய்யபட்டிருக்கும். இதனை Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் உறுதிபடுத்திகொள்க.

41.2

2

அதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே உள்ள கட்டளை பட்டையில் Tools=> Outline Numbering=> என்றவாறு கட்டளையை செயற்படுத்தி Outline Level 1 என்ற ஒரு நிலையை மட்டுமே பத்தியின் பாவணையில் ஒதுக்கீடு செய்திடமுடியும் .மேலும் தேவையான அளவு கூடுதலான நிலையை Paragraph Style எனும் உரையாடல் பெட்டியின் Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும்.

41.3

3

இந்நிலையில் இதே Paragraph Style எனும் உரையாடல் பெட்டியின் Outline & Numberingஎன்ற தாவிப் பொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திட முடியும். அதேபோன்று Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையிலும் பக்க எண்களை அமைத்திடமுடியும் என்றவாறு இருவேறு இடங்களில் பக்க எண்களை அமைத்திடும்போது இரண்டிற்குமிடையே என்ன வேறுபாடு என்றவொரு சந்தேகம் அனைவருக்கும் கண்டிப்பாக எழும்.

Outline & Numberingஎன்ற தாவிப்பொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திட்டால் தலைப்பு உரையானது உள்ளடக்க அட்டவணையிலும் மற்ற பகுதியின்தலைப்புகளிலும் தோன்றிடும். Text Flowஎன்ற தாவிபொத்தானின் திரையில் பக்கஎண்களை அமைத்திடும் போது தலைப்பு உரையானது அவ்வாறு இரு இடங்களிலும் அமையாது.

41.4

4

அதனால் Outline & Numberingஎன்ற தாவிபொத்தானின் திரையில் பகுதி1 முதன்மை பத்திக்கு புதிய பாவணையை ஒதுக்கீடுசெய்து கொள்க.

இவ்வாறு முதன்மை ஆவணத்தை உருவாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பியவாறு திருத்தம் செய்து அதன் தோற்றத்தை மாற்றியமைக்கமுடியும். இதற்காக மாதிரிபலகத்தில் தேவையானவாறு மாறுதல்கள் செய்துகொண்டபின்னர் முதன்மை ஆவணத்தை திரையில் தோன்ற செய்திடுக. உடன் if you want to update all linksஎன்றும் if you want to apply the changed stylesஎன்றும் இரு செய்திகள் திரையில் தோன்றிடும். அவ்விரண்டிற்கும் Yesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து ஆமோதித்திடுக.

முதன்மை ஆவணத்திலிருந்துகொண்டு துனை ஆவணங்களை திருத்தம் செய்திட முடியாது. அதனால் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டிதிரையில் உள்ள துனை ஆவணைத்தை தெரிவுசெய்து கொண்டுசுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக. அல்லது முதன்மை ஆவணத்தை விட்டு வெளியில் வந்தபின் தனியாக துனைஆவணத்தை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் திரையில் விரியும் துனைஆவணத்தை வழக்கமான ஆவணத்தை போன்று திருத்தம் செய்திடமுடியும் . இவ்வாறான துனை ஆவணத்தின் திருத்தங்களை முதன்மைஆவணத்தின் உள்ளடக்க அட்டவணைகளிலும் நூலகபட்டிகளிலும்(bibliography) வரிசையடுக்குகளிலும்(index) நாமே அவ்வப்போதைய திருத்தத்தை நிகழ்நிலை படுத்திகொள்ளவேண்டும்.

அதன்பின்னர் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டித்திரையில் உள்ள துனை ஆவணைத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக.. உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Deleteஎனும் வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து நீக்கம் செய்துகொள்க. .துனை ஆவணத்திற்கு புதியபெயரிட்டு திருத்தம் செய்திருந்தால் முதன்மை ஆவணத்தின் வழிகாட்டிதிரையில் உள்ள பழைபெயரிலுள்ள ஆவணத்தை நீக்கம் செய்தபின் புதிய பெயரிட்ட துனைஆவணத்தை முதன்மை ஆவணத்தின் வழிகாட்டித்திரையில் சேர்த்துகொள்க.

துனை ஆவணங்களுக்கிடையே மேற்கோள்காட்டுதலை புலங்களுக்கு பெயரிட்டபின் bookmarks அல்லது set referencesஆகிய இருவழிகளில் ஒன்றை பயன்படுத்தி உருவாக்கிடமுடியும்.

முதல்வழிமுறையான bookmarks என்பது வழிகாட்டிதிரையில் பட்டியலாக காண்பிக்கும். அவைகளுள் நமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து ஒற்றை சொடுக்குதல் வாயிலாக அடையமுடியும்.

முதல்வழிமுறையான இந்த bookmarksஇன் வாயிலாக உள்ளிணைப்பு செய்திடுவதற்காக முதலில் bookmarks செய்திடவிரும்பும் உரையை தெரிவுசெய்து கொண்ட பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளைப்பட்டையில் Insert => Bookmark=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் விரியும் Insert Bookmark. எனும் உரையாடல் பெட்டியில் புதிய பெயரை உள்ளீடு செய்துகொண்டபின் OK.எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. 

41.5

5

இரண்டாவது வழிமுறையான set references என்பதன்வாயிலாக உள்ளிணைத்திடுவதற்காக. முதலில் மேற்கோள்காட்டிட விரும்பும் ஆவணத்தை திறந்துகொள்க பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் Insert => Cross-reference=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் திரையில் விரியும் Fieldsஎனும் உரையாடல் பெட்டியின் Cross-reference.எனும் தாவிபெட்டியின் திரையில் Typeஎனும் பகுதியின் கீழ் Set Reference எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் மேற்கோள்காட்டவிரும்பும் ஆவணத்தையும் அதன் தலைப்பையும் தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் Fieldsஎனும் உரையாடல் பெட்டியில் Name எனும் பெட்டியில் இந்த மேற்கோளிற்கு ஒரு பெயரிட்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பெயரானது Selectionஎனும் பகுதியில் பட்டியலாக காண்பிக்கும். மேலும் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றி கூடுதலான மேற்கோள்களை உருவாக்கி கொள்க இறுதியாக இதனை சேமித்து இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.

மேற்கோளை உள்ளிணைத்தல் முதன்மை ஆவணத்தை திறந்துகொண்டு அதன்வழிகாட்டிதிரையில் ஏதேனுமொரு துனைஆவணத்தை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Editஎனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த துனை ஆவணமானது திருத்தம் செய்திடுவதற்கு ஏதுவாக தயார் நிலையில் திரையில் தோன்றிடும். பின்னர் மேற்கோள் காட்டவிழையும் உரையில் இடம்சுட்டியை வைத்துகொண்டு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Insert => Cross-reference=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் திரையில் விரியும் Fieldsஎனும் உரையாடல் பெட்டியின் Cross-reference.எனும் தாவிப்பொத்தானின் திரையில் Typeஎனும் பகுதியின் கீழ் Set Reference எனும் வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் மேற்கோள்காட்டவிரும்பும் உரைதலைப்பை தெரிவுசெய்து சொடுக்குக. இதன்பின்னர் Fieldsஎனும் உரையாடல் பெட்டியில் Name எனும் பெட்டியில் இந்த மேற்கோளிற்கு ஒரு பெயரிட்டு Insert எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இந்த பெயரானது Selectionஎனும் பகுதியில் பட்டியலாக காண்பிக்கும். மேலும் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றி கூடுதலான மேற்கோள்களை உருவாக்கி கொள்க. இறுதியாக இதனை சேமித்து இந்த உரையாடல் பெட்டியிலிருந்து வெளியேறிடுக.

41.6

6

இதன்பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Tools => Update => Links=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. அல்லது முதன்மை ஆவணத்தின் வழிகாட்டியின் திரையில் Updateஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து பிடித்து கொண்டு Linksஎனும் பகுதிக்கு இடம்சுட்டியை கொண்டுசென்று அழுத்திபிடித்தருந்த பொத்தானின் பிடியை விட்டிடுக. தற்போது மேற்கோள் உரையானது நாம் உள்ளிணைத்த பகுதியில் தோன்றிடும். இதனை மூடிவிட்டுமீண்டும் திறந்தால் இணப்பானது நிகழ்நிலைபடுத்தபட்டுவிடும்.

முதன்மைஆவணமும் துனை ஆவணமும் சேர்ந்த ஆவணங்களில் Navigatorஎனும் வழிகாட்டியானது மிகச்சிறந்த கருவியாக நமக்கு ஆவணத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வது உள்ளடக்கங்களை மறுஅமைவுசெய்வது ஆகியவற்றில் மிகமுக்கிய பங்காற்றுகின்றது. உதாரணமாக புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி துனைஆவணங்களாக இருக்கின்றன. இந்நிலையில் முதன்மை ஆவணத்தின் செய்யபடும் குறிப்பிட்ட பகுதிகளின் பெயர்களுக்குபதிலாக மறுபெயரிடுதல் வரிசையை மாற்றிடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் துனை ஆவணங்களிலும் தானாகவே நிகழ்நிலை படுத்தபடும். லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் இந்த வழிகாட்டியானது முதலாவதாக வழக்கமான உரைஆவணங்களாகவும் ,இரண்டாவதாக துனை ஆவணங்களாகவும் இருக்கின்றன.

முதலாவதான வழக்கமான உரைஆவணங்களில் வரைபடங்கள் அட்டவணைகள் இணைப்புகள் மேற்கோள்கள் மற்றவைகள் சேர்ந்ததாக இருக்கும். இதிலுள்ள கூட்டல்குறி அல்லது முக்கோணக்குறியை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் உடன் தொடர்புடையபட்டியல் விரியும் அவைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்தவுடன் ஆவணத்தின் அந்த பகுதிக்கு இடம்சுட்டியானது உடன் தாவிச்சென்றுநிற்கும்.

வழிகாட்டியின்(navigator) திரையின் முதன்மை ஆவணபடிவத்தில் மேலே இடதுபுறத்தில் உள்ள Toggleஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முதன்மை ஆவணம் அல்லது வழக்கமான ஆவணம் ஆகியஇரண்டிற்கும் இடையே மாறிகொள்ளமுடியும். முதன்மை ஆவணகாட்சியில் துனைஆவணங்களும் உரைகளும் சேர்ந்த பட்டியலை திரையில் காண்பிக்கும்.

41.7

7

முதன்மைஆவணமானது .odmஎனும் பின்னொட்டு கோப்பாகவும் துனைஆவணங்களானது .odtஎனும் பின்னொட்டு கோப்புகளாகவும் இருக்கின்றன. புத்தகங்கள் அறிக்கைகள் ஆகியவற்றை உருவாக்க இந்தஅமைவு பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனாலும் சிலநரேங்களில் இவையிரண்டும் சேர்ந்த முதன்மை ஆவணத்தில் பாதிப்புஎதுவும் ஏற்படுத்தாத ஒரேயொரு நகல் கோப்பாக சேமித்து வைத்திடவிரும்புவோம். அந்நிலையில் முதலில் முதன்மை ஆவணத்தை திறந்துகொள்க. பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள File => Export=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன் விரியும் Exportஎனும் உரையாடல் பெட்டியில் File name எனும் உரைபெட்டியில் இதற்கொரு பெயரிட்டுகொண்டு File format எனும் பகுதியில்ODF Text Document (.odt) என்றவாறு தெரிவுசெய்துகொண்டு Exportஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் முதன்மை ஆவணத்தை மூடிவிட்டுவெளியேறிடுக.பிறகு புதியதாக உருவாக்கிய .odtஎனும் பின்னொடுடன் கூடிய ஆவணத்தை திரையில் தோன்ற செய்து இணைப்பு அனைத்தையும் நிகழ்நிலை படுத்திகொள்க.

இந்த ஆவணத்தில் இணைப்புகளை நீக்கம் செய்திடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேகட்டளைபட்டையில் உள்ள Format => Sections=>என்றவாறு கட்டளையை செயற்படுத்திடுக. உடன்திரையில் விரியும் Section எனும் உரையாடல் பெட்டியின் Sectionஎனும் பகுதியில்இணைப்பை நீக்கம் செய்திடவிரும்புவதை தெரிவு செய்து கொண்டு Link எனும் பகுதியில் உள்ள Link என்பதையும் Write protection எனும் பகுதியில் உள்ள Protected என்பதையும் தெரிவசெய்யாதுவிட்டிட்டு OKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதைஒரு எளிமையான உரையாவணமாக மாற்றியமைத்திட தேவையான பகுதியை தெரிவுசெய்துகொண்டு Removeஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

முதன்மைஆவணத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்தல்

பொதுவாக துனைஆவணத்தில் உள்ள வரைகலையானது முதன்மைஆவணத்தின் பட்டியலில் தோன்றுவதில்லை. ஏனெனில் முதன்மைஆவணத்தில் பக்க உரையோட்டம் பக்கஎண்கள் மேற்கோள்கள் ஆகியவை மாற்றியமைத்திடும்போது துனை ஆவணங்களின் வரைகலைமட்டும் அதனுடைய anchor reference ஐ மேற்கோள்செய்யாது விடுபட்டுவிடும். இந்த பிரச்சினையை சரிசெய்திடுவதற்காக வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Pictureஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துசொடுக்குக. பின்னர் விரியும் Pictureஎனும் உரையாடல் பெட்டியின் Typeஎனும் தாவிப்பொத்தானின் திரையில் anchorஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் To character or To paragraph ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க. பின்னர்Positionஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் Horizontal Vertical ஆகியஒவ்வொன்றிலும் center ,top ,bottom ஆகிய வாய்ப்புகளில் பொருத்தமான ஒன்றை் தெரிவுசெய்துகொள்க. இறுதியாகoKஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. 

41.8

8

லிபர் ஆஃபிஸ்4.ரைட்டர்-தொடர்-40-முதன்மை ஆவணத்தில் பணிபுரிதல்

 லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரின் முதன்மை ஆவணம் எனும் வசதியானது ஆய்வறிக்கை, நீண்டஅறிக்கை,புத்தகம் போன்றவைகளை உருவாக்குவதற்கு பயன்படுகின்றது அதாவது தனித்தனியான பகுதிவாரியாக இருக்கும் (*.ODT)எனும் பின்னொட்டுடன் உள்ள சிறுசிறு ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த (*.ODM)எனும் பின்னொட்டுடன்கூடிய பெரிய ஆவணமாக உருவாக்குவதே லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரின் முதன்மை ஆவணமாகும் இதில் உள்ளடக்க அட்டவணைகள், சுட்டிகள் ,அட்டவணைகள், பட்டியல்கள்,அதன்துனைஉறுப்புகள் ஆகியவை ஒரேமாதிரியான அமைவில் கட்டமைக்கப் பட்டிருக்கும்

வரைகலை,விரிதாள் போன்ற பெரிய அளவிலான கோப்புகளை குறிப்பிட்டநோக்கத்திற்காக ஒருங்கிணைத்திடவும்,வெவ்வெறு நபர்கள் தனித்தனி பகுதியாக குறிப்பிட்ட ஆவணத்தை உருவாக்கிடும்போது அவற்றை ஒன்றாக ஒருங்கிணைத்திடவும்,ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தனியானதொரு பெரியஆவணத்தை சிறுசிறு பகுதிகளாக பிரித்து உருவாக்கிடவும், துனைஆவணங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பெரியதொரு ஆவணமாக உருவாக்கிடவும்,இந்தலிபர் ஆஃபிஸ்4.ரைட்டரின் முதன்மை ஆவண கட்டமைவு பெரிதும் பயன்படுகின்றது

நாம் வழக்கமாக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் வெவ்வேறு வழிமுறைகளில் ஆவணங்களை உருவாக்கிடுவோம் அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொருவழிமுறையில் இந்த லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரின் முதன்மை ஆவணமாக உருவாக்கிடமுடியும்.அதாவதுதனியானதொரு ஆவணத்தை ஒருமுதன்மை ஆவணத்துடன் இணைத்திடும்போது அது ஒரு துனை ஆவணமாக உருமாறுகின்றது மேலும் எந்தவொரு துனை ஆவணமும் ஒன்றிற்கு மேற்பட்ட முதன்மை ஆவணங்களுடன் இணைத்து பயன்படுத்தி கொள்ளமுடியும் அதுமட்டுமல்லாது ஒவ்வொரு முதன்மை ஆவணமும் எழுத்துரு வகை, அளவு, வண்ணம், பக்கஅளவு,ஓர அளவு போன்றவைகள் எல்லாம் சேர்த்து வெவ்வேறு வகையான பாவணைகளில் அமைத்திடலாம் இவையே எந்தவொரு ஆவணத்திற்குமான தோற்றத்தை கொண்டு வருகின்றன.ஆயினும் தனிப்பட்ட ஆவணமானது தன்னுடைய உண்மையான தோற்றத்தை மட்டும் கொண்டிருக்கின்றது இந்த லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரில் உள்ள முதன்மை ஆவணத்தி்ற்கும் துனைஆவணத்திற்கும் இடையேயான பொதுவான பாவணைகளின் வேறுபாடுகள் பின்வருமாறு

1.வாடிக்கையாளர் விரும்பும் துனை ஆவணத்தின் பத்திகளின் பாவணைகளை முதன்மை ஆவணத்திலும் பதிவிறக்கம் ஆகிவிடும்

2.ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறு பாவணைகளினாலான துனைஆவணங்கள் அனைத்தையும் ஒரேயொருமுதன்மை ஆவணத்துடன் ஒருங்கிணைத்திடும்போது முதன்முதல் ஒருங்கிணைத்த துனைஆவணத்தின் பத்திகளின் பாவணைகளே முதன்மை ஆவணத்திலும் பதிவிறக்கம் ஆகும்

3.ஒரே பாவணையானது முதன்மை ஆவணத்திலும் துனை ஆவணத்திலும் பயன்பட்டிருந்தால் முதன்மை ஆவணத்தில் வரையறுக்கபட்ட பாவணையே துனை ஆவணத்திலும் பயன்படுத்தபடுவதாக அமைந்திருக்கும்

4.துனைஆவணத்தின் பாவணையானது மாறுதல் செய்யபட்டு முதன்மை ஆவணத்தில் பயன்பட்டிருந்தால் துனைஆவணத்தில் மாறுதல் செய்வது முதன்மைஆவணத்தின் பாவணையை பாதிக்காது

இந்த லிபர் ஆஃபிஸ்4.ரைட்டரில் பின்வரும்மிகமுக்கியமான மூன்று வழிமுறைகளில் இவ்வாறான முதன்மைஆவணத்தை உருவாக்கிடமுடியும்

1.நடப்பிலிருக்கும் புத்தகம் போன்ற முதன்மை ஆவணத்தை தனித்தனியான பல்வேறு பகுதிகளாலான துனை ஆவணங்களாக பிரித்து அவைகளை முதன்மை ஆவணத்தின்வாயிலாக கட்டுபடுத்திடலாம்

2வெவ்வேறு ஆசிரியர்களால் உருவாக்கபட்ட பல்வேறு தனித்தனியான ஆவணங்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமுதன்மைஆவணமான புத்தகமாக உருவாக்கியபின் அவைகளை முதன்மை ஆவணத்தின்வாயிலாக கட்டுபடுத்திடலாம்

3.புதியதாக தனித்தனியான சிறுசிறு துனைஆவணங்களை பல்வேறு ஆசிரியர்கள் சேர்ந்து உருவாக்கி ஆவற்றை தொகுத்து ஒரேயொரு முதன்மைஆவணமான புத்தகமாக உருவாக்கிஅவைகளை முதன்மை ஆவணத்தின்வாயிலாக கட்டுபடுத்திடலாம்

முதலில் முதல் வழிமுறையில் எவ்வாறு முதன்மை ஆவணத்தை உருவாக்குவது என காண்போம்

இதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் தற்போது நடப்பில் நாம் பயன்படுத்திகொண்டிருக்கும் ஒருமுதன்மை ஆவணத்தை தனித்தனியாக பிரித்து பல்வேறு துனை ஆவணங்களாக உருவாக்கிடமுடியும்

இதில் முதன்மை ஆவணத்தின் முதல்பக்கத்தின் பாவணையனது துனையாவணத்தின் பக்கபாவணையாக இயல்புநிலையில் மாறியமையும் தேவையெனில் இதனை நாம் மாற்றியமைத்து கொள்ளமுடியும் அதனை தொடர்ந்து முதன்மைஆவணத்தின் கோப்பின் பெயரானது அ.odt என இருந்தால் துனையாவணங்களின் பெயரானது அ1.odt, 2.odt, 3.odt என்றவாறு இயல்பாக உருவாகிவிடும் ஆயினும் அந்தந்த பகுதிகளின் தலைப்புகளுடன் இந்த துனைஆவணங்கள் இருக்கவேண்டும் என விரும்பினால் அவ்வாறு நாமேமுயன்று மாற்றியமைத்திட வேண்டும்

இதில் முதன்மைஆவணமானது .ODMஎனும் கோப்பு அமைவில் மாதிரிபலகமாக இருந்தாலும் துனை ஆவனங்களானது முதன்மை ஆவணத்தின் பாவணையை மட்டும் பின்பற்றியிருக்கும் மாதிரிபலகத்தை பின்பற்றியிருக்காது

செயல்முறை நடப்பில் பயன்படுத்திகொண்டிருக்கும் ஒருமுதன்மை ஆவணத்தை பல்வேறு துனை ஆவணங்களாக லிபர் ஆஃபிஸ் ரைட்டரில் பிரித்து தனித்தனியான ஆவணங்களாக உருவாக்கிடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின்மேலே கட்டளைபட்டையில் File => Send => Create Master Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்திடுக உடன் திரையில் விரியும் Name and Path of Master Document எனும் உரையாடல் பெட்டியில் நாம் உருவாக்கபோகும் முதன்மை ஆவணத்தையும் துனைஆவணங்களையும் சேமித்து வைத்திடவேண்டிய கோப்பகத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க அல்லது புதிய கோப்பகத்தை உருவாக்கிகொள்க பிறகு இந்த முதன்மை ஆவணத்திற்கான பெயரை File nameஎனும் உரைபெட்டியில் உள்ளீடு செய்திடுக அடுத்ததாக separated by:எனும் பகுதியில் Outline: Level 1என்று இயல்புநிலையில் பகுதியின் தலைப்பு இருக்கும் அல்லது நாம் விரும்பியவாறு அமைத்துகொள்க Automatic file name extensionஎனும் வாய்ப்பு பெட்டியை தெரிவுசெய்து கொண்டு மற்ற அமைவுகளை இயல்புநிலையில் இருப்பவைகளை அப்படியே விட்டிட்டு Saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒவ்வொரு துனை ஆவணமும் Heading 1எனும் பத்தியின் பாவணையில் உருவாகி அமையும்

40.1

1

இரண்டாவது வழிமுறையாக நடப்பிலுள்ள பல்வேறு ஆவணங்களை ஒருங்கிணைத்து ஒரு முதன்மை ஆவணமாக உருவாக்கிடுதல்

இந்த வழிமுறையில்பல்வேறு ஆவணங்களும் ஒரேயொரு மாதிரிபலகத்தை பயன்படுத்தியிருந்தால் இதனை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் ஆயினும் வெவ்வேறு மாதிரிபலகங்களை பயன்படுத்தியிருந்தாலும் ஒருமுதன்மையாவணமாக உருவாக்கிடமுடியும் உதாரணமாக பல்வேறு எழுத்தாளர்கள் தனித்தனியாக உருவாக்கியிருக்கும் ஆவணங்களனைத்தையும் ஒருங்கிணைத்து ஒருமுதன்மை ஆவணமாக உருவாக்குவதற்கு இந்த வழிமுறை பெரிதும் பயன்படுகின்றது இதற்காக

லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின்மேலே கட்டளைபட்டையில் File => Send => Create Master Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து செயற்படுத்திடுக உடன் திரையில் விரியும் Name and Path of Master Document எனும் உரையாடல் பெட்டியில் நாம் உருவாக்கபோகும் முதன்மை ஆவணத்தையும் துனைஆவணங்களையும் சேமித்து வைத்திடவேண்டிய கோப்பகத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து கொள்க அல்லது புதிய கோப்பகத்தை உருவாக்கிகொள்க பிறகு இந்த முதன்மை ஆவணத்திற்கான பெயரை File nameஎனும் உரைபெட்டியில் உள்ளீடு செய்து கொண்டு Saveஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து FrontPage.ODMஎனும் கோப்பாக சேமித்துகொள்க துனை ஆவணங்களின் கோப்புகள்அனைத்தும் TestFile1.ODT, TestFile2.ODT, TestFile3.ODT என்றவாறு இருப்பதை உறுதி செய்துகொள்க

40.2

2

பிறகு முதன்மை ஆவணத்தை திறந்து அதில் நிகழ்நிலை படுத்திகொள்வதற்கான இணைப்பில்Yesஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்திடுக உடன் முதன்மை ஆவணமானதுN
avigator
எனும் சிறுஉரையாடல் பெட்டியுடன் இயல்புநிலையில் திரையில் தோன்றிடும்

40.3

3

இந்த Navigatorஎனும் சிறுஉரையாடல் பெட்டியில்Insertஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் கீழேவிரியும் துனைபட்டியலில் Fileஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர்Results1, Results2என்றவாறு கோப்புகளை வரிசை படுத்தி வைத்துள்ள இடத்தை தேடிபிடித்திடுக அவைகளுள் முதல் கோப்பினை தெரிவுசெய்துகொண்டுInsertஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து உள்ளிணைத்திடுக இவ்வாறு அடுத்தடுத்த கோப்புகளையும் உள்ளிணைத்துகொள்க இந்நிலையில் இந்த கோப்புகளை வரிசையாக அமைத்திடுவதற்காக ஒவ்வொரு கோப்பினையும் தெரிவுசெய்திடும்போது இந்த Navigatorஎனும் சிறுஉரையாடல் பெட்டியில் உள்ளMove Up அல்லது Move Down எனும் உருவபொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து சரிசெய்து அமைத்து கொள்க

40.4

4

பிறகு TestFile1எனும் கோப்பினை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக பின்னர் விரியும் சூழ்நிலைபட்டியில் Editஎனும் கட்டளையை தெரிவுசெய்திடுக அதன்பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு திருத்தங்களை செய்துகொள்க

இவ்வாறு செய்த திருத்தங்களை நிகழ்நிலை படுத்திகொள்வதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Tools => Update => Links=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து செயற்படுத்திடுக அல்லது இதே உரையாடல் பெட்டியிலுள்ள Updateஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக

மூன்றாவது வழிமுறையாக புதியதாக ஒரு முதன்மைஆவணத்தையும் துனை ஆவணங்களையும் உருவாக்குவதற்கு பின்வரும் ஏழுபடிமுறைகளை பின்பற்றிடுக

படிமுறை-1 முதலில் எவ்வாறு முதன்மை ஆவணத்தையும் துனை ஆவணங்களையும் உருவாக்குவது என்பதை பற்றியதொரு செயல்திட்டத்தை உருவாக்கிடுக அதாவது முதன்மை ஆவணத்தின் பெயர் ,பதிப்புரிமை, உள்ளடக்கங்களின் அட்டவணை ,இதில் எத்தனை பகுதிகள் உள்ளடங்கியருக்கும் ,சுட்டிகள் ,எழுத்துருக்கள், பக்கவடிவமைப்பு, பக்கஎண்கள் அவைகளின் பாவணைகள், புலங்கள், முதன்மை ஆவணம் துனைஆவணங்களின் மாதிரிபலகங்கள் போன்ற விவரங்கள்எவ்வாறு அமைந்திடவேண்டும் என திட்டமிட்டுகொள்க

40.5

5

படிமுறை-2 மாதிரிபலகத்தை உருவாக்குதல் தற்போது நடப்பிலிருக்கும் எழுத்துருக்கள், பத்திகள் ,பக்கங்கள் ,பாவணைகள் ஆகியவைகளடங்கிய ஏதேனும் ஒரு கோப்பின் மாதிரியை அல்லது தயார்நிலையிலிருக்கும் மாதிரி பலகத்தை தெரிவுசெய்து கொண்டு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File => Save As Template=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து செயற்படுத்தி சேமித்துகொள்க

படிமுறை-3முதன்மை ஆவணத்தை உருவாக்குதல் முதலில் ஒரு முதன்மை ஆவணத்தை உருவாக்கிடவேண்டும் அதன்பின்னர்தான் துனை ஆவணங்களை உருவாக்கிடவேண்டும் என்ற கட்டுபாடு எதுவுமில்லைஇரண்டாவது படிமுறையில் உருவாக்கிய மாதிரிபலகத்தைதொடர்ந்து லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File => New =>Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து செயற்படுத்துவதன் வாயிலாக My Templatesஎன்பதை அல்லது வேறு அமைவிடத்திலிருந்து திறந்துகொள்க அதில் முதல் பக்கத்தை தலைப்பு பக்கமாக அமைத்துகொண்டு அதிலுள்ள உரைப்பகுதி, பக்கமுறிவு போன்றவைகளை மட்டும் நீக்கம் செய்துகொண்டு TOC, index, and any fields in headers and footers போன்றவைகளை அப்படியே வைத்துகொள்க

பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில்File => Send => Create Master Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து செயற்படுத்திடுக.உடன் விரியும் உரையாடல்பெட்டியில் இதற்கொரு பெயரிட்டு தேவையான இடத்தை தெரிவுசெய்துகொண்டு சேமித்துகொள்க

குறிப்பு லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில்File => New => Master Document=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்தும் புதிய முதன்மை ஆவணத்தை உருவாக்கிடமுடியும்

படிமுறை-4 துனை ஆவணங்களை உருவாக்குதல் வழக்கமான உரைஆவணங்களே துனை ஆவணங்களாகும் அதனால் இந்த துனை ஆவணங்களை உருவாக்குவதற்கென தனியாக முயற்சியெதுவும் செய்யத்தேவையில்லை ஆயினும் இரண்டாவது படிமுறையில் உருவாக்கிய மாதிரிபலகத்தைதொடர்ந்து லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File => New =>Templates=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து செயற்படுத்துவதன் வாயிலாக My Templatesஎன்பதை அல்லது வேறு அமைவிடத்திலிருந்து திறந்துகொள்க

இதில் தேவையற்ற உரைகளையும் மற்றவைகளையும் நீக்கம் செய்துகொண்டு ஆவணத்தின் முதன்மை பக்கமாக இதனை அமைத்துகொள்க பின்னர் லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில்File => Save As=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து சேமித்து கொள்க

படிமுறை-5 முதன்மை ஆவணத்தில் கூடுதலாக ஒருசிலபக்கங்களை சேர்த்தல் பிறகு பத்திபிரிப்பை உருவாக்கிடுக இதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Tools => Options =>Libre Office Writer => Formatting Aids=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து செயற்படுத்திடுக அல்லது லிபர் ஆஃபிஸ் திரையின் மேலேயுள்ள கருவிகளின் பட்டையில் உள்ள Nonprinting Charactersஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அல்லது விசைப்பலைகையில் Ctrl+F10.ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக

பின்னர் உரையெல்லை, அட்டவணையின் எல்லை, பகுதியின் எல்லை ஆகியவற்றை அமைத்திடுவதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Tools => Options => LibreOffice => Appearance=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து செயற்படுத்துவதன் வாயிலாக காண்பிக்க செய்திடுக பிறகு படிமுறை-1 இல் கூறியவாறு title page, copyright page, TOC page, போன்றவைகள் இல்லாதிருந்தால் இப்போது பின்வருமாறு சேர்த்து கொள்க

லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Insert => Manual Break=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து செயற்படுத்தியவுடன் தோன்றிடும் insert Break எனும் உரையாடல் பெட்டியில் page Break எனும் வாய்யப்பை தெரிவுசெய்துகொள்க இந்நிலையில் Change page number எனும் வாய்ப்பை தெரிவுசெய்திடவேண்டாம் பின்னர் ok எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

அதன்பின்னர் அட்டவணை உள்ளடக்கங்களின் பக்கத்தில் காலியான பத்திகளை விட்டிடுக அல்லது லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல்செய்து செயற்படுத்தி உள்ளடக்க அட்டவணைய உருவாக்கிடுக

40.6

6

 படிமுறை-6 துனை ஆவணங்களை முதன்மை ஆவணத்துடன் உள்ளிணைத்தல் இப்போது நாம் முதன்மை ஆவணத்துடன் துனைஆவணங்களை உள்ளிணைத்திட தயாராக இருக்கின்றோம் இதற்காக லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் View => Navigator => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்து செயற்படுத்திடுக அல்லது லிபர் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலேயுள்ள கருவிகளின் பட்டையிலுள்ள Navigatorஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்திடுக அல்லது விசைப்பலகையிலுள்ள F5,எனும் செயலி விசையை அழுத்துக உடன் முதன்மை ஆவணத்துடன் இந்தNavigatorஎனும் உரையாடல் பெட்டியும் தோன்றிடுவதை உறுதிபடுத்தி கொள்க Toggleஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்வதன்வாயிலாக வழக்கமானஆவணம் முதன்மை ஆவணம் ஆகியஇரண்டிற்குமிடையே மாறிகொள்ளலாம் Navigatorஎனும் உரையாடல் பெட்டியில்Text எனும் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக தொடர்ந்து மேலே கருவி பட்டையிலுள்ளInsert எனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் பிடித்துகொண்டு இடம்சுட்டியை நகர்த்திசென்று கீழேவிரியும் துனைபட்டியலில் Fileஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

உடன் செந்தர கோப்பு திறக்கும் உரையாடல் பெட்டி  திரையில் தோன்றிடும் படிமுறை 4 இல் உருவாக்கிய கோப்புகளுள் ஒன்றினை தெரிவுசெய்துகொண்டு Insertஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக

40.7

7

இதிலுள்ளTextஎனும் பகுதியானது  தலைப்பு பக்கமும் இதரஉரைகளும் சேர்ந்ததாகும் அதனால்அதனை மேம்படுத்தி காண்பித்து Move Upஎனும் உருவ பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இடம்சுட்டியை மேல்பகுதிக்கு நகர்த்தி சென்றிடுக பின்னர் துனை ஆவணங்களை மேம்படுத்தி காணபித்து அவை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து பிடித்துகொண்டு Insertஎனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக அதன் பின்னர் இடம்சுட்டியை மேலே நகர்த்திசென்றுFileஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து முதல்துனைஆவணத்தை உள்ளிணைத்திடுகதற்போது Navigatorஎனும் சிறுஉரையாடல் பெட்டி படத்தில் உள்ளவாறு அமைந்திருக்கும் தொடர்ந்து முதன்மை ஆவணத்தை மீண்டும் சேமித்திடுக

40.8

8

படிமுறை-7 இந்த முதன்மை ஆவணத்தை கொண்டு உள்ளடக்கஅட்டவணை table of contents நூல்அட்டவணை bibliographic சுட்டும்வரிசைதொகுப்புindex. ஆகியவற்றில் ஒன்றினை உருவாக்கிடமுடியும் இவற்றுள் ஒன்றினைமட்டும் முதன்மை ஆவணத்தில் உள்ளிணைத்திட வேண்டும் அதற்காக லிபர் 4 ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே யுள்ள கட்டளைபட்டையில் Insert => Indexes and Tables => Indexes and Tables=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக உடன் உள்ளடக்க அட்டவணையொன்று உருவாகிவிடும் முதன்மை ஆவணத்தில் Textஎனும் பகுதி இல்லையெனில் அதனை கடைசி துனைஆவணத்திற்குமுன்பகுதியில் உள்ளிணைத்திடுக இந்த கடைசியானTextஎனும் பகுதி யில் நூல்விவரத் தொகுதியைbibliographic உள்ளிணைத்து கொள்க அவ்வாறே சுட்டும்வரிசை தொகுப்பையும்index. இந்த கடைசியானTextஎனும் பகுதி யில் உள்ளிணைத்து கொள்க இவையனைத்தும் சேர்ந்து படத்திலுள்ளவாறு தோன்றிடும்

40.9

9

Previous Older Entries